ஞாயிறு, 7 ஜனவரி, 2018

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(24)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(24)

Sunday, January 5, 2014( மீண்டும் வருகிறாள் கோதை)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(24)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(24)



பாடல்-24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி 
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி 
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி 
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி 
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி 
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் 
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.  



விளக்கம் 


இந்த பாசுரத்தில் உறக்கத்தை விட்டொழித்து அனைத்தையும் மறந்து அரங்கனின்  நினைவாக அவன் கோயிலின் வாசலில் நின்று அவன் தரிசனம் காண நிற்கும் அடியவர்களைக் காண வருகின்றான் கண்ணன் 
அவன் நடை அழகை விவரிக்கும் பாடல் இதோ. 

மூவுலகங்களையும் மூவடியால்
 அளந்த உன் திருப்பாதங்களுக்கு வணக்கம்



மூவுலகம் என்பது
 நம் மனதின் மூன்று நிலைகள் 

புறவுலகத்தில் புலன்களின் 
துணை கொண்டு பகவானின் 
அழகிய வடிவைத் தரிசிக்கிறோம்.
 அவன் திருவடிகளை வணங்குகிறோம். 
மனம் அவன் திருவடிகளில் 
லயிப்பதோ ஒருகண நேரந்தான் 

அதற்கும் ஆயிரம் தடங்கல்கள்>
ஆயிரமாயிரம் திசை மாற்றும் எண்ணங்கள் 
எத்தனையோ வேலைகள்>எத்தனையோ கடமைகள் 
எத்தனையோ துன்பங்கள் 
என அவனை தொடர்ந்து நினைக்கவோ 
தரிசனம் செய்யவோ முடியாது.

அடுத்து உறக்கத்திலே கனவு நிலை. 
அதிலும் அவன் நினைவு நமக்கு வராது.

அதற்கு அடுத்த நிலையிலோ ஆழ்ந்த உறக்கம் 
கேட்கவே வேண்டாம் .ஒன்றும் தெரியாது. 

அதற்கு அடுத்த நிலை .
அது நமக்கு தெரியாது 
அந்த நிலையை அடைய 
 சாதாரண மனிதர்களாகிய 
நாம் எந்த முயற்சியும் செய்வது கிடையாது. 

அது யோகிகளுக்கும் 
ஞானிகளுக்கும் தான் கைகூடும்.
அந்த நிலையில் அவனை எந்நேரமும் தரிசித்து இன்புற்றுக்கொண்டிருக்கலாம். 

அதற்க்கு கடும் முயற்சி
>பயிற்சி வேண்டும்.
 ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கொண்டிருக்கும்
 நம் போன்றோர்க்கு அது என்றும் கைகூடாது.

எனவே தெரியாத ஊருக்கு போகும்போது 
அங்கு ஏற்கெனவே சென்று 
வந்தவர்களின் உதவியை நாடினால்
 நாம் சுகமாக அங்கு போகலாம்.



 நாம் நம் அகந்தையினால் கிடந்துஅதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்  உழலுவதைக் கண்ட ஆண்டாள் அவளே வலிய  வந்து நம்மை உறக்கத்திலிருந்து எழுப்பி கைபிடித்து  பகவானிடம் அழைத்து செல்கிறாள். என்னே அவள் கருணை!





பலகலைகளைக் கற்றவனும்>பரமசிவனின் அருளைப் பெற்றவனும்> பெரும் பராக்கிரமசாலியுமாயிருந்த ராவணனை காம க்ரோதாதிகளை அடக்க இயலாமையினால் தறி கேட்டு அலைந்த காரணத்தினால் சம்ஹாரம் செய்த இராம பிரானின் திருவடிகளை பற்ற சொல்கிறாள் கோதை 
எதற்காக?



