செவ்வாய், 10 ஜூன், 2014

இதுதான் இந்தியா?

இதுதான் இந்தியா?

நம் நாட்டில் உள்ள பீகார் மாநிலம் பற்றிய உண்மை நிலையினை
தெளிவாக விளக்கியுள்ளார் அம்மாநிலத்தில் ஆசிரியராக
பணி புரியும் அன்பர்.


நாம் வாழும் தமிழகம் பாரதி அன்றே கூறியுள்ளதுபோல் சொர்க்கம் .


ஆனால் இங்கிருப்பவர்கள் நம் தாய்  மண்ணின் அருமை பெருமைகள் புரியாமல் நரகமாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய செய்தி.








அன்பரின் செய்தி கீழே.


from: Principal SMA noreply-comment@blogger.com

கங்கை நதி தீரம் பீகார் மாநிலம் நீர்வளமும் நிலவளமும் நிறைந்தது ... மக்கள் மைதிலி மொழியும் போஜ்புரியும் பேசுகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளம் வந்து புரட்டிபோடும் அது அடுத்த மாதம் ஆரம்பம் ஆகும் .வாழைபழம் கிடைக்கிறது மிக மெல்லிதாக ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறது. லிட்சிபழம் இங்கு அதிகம் ,அது பீகாரில் மட்டுமே கிடைக்கும் அரிய பழம். மாம்பழம் கிடைக்கிறது. மக்கள் மிகவும் ஏழ்மையில் இருக்கிறார்கள். லஞ்சம் அதிகம்.கல்வி குறைவு. படித்த மக்கள் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஏழையை விவசாயியை கவனிக்க யாரும் இல்லை. ஆங்கிலம் என்பதே இங்கு இல்லை. ஒரு விசயத்தில் இவர்களை பாராட்டலாம் ..என்னவெனில் ஹண்டி மொழியில் ஆங்கிலம் கலப்பு இல்லை .நம் தமிழர்கள் போல ஆங்கிலத்தை hindiy இல் கலப்பது இல்லை.அந்த விசயத்தில் இவர்களை பாராட்டியே ஆக வேண்டும்..ஆங்கிலம் தெரியாது என்பது வேறு ...அதனால் கலப்பு இல்லை என்பதே உண்மை..மற்றபடி 10 அடியில் இனிப்பான சுவை உள்ள நல்ல நீர் கிடைக்கிறது. எல்லாம் கங்கா மாதாவின் கடாக்ஷம் ....ஹம்கோ அன்கேரேசி நஹி ஆத்தா ஹாய்l மாணவர்கள் அங்கு உள்ளது போலவே இங்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால் நல்ல உடற்க்கட்டு இல்லை. காரணம் maalnutrition தான். சத்தான உணவு இல்லை .சப்பாத்தி தான் எங்கும் ...வேறு எதையும் நான் பார்க்கவில்லை .நம் தமிழகம் உணவில் variety அதிகம். இங்கு vairiety இல்லை ...மின்சாரம் 4 மணிநேரம் முழுமையாக வந்தால் ஆச்சரியம்.சுத்தம் என்பதே எங்கும் இல்லை. நகராட்சி தெருகூட்ட பணம் ஒதுக்கவில்லை போல.தமிழகம் சொர்க்கபூமி ..சாலைவசதி ரொம்ப மோசம்.போக்குவத்து அதவிட ரொம்ப மோசம் .ரயில்பயணம் மட்டுமே பேருந்து சொற்பமே.ஆனால் pollution குறைவு ....இணையம் பயன்பாடு மிக மிக குறைவு.அரசு பள்ளிகளின் நிலை மிக மோசம். ஆங்கிலம் என்பதே அறவே இல்லை.நாமெல்லாம் எவளவோ தேவலை ..புண்ணியம் செய்தவர்கள்.இன்னும் எழுதுகிறேன்...நேரம் கிடைக்கும் போது...நான் ஹிந்தி 1978 இல் படித்தேன் அதனால் தப்பித்தேன். இதற்க்கு முன் நான் ராஜஸ்தான் மாநிலத்திலும் முதல்வராக பணியாற்றினேன். அங்கு சம்பளம் குறைவு. எனவே இங்கு வந்தேன். மீண்டும் இங்குஇருந்து குஜராத் மாநிலத்தில் பணியாற்ற விருப்பம். பார்ப்போம்.நண்பர் கண்ணன் கூட tnptf கமெண்ட் போட்டு இருக்காப்ல ...பார்த்தேன்.மீண்டும் எழுதுகிறேன் நண்பரே


இயற்கையின் செல்லக் குழந்தைகள்

இயற்கையின் செல்லக் குழந்தைகள் 



ஓவியம்-தி ரா.பட்டாபிராமன் 


ஆம் பறவைகள்
இயற்கையின் செல்லக் குழந்தைகள்.

