சனி, 12 மே, 2018

இசையும் நானும் (295)-திரைப்படம்-செல்வமகள் (1967) பாடல்:: குயிலாக நான் இருந்தென்ன ..


இசையும் நானும் (295)-திரைப்படம்-செல்வமகள்  (1967)

பாடல்:: குயிலாக நான் இருந்தென்ன ..


MOUTHORGAN VEDIO-295


Kuyilaaga Naan Irundhenna Lyrics – Selva Magal Lyrics

Movie Name : 

செல்வமகள்  (1967)

Song Name : 

குயிலாக நான் இருந்தென்ன ..

Music : M.S.VISWANATHAN
Singers : TM Soundararajan, P Susheela
Lyricist : வாலி 



பெ .
குயிலாக நான் இருந்தென்ன 
குரலாக நீ வர வேண்டும் 
பாட்டாக நான் இருந்தென்ன 
பொருளாக நீ வர வேண்டும் 
வர வேண்டும் (குயிலாக)
ஆண் .
பாட்டோடு பொருள் இருந்தென்ன 
அரங்கேறும் நாள் வர வேண்டும் 
உன்னோடு அழகிருந்தென்ன 
என்னோடு நீ வரவேண்டும் 
வரவேண்டும் (பாட்டோடு)

~~@@~~ BG Music ~~@@~~
பெண்  :
செந்தாழை கூந்தலிலே  
செந்தூரம் நெற்றியிலே 
செவ்வாழை பந்தல் தேடி 
மங்கை வருவாள் 
ஆண்  :
கல்யாண மேளம் கொட்ட  
கண் பார்வை தாளம் தட்ட 
பெண் பாவை மாலை சூடும் 
மன்னன் வருவான் 

பாட்டோடு பொருள் இருந்தென்ன 
அரங்கேறும் நாள் வர வேண்டும் 
உன்னோடு அழகிருந்தென்ன 
என்னோடு நீ வரவேண்டும் 
வரவேண்டும்


பெ .
குயிலாக நான் இருந்தென்ன 
குரலாக நீ வர வேண்டும் 
பாட்டாக நான் இருந்தென்ன 
பொருளாக நீ வர வேண்டும் 
வர வேண்டும் 

~~@@~~ BG Music ~~@@~~
ஆண்  :
பொன்மேனி தேர் அசைய  
என் மேனி தாங்கிவர 
ஒன்றோடு ஒன்றாய் கூடும் 
காலமல்லவோ 
பெண்  :
நில்லென்று நாணம் சொல்ல  
செல் என்று ஆசை தள்ள 
நெஞ்சோடு நெஞ்சம் பாடும்
பாடல் சொல்லவோ  


பெ .
குயிலாக நான் இருந்தென்ன 
குரலாக நீ வர வேண்டும் 
பாட்டாக நான் இருந்தென்ன 
பொருளாக நீ வர வேண்டும் 
வர வேண்டும் (3)


2 கருத்துகள்:

  1. நன்றி ஸார். கேட்டேன், ரசித்தேன். ஆண் குரலையும் பெண் குரலையும் வித்தியாசப்படுத்த வேறுபட்ட ஸ்தாயியிகளில் வாசித்திருப்பதும் சிறப்பு. இந்த வித்தியாசத்தை நான் இப்போதுதான் கவனிக்கிறேனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இந்த பாடல் உங்களுக்கு பிடிக்கும் என்று கூறியதால் ஒரே நாளில் பயிற்சி செய்து வெளியிட்டேன் . மவுத்தார்கனை ஸ்டிரீயோவில் கேட்டால் மிக அருமையாக இருக்கும். பொதுவாக பாடல் வரிகள் தமிழில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் கிடைத்தாலும்பலர் பதிவிறக்கம் செய்ய அனுமதிப்பதில்லை. இந்த பாடலும் அப்படியே. எல்லா பாடல்களையும் ஆண் பெண் குரலுக்கேற்ப மாதிரிதான் இசைக்கிறேன். நீங்கள் கவனிக்கவில்லை போலும். சிந்து நதியின்மிசை நிலவினிலே பாடலில் பல குரல்களை வேறுபடுத்தி காட்டியிருக்கிறேன். ஆனால் இதுவரை அந்த அளவிற்கு யாரும் அக்கறை எடுத்து கேட்டு கருத்துக்களை தெரிவித்தது இல்லை. விலைமிக்க மவுத்தார்கனில் நாம் நினைக்கும் ஒரு இசைக்குழுவில் உள்ள கருவிகளின் இசையை கொண்டுவரமுடியும். என் எண்ணமெல்லாம் மவுத்தார்கண் இசையில் ஏராளமான பாடல்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான். என் அளவிற்கு இவ்வளவு வெவ்வேறு பாடல்களை கொண்டுவரவில்லை என்பதை நான் உறுதியாகசொல்லுவேன். பல இடையூறுகளுக்கு இடையும் என் உயிர் உள்ளவரை என் இசைப்பயணம் பயணம் தொடர பகவானை வேண்டிக்கொள்ளுகிறேன்

      நீக்கு