அன்பு நெறி தழைத்தோங்கும் நாள் என்று வருமோ இவ்வுலகில்?
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றார் கணியன் பூங்குன்றனார்
அனால் அவர் வழி வந்த தமிழ் சமுதாயமோ
ஜாதியால் பிளவுபட்டு அப்பிளவில்
அரசியல் பேசும் அட்டைகள் பல்கிப் பெருகி
அருமைத் தமிழ்நாட்டை
அரித்து தின்னுக் கொண்டிருக்கின்றன
ஒரு புறம் ஜாதி வேண்டாம் என்கிறார்
மறுபுறமோ ஜாதிவாரி கணக்கெடுப்பு
எடுக்க வேண்டுமென்கிறார்
சாதிக்குசான்று வேண்டும் என்கிறார்,
அதற்க்கு இட ஒதுக்கீடு கேட்டு நாள்தோறும்
போராடுகின்றார்.
எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள்
என்று வாய் கிழிய மேடைதோறும் முழங்குகின்றார்
ஆனால் செய்வவதனைத்தும் ஜாதியின் அடிப்படையிலே
தீர்மானிக்கின்றார்.
சமதர்ம சமுதாயம் வேண்டுமென்றால்
அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி
வாய்ப்பு அளித்தல்தான் முறையன்றோ !
இதில் மதம் என்றும், கீழ் சாதி என்றும், உயர் சாதி என்றும்
சிறுபான்மை என்று எதற்க்காக வகைப் படுத்து கின்றாரரோ
யாருமறியார்
எல்லோரும் சகோதரர்கள் என்று சொல்கிறது ஒரு மதம்
ஆனால் அவர் மதத்தை சேர்ந்தவர்களையே கொன்று
குவிக்கிறது தினம் ஒரு கூட்டம்
எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்கிறது ஒரு மதம் ஆனால் அவர்களுக்குள்ளே எண்ணற்ற பிரிவுகள்.
எல்லோரும் இறைவனின் அம்சங்கள் என்று கூப்பாடு
போடுகிறது ஒரு மதம் ஆனால் அம்மம்மா எத்தனை பிரிவினைகள்
அந்த மதத்தில்.
அஹிம்சையை போதிக்கும் மதமொன்று அதை சார்ந்த அனைவரும்
மனித உயிர்கள் உட்பட மற்ற உயிர்களை கொன்று குவிக்கின்றனர்
காலம் காலமாய்.
எல்லா உயிரும் இன்புற்று வாழுக கொல்லா விரதம் குவலயமெல்லாம்
ஓங்குக என்ற அன்பு நெறியைப் போதிக்கும் வள்ளலாரின் கூக்குரல்
காற்றில் கலந்து மக்களின் மனங்களில் புகுந்து இந்த உலகம் இன்புறும் அந்த நாள் வருவது எந்நாளோ?

வள்ளலாரின் குரல் மக்களின் மனங்களில் விரைவில் பதியட்டும்
பதிலளிநீக்குநல்லது நடக்கட்டும்
இன்று கொள்ளையர்கள் இல்லாத இடம் இல்லை.
நீக்குவிலங்குகள் வாழும் கானகத்திற்கு சென்றாலும் அங்கேயும் தீவிரவாதிகள் ஆக்கிரமித்துக்கொண்டு ஆதிவாசிகளை கொன்று குவித்துக்கொண்டிருக்கிரார்கள். நாட்டில் சொல்லவே தேவையில்லை. மத வெறியர்களும், ஜாதி வெறியர்களும் லஞ்ச பிசாசுகளும் தீயவர்களும் அப்பாவி மக்களை கொடுமைக்கு ஆளாக்கியும், இரக்கமில்லாமல் கொன்றும் மனித மிருகங்களாக வாழ்கிறார்கள். அரக்க மனம் கொண்ட இவர்களை யாரும் திருத்த முடியாது.
அனைவரையும் படைத்த இறைவன்மனது வைத்தால்தான் நல்லது நடக்கும்.
அந்த நாள் வரும் என்பது சந்தேகமாக உள்ளது...
பதிலளிநீக்குஅதனால்தான் வள்ளலார் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் மறைந்துவிட்டார்.
நீக்கு