உலகின் முதன் மொழி தமிழ்...
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா என்றான்
அந்தக் கால கவிஞன் ஒருவன்
இன்றோ குவார்ட்டர், பீரு, வாட்டரு கிக்கு,,என்று பாட்டெழுதி
தண்ணி அடிச்சுதரையில் உருளும் கூட்டத்தை
உருவாக்குகிறான் இன்றைய கவிஞன்.
அரசே 20000 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை செய்து
மக்களை குடிகாரர்களாகவும் குணக்கேடர்களாகவும் ஆக்கி கொண்டிருக்கிறது.
தமிழில் பேசுவதுபோல் ஆபாச உடல் அசைவுகளைக் காட்டி நடிக்கும் வேற்று மொழி நடிகைக்கும்,நடிகனுக்கும் கால் கோடி ,அரை கோடி ஏன் இன்னும் பல கோடிகள் கூட வழங்கப்படுகின்றன.
ஆனால் அவர்களுக்கு தமிழில் பின் குரல் கொடுப்பவர்கள்
பெரும் ஊதியம். சில ஆயிரங்களே.
தமிழுக்கு அவ்வளவுதான்
தமிழ்நாட்டில் தமிழர்கள் தரும் மதிப்பு
எப்போதும் மப்பில் இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்
உலகத்திலேயே முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ் என்று
மேசையில் தமிழ் தமிழ் என்று பேசி
தமிழர்களை உசுப்பேற்றி குளிர் காயும் அரசியல்வாதிகள்
அவர்களின் வாரிசுகளை பாரிஸ் வரை அனுப்பி
ஆங்கிலத்தில்தான் படிக்க வைக்கின்றனர்.
என்பது இந்த அடிமைகளுக்கு தெரியாது.
தெரிந்தாலும் அதை அவர்கள்
சிறுமையாகக் கருதாமல் பெருமையாய்
கொள்ளும்நல்ல மனம் படைத்தவர்கள்.
பாமரன் முதல் படித்தவன் வரை
தமிழை தமில் என்று கற்றுத்தரும்
ஆங்கிலப்பள்ளிகளிலேயே பயிற்ருவிக்கின்றனர்.
அம்மா என்ற அழகான
அருந்தமிழ் சொல்லிருக்க
மம்மி என்று பதப்படுத்தப்பட்ட எகிப்து நாட்டில் உள்ள
பிணத்தை குறிக்கும் சொல்லால் அழைக்கப்படுவதை
பெருமையாகக் கருதுகின்றனர். நம் மக்கள்.
இவர்கள் என்றும் திருந்தப்போவதுமில்லை
தாய் தமிழ் இவ்வளவு தூரம் இழிவுபடுத்தப்படுகிறதே
என்று வருந்தப் போவதுமில்லை.
இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்லி வைப்போம்
உரைக்கிறவர்களுக்கு உரைக்கட்டும்.
உலகின் முதன் மொழி
தமிழ்...
வெள்ளக்காரன் சொன்னா தானே நாம நம்புவோம்...
வெள்ளக்காரன் சொன்னா தானே நாம நம்புவோம்...
கீழே உள்ள காணொளியை கண்டு ஆறுதல் பெறுவீர்.
https://www.facebook.com/photo.php?v=640605295998912&set=vb.363469940379117&type=2&theater
முதலில் விதைகளான பெற்றோர்கள் மாற வேண்டும் ஐயா... இணைப்பிற்கு நன்றி...
பதிலளிநீக்குநன்றி...DD
நீக்குதமிழின் பெருமை! அருமை. (ஆனால் அதில் அறிவிப்பாளரே ல், ள் பிழை செய்கிறார்!)
பதிலளிநீக்குபிழை ?????
நீக்குhttp://www.youtube.com/watch?v=ufvA_VNj--M
பதிலளிநீக்கு" உரைக்கும் படி சொன்னீர்கள்.எல்லோரும் இந்த குறும்படத்தை
பார்க்கவும்" நன்றி.
அந்நிய மண்ணில் பிறந்து அந்நிய மொழியில் கல்வி காற்று, அவர்களின் கலாசாரத்தை நடைமுறையாகக் கொண்டவர்களின் தமிழ்ப் பற்று எவ்வாறு இருக்கும் என்பதை குறும்படம் கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் தமிழ் மண்ணில் பிறந்து தமிழை கற்காமல்,கற்றவர்களும், தமிழை முறையாக பேசாமல், தமிழை மதிக்காமல் இருக்கும் இங்குள்ள மக்களை என்னவென்று சொல்வது?
நீக்கு