வியாழன், 27 செப்டம்பர், 2012

ஓய்வு என்னும் வரம்

ஓய்வு என்னும் வரம்  

இந்த உலகில் இயங்கிகொண்டிருக்கும் 
அனைத்திற்கும் ஓய்வு  தேவை 
ஓய்வு எதற்கு?
அது தொய்வு இல்லாமல் 
தொடர்ந்து இயங்குவதற்கு 
அந்த ஓய்வு தேவை. 

நம்  இதயம் ஓயாமல் இயங்கிகொண்டிருக்கிறது 
நாம் தூங்கும்போதுகூட அது தூங்குவதில்லை 
அது தூங்கிவிட்டால் நம்மை தூக்கி போட்டு 
கொளுத்திவிடுவார்கள் அல்லது புதைத்துவிடுவார்கள். 

ஆனால் உண்மையில் இதயம்கூட அதற்க்கு தேவையான 
ஓய்வை எடுத்துக்கொள்கிறது என்பது  உண்மை. 
எப்படி என்றால் ஒரு துடிப்பிற்கும் அடுத்த துடிப்பிற்கும்
 உள்ள இடைவெளியில் அது ஓய்வை எடுத்து கொள்கிறது
வேகமாக ஓடும் ரயில் என்ஜின் இறக்கத்தில் 
ஓடும்போது என்ஜினை நிறுத்திவிட்டால் 
அதற்க்கு ஓய்வு கிடைக்கும் 

ஒரு மனிதன் தன் உடலில் உயிர் உள்ள வரை 
 இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்
அப்போதுதான்அவம் உடலில் உள்ள அனைத்து
கருவிகளும் ஒழுங்காக செயல்படும்
அனைத்து கருவிகளும் நன்றாக செயல்படும்போது 
அவன் செயல்திறனும் நன்றாக இருக்கும்
உடல்நிலை நன்றாக இருக்கும்போது 
மன நிலையும்  நன்றாக இருக்கும். 

ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் போது பணியிலிருந்து
விடுவிக்கப்படும்வரை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றார் 
பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்  அவரின் மனநிலையும்,
உடல்நிலையும் சோர்வடைந்து விடுகின்றன.

இனி நம் வாழ்வு அவ்வளவுதான் என்று நினைக்க தொடங்குகின்றார். 
ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றி விடுகிறது.

ஆனால் உண்மையில் அவருக்கு உண்மையான சுதந்திரம்
 பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்தான்  கிடைக்கிறது 
என்பதை வசதியாக மறந்துவிடுகின்றார். 
ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனையோ நோக்கங்கள் 
ஆசைகள், தேடல்கள் இருக்கும்,
 பணியில் இருக்கும்போது அதற்கெல்லாம் நேரமிருக்காது.
 அனுமதி கிடைக்காது,கட்டுப்பாடுகள் இருக்கும் 

 பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அந்த நோக்கங்களை
 நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபட்டால் பொழுதும் போகும், 
ஆத்ம திருப்தியும் கிடைக்கும். 
ஏன் சிலருக்கு பெருமையும் புகழும் கூடும். 
எல்லாம் நம் சிந்தனையில்தான்  இருக்கிறது

சிந்தனையில் மேடை கட்டி
செந்தமிழை ஆடவிடலாம்
செயல் வடிவம் கொடுக்கலாம்.
சிலருக்கு அறுபது வயதுக்கு மேல்தான் இளமை திரும்பும். 
அந்த இளமை நன்றாக பழுத்த  சுவையான 
கனி போன்று இனிக்கும் 

3 கருத்துகள்:

  1. உண்பதும் உறங்குவதும் தான்
    தன்னுடைய கொள்கை என்று
    இருப்பவன் பயனின்றி வீணே
    இறந்துபோவான்
    அதற்க்கு உதாரணம் ராமாயணத்தில்
    வரும் ராவணனின் தம்பி
    கும்பகர்ணன்.
    ஓய்வு பெற்ற சிலர்
    ஓய்வில்லாமல் ஓடிகொண்டிருக்கிரார்கள்

    சிலரோ நான் இத்தனை காலம்
    இந்த குடும்பத்திற்காக உழைத்து களைத்துவிட்டேன்
    இனிமேல் நான் எதுவும் செய்யமாட்டேன் என்று உண்பதும் உறங்குவதுமாகவே காலத்தை கழிப்பவர்களும் உண்டு.

    அப்படிப்பட்ட சிலர் ஒரு நாள் தூங்க சென்றபின்
    மீண்டும் எழுந்திருக்காமல் போனதும் உண்டு.

    எனவே இந்த உடலில் உயிர் இருக்கும் வரை
    ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும்.
    இறந்தபிறகுதான் மறு பிறவி எடுக்கும்வரை
    தூங்குவதற்கு நிறைய நேரம் கிடைக்கும்.
    என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
    THE MAN WHO RESTS TOO MUCH RUSTS என்ற பழமொழி உண்மையானது.

    பதிலளிநீக்கு
  2. ஓய்வு பற்றி அருமையான பதிவு.
    நன்றி.

    பதிலளிநீக்கு