ஒன்றும் அறியாது எல்லாம் அறிந்தவ்ர்கள் போல் வேடமிட்டு திரியும் நம் போன்ற அஞ்ஞானிகள்  கடைதேறுவதர்க்காக 

கம்சன்>மற்றும் அவனைத் சார்ந்த இரக்கமற்ற அரக்க குணம் கொண்டவர்களை கூண்டோடு அழித்த கண்ணனின் திருவடிகளைப் பற்ற சொல்கிறாள் 



ஒன்றும் அறியா ஆயர் குல மக்களையும் பசுக்கூட்டத்தையும் தேவர்களின் தலைவன் இந்திரனால் கண்ணனின் மகிமையை உணராது பெய்வித்த மழையின் வெள்ளத்திலிருந்து கோவர்தனமலையை விரலால் தூக்கி நின்று காத்த கோவர்த்தனனின் திருவடிகளை அடைக்கலமாக கொள்ள சொல்கிறாள். ஆண்டாள் 

முருகனின் கையில் வேலாய் இருக்கின்றன் கண்ணன் நம் மனதின் உள்ளே இருந்துகொண்டு நம்மை ஆட்டிவைக்கும் காம க்ரோதாதி ஆறு  பகைவர்களை அழிக்க  

 

இப்படியெல்லாம் நாம் வேண்டினால்
 கண்ணன் என்னும் தெய்வம் நம்மை காக்காமல் போய்விடுமா?
நிச்சயம் நம்மை காக்காது போகாது

எண்ணற்ற அருளாளர்களின் வாழ்வே சாட்சி 
இதிஹாச புராணங்கள் சாட்சி. 


நம் பாரத தேசம் முழுவதும் அடியவர்களுக்கு அருள் செய்து அங்கேயே தங்கிவிட்ட தெய்வ வடிவங்களின் அர்ச்சா மூர்த்திகளே சாட்சி.  .

நீ யார்?

நீ யார்?

நீ யார்?

நீ யார்?

யார் மனிதனா?

யார் சொன்னது அப்படி?

அது உண்மையல்ல. நீ உன்னை அப்படிநினைத்துகொண்டு
இவ்வுலகிலெல்லாவிதமான அட்டூழியங்களை செய்து கொண்டு வருகிறாய்.

அப்படியென்றால் நீ யார்?

நீ ஒரு மனித பிராணி. அவ்வளவுதான்.

அதனால்தான் உன்னை அரக்கர்களும், காபாலிகர்களும் மற்ற பிராணிகளை போல உன்னையும் தங்களுடைய உணவாக கருதி உண்டார்கள்.

வேதமே  கூறுகிறது நீ ஒரு"நர ஐந்து" என்று.

மேலை நாட்டு மேதைகளும் கூறுகிறார்கள். "மனிதன் ஒரு சமூக பிராணி" என்று.

அவர்கள் சொல்லிவிட்டால் அதுதான் நமக்கு "வேத வாக்கு"

இறைவன் படைப்பில் உள்ள கோடிக்கணக்கான வகையான உயிரினங்களில் "நர ஐந்து" என்ற நம்மைப் போன்ற மனித உயிர்களும் ஒன்று. அவ்வளவுதான்.

மற்ற உயிரினங்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் கிடையாது

தான் யார் என்று அறியும் ஆற்றலும் கிடையாது.

பிறவி எடுத்ததிலிருந்து உணவு உண்பது, இனப்பெருக்கம் செய்வது.,முடிவில் மாண்டு போவது இதைத்தான் அவைகள் செய்துகொண்டிருக்கின்றன.

இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு குறிப்பிட்ட கடமைகளை வகுத்து கொடுத்திருக்கின்றன.

அதை அவைகள் என்றும் மீறுவதில்லை.

ஆனால் மனித பிராணியாக உயிரெடுத்த நாம் ,இறைவன் நமக்களித்த
வரத்தை மறந்து தரம் தாழ்ந்து ,கொடிய மிருகங்களை விட கீழ்த்தரமாக அனைத்து  உயிரினங்களையும் தன்னை போன்ற மனித பிராணிகளையும் கொடுமைப்படுத்தி
கொன்று குவித்து கொண்டிருக்கிறோம்.

அதனால் நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது.

மற்ற உயிரினங்களுக்கு நோய்  வந்தால் மருத்துவர்களிடம் செல்வது கிடையாது.

அவைகளுக்கு மரண பயம் கிடையாது.

அவைகள் சொத்து சேர்ப்பது கிடையாது.
அவைகளிடம்பொறாமை கிடையாது.
போட்டி கிடையாது. வஞ்சகம் கிடையாது.
சூது ,வாது  கிடையாது.

ஆனால் மனித பிராணிகளாகிய நாம் மட்டும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத பராரி போல் எப்போதும் சோகத்திலே வாழ்கிறோம்.

சுகம் இருந்தாலும் அதை அனுபவிக்க, மனம் இருப்பதில்லை, அல்லது உடல் நலம் இருப்பதில்லை.

