இசையும் நானும் (300)-திரைப்படம்-நான்கு கில்லாடிகள் – 1969
பாடல்:: நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நான்கு கில்லாடிகள் – 1969
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
பழக்கம் என்பது பழகுவது -அது
விலக்கும்போது விலகுவது
பாசம் நேசம் காதல்தானே
வாழ்வதற்க்கென்றே வளருவது
நிழல் தொடருவது
மதி மயங்குவது
வழி நேற்றும் இன்றும் மாறுவது (நெஞ்சுக்கு)
பாதையில் எத்தனை காலடிகள் -இந்த
பயணத்தில் எத்தனையோ வழிகள்
காதலில் ஓர் வழி
கவலையில் ஓர் வழி
கவனித்து பார்க்கட்டும் உன் விழிகள்
ஒன்றை தேர்ந்து எடு
அதை சேர்ந்து விடு
ஒன்றை தேர்ந்து எடு
அதை சேர்ந்து விடு
இந்த உலகத்தின் சுகங்களை வாழ்ந்து விடு (நெஞ்சுக்கு)
300 வது பதிவுக்கு / பாடலுக்கு பாராட்டுகள் / வாழ்த்துகள். மென்மேலும் தொடரட்டும்.
பதிலளிநீக்குஎன்ன ஒரு இனிமையான பாடல். அமைதியான இதம் தரும் பாடல். சுசீலாம்மா குரல் தேன்.
கேட்டேன், ரசித்தேன். அருமை. (இன்னும் கொஞ்சம் மெதுவாக வரலாமோ)
நன்றி ஸ்ரீராம். 300ஆவது பதிவிற்கு பல பாடல்களை தேர்ந்தெடுத்தேன். ஆனால் நேற்று இந்த பாடலை கேட்டதும் இதையே தேர்ந்தெடுத்து. எல்லாம் இன்றே பயிற்சி செய்து பதிவு செய்து வெளியிட்டுவிட்டேன்.எனக்கு நோட்ஸ் தெரியாது. பக்க வாத்தியங்களும் கிடையாது. அதனால் அப்படியே அசல்போல் கொண்டுவரமுடியாது. எல்லாம் கேள்வி ஞானம்தான்.
நீக்கு