திங்கள், 30 அக்டோபர், 2017

இறைவா நீ எங்கிருக்கின்றாய்?

இறைவா நீ எங்கிருக்கின்றாய்?


இறைவா நீ எங்கிருக்கின்றாய்?
இறைவனை பற்றி சிந்திப்பவர்கள் அனைவரும்
கேட்கும் பொதுவான கேள்வி.

இந்த கேள்வியை யார் யாரிடம் கேட்கிறார்கள்
என்பது அடுத்த கேள்வி.

இந்த கேள்வியை யார் கேட்கிறார்கள்?

நான்  கேட்கிறேன்.

அந்த "நான்" யார் என்பது பகவான் ரமணரின் கேள்வி.

அந்த " நான்"யார் என்பதை கண்டுபிடி.
உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்பது அவர் நமக்கு அளித்த பதில்.

இறைவன் நமக்குள் இருக்கின்றான். அவனை நம் உள்ளே சென்றுதான்   அறிய வேண்டும். வெளியே தேடினால் நம் கண் முன்னே அவன் இருந்தும் நம்மால் அவனை அறிந்து கொள்ள முடியாது.

ஏனென்றால் அவன்  எப்படி இருப்பான் என்று அவனை அறியாதவர்களுக்கு
விளங்காது.

முதலில் அவனை அறிந்துகொள்ள உள்ள ஏதாவது ஒரு மார்க்கத்தில் நிலையாக நின்று பிற மார்க்கங்களை பழித்திடாது விடா முயற்சியுடன் பயணம் செய்தால் வழி கிடைக்கும் .விழி திறக்கும்.

2 கருத்துகள்:

  1. அவ்வளவெல்லாம் யோசித்தால் நான் எங்கேயோ போயிருப்பேனே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேயும் போகவேண்டாம். எதை பற்றியும் யோசிக்க வேண்டாம். எல்லாவற்றையும் நம் உள்ளே இருக்கின்ற அந்த "நான்" செய்துகொண்டிருக்கிறது.உண்மை அவ்வாறிருக்க "நான்தான்" எல்லாவற்றையும் செய்கின்றேன் என்று மனம் நினைக்கிறது. அந்த எண்ணத்தை விட்டுவிட்டால்போதும். தொடர் ஜென்மம் முடிந்துவிடும். .

      நீக்கு