சனி, 13 பிப்ரவரி, 2016

இசையும் நானும் (107)

இசையும் நானும் (107)


இசையும் நானும் (107)




இசையும் நானும் (107)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  107வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

ஸ்ரீ  வள்ளி தேவசேனாபதே -பாபநாசம் சிவன் -

மிகவும் பிரபலமான பாடல் 


செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

மனம் படுத்தும் பாடு (3)

மனம் படுத்தும் பாடு (3)

மனம் படுத்தும் பாடு (3)

மனம் இல்லையேல் ஒன்றும் இல்லை

அதுதான் உள்ளதை இல்லாததாக காட்டுகிறது

இருப்பதை இல்லாததாக காட்டுகிறது

அதுதான் நம்மை இன்பத்திலும் ஆழ்த்துகிறது

அதுவே நம்மை துன்பத்திலும் ஆழ்த்துகிறது

அதுவே நம்மை அந்த துன்பத்திலிருந்தும் நம்மை மீட்கும்.
சக்தியாகவும் விளங்குகிறது

அது நனவுலகில் நிகழ்த்தமுடியாதவற்றை தன் கனவுலகில்

சாதித்துக் காட்டும்.தன்மை கொண்டது

அதுவே தேவையற்ற பயத்தை உண்டாக்கி நம்மை

நிலைகுலையவும் செய்துவிடும்.

அதுவே நமக்கு அசாத்திய துணிச்சலைக் கொடுத்து நம்மை

மகா வீரனாகவும் ஆக்கிவிடும்.

அதுவே நம்மோடு பல ஆண்டு பழகிய நண்பனை

கண்ணிமைக்கும் நேரத்தில்  பகைவனாக்கும் கொடூர தன்மையும் கொண்டது

அதுவே எதையுமே நம்மை ஆராய்ந்து பார்க்க விடாது செய்து

தீயவர்களின் ஆலோசனையை  நம்பி நம்மை நட்டாற்றில் தள்ளி

மோசம் போகவும் செய்யும்.

மனம் என்பது ஒரு காட்டாறு வெள்ளம் போன்றது

அதுபோல் எந்நாளும் வற்றாது பாய்ந்து கொண்டிருக்கும்

ஜீவ  நதியும் போன்றது.

மனதை சக்தியை சிதறவிடாமல் ஒருங்கிணைத்து, ஒருமையுடன் குவித்து

எவன் ஒரு இலக்கை நோக்கி செலுத்துகிறானோ அவன்தான் வாழ்வில்

வெற்றி பெறுகிறான்.

உலகில் நாம் செய்யும் எந்த செயலானாலும் வெற்றி பெற மனதின்

இன்றியமையாத சக்தி தேவை.

அதுவே நமக்கு நண்பன் .அதுவே நமக்கு பகைவனும் ஆகும்

எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.

இருக்கின்ற சக்தியை எதற்கும்  பயன்படுத்தாது சாக்கு போக்கு சொல்லி எல்லாவற்றிற்கும் பிறர் மீது குற்றம் சுமத்தும் குணம்  கொண்டவர்கள் இந்த உலகில் கோடானுகோடி

அவர்கள் என்றும் பிறர்க்கு வாழ்நாள் முழுவதும் அடிமை சேவகம் செய்து அதில்  கிடைக்கும்  அற்ப சுகத்தில் மூழ்கி இடை இடையே பிறர் மீது பொறாமைப் பட்டுக்கொண்டு  புலம்பிக்கொண்டே தங்கள் ஆயுளை  முடித்துக்கொள்ளுபவர்கள்

உலக வாழ்வில் சோம்பேறியாக இருந்துகொண்டு எதுவும் செய்யாமல் இருப்பவனும்  ஆன்மீக உலகில் இறைவனிடம் சரணாகதி செய்துவிட்டு ஒன்றும் செய்யாமல் இருப்பவனுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. இரண்டு நிலைகளையும் ஒன்றாக கருதி  ஒப்பிட்டு பார்ப்பவன் மகா மூடன்

இரண்டு செயல்களும் வேறு வேறு அதை ஒப்பிட்டு பார்த்தல் சரியல்ல ,

அதன் பார்வை வேறு, நோக்கம் வேறு என்பதை  புரிந்து கொண்டு அந்தந்த

நோக்கத்திற்கு தகுந்தாற்போல் மனதை பயன்படுத்தவேண்டும்.

வியாழன், 4 பிப்ரவரி, 2016

இசையும் நானும் (106)

இசையும் நானும் (106)



இசையும் நானும் (106)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  106வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

 தமிழ்  பாடல் -திரைப்படம்  -சொல்ல துடிக்குது  மனசு.

 பாடல்- பூவே செம்பூவே உன் வாசம் வரும் ...

 பாடியவர்-ஜேசுதாஸ் 

இசைஞானி இளையராஜா  அவர்களின் 
இதயத்தை தொடும் இசை  ஓவியம்.



திங்கள், 1 பிப்ரவரி, 2016

இசையும் நானும் (105)

இசையும் நானும் (105)



இசையும் நானும் (105)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  105வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

 ஹிந்தி பாடல் -திரைப்படம்  -ப்ளாக் மெயில் -பல் பல் தில் கே பாஸ்-

 பாடியவர்-கிஷோர்  குமார்.


மிகவும் பிரபலமான இனிமையான .பாடல். 

காணொளி  இணைப்பு.

இசையும் நானும் (104)

இசையும் நானும் (104)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  104வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

பாடல் :அமுதை பொழியும் நிலவே  நீ  அருகில்  வராததேனோ... திரைப்படம்-தங்கமலை ரகசியம்   SUPER SONG

https://www.youtube.com/watch?v=UrGhuUQHEPc&feature=youtu.be

சனி, 30 ஜனவரி, 2016

மனம் படுத்தும் பாடு (2)

மனம் படுத்தும் பாடு (2)

மனம் படுத்தும் பாடு (2)

மனம் படுத்தும் பாடு (2)


மனம் என்று ஒன்று
இல்லாவிட்டால்  என்ன ஆகும்?

மனதை ஒழித்துவிடு அல்லது

அழித்துவிடு அல்லது

மனம் என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிடு என்று

சில மகான்கள் சொல்லுகிறார்கள்.

அதன் உண்மைப் பொருள்
என்னவாக இருக்க முடியும்?


மனம் என்ற ஒன்று
இல்லாமல் இருக்க முடியுமா ?

இந்த உலகில் இயங்க முடியுமா
என்ற கேள்வி பலருக்கு எழும்

மனம் என்றால் என்ன?

அது எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?

அது எவ்வாறு செயல்படுகிறது ?

அதை செயல்பட வைப்பது எது ?

மனதை முழுவதுமாக அழிக்க முடியாது

அது ஒரு மாபெரும் சக்தி

அது உளதை இலதாக்கும்
இலதை உளதாக்கும்

எனவே அதை நெறிப்படுத்தி நம் கட்டுப்பாட்டில்

கொண்டு வந்து நமக்கு நன்மை தரும் வகையில்

பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.


சில மகான்கள் மனதிற்கு உபதேசம் செய்கிறார்கள்


மனமே நீ அங்குமிங்கும் அலையாமல் ஒருமையுடன் நின்று

எனக்கு நான் நினைத்ததை அடைய உதவி செய்வாயாக என்று .


மனதை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி நம் புத்திக்கு இருக்கிறது.

அதற்கு நமக்கு நல்ல புத்தி இருக்க வேண்டும்

தீய புத்தி இருக்ககூடாது

ஏனென்றால் மனம் என்பது கூரான கத்தி  போன்றது


அது அதை பயன்படுபவர்களின் சக்தியையும் நோக்கத்தையும்

பொறுத்து அது நமக்கு நன்மையையோ தீமையையோ விளைவிக்கும்.


நமக்கு  நல்ல புத்தியை தருவது அந்த இறைவன்தான்


அதற்கு நாம் இறைவனை நம் புத்தியில் வைத்து

போற்றி தொழ   வேண்டும். என்று திருமூல தேவர்

திருமந்திரத்தில் கூறுகின்றார்.

அவர் கூறும் இந்த முக்கியமான அருளுரையை ஏற்போம்

உண்மைப் பொருளை உணர்ந்திட உரிய வழி வகைகளை

ஆராய்ந்து தெளிவோம். .

வெள்ளி, 29 ஜனவரி, 2016

காந்தியைப் போலொரு ...

காந்தியைப் போலொரு ...

காந்தியைப் போலொரு ...

காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை
காண்பதும் எளிதாமோ ?

சாந்தி நிலவ வேண்டும்
உலகிலே சாந்தி நிலவ வேண்டும் ..

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியரே--

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது..

என்ற வரிகளை கேட்கும்போது யார் நினைவுக்கு

வருகிறார். இப்போதுள்ள மக்களுக்கு அல்ல

50 வயதைக் கடந்த மக்களுக்கு.

ஆம் அவர்தான் மகாத்மா காந்தி

இன்று அவரை இந்த உலக பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்த தினம்.

ஒரு காலத்தில் அவரை மகாத்மா என்று உலகமே போற்றி கொண்டாடியது.

பல உலக நாடுகள் உட்பட .

ஆனால் இன்று சில சக்திகள் அவருக்கு எதிராக அவரிடம் காணப்பட்ட

சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி அவர் ஆற்றிய அரும்பெரும்

செயல்களை மூடி மறைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது காந்தியின்

பக்தர்களுக்கு வருத்தமடைய செய்கிறது.

அவரைப் போல் திரைப்படத்தில்  நடிக்க கூட நம் நாட்டில் ஒருவரும் இல்லை

அதற்க்கு ஒரு மேலை நாட்டவர் தேவைப்பட்டது.

இப்படி எதை பற்றியும் ஒரு முழு அறிவையும் இல்லாத மக்களைக்  கொண்டது நம் இந்திய சமூகம்.

எதையும் உணர்ச்சியின் அடிப்படையில் அணுகி முடிவுக்கு வருவது நம்முடைய பண்பாட்டில் ஊறிப்போன விஷயம். .

இந்த உலகத்தில் இறைவன் ஒருவனே குறையில்லாதவன் .அவன்

படைப்புகள் அனைத்தும் குறைகள் உடையவைகள்தான். என்பதை

நடுநிலையாளர்களே உணர முடியும்.

அவருக்கு என் அஞ்சலி-மவுதார்கன் இசை.

https://youtu.be/VwOCEeUFQfM

https://www.youtube.com/watch?v=VwOCEeUFQfM