இயற்கையின் செல்லக் குழந்தைகள்
ஆம் பறவைகள்
இயற்கையின் செல்லக் குழந்தைகள்.
அதிகாலையில் எழுகின்றன
அழகாய் இனிய ஒலி எழுப்பிக்கொண்டு
ஆனந்தமாய் வானில் பறந்து திரிகின்றன
ஆதவன் காட்டும் ஒளி வெள்ளத்தில்
ஒவ்வொரு பறவை இனத்திற்கும்
ஒவ்வொரு விதமான இரையைப்
படைத்திருக்கின்றான் இறைவன்
ஆனந்தமாய் உண்கின்றன
ஜோடி சேர்கின்றன முட்டையிட
கூட்டை அவைகளே கட்டுகின்றன
கொத்தனார் துணை தேவையில்லை
வீடு கட்ட காசு பணம் தேவையில்லை
இயற்கையில் கிடைக்கும்
குச்சிகளும் புல்லும் போதும்
இன்பமாக காதல் வாழ்க்கை வாழ
பந்தம் கிடையாது ஆனால்
முட்டையிட்டு பொரித்த குஞ்சுகள்
பறக்க கற்றுக் கொள்ளும் வரை
பாசம் தொடரும் தடையில்லாது
ஆயிரமாயிரம் பறவைகள் ஒன்றாக இருந்தாலும்
சண்டையில்லை சச்சரவில்லை கூச்சலும்
கும்மாளமும்தான் கூடி இருக்கும் நேரம் .
மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை
மனம் போன போக்கில் வாழ்வதில்லை
போட்டி இல்லை பொறாமை இல்லை
பிறரை வஞ்சித்து வாழும் எண்ணம் இல்லை.
பறவைகளே நீங்கள் இயற்கையின் செல்ல குழந்தைகள்
இயற்கையோடு இயைந்து இன்பமாக வாழ்கிறீர்கள்
மனிதர்களாகிய நாங்களோ செயற்கையாக வாழ்ந்து
அன்பில்லாமல் ஒருவரை ஒருவர் சுரண்டி மடிகின்றோம்.
எல்லோரையும் வாழ வைக்கும் இயற்கையை அழிக்கின்றோம்
அல்லல்பட்டு அமைதியற்று சாகின்றோம்.
மனிதகுலம் என்று திருந்துமோ?
செய்யும் அடாத செயல்களுக்கு என்று வருந்துமோ?
ஆறறிவு உடையவர்கள் என்ற பெருமை
இனியும் பொருந்துமோ?
ஓவியம்-தி ரா.பட்டாபிராமன்
ஆம் பறவைகள்
இயற்கையின் செல்லக் குழந்தைகள்.
அதிகாலையில் எழுகின்றன
அழகாய் இனிய ஒலி எழுப்பிக்கொண்டு
ஆனந்தமாய் வானில் பறந்து திரிகின்றன
ஆதவன் காட்டும் ஒளி வெள்ளத்தில்
ஒவ்வொரு பறவை இனத்திற்கும்
ஒவ்வொரு விதமான இரையைப்
படைத்திருக்கின்றான் இறைவன்
ஆனந்தமாய் உண்கின்றன
ஜோடி சேர்கின்றன முட்டையிட
கூட்டை அவைகளே கட்டுகின்றன
கொத்தனார் துணை தேவையில்லை
வீடு கட்ட காசு பணம் தேவையில்லை
இயற்கையில் கிடைக்கும்
குச்சிகளும் புல்லும் போதும்
இன்பமாக காதல் வாழ்க்கை வாழ
பந்தம் கிடையாது ஆனால்
முட்டையிட்டு பொரித்த குஞ்சுகள்
பறக்க கற்றுக் கொள்ளும் வரை
பாசம் தொடரும் தடையில்லாது
ஆயிரமாயிரம் பறவைகள் ஒன்றாக இருந்தாலும்
சண்டையில்லை சச்சரவில்லை கூச்சலும்
கும்மாளமும்தான் கூடி இருக்கும் நேரம் .
மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை
மனம் போன போக்கில் வாழ்வதில்லை
போட்டி இல்லை பொறாமை இல்லை
பிறரை வஞ்சித்து வாழும் எண்ணம் இல்லை.
பறவைகளே நீங்கள் இயற்கையின் செல்ல குழந்தைகள்
இயற்கையோடு இயைந்து இன்பமாக வாழ்கிறீர்கள்
மனிதர்களாகிய நாங்களோ செயற்கையாக வாழ்ந்து
அன்பில்லாமல் ஒருவரை ஒருவர் சுரண்டி மடிகின்றோம்.
எல்லோரையும் வாழ வைக்கும் இயற்கையை அழிக்கின்றோம்
அல்லல்பட்டு அமைதியற்று சாகின்றோம்.
மனிதகுலம் என்று திருந்துமோ?
செய்யும் அடாத செயல்களுக்கு என்று வருந்துமோ?
ஆறறிவு உடையவர்கள் என்ற பெருமை
இனியும் பொருந்துமோ?
அமர்ந்திருக்கும் குருவியை நிமிர்ந்து பார்க்கும் குருவி... ஓவியம் அபாரம்.
பதிலளிநீக்குபதிவும் அருமை. சுதந்திர வாழ்வையும் ஒற்றுமையையும் அவற்றிடமிருந்துதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!
நன்றி ஸ்ரீராம் .10 நாட்களாக வலை பக்கமே வர முடியவில்லை
நீக்குto break the ice பறவைகள் படம் வரைந்தேன். உடனே கருத்துக்கள் ஊற்றெடுத்தது .பறவைகள் எனக்கு சில உண்மைகளை போதித்தன
அதைத்தான் வலையில் பகிர்ந்து கொண்டேன்.
குருவி ஓவியம் அருமை ஐயா
பதிலளிநீக்குகுருவியைப் பார்த்து நாம்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்
நீக்குநன்றி கரந்தையாரே. நம்மை சுற்றி வாழும் உயிர்களிடம் நாம் கற்றுகொள்ளவேண்டியவைகள் ஏராளம்.ஆனால் நாம் புத்தக் புழுக்களாக இருக்கிறோம்.
பதிலளிநீக்கு"மனிதகுலம் என்று திருந்துமோ?
செய்யும் அடாத செயல்களுக்கு என்று வருந்துமோ?" எனச்
சிறப்பாகப் போட்டுடைக்கிறீர்களே!
சிறந்த பகிர்வு!
visit: http://ypvn.0hna.com/
உண்மையை உணர்த்திதான் ஆகவேண்டும்
பதிலளிநீக்குஉணர்வு உள்ளோர் உணருவர்
மற்றோர் உணரும் காலமும்
ஒருநாள் வரும் .நன்றி வருகைக்கு