குழந்தைகளும் கோட்டான்களும்
குழந்தைகள் பல செய்கைகளை செய்கின்றன
ஏனென்றால் அவைகளுக்கு அது தவறு என்று தெரியாது
அதற்க்கு அது இயற்கையின்உந்துதல் அவ்வளவுதான்.
குழந்தை தொட்டிலில் படுத்து கிடக்கும்போது சிறுநீர் கழிக்கிறது
அதன் தாய் நனைந்த துணியை அகற்றிவிட்டு குழந்தையை
துடைத்துவிட்டு வேறு துணி மாற்றி விடுகிறாள்
மீண்டும் அவ்வப்போது இந்த செயல் குழந்தையே தன்னை தானே
கவனித்து கொள்ளும் வரை நடைபெறுகிறது.
தாயோ மற்றவர்களோ குழந்தை மீது கோபம் கொள்வதில்லை
அதே குழந்தையை ஒருவர் எடுத்து முகத்திற்கு நேரே
வைத்துக்கொண்டு அன்போடும் பாசத்தோடும் கொஞ்சுகிறார்
அது குஞ்சிலிருந்து அவர் முகத்தில் நீரை பீச்சியடிக்கிறது
அவரோ அல்லது மற்றவர்களோ குழந்தை மீது கோபம் கொள்வதில்லை
மாறாக அதை ரசிக்கிறார்கள். அந்த குழந்தை பெரியவனாக வளர்ந்த பின்பும் அந்த
செய்கையை அவனிடம் சொல்லி மகிழ்கிறார்கள்.
அது சரி எதற்கு இந்த புராணம் என்று சிலர் கேட்கலாம்.
குழந்தை தான் செய்வது தவறு என்று அறியாத நிலைமையில்
அப்படி செய்தது. ஏற்றுக்கொள்ளலாம்.
வளர்ந்தவிட்ட பிறகும் வாலிபனாகட்டும் ,முதியவராகட்டும் சரி.
நினைக்கும் நேரமெல்லாம் குழாயை கண்ட கண்ட இடங்களில் திறந்துவிட்டு
அசிங்கப்படுத்துவதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்?
லட்சக்கணக்கான மக்கள் புழங்கும் ரயில் வண்டி நிலையங்கலாகட்டும்
பல ஆயிரம் மக்கள் வந்து போகும் பேருந்து நிலையங்கலாகட்டும்
பள்ளிக்கூடங்கலாகட்டும் ,சந்தைகலாகட்டும் ,ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடும் இடங்களாகட்டும் மக்கள் என்று தங்களை அழைத்துகொள்ளும்
மாக்கள்(விலங்கு குணம் கொண்ட மனிதர்களுக்கு பெயர்),விலங்குகள் போல நினைத்த இடத்தில,நினைத்த நேரத்தில் மல ஜலம் கழிப்பது தொடர்கதையாகிவிட்டது
அரசுகளும் மக்களுக்கு இயற்க்கை உபாதைகளை கழிக்க வசதிகளை
ஏற்படுத்தி தருவதில்லை. அப்படி ஏற்படுத்தி தந்தாலும் அதை முறையாக பராமரிப்பதில்லை
மக்களும் முறையாக பயன்படுத்துவதும் இல்லை.
எங்கு பார்த்தாலும் எவராவது அந்த வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்
அனைவரின் அஜாகிரதையினாலும்,பொறுப்பற்ற தன்மையாலும்
நாம் வசிக்கும் இடம் முழுவதும் நோய்கிருமிகளால் சூழப்பட்டு
அனைவரும் ஏதாவது நோயால் துன்பப்படுகிறோம்.
இந்த நிகழ்வில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்.
அவர்கள் ஆண்களைப்போல் கண்ட கண்ட இடங்களில்
இயற்க்கை உபாதையை போக்கி கொள்ள இயலாது.
அதனால் அவர்கள் பலவிதமான நோய்களுக்கும்,
மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
மக்களின் நோயை போக்க மருத்துவ செலவிற்காக
கோடிகணக்கான ரூபாய்களை செலவு செய்யும் அரசுகளும்,
மனிதர்களும்,இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க முயலவேண்டும்.
இல்லாவிடில் தற்போது காதுகளில் ஒரு earphone மாட்டிகொண்டு
அலைவதுபோல் எங்கு பார்த்தாலும் மூக்கை துளைக்கும்
துர்நாற்றத்திலிருந்து தப்பிக்க மூக்கின் மேல் வாசனை திரவம்
அடங்கிய குப்பியை மாட்டிகொண்டுதான் எதிர்காலத்தில் திரிய நேரிடும்.
முடிவில் நீங்கள் சொன்னது போல் தான் இப்போதே இருக்கு...!!!
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
உணர்வார்களா?
பதிலளிநீக்குநன்றி ess/ DD /RN sir
பதிலளிநீக்கு