ஞாயிறு, 25 ஜனவரி, 2015

குடியரசு தினம்(66)

குடியரசு தினம்(66)

குடியரசு தினம்(66)

இந்தியாவின் குடியரசு அமைக்கப்பட்டு
66 ஆண்டுகள் கடந்துவிட்டது



மக்கள் தங்களை ஆள்பவர்களை
அவர்களே தேர்ந்தெடுத்துக்கொண்டு
நல்லதோர் வாழ்வை அமைத்துக்கொள்வதே
இதன் உண்மையான நோக்கம்.

ஆனால் நடந்தது என்ன?


1).மக்கள் குடிக்கு அடிமையாகி நாசமாய்ப்
போய்க்கொண்டிருக்கின்றனர்.

2)ஆண்டுதோறும் உள்நாட்டிலேயே பல லட்சக்கணக்கான
மக்கள் அகதிகளாய் எந்த உரிமையும், பாதுகாப்பின்றி.
சாலை ஓரங்களில் அல்லபடுகின்றனர். அவர்களின்
எதிர்கால வாழ்வு கேள்விக்குரியதே

 3)பல லட்சம் கோடிகளுக்கு மேல் ஆண்டு தோறும்
அரசு பணத்தை செலவு செய்தும் வறுமையில் வாடும்
மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.

4) செலவழித்ததொகையில் பெரும்பகுதி அரசியல்வாதிகளும்,
லஞ்ச லாவண்ய பேர்வழிகளும் சுருட்டிவிட்டனர்.

5)ஆளும் வர்கத்தினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் பல கோடி ரூபாய் செலவில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு

ஆனால் அடித்தட்டு மக்களுக்கும்,சட்டத்தை மதித்து  நடக்கும் குடி மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை.

6)நாட்டு மக்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது..வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து  தொழில் செய்து நம் நாட்டு வளங்களை சுரண்டி  கொழுக்க
மட்டும் வசதி மற்றும் பாதுகாப்பு.

7)   ஒருநாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே வந்து போகும் வெளி நாட்டு தலைவர்களுக்கு பல் கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு

இங்கிருக்கும் குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கும்
இந்திய அரசின் . போக்கு

8)இருக்க  இடமில்லை, வீடில்லை, வேளா வேலைக்கு உணவில்லை ,வேலை  ,வாய்ப்பு இல்லை, சுகாதார ,மருத்துவ வசதிகள் இல்லை நிதி வசதி இல்லை, பாதுகாப்பான எதிர்காலம்  இல்லை..இவைகளை அளிக்க எந்த அரசுக்கும்   நாதியில்லை.

9)கொள்ளை அடிப்பவர்களுக்கு ,எல்லா பாதுகாப்பு,வரி சலுகைகள், அரசு உதவிகள் உண்டு

ஆனால்  உழைப்பவர்களையும் வறியவர்களையும் வாழ்வில் முன்னேறாமல் அழிக்க ,முடக்கிபோட பலமுனை  வரிகள், கட்டுப்பாடுகள்.இதுதான் குடியாட்சியில் நம் நாட்டு மக்கள் .  கண்ட பலன்

10)மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினைகளுக்கும்  தீர்வு காணாத கையாலாகாத அரசியல்வாதிகளைக் கொண்ட அரசுகள் ,அவர்களையே நம்பி மோசம் போகும் அப்பாவி மக்கள்.

11)மக்களின்  எதிர்பார்ப்புகளை  நிறைவேற்றாது எப்போதும் அரசு  காவல் துறையை ஏவி அவர்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கம்

12)  குழந்தைகளுக்கும் பெண்களுக்கும்  பாதுகாப்பில்லை.

இதுதான் நாம் 66 ஆண்டு  குடியாட்சியில் கண்ட பலன்.

முன்னேற்றம் இல்லை என்று   ஒட்டு மொத்தமாக  கூறிவிட முடியாது   பயிரைவிட களைகளே அதிகம் முளைத்துள்ளன . அதை அதை அகற்றாவிடில்  எந்த முன்னேற்றமும் உரிய பயனை  தரப்போவதில்லை.

லஞ்சமும்,  நிர்வாக திறமையின்மையும் ,நிர்வாக  சீர்கேடுகளும்,ஒழிக்கப்படாவிடில் பெற்ற
சுதந்திரம் நாட்டு மக்களுக்கு  பயன்தரப் போவதில்லை.

1 கருத்து: