ஞாயிறு, 11 ஜூன், 2017

இசையும் நானும் (191) திரைப்படம்:பணம் பந்தியிலே (1961)-பாடல்:பணம் பந்தியிலே குணம் குப்பையிலே



இசையும் நானும் (191) திரைப்படம்:பணம் பந்தியிலே (1961)


பாடல்:பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே




MY MOUTHORGAN VEDIO 




திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)
பாடல்: பணம் பந்தியிலே -குணம் குப்பையிலே
இசை: கே.வி .மஹாதேவன்
பாடல் வரிகள்: கா .மு. ஷெரீப்
பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்



பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே

இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே (பணம்)

ஒன்றும் தெரியாத  ஆளானாலும் பணமிருந்தாலே
அவனை உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே (ஒன்றும்)

என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை (என்ன)
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்கமாட்டாதே (பணம்)

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான்
பணம் அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மைதான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (ஏழ்மை)
இதை எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்களுண்டு
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள்  கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு(மண்ணாய்)
நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு.(பணம்)

பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே........


வெள்ளி, 9 ஜூன், 2017

இசையும் நானும் (190) திரைப்படம்:பாதை தெரியுது பார் (1960)

இசையும் நானும் (190) திரைப்படம்:பாதை தெரியுது பார் (1960)


பாடல்:தென்னங்கீற்று ஊஞ்சலிலே




MY MOUTHORGAN VEDIO 






திரைப்படம்: பாதை தெரியுது பார் (1960)
பாடல்: தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
பாடல் வரிகள்:பன்முக எழுத்தாளர்-திரு.ஜெயகாந்தன் 
பாடியவர்கள்-பிபிஸ் மற்றும் எஸ் .ஜானகி 
இசை: எம் .பி .ஸ்ரீனிவாஸ் 


தென்னங்கீற்று   ஊஞ்சலிலே  
தென்றலில் நீந்திடும் காலையிலே 
சிட்டுக் - குருவி பாடுது -தன் 
பெட்டை துணையை   தேடுது (தென்னங்கீற்று)

நீல மேகம் ஏழுவண்ண 
ஆடையோடுஉலாவுது 
வானை பூமி அழைக்குது -
தொடு வானில் இரண்டும் கலக்குது (தென்னங்கீற்று)

நீல கடல் ஓலமிட்டு -எங்கிருந்தோ கூவுது 
அதிலே பாடி நடக்குது 
கடல் அலையில் கலக்க துடிக்குது (தென்னங்கீற்று)

(The translation is for my  Mouthorgan lovers worldwide)

Being the branches of Coconut tree as a  swing
the cool morning breeze is  swinging

A Sparrow is singing in agony
Search of her  bed mate

Blue clouds with a dress of seven rainbow colors
is wandering in the sky

The sky is crying in agony longing for the earth -
Both embracing each other with love in the horizon

The blue sea is crying with agony at the bottom of its heart
and singing  in joyful mood
longing for union with the sea




வியாழன், 8 ஜூன், 2017

இசையும் நானும் (189) திரைப்படம்:தாயைக் காத்த தனயன் : (1962) - பாடல்:கட்டி தங்கம் வெட்டி எடுத்து

இசையும் நானும் (189) திரைப்படம்:தாயைக் காத்த தனயன் : (1962) - பாடல்:கட்டி தங்கம் வெட்டி எடுத்து

இசையும் நானும் (189) திரைப்படம்:தாயைக் காத்த தனயன்  : (1962) - பாடல்:கட்டி தங்கம் வெட்டி எடுத்து




MY MOUTHORGAN VEDIO 




  • திரைப்படம் -  தாயைக் காத்த தனயன்  : 
  • இயக்குனர்-கே.வி மஹாதேவன் 
  • பாடியவர்- T M சவுந்தரராஜன் 


கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள்  தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா (கட்டி)


தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு (கட்டி)

தங்கரதம் போல் வருகிறாள்
அல்லி தண்டு போல் வளைகிறாள்
குங்குமப் போல் சிரிக்கிறாள்
இன்பக்  கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்


காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ
என்றும் மணக்கும் முல்லைப்பூ (கட்டி)




செவ்வாய், 6 ஜூன், 2017

வட கொரியாவில் என்னதான் நடக்கிறது?


வட   கொரியாவில் என்னதான் நடக்கிறது?

தப்பி வந்த ஒரு
பெண்ணின் கண்ணீர் கதை.

இணைப்பில்  கண்டுள்ள

காணொளியை  காணுங்கள்.

கண்களில் இருந்து ரத்த கண்ணீர்

வடியும்.

இப்படியும் நாம் வாழும் உலகில்

இது போன்ற கொடிய

நரக  நாடுகள் இருக்கின்றனவா என்று

எண்ணத்  தோன்றும்

நம் நாட்டில் அனைத்துவிதமான சுதந்திரங்களையும்
சுகமாக அனுபவித்துக்கொண்டு உழைக்காமல் ஊரை அடித்து
கொள்ளை அடித்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும்
அவர்களுக்கு துணை போகும் சுயநல கூட்டங்களுக்கும்
இது ஒரு  பாடமாக அமைந்தால் இந்தியா உருப்படும்?

ஆனால் அது என்றும் நடக்கப்போவதில்லை
என்பது மட்டும் உறுதி?

அந்த அபலைகளுக்காகவும்

அந்த நாட்டு மக்களுக்காகவும்

அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க

உரிய வழி வகைகள் உண்டாகிட

இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.




https://www.facebook.com/travelwithkarla/videos/232586970481371/

வெள்ளி, 26 மே, 2017

இசையும் நானும் (188) திரைப்படம்: பாலும் பழமும் (1961) - பாடல்:என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்


இசையும் நானும் (188) திரைப்படம்:பாலும்  பழமும் (1961) - பாடல்:என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்



MY MOUTHORGAN VEDIO 


திரைப்படம்:

பாடியவர் :.டி எம்.எஸ்./பி.சுசீலா 
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 
பாடல் வரிகள்: கண்ணதாசன் 
நடிப்பு :சிவாஜி  கணேசன் /சரோஜாதேவி 




ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,(என்னை}

நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா....(என்னை}


பெ: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா,(என்றும்)
,
கனவான கதை மீண்டும் தொடராதய்யா,(கனவான)

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…

ஆ: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,(எந்தன்)

கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா(கனவென்னும்)

காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…(என்னை}


பெ: இன்று உனக்காக உயிர் 
வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில் 
கொண்ட சிலையில்லையா,
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா(அவள்)

அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… ஆ…

இருவரும்: என்னை யாரென்று எண்ணி 
எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் 
என்று நீ கேட்க்கிறாய்,...

பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்......



புதன், 24 மே, 2017

இசையும் நானும் (187) திரைப்படம்:சுமை தாங்கி - பாடல்:மனிதன் என்பவன் தெய்வமாகலாம்


இசையும் நானும் (187) திரைப்படம்:சுமை தாங்கி - பாடல்:மனிதன் என்பவன் தெய்வமாகலாம் 


MY MOUTHORGAN VEDIO 



திரைப்படம்:சுமை தாங்கி 
பாடல்:மனிதன் என்பவன் தெய்வமாகலாம் 
பாடியவர் :பி. பி ஸ்ரீனிவாஸ் 
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 
பாடல் வரிகள்: கண்ணதாசன் 
நடிப்பு :ஜெமினி கணேசன் 

 
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்(3)

வாரி  வாரி  வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்(வாரி)



உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
தெய்வம் ஆகலாம் ..

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த  உள்ளம் மலர்கள் ஆகலாம்(ஊருக்கென்று)

யாருக்கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோவில் ஆகலாம்(மனிதன்)



மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்(மனமிருந்தால்)

துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்(மனிதன்)


செவ்வாய், 23 மே, 2017

மொழி என்பது என்ன?

மொழி என்பது என்ன?

மொழி என்பது என்ன?

மொழி என்றால் என்ன?
இன்று மொழியை வைத்து நடக்கும்
அரசியல் செய்யப்படுகிறது

மொழியைக் காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு
மொழி ஆர்வலர்களுடன் சமூக விரோதிகள்
சேர்ந்து கொண்டு மக்களுக்கு
(அதை அடித்து நொறுக்கும் மூடர்களுக்கும்) சேர்த்து
 பயன்படும் பொது சொத்துக்களை
பல ஆண்டுகள் பல ஆயிரம் பேர்களால்
பாடுபட்டு உண்டாக்கப்பட்ட உடைமைகளை
நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த செயலை அந்த ஆர்வலர்களும்  கண்டிப்பதில்லை.
அந்த செயலுக்காக வருத்தப்படுவதுமில்லை.
இது ஒரு கலாச்சாரமாக ஆகிவிட்டது.

