காடுகளில் விலங்குகளோடு
விலங்குகளாக
சுற்றித் திரிந்து கொண்டு வாழ்க்கை
நடத்தி வந்தான் மனிதன் பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்.
பலவிதமான அனுபவங்களை தொடர்ச்சியாகப் பெற்றபின்
விலங்குகளின் வாழ்க்கை வேறு மனிதப் பிறவி எடுத்த
வாழ்க்கையின் குறிக்கோள் வேறு என்பதை புரிந்துகொண்டான்.
மனிதனின் வாழ்க்கையை மேலும் செம்மைப்படுத்த
மதங்கள் தோன்றின.
மதக் கோட்பாடுகளை அனுசரித்து உயர்ந்த நிலையை
அடைந்தவர்கள் கோடானுகோடி.
ஆனால் சமீப காலமாக மனிதனை உயர்ந்த நிலைக்கு
கொண்டு சென்ற மதக் கோட்பாடுகளை சரியாக
புரிந்துகொள்ளாமல்தன் மனம் போன போக்கில்
நடந்துகொண்டு சக உயிர்களை துன்புறுத்தியும், கொன்றும்
இந்த உலகத்தையும் உலக மக்களையும் மீள முடியா
வேதனைகளுக்கு ஆளாக்கி வருகின்றான்.
இறைவனும், இறை தூதர்களும் பாடுபட்டு உருவாக்கிய
அன்பு மதம் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டது.
ஒவ்வொருவரும் அவரவர் மதம்தான் உயர்ந்தது என்று
தவறாக நம்பிக்கொண்டு மற்ற மதங்களை அனுசரிப்பவர்களை
எதிரிகளாகப் பார்த்து அழித்து வருகின்றனர்.
இந்நிலை தொடர்ந்தால் இந்த உலகமும் அதில் வசிக்கும்
மனிதர்களும் இந்த உலகம் அழியும் முன்பே அழிந்து போவதை
யாராலும் தடுக்க இயலாது.
இறைவன் படைத்த இந்த உலகில் அனைத்தும் அனைவரும்
சொந்தம் என்பதை மறந்து ஒவ்வொரு மனிதனின் மனதிலும்
சுயநலம், பொறாமை ,அகந்தை ,விருப்பு வெறுப்பு ஆகிய தீய குணங்கள்
கொழுந்து விட்டு எரிவதை நிறுத்தாவிடில் அனைவரும் அழிந்து போவதை நம்மைப் படைத்த இறைவனே வந்தாலும். தடுக்க முடியாது.
மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்து, தெய்வ நிலையை அடைவதற்கே தோன்றின மதங்கள்.
யானைபோல் மதம் பிடித்து அலைந்து தன். தலைமேல் தானே மண்ணை
அள்ளிப் போட்டுக்கொண்டால் அதனால் இழப்பு யானைக்கு மட்டுமே என்பதை மத வெறி பிடித்தவர்கள் உணவேண்டும்.
ஒரு வலுவான யானை எப்படி ஒரு பாகனுக்கு அடங்கி அமைதியாய் அது தன் பணிகளை ஆற்றுகிறதோ அதுபோல் மனிதர்களும் தன்னைப் படைத்து காக்கும் இறைவனுக்குஅடங்கி நடந்தால். நடந்தால் நன்மை விளையும்.
இல்லையேல் அழிவுதான் .என்பதை உணரவேண்டும்.
படங்கள்-கூகிள் நன்றி.
காலம் செல்லச்செல்ல மனிதன் மனிதம் மறந்து மதங்களின் பெயரால் அழிவைத் தேடிக் கொள்கிறான். அளவுக்கு மிஞ்சிய அமிர்தம்!
பதிலளிநீக்கு