எப்போதும் ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் வாழ்கிறோம்.

எந்நேரமும் கொழுந்து விட்டெரியும் ஆசைகள்.
பொறாமையால்பொங்கி வேகும் மனம்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றான் "பாரதி"

எத்தனை வகையான செல்வம் இருந்தாலும் "திருப்தி" என்ற
போதுமென்ற மனம் நமக்கு வராத வரை.
என்றும் நிம்மதியில்லை.

சனி, 6 ஜனவரி, 2018

இசையும் நானும் (267) திரைப்படம் -Swami Ayyappan(1975) பாடல்:திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே



இசையும் நானும் (267)  

திரைப்படம் -Swami Ayyappan(1975)


பாடல்:திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே





MOUTHORGAN

 VEDIO-267


Swami Ayyappan


HeroGemini Ganesan& Nambiyar
Music DirectorG.Devarajan
LyricistKannadasan
SingersK.J.Jesudass
Year1975


திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா-அன்று 
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா..ஆஅ.

உலகினை பாய் போல் உண்டவன் நீயே  ஸ்ரீமன் நாராயணா.
அன்று உரலுடன்  நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணா 

இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா.
அன்று இந்திரன் வில்லை முறித்தவன் நீயே  ஸ்ரீமன் நாராயணா.

கொடியவள் மகிஷி  கொலை புரிந்தாளே அறியாயோ நீயே 
அவள் கொடுமையை அழிக்க மறந்துவிட்டாயோ  ஸ்ரீமன் நாராயணா.
தேவர்கள் உந்தன்  குழந்தைகளன்றோ மறந்தாயோ நீயே 
உன்  தெய்வ முனிவரை காப்பதற்க்கென்றே வருவாயோ நீயே 

தோளிலந்த சார்ங்கம் எடுத்து வரவேண்டும் நீயே 
கணை தொடுத்திடவேண்டும் அரக்கியின் வாழ்வைஅழித்திடுவாய் நீயே 

அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே 
உன் அன்பரையெல்லாம் துன்பத்திலிருந்து காப்பாய் பெருமாளே 

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள் 
நாராயணனென்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள் 

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் 
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள் 
ஸ்ரீமன் நாராயணா! ஸ்ரீபதி ஜகன்னாதா !வருவாய் திருமாலே!துணை தருவாய் பெருமாளே..!






செவ்வாய், 2 ஜனவரி, 2018

இசையும் நானும் (267) SONG ON SRI RAMA பாடல்: ஸ்ரீ.ராமச்சந்திர மூர்த்தி !


இசையும் நானும் (267)  

SONG ON SRI RAMA

பாடல்: ஸ்ரீ.ராமச்சந்திர மூர்த்தி !



இயற்றி பாடியவர்:தி.ரா.பட்டாபிராமன். 



ஸ்ரீ.ராமச்சந்திர மூர்த்தி !
என் உள்ளம் கவர்ந்த மூர்த்தி (ஸ்ரீராம)

அவனை வணங்கி வந்தாலே போதும்
தானே வந்தடையும் கீர்த்தி (ஸ்ரீராம)

அவனை தேடி அங்குமிங்கும் அலையவேண்டாம்

அன்போடு அவனை "ராம "ராம" என்று
அழைத்தாலே  போதும்

அன்போடு அனுதினமும் அவனை "ராம "ராம" என்று
அழைத்தாலே  போதும்  (ஸ்ரீராம)

அதர்மத்தை அழித்திட அவனிக்கு  வந்தவன் 
அடியார்களின் துயர் துடைத்திட 
ஆலயத்தில் சிலையாய் நின்றவன்  (ஸ்ரீராம)

அவன் திருவடிவு கண்டாலே 
கவலைகள்  காணாது போகுமே
அவன் திருநாமம் நினைத்தாலே 
நிம்மதி நம்மை வந்து சேருமே   (ஸ்ரீராம)



திங்கள், 1 ஜனவரி, 2018

இசையும் நானும் (266) திரைப்படம் -பார்த்திபன்கனவு (1960) பாடல்: பழகும் தமிழே

இசையும் நானும் (266) திரைப்படம் -பார்த்திபன்கனவு (1960) பாடல்: பழகும் தமிழே 

இசையும் நானும் (266)  