முடிவில் அல்லல்படுவது  பெரும்பாலான பொது மக்களே.

மொழி என்பது ஒரு மனிதர்களோ விலங்குகளோ அல்லது பறவைகளோ  ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள உதவும் சாதனம் அவ்வளவுதான்.

அது ஒலியாக   வெளிப்படுகிறது.

கூட்டமாக சேர்ந்து வாழும் கூட்டம் அவர்களுக்குள்ளே கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வெவ்வேறுவிதமான சங்கேத ஒலிகளை
காலம்காலமாக எழுப்பி அதை ஒழுங்கு செய்து வைத்துக்கொண்டு
வாழ்ந்து கொண்டு வருகின்றன என்பதுதான் உண்மை

வாயிலிருந்து ஒலி மொழியாக   வெளிவருவதற்கு முன் அது எண்ணமாகத்தான் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது
அப்போது எந்த வேறுபாடுகளும் கிடையாது.

இந்த தத்துவத்தை உணராமல் மக்களிடையே வெறுப்பை விதைத்து அதில் குளிர் காயும் மனிதர்கள் நம்மிடையே பெருகி வருகிறார்கள்.

மொழி வளரவேண்டுமானால் அதை முறையாக கற்பிக்க,
பேச  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஊக்குவிக்கப்படவேண்டும். ஆனால்  இன்று அது இல்லை.

நன்கு படித்த தலைவர்கள் கூட "ழகரம் மற்றும்" "ளகரத்தை " சரியாக உச்சரிக்கத்தெரியவில்லை.
பிற மொழி கலப்பில்லாமல் பேச தெரியவில்லை.

ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி
தமிழை (தமிளை ) விளக்குகிறார்கள்.

தமிழில் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களின்
பெயர்கள் கூட பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.

தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில்
அந்த மாநில மொழிதான் பேசப்படுகிறது,
நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால் தமிழ் நாட்டில்
அந்த நிலைமை இல்லை.

பட்டி மன்றங்களில் மட்டும்தான் தமிழ் ஒலிக்கிறது
அதுவும் அங்கு வாழ்க்கையில் மனிதர்களின் செயல்பாடுகள் மட்டும்தான் விமர்சிக்கப்பட்டு சிரிக்க  பொழுதை  ஓட்ட பயன்படுகிறது.
.
தேவாரம் பிரபந்தம் ,திருஅருட்பா ,திருப்புகழ்,மற்றும் பிற மதங்கள்  சார்ந்த இலக்கியங்கள்  போன்ற எண்ணற்ற ஆன்மிகம் சார்ந்த பாடல்களில் தமிழ் உயிரோடு உள்ளது.

திரைப்படங்களில் பல ஆண்டுகளுக்கு முன்
அருமையான கருத்துள்ள தமிழ் பாடல்கள்
தமிழை வளர்த்தது.

சில தமிழ் ஊடகங்களும்
அந்த பணியை செய்தன.

மொழி உணர்வு வேண்டும்.
அது அந்த மொழியை வளர்க்கும்

மொழி உணர்ச்சி கூடாது
அது நன்மைகளை விட தீமைகளை அதிகம்.  விளைவிக்கும்.

பிற மொழிகளை வெறுப்பதினாலும்
தடை செய்வதினாலும்   தாய் மொழி வளராது.

எப்படி மற்ற மொழி பேசுபவர்கள் திட்டமிட்டு அவர்கள் மொழியை நம் மீது திணிப்பதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்களோ  அதே பாணியை

இவர்களும் பின்பற்றட்டும்,
மொழியை வளர்க்கட்டும்.
அதுதான் அறிவுபூர்வமான செயல்.

அதை விடுத்து  போராட்டங்களும் அதை தொடர்ந்து வன்முறைகளும்
மக்கள் மனதில் மொழி மீது ஆர்வத்தை தூண்ட உதவாது.

திட்டமிட்டு மொழியை வளர்ப்பதிலும் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதில் கல்வியாளர்களும், ஆர்வலர்களும் ஆளும் அரசுகளும் ஒன்றிணைந்து செயலாற்றுதலே நன்மை பயக்கும். .