தீபாவளி சிந்தனைகள்

மற்றவர்கள் பட்டாசு வெடிப்பதற்கு
தங்கள் கையில் உள்ள
காசைக் கொடுக்கவேண்டும்.


பட்டாசு தயாரிப்பவர்கள்
பட்டாசு தயாரிக்க பிழைப்புக்காக தங்கள்
உயிரையே கொடுக்க வேண்டியிருக்கிறதே !

ஒளியைச் சிந்தும் வாணங்கள்
காண்போர் மனதில் ஊட்டும் உவகை
அதிலிருந்து எழும் புகையோ
வானில் முட்டி ஓட்டை போடும்
நம் உயிரைக் காக்கும் காற்றுப்படலத்தில்

சர வெடிகளின் ஒலியோ
காதை பிளக்கும்
ஏற்கெனவே கைபேசியினால்
அரைச் செவிடாய்ப்
போன மானிடம் முழுசெவிடாய்
போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை

வயிறுமுட்ட பலகாரங்கள்,
இனிப்புக்கள் தின்பார் மக்கள்

அதை சீரணிக்க லேகியமும்
கணக்கின்றி மாத்திரை வில்லைகளையும்
ஜெல்களையும் உள்ளே தள்ளி
ஏப்பம் விடுவார்கள் "உணவே மருந்து
மருந்தே உணவு" என்ற
தொலைகாட்சி தொடரைப் பார்த்துக்கொண்டே

புத்தாடை உடுத்தி இன்பம் காண்பார்
புதுமணத் தம்பதிகள்
பொன்னகைகள் பூட்டிய நகைகளோடு
முகத்தில் புன்னகை பூக்க
பூவையர்கள் வலம் வருவார்.

வெடியினால் வேடிக்கையும் உண்டு

வாடிக்கையான விபத்துக்களும் உண்டு

காண்போர்க்கு இன்பமும் உண்டு
விபத்தினால் வாழ்வும் இன்பமும்
இழந்து அல்லல்படுவோரும் உண்டு
இந்த அவனியிலே
இன்பம் துன்பமும் இணைந்ததுதான்
இவ்வுலக வாழ்க்கை
இருளை ஓட்டும்
ஒளித்திருநாளே நீ வாழி.!

ஒளியாய் உறையும் இறைவனை
உணர்த்தும் தீப ஒளித்திரு நாளே
நீ என்றென்றும் வாழி!
pic.courtesy-google images
மற்றவர்கள் பட்டாசு வெடிப்பதற்கு
தங்கள் கையில் உள்ள
காசைக் கொடுக்கவேண்டும்.
பட்டாசு தயாரிப்பவர்கள்
பட்டாசு தயாரிக்க பிழைப்புக்காக தங்கள்
உயிரையே கொடுக்க வேண்டியிருக்கிறதே !
ஒளியைச் சிந்தும் வாணங்கள்
காண்போர் மனதில் ஊட்டும் உவகை
அதிலிருந்து எழும் புகையோ
வானில் முட்டி ஓட்டை போடும்
நம் உயிரைக் காக்கும் காற்றுப்படலத்தில்
சர வெடிகளின் ஒலியோ
காதை பிளக்கும்
ஏற்கெனவே கைபேசியினால்
அரைச் செவிடாய்ப்
போன மானிடம் முழுசெவிடாய்
போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை
வயிறுமுட்ட பலகாரங்கள்,
இனிப்புக்கள் தின்பார் மக்கள்
அதை சீரணிக்க லேகியமும்
கணக்கின்றி மாத்திரை வில்லைகளையும்
ஜெல்களையும் உள்ளே தள்ளி
ஏப்பம் விடுவார்கள் "உணவே மருந்து
மருந்தே உணவு" என்ற
தொலைகாட்சி தொடரைப் பார்த்துக்கொண்டே
புத்தாடை உடுத்தி இன்பம் காண்பார்
புதுமணத் தம்பதிகள்
பொன்னகைகள் பூட்டிய நகைகளோடு
முகத்தில் புன்னகை பூக்க
பூவையர்கள் வலம் வருவார்.
வெடியினால் வேடிக்கையும் உண்டு
வாடிக்கையான விபத்துக்களும் உண்டு
காண்போர்க்கு இன்பமும் உண்டு
விபத்தினால் வாழ்வும் இன்பமும்
இழந்து அல்லல்படுவோரும் உண்டு
இந்த அவனியிலே
இன்பம் துன்பமும் இணைந்ததுதான்
இவ்வுலக வாழ்க்கை
இருளை ஓட்டும்
ஒளித்திருநாளே நீ வாழி.!
ஒளியாய் உறையும் இறைவனை
உணர்த்தும் தீப ஒளித்திரு நாளே
நீ என்றென்றும் வாழி!
pic.courtesy-google images
நடக்கும் உண்மைகள்...
பதிலளிநீக்குஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
நன்றி DD
நீக்குசொன்ன கருத்துகளும் சொல்லிய விதமும் அருமை! நல்லதொரு விழிப்புணர்வு தரும் பதிவிற்கு நன்றி!இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி
நீக்கு