புதன், 18 செப்டம்பர், 2013

விநாயகர் சதுர்த்தி சிந்தனைகள்

விநாயகர் சதுர்த்தி சிந்தனைகள் 



விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை
கோலாகலமாக அலங்கரித்து
விமரிசையாக பூஜிப்பதும்
பிறகு அந்த வடிவத்தை ஊர்வலமாக எடுத்து சென்று
அந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் மதவாதிகள், தீவிரவாதிகள் ஆதாயம் பார்ப்பதும் எந்த  அசம்பாவிதமான சம்பவங்கள், மோதல்கள், வன்முறைகள் ஏற்ப்படாமல் தடுக்க ஆளும் அரசுகள், காவல் துறை, மாவட்ட நிர்வாகங்கள் பிரம்ம பிரயத்தனங்கள் செய்வதும் அதன் பின் கொடூரமான முறையில் கண்ட இடங்களில் பூஜிக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளை வீசுவதும்
வாடிக்கையாகி விட்டது .

பல ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சிலைகளை எதற்கு அழிக்கவேண்டும் ?

களிமண்ணால் செய்யப்பட சிலைகளை மட்டும்
நீர் நிலைகளில் விடலாம்.

ஆண்டுதோறும் ஒரு மதத்தினர் காட்டும் பக்தி வெள்ளம்
வேறு ஒரு மத பிரிவினருக்கு பதட்டத்தை விளைவிப்பதாலும், அரசுக்கு தேவையற்ற பாதுகாப்பு காரணங்களுக்காக வீண் செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கவும் கீழ்கண்ட முறையை பரிசீலித்தால் அனைவர்க்கும் நல்லது. நாட்டிலும் மோதல்கள் இருக்காது,. அமைதியும் நிலவும்.

1. அலங்கரிக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளை ஒரு பொது  இடம் ஒதுக்கி(அருங்காட்சியகம்) அங்கு காட்சி பொருளாக வைத்து வழிபடலாம்.

அதை பராமரிக்கும் பொறுப்பை அந்த பிள்ளையாரை  பூஜை செய்த மக்களுக்கே விட்டு விடலாம். 

இதனால் மக்களுக்கு விதவிதமான பிள்ளையார் சிலைகளை ஒருங்கே காணும் வாய்ப்பு கிடைக்கும். 

சுற்று சூழலுக்கு பாதிப்பும் ஏற்படாது. 

1. பச்சை களிமண்ணால் செய்த சிலைகளை மண்பாண்டம்/மண் பொம்மை செய்வோர் கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைத்துவிட்டால் அவர்கள் அதிலிருந்து நவராத்திரிக்கு,பொம்மைகளும். கார்த்திகை தீபத்திற்கு அகல்விளக்குகளும்  செய்து பயனடைவார்கள். 

இதனால் சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.
பிள்ளையார் சிலைகள் படும் பாடும் தவிர்க்கப்படும்.


2 கருத்துகள்: