வெள்ளி, 15 டிசம்பர், 2017

நான் யார்?

நான் யார்?

 நான் யார்?

நான் யார் ?

இந்த கேள்விக்குப்பதில்

நான் "ஆன்மா"

அது எங்கிருக்கிறது?

அது எல்லா உயிர்கள் உள்ளும் இருக்கிறது.

அது அவனா இல்லை அவளா இல்லை அதுவா ?

அது அவனும் இல்லை அவளும் இல்லை. அது ஒரு "அது"தான்.

அவன் அல்லது அவள் அதுதங்கியுள்ள உடலுக்குத்தான்.

அந்த ஒரே வஸ்துதான் எல்லா உயிர்கள் உள்ளேயும் இருக்கிறது.

அது தங்கியுள்ள  உடல்கள் இயற்கையிலிருந்து  உருவாகி அதையே உண்டு வளர்ந்து முடிவில் அந்த இயற்கையிலேயே கலந்து விடும்.

அப்படியானால் உயிர்களிடையே ஏன் இத்தனை வேறுபாடுகள்?

இவ்வளவு குண பேதங்கள்?

எல்லாவற்றிற்கும் காரணம் "மனம்" அதில் வந்து போகும் எண்ணங்கள்.

மனம் என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவில் கழிவுகள் நீங்கியது போக ,உடல் இயங்க தேவைப்பட்ட சத்துக்கள் பயன்படுத்தியது போக மிகவும் துல்லியமாக வடிகட்டப்பட்ட மிகுதி.

அதுதான் மனமாக  மாறுகிறது.

அதிலிருந்துதான்,"நான்" "எனது" மற்றும் காமம், க்ரோதம் ,லோபம், மோகம் மாச்சரியம்  மதம், என்னும் 6 விதமான எண்ணங்கள் ஏற்பட்டு நம்மை
குழப்பி நாம் "ஆன்மா" என்பதை மறக்கடிக்க  செய்து விடுகின்றன.

எல்லாம் இயற்கையிலிருந்து உண்டாகி அதையே உண்டு வளர்ந்து மீண்டும் அதிலேயே கலந்துபோகும் இந்த உடலையே "நான்" என்று தவறாக எண்ணிக்கொண்டே இருப்பதால் நாம் மீண்டும் இவ்வுலகில் பிறந்து இறந்து கொண்டிருக்கிறோம்.

எப்போது இந்த அறியாமை நம்மை விட்டு போகிறதோ அப்போதுதான் நமக்கு பிறப்புஇறப்பு சங்கிலி அறுந்துபோகும். 

2 கருத்துகள்:

  1. நம்மையே நாம் முழுதாக அறிந்திருக்கிறோமா?

    இப்பிறவியின் எண்ணங்கள் ஆன்மாவுடன் சேர்ந்து கடத்தப்படுவதுமில்லை என்பதால் நம் கர்மவினை என்ன என்று நாம் அறிவதுமில்லை.

    பதிலளிநீக்கு
  2. கர்மவினைகள் என்று ஒன்று இல்லாவிடில் எல்லா மனிதர்களின் வாழ்க்கையையும் ஒன்று போலத்தானே இருக்க வேண்டும். அவரவர்களின் கர்ம வினைகள் அவரவர்களுடன் வருவதால்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வினைகளின் விளைவுகள் அழிவதில்லை அவைகள் அவர்களுடனேயே பயணம் செய்கின்றன. பலன்களை கொடுப்பதற்கு.

    பதிலளிநீக்கு