பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள்
உம்மை பற்றாது
எங்கும் நிறைந்தவனே எழில்
வடிவம் கொண்டவனே
ஆதவனின் ஒளியாய் இருக்கின்றாய்
ஆணவம் கொண்டு அலைபவர்களை
அழிக்கும் தீயாய் திகழ்கின்றாய்
மாதவம் செய்த நல்லோர்களின்
வேண்டுகோளை ஏற்று பாரினில்
யாதவனாய் அவதரித்து
பாதகம் செய்பவர்களை அழித்தாய்
எங்கும் நிறைந்தவனே எழில்
வடிவம் கொண்டவனே கண்ணின்
ஒளியாய் திகழும் கண்ணனே
சொல்ல சொல்ல திகட்டாது உன் நாமம்
சொல்லிக்கொண்டே இருந்தால் போதும்
என்றும் எமை அண்டாது காமம்
கர்ம வலையில் சிக்கித் தவித்த
எமக்கு எளிதில் விடுபடும்
வழியைக் காட்டினாய்
பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள்
உம்மை பற்றாது என்று பார்த்தன் மூலம்
பாரதப் போர் தொடங்கு முன்பு பறை சாற்றினாய்
உன் திருவடியைப் பற்றியவர்க்கு
இகத்திலும் பரத்திலும் பயமில்லை ,
நிலையான இன்பமுண்டு
பாரதப் போர் தொடங்கு முன்பு பறை சாற்றினாய்
உன் திருவடியைப் பற்றியவர்க்கு
இகத்திலும் பரத்திலும் பயமில்லை ,
நிலையான இன்பமுண்டு
என்றுரைத்தாய்.
நினைவுள்ள வரை என் நெஞ்சில்
இருக்கட்டும் உன் நாமம்
.உந்தன் கவின் வடிவினைக் கண்டு ஆனந்தம்
அடையட்டும் என் கண்கள் .கண்ணில்
ஒளியிழந்தாலும் இதயத்தில் ஒளியாய்
நிலைத்து நீங்காஇன்பம் தந்திடுவாய்
அருமை. வேண்டுதல் பலிக்கட்டும். இரு ஓவியங்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி Sriram
நீக்குஓவியங்கள் அருமை ஐயா
பதிலளிநீக்குதங்கள் நெஞ்சில் இறைவன் நாமம் என்றும் நிற்கும் நிலைக்கும்
நன்றி KJ
நீக்கு