சனி, 25 ஜனவரி, 2014

தெரிந்துகொள்ளுங்கள்.

தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களிடம் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுக்களையும்  பரிசோதனை செய்தால் பின் பக்கத்தில் கீழே சிறிய எழுத்தில் ஆண்டு அச்சடிக்கப் பட்டிருக்கும். அது இல்லை என்றால் அந்த நோட்டுக்கள் இவ்வாண்டு மார்ச்  30 ஆம் தேதிக்குப் பின் செல்லாது. அப்படிப்பட்ட நோட்டுக்களை இரண்டு மாதங்களுக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவேண்டும். 

அப்போது அல்லல்படுவதை விட இப்பொழுதே அவ்வித நோட்டுக்களைக் கண்டறிந்து 30.4.2014க்குள்  வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

அறியாதவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள். 

2005ம் ஆண்டுக்கு முன்பாக அச்சடித்த பணம் செல்லாது! : ரிசர்வ் வங்கி

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பணம் அதாவது நோட்டுக்கள் எதுவும் செல்லாது என்று மத்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் வருகிற மார்ச் மாதம் முடிய மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்றும், அதற்கு மேல் 3 மாத கால அவகாசத்தில் பொது மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதிக பட்சம் பணம் பரிமாற்றம் செய்யும் போது, புகைப்படத்துடன் கூடிய முகவரி அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மக்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் முயற்சியாகவும், கள்ள நோட்டுக்களை இனி சந்தையில் புழங்க விடாமல் தடுக்கவும் இந்த முயற்சி என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இனி புழக்கத்தில் விடப்படும் ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்களை எளிதாக கண்டுபிடிக்கும் படியான தரத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கியின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

4 கருத்துகள்:

  1. பலரும் அறிய பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு


  2. 2005-ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை இப்போதே வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    முன்னதாக ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டிருந்தது.

    இந்நிலையில் பொதுமக்களின் வசதியைக் கருத்தி கொண்டு இப்போதுமுதலே வங்கிகளில்

    ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதற்கு ஜூலை 1-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

    2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு. எனவே கள்ள நோட்டுக்களை கட்டுக்குள் கொண்டுவர இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு சர்வதேச நடைமுறை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

    2005-க்கு முன்பு வெளியான நோட்டுகளின் பின்பக்கத்தில் அச்சடிக் கப்பட்ட ஆண்டு விவரம் இருக்காது. 2005-க்கு பின் வெளியிடப்பட்ட நோட்டுகளின் பின்பக்கத்தில் கீழ்பகுதியின் நடுவில் சிறிய வடிவில் அச்சடிக்கப்பட்ட ஆண்டின் விவரம் இருக்கும். இதை வைத்து பழைய நோட்டுக்களை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய செய்தித் தாளில் வந்துள்ள திருத்தத்தை முந்தய பின்னூட்டத்தில் தந்துள்ளேன். நேரக் கட்டுப்பாடும் கிடையாது, செல்லாது என்பதும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    பதிலளிநீக்கு
  4. பலரும் அறிய பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு