புதன், 1 அக்டோபர், 2014

லால் பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி

எனக்கும் இன்று பிறந்த நாள் (2.10.2014)


ஜெய் ஜவான் 
ஜெய் கிசான் என்ற 
தாரக மந்திரத்தை  தந்தவர் 


இவர்தான் லால் பகதூர் சாஸ்திரி 

உருவத்தால் சிறியவர்
உழைப்பால்  உயர்ந்தவர்
ஊர் சொத்துக்கு ஆசைப்படாதவர் 

உயர்ந்த பதவிகள் பல வகித்தும் 
ஊழல் செய்ய தெரியாதவர் 

பாகிஸ்தான் படையெடுப்பின்போது
நம் நாட்டின் வீரர்களையும் 
மக்களையும் தட்டிஎழுப்பி 
நாட்டை காத்தவர் 

ஜெய் ஜவான் 
ஜெய் கிசான் என்ற 
தாரக மந்திரத்தை  தந்தவர் 



சமாதானத்தின் தூதுவராய்
தாஷ்கண்ட் சென்றவரை 
இறைவனின் தூதர்கள் 
தங்கள் நாட்டிற்கு அழைத்து 
சென்று விட்டனர் 

சுயனலமற்றவர்
என்றும் மற்றவர்
நலம் விரும்பியவர் 

லால் பகதூர் சாஸ்த்ரியின் 
வாழ்க்கை மிகவும் துன்பமயமானது
அவரின் அப்பழுக்கற்ற நேர்மையும்,
எளிமையும்,தியாகமும் 
இக்கால மக்களுக்கு போய் சேரவில்லை.
என்ன செய்வது ?

இங்கு இருப்பவர்களுக்கு 
உள் நாட்டில் இருக்கும் 
வைரங்களின் மதிப்பு தெரிவதில்லை 


கூழாங் கற்களை வைரம் என்று நம்பி 
தலைமேல் வைத்துகொண்டு 
கொண்டாடி திண்டாடுகிறார்கள்  

வாழ்க என்றும் உன் புகழ் 
நாட்டிற்காக நீ  செய்த தியாகங்கள் 
வீண் போய்விட்டது. லஞ்சமும் 
பஞ்சமும் வஞ்சமும் நிறைந்துவிட்ட இந்த 
நாட்டை யார் காப்பாற்றுவார்கள்?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும் 

6 கருத்துகள்:

  1. லால் பகதூர் சாஸ்திரி நினைவினைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  2. நேர்மையும் தியாகமும். இது மாதிரி இவர் இருந்ததனால்தான் இவர் நினைவு யாருக்கும் இல்லை. இவர் பெயரில் விழாக்கள் கொண்டாடுவது இல்லை. நேதாஜி போல இவர் மறைவின் மர்மமும் இன்று வரை வெளிவரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் விழாவைக் கொண்டாடும் தகுதி இப்போதிருக்கும் தலைவர்களுக்கோ மக்களுக்கோ அருகதை இல்லை என்பதுதான் உண்மை

      நீக்கு
  3. சிறந்த பா வரிகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு விதிக்கும் வரிகள்
      நம்மை பாதிக்கும்
      அழகிய பா வரிகள்
      நம் மனதிற்கு தித்திக்கும்

      நன்றி யாழ்பாவாணர் அவர்களே

      நீக்கு