வியாழன், 5 செப்டம்பர், 2013

சென்றதினி மீளாது மூடரே

சென்றதினி மீளாது மூடரே

என்றான் மகாகவி பாரதி

சென்றதினி மீளாது மூடரே
என்றான் மகாகவி பாரதி



ஆனால் யார் அவன் பேச்சை கேட்கிறார்கள்?


அவன் பேச்சை கேட்டிருந்தால்
இன்று லட்சகணக்கான மன நோயாளிகள்
இந்த உலகில் உருவாகியிருப்பார்களா?
பல ஆயிரம் மனநல காப்பகங்களில்
உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும்
மக்கள் துன்பப்பட்டு கொண்டிருப்பார்களா?

மனநோயாளிகளை பேய் பிடித்தவர்கள் 
என்று பெயரிட்டு பலவிதமான கொடுமைகளுக்கு 
ஆளாக்கி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும்
மாந்திரீக வாதிகளுக்கு 
பிழைப்பு ஏற்பட்டிருக்குமா?

மனநோயாளிகள படும் துன்பமல்லாது 
அவர்களின் பெற்றோர்கள், உறவுகள் 
மற்றும் இந்த சமூகம் படும் பாடுகளுக்கு 
என்றுதான்முடிவு ?

அவர்களுக்கு மற்றவர்கள் கொடுக்கும் துன்பங்களும்
இழிவுபடுதுதலும் அவர்களை மென்மேலும்
 மீள முடியாத புதை குழியில்தள்ளி 
அவர்கள் வாழ்க்கை எதற்கும்
 பயனற்று போய்விடுகிறது
.
தேர்வில் தோல்வி, வியாபாரத்தில் தோல்வி,
காதலில் தோல்வி என பலவிதமான 
தோல்விகளில் சிக்கியவர்கள் 
அந்த நிகழ்விலிருந்து மீளாமல்
மன நோயாளிகளாக மாறி போதை, மது 
போன்றவற்றிற்கு அடிமையாகி
தங்களை அழித்துக்கொண்டு 
தங்களை சார்ந்தவர்களையும் 
துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள்

மன நோயாளிகளுக்கு மருத்துவ  உதவிகள் 
செய்வதை விட அவர்கள் உருவாகுவதை தடுக்க
சமூகமும் அரசும் முயற்சி எடுக்க வேண்டும்
குழந்தைகளின் இளமை பருவத்திலேயே 
மன நலம் காக்க ,தோல்விகளை   சமாளிக்க, 
பிரச்சினைகளை எதிர்கொள்ள,
பிரச்சினைகளை உணர்ச்சி பூர்வமாக
அணுகாமல் அறிவு  பூர்வமாக அணுகி 
அவைகளை வெற்றி கொள்ளும் வகையில்
பாட திட்டம் வகுக்க பட்டு பள்ளிகளில் 
கட்டாய பாடமாக்கபடவேண்டும் .

அவைகளை அனைத்து பள்ளிகளிலும்
எல்லா நிலைகளிலும் செயல்படுத்த
நடவடிக்கை  மேற்கொள்ளவேண்டியது 
காலத்தின் கட்டாயம். 

2 கருத்துகள்:

  1. மனநோயாளிகள படும் துன்பமல்லாது
    அவர்களின் பெற்றோர்கள், உறவுகள்
    மற்றும் இந்த சமூகம் படும் பாடுகளுக்கு
    என்றுதான்முடிவு...?

    சிந்திக்க வேண்டியது...

    பதிலளிநீக்கு