அதிகாலையில் எழுகின்றன
அழகாய் இனிய ஒலி எழுப்பிக்கொண்டு 

ஆனந்தமாய்  வானில் பறந்து திரிகின்றன
ஆதவன் காட்டும் ஒளி வெள்ளத்தில்

ஒவ்வொரு பறவை இனத்திற்கும்
ஒவ்வொரு விதமான இரையைப்
படைத்திருக்கின்றான் இறைவன்

ஆனந்தமாய் உண்கின்றன
ஜோடி சேர்கின்றன முட்டையிட
கூட்டை அவைகளே கட்டுகின்றன

கொத்தனார் துணை தேவையில்லை
வீடு கட்ட காசு பணம் தேவையில்லை
இயற்கையில் கிடைக்கும்
குச்சிகளும் புல்லும் போதும்
இன்பமாக காதல் வாழ்க்கை வாழ

பந்தம் கிடையாது ஆனால்
முட்டையிட்டு பொரித்த குஞ்சுகள்
பறக்க கற்றுக் கொள்ளும் வரை
பாசம் தொடரும் தடையில்லாது

ஆயிரமாயிரம் பறவைகள் ஒன்றாக இருந்தாலும்
சண்டையில்லை சச்சரவில்லை கூச்சலும்
கும்மாளமும்தான் கூடி இருக்கும் நேரம் .

மரணத்தை  கண்டு அஞ்சுவதில்லை
மனம் போன போக்கில் வாழ்வதில்லை
போட்டி இல்லை பொறாமை இல்லை
பிறரை வஞ்சித்து வாழும் எண்ணம் இல்லை.

பறவைகளே நீங்கள் இயற்கையின் செல்ல குழந்தைகள்
இயற்கையோடு இயைந்து  இன்பமாக வாழ்கிறீர்கள்

மனிதர்களாகிய நாங்களோ செயற்கையாக வாழ்ந்து
அன்பில்லாமல் ஒருவரை ஒருவர் சுரண்டி மடிகின்றோம்.

எல்லோரையும் வாழ வைக்கும் இயற்கையை அழிக்கின்றோம்
அல்லல்பட்டு அமைதியற்று சாகின்றோம்.

மனிதகுலம்  என்று திருந்துமோ?
செய்யும் அடாத செயல்களுக்கு என்று வருந்துமோ?

ஆறறிவு உடையவர்கள் என்ற பெருமை
இனியும் பொருந்துமோ?

புதன், 28 மே, 2014

இன்றைய கல்வியும் அரசியலும்.

இன்றைய கல்வியும் அரசியலும். 

இன்றைய கல்வி  முறையும்,
அரசியலும்  எதை நோக்கி செல்கிறது?

பள்ளிக்கு போவதே  காசு பண்ணத் தான்
என்ற நிலையை நோக்கித்தான் செல்கிறது இன்றைய கல்வி

பொது சேவை செய்வதாக கூறிக்கொண்டு
அரசியலுக்கு வருவதே காசை அள்ளத்தான்.

ஒழுக்கம் கற்றுத் தரப்படுவதில்லை
ஒழுங்கும் கற்றுத் தரப்படுவதில்லை.

மனதை ஒருமைப்படுத்தும்
பயிற்சிகள் இல்லை

தோல்வியை ,துன்பங்களைத்
தாங்கும் மன உறுதி பயிற்சியும்
கற்றுத் தரப்படுவதில்லை.

அதனால் பள்ளியில் பாடத்தில்
குறைந்த மதிப்பெண் எடுத்தாலோ தேர்வில்
தோற்றுப்போனாலோ தற்கொலை செய்து கொள்கிறான்.

பெற்றோர்களும் சரியில்லை ஆசிரியர்களும்  சரியில்லை  பள்ளி நிர்வாகங்களும் சரியில்லை.

மாணவனுக்கு எந்த துறையில் நாட்டம் என்பதை யாரும் கருத்தில் கொள்வதேயில்லை. அதனால்தான் இத்தனை அலங்கோலங்களும்

எதெற்கெடுத்தாலும் போட்டி. போட்டி பொறாமையில்தான் முடிகிறது. பொறாமை அழிவுக்கு வழி கோலுகிறது .

பெற்றோர்கள் நாங்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறோம். பையன் படித்து முதல் மதிப்பெண் பெறவில்லை என்றால் பள்ளி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் மாணவனையும் கரித்துக் கொட்டுகிறார்கள்.

ஒரு குறிப்பிட துறையையே மொத்த பெற்றோர்களும் நாடுகின்றனர்.

அதனால்தான் கல்வி கொள்ளையர்கள் பெருகி விட்டார்கள்
பல லட்சங்களை செலவுசெய்து வெளி நாட்டில்
சில லட்சங்களை  சம்பாதிக்க ஆலாய்ப்  பறக்கிறது மக்கள் கூட்டம்.

மருத்துவப் படிப்பிற்கும், பொறியியல் படிப்பிற்கும் பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்து படிப்பில் சேருகிறார்கள்.

அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும்
கடமையை செய்ய லஞ்சம் வாங்கி கொழுக்கிறார்கள்.

படிப்பில் தோற்றவர்களும், படித்து பட்டம் பெற்றவர்களும் இறுதியில் அடையும் புகலிடம் அரசியலே.

இவர்கள் இருவரும் பெரும்பாலான
மக்களை ஏமாற்றிதான் கொழுக்கிறார்கள்.

நாட்டின் முன்னேற்றம் அல்லது மக்களின் முன்னேற்றம் பின் தள்ளப்படுகிறது

மக்களின் நலம் முக்கியமல்ல

அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் முன்னேற்றிக்கொள்வதே அவர்கள் நோக்கம்.

இந்த நிலை மாறவேண்டும். 

சனி, 24 மே, 2014

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்



கல்லிலே கலைவண்ணம் 







கல்லிலே கலைவண்ணம்
அழகிய இயற்கை சூழலின்
படைத்த கலைஞனை
பாராட்டுவோம்.

ஆதாரம்- முகநூல் 

வியாழன், 22 மே, 2014

இதுதான் இந்தியா?


இதுதான் இந்தியா?

ஆதி வாசிகளை
அவர்கள் இருக்கும்
இடத்தில்கூட நிம்மதியாக 
வாழ விட மாட்டார்கள்.

ஒரு பக்கம்  வனத்
துறையினரின் அராஜகம்

மறுபக்கம் இயற்கை வளங்களை
சுரண்டும் பன்னாடை நிறுவனங்கள்
அவர்களுக்கு துணை போகும்
அரசியல் வாதிகள்.

காசிற்காக நாட்டை
விற்கும் சுயநல பேய்கள்.

புரட்சி என்ற பெயரில் யாரையும்
நிம்மதியாக வாழவிட மறுக்கும்
தீவிரவாத குழுக்கள்.

இறைவா நீதான் நம் நாட்டை
இவர்களிடமிருந்து காப்பாற்றவேண்டும்.



Hut of Primitive Tribes crushed by administration, hundreds homeless. Photo : Special Arrangement

வியாழன், 15 மே, 2014

மகாகவி பாரதி- அவர் துணைவியின் பார்வையில்.

மகாகவி பாரதி- அவர் துணைவியின் பார்வையில்.


இன்று உலகம் மகா கவி பாரதியைப் போற்றி புகழ்கிறது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கண்டது வறுமையும்,துன்பமுமே ஏச்சுகளும் பேச்சுகளுமே -அவரைப் பற்றி அவர் துணைவியார் செல்லம்மாள் கூறிய கருத்துக்களைப் பார்ப்போம். 


"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.


"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய இரண்டாவது உரை. 

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்தது என்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன். 

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடு ஒட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாய் இருப்பது கஷ்டம். 

கவிஞர்கள் போக்கே தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப் போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் ஒரு பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா? 

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்கு உணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவே இன்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்? 

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும், அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? 

சுகமாக வாழ்வதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளில் இருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா? 

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகள் சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல், தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை. 

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார். 

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை! 

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். 

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது. 

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று. 

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதி மிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார். 

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; 

ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. 

 நன்றி-

amritha varshini

                                                   
                                    


வியாழன், 8 மே, 2014

எங்கும் கலை எதிலும் கலை ரசனையுள்ளவர்க்கு !


எங்கும் கலை எதிலும் கலை 
ரசனையுள்ளவர்க்கு !

ஆரஞ்சு  பழத்  தோலை
உரித்தவுடன் வீசி எறிகிறோம்.

ஒரு கலைஞன் அந்த பழத்தை தூக்கி செல்வதுபோல் அதன் தோலை கொண்டே வடிவமைத்துள்ளான்
என்ன  அழகு பாருங்கள்.





ஆரஞ்சு பழத் தோல் தவளையாக
மாறிவிட்டது.எப்படி?

Âjö P Sábû's photo.

தர்பூசனி பழத்தில் இயற்கை காட்சியுடன்
இரு குழந்தைகள்.

Kc Decors's photo.

கண்டு ரசியுங்கள். கலைஞனுக்கு பாராட்டு தெரிவியுங்கள் கீழ் கண்டுள்ள இணைப்பில்.



https://www.facebook.com/IamLakshmiRai/photos/a.404820592986326.1073741828.404819686319750/464146403720411/?type=1&theater