திரைப்படம் -பார்த்திபன்கனவு  (1960)

பாடல்: பழகும் தமிழே 



MOUTHORGAN

 VEDIO-266




Movie: 

பார்த்திபன்கனவு

Year of release: 1960

Music: வேதா 
Lyrics: எ.மருதகாசி 
Singer.எ .எம் .ராஜா /பி.சுசீலா.
Starcast: Cast: ஜெமினி  கணேசன்-வைஜயந்திமாலா 


பழகும்தமிழே பார்த்திபன் மகனே 
உங்கள் அழகிய மேனி சுகமா .சுகமா

(M) பாவலன் தமிழே 
பல்லவன் மகளே 
காவலன் மேனி சுகமே 
உன் கைகளினால் வந்த குணமே (2)
(Music)
(F) வேலால் எறிந்து வெல்லும் 
உங்கள் வீரமும்  காதல் சொல்லும்(2)
(M) பால் போல் தெளிந்த முகமும் 

நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும் (2)

(Music)
(F)சித்திர வடிவம் போலே 
தங்க சிலையை கண்டதினாலே (2)
(Music) 

(M)நித்திரை தீர்ந்தது கனியே 

உன் நினைவில் வீழ்ந்தது மனமே (2)

உங்கள் அழகிய மேனி சுகமா 

(M)உன் காவலன் மேனி சுகமே 
(F) பழகும் தமிழே 
பார்த்திபன் மகளே 
அழகிய மேனி சுகமா .சுகமா
(Music)
(F)வளரும் காதலின் எல்லை 

(M) இதை மறுப்பவர் யாரும் இல்லை (2)
(Music)
(F)  வளரும் காதல் வளரும்  (2)
(M) நம் வாழ்வில் அமைதியும் நிலவும் 
(உங்கள் அழகிய மேனி சுகமா 
(M)உன் காவலன் மேனி சுகமே 
உங்கள் அழகிய மேனி சுகமா 
(M)உன் காவலன் மேனி சுகமே 

சனி, 30 டிசம்பர், 2017

NEW YEAR SPECIAL-இசையும் நானும் (265) தமிழ் திரைப்படம் -சுபதினம் -ஆண்டு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது ..

2018-NEW YEAR SPECIAL இசையும் நானும் (265) தமிழ் திரைப்படம் -சுபதினம் -பாடல் -ஆண்டு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது ..

MOUTHORGAN-vedio(265)


திரைப்படம்-சுபதினம்(1969)
பாடல்-இசை-தி.ஜி .லிங்கப்பா 

பாடியவர்-சீர்காழிகோவிந்தராஜன்.வெண்கலக்குரலில்  இந்த பாடல். பிரசித்தம். 

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி 
ஆயிரம் இருக்குது சுபதினம் 
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு 
ஆயுள் முழுவதும் சுபதினம்.(ஆண்டுக்கு)

வள்ளுவன் பிறந்து குறளை சொன்னான் 
அறிவுக்கு அதுதான் சுபதினம் 
புத்தன் பிறந்து போதனை செய்தான் 
அன்புக்கு அதுதான் சுபதினம் 
காந்தி பிறந்து விடுதலை தந்தான் 
உரிமைக்கு அதுதான் சுபதினம் 
ஒருவன் துணிந்து தியாகம் செய்தால் 
உலகுக்கு அதுதான் சுபதினம் .(ஆண்டுக்கு)

நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுபதினம் 
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம் 
அறுவடை நாளே சுபதினம் 
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால் 
கிடைத்தவர்க்கே அது சுபதினம் 
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால் 
எளியவர்க்கெல்லாம் அது சுப தினம் .(ஆண்டுக்கு)


வெள்ளி, 29 டிசம்பர், 2017

NEW YEAR -2018 thoughts

NEW YEAR -2018 thoughts
Pattabiraman Tr
Everybody is going to celebrate the arrival of the year 2018.
If there is arrival it is followed by departure.
 So it is unnecessary to be crazy about it.
.Our life in this world is passing moments.

The present moment will become a past at the next movement.
The next moment is a secret.nobody knows what will happen
.So utilize the each moment purposefully for you and your world.
Pl. don't harm anybody by thought, word or deed.Face the life with confidence and lead the life without cursing on IFs , BUTs.,destiny,GODS or any invented lies on on people, or time.etc etc.