மழையும் மக்களும்
மழை இறைவன் அளிக்கும் கொடை
அது இடைவிடாது பெய்யும்
அடைமழை ஆனாலும் சரி
கோடையிலே வரும் குளிர்விக்கும்
தூரலானாலும் சரி.
இறைவன் அளிக்கும் கொடையை
பெற்றுக்கொள்ள நம்மிடம்
பாத்திரம் இருக்கவேண்டும்
ஆனால் பாத்திரம் நம்மிடம் இல்லை
மாறாக ஆத்திரம்தான் வருகிறது
வட்டியும் முதலுமாக கிடைத்த
விண் நீரை பயன்படுத்த வழியை
தேடாது மண் மீது வீணாக கடலில்
ஓடவிட்டுவிட்டு ஒருவர் மீது ஒருவர்
சேற்றை வாரி இறைத்துக்கொண்டு
அழுது புலம்புகின்றனர் ஒவ்வொருவரும்
ஓடையிலே வீட்டை கட்டினால்
கோடையிலே வேண்டுமானாலும்
இன்பத்தை தரலாம் ஆனால்
வெள்ளம் வந்தால் அனைத்தையும் இழந்து
நடைபாதைக்குதான் தான்
போக வேண்டும் என்பதை அறிந்தும்
அசட்டையாய் இருந்தனர் இந்த மக்கள்
ஏரியிலே கட்டிய வீடு ஒருநாள்
நீரில் மூழ்கி விடும் என்பதை எடுத்து
காட்டியதுதான் இவ்வாண்டு
பெய்த பெருமழை .
இறைவனை இகழ்வதை விடுத்து
இயற்கையை பழிப்பதை விடுத்து
இயற்கையுடன் இணைந்து வாழ
கற்றுக்கொள்ள வேண்டும் இந்த
மனித சமுதாயம்
இனியும் திருந்தாவிடில்
வருந்துவதை தவிர வேறு வழியில்லை
மழை இறைவன் அளிக்கும் கொடை
அது இடைவிடாது பெய்யும்
அடைமழை ஆனாலும் சரி
கோடையிலே வரும் குளிர்விக்கும்
தூரலானாலும் சரி.
இறைவன் அளிக்கும் கொடையை
பெற்றுக்கொள்ள நம்மிடம்
பாத்திரம் இருக்கவேண்டும்
ஆனால் பாத்திரம் நம்மிடம் இல்லை
மாறாக ஆத்திரம்தான் வருகிறது
வட்டியும் முதலுமாக கிடைத்த
விண் நீரை பயன்படுத்த வழியை
தேடாது மண் மீது வீணாக கடலில்
ஓடவிட்டுவிட்டு ஒருவர் மீது ஒருவர்
சேற்றை வாரி இறைத்துக்கொண்டு
அழுது புலம்புகின்றனர் ஒவ்வொருவரும்
ஓடையிலே வீட்டை கட்டினால்
கோடையிலே வேண்டுமானாலும்
இன்பத்தை தரலாம் ஆனால்
வெள்ளம் வந்தால் அனைத்தையும் இழந்து
நடைபாதைக்குதான் தான்
போக வேண்டும் என்பதை அறிந்தும்
அசட்டையாய் இருந்தனர் இந்த மக்கள்
ஏரியிலே கட்டிய வீடு ஒருநாள்
நீரில் மூழ்கி விடும் என்பதை எடுத்து
காட்டியதுதான் இவ்வாண்டு
பெய்த பெருமழை .
இறைவனை இகழ்வதை விடுத்து
இயற்கையை பழிப்பதை விடுத்து
இயற்கையுடன் இணைந்து வாழ
கற்றுக்கொள்ள வேண்டும் இந்த
மனித சமுதாயம்
இனியும் திருந்தாவிடில்
வருந்துவதை தவிர வேறு வழியில்லை
தவறுக்கு தண்டனை ஐயா...
பதிலளிநீக்குஇறைவனை இகழ்வதை விடுத்து
நீக்குஇயற்கையை பழிப்பதை விடுத்து
இயற்கையுடன் இணைந்து வாழ
கற்றுக்கொள்ள வேண்டும் இந்த
மனித சமுதாயம்