வெள்ளி, 1 ஜனவரி, 2016

மனம் என்னும் மாடு

மனம் என்னும் மாடு

மனம் என்னும் மாடு 


Image result for mannargudi


மனம் என்னும் மாடு
நம் உள்ளம் என்னும் வீட்டில்
வசிக்கிறது

அவ்வப்போது புலன்கள்  என்னும்
வாயில்களின் வழியே வெளியே
மேயச் செல்கிறது.

வெளியில் மேய்ந்துவிட்டு
கொட்டடிக்கு திரும்பி வந்து
தினமும் இரவில் உறங்கி விடுகிறது

அது சில காலமாக ஊரார் நெல் வயல்களில்
போய்  மேய்ந்து வீண் வம்பை விலைக்கு வாங்கி
கொண்டு வருகிறது .

இனிமேல் அதை வீட்டில் கட்டிப்போட்டு
இருக்கும் இடத்திலேயே வைக்கோலும்
தண்ணீரும் வழங்க வேண்டிய
சூழ்நிலையை அது உருவாக்கிவிட்டது.

ஆனால்  அதை வெளியே மேய
அனுப்பாவிடில் அது சண்டித்தனம்
செய்து அதன் கோபத்தை வெளிப்படுத்துகிறது.
தாறுமாறாக கத்துகிறது. அருகில் சென்றால் முட்டுகிறது.
கட்டிய கயிறை  அறுத்துக்கொண்டு வெளிய ஓட முயற்சிக்கிறது.

ஏனென்றால் அதற்கு தினமும் வெளியே
சென்று மேய்ந்து வருவது வழக்கமாகிவிட்டது.

மாட்டைப் போன்றது போல்தான்
நம் மனமும். அது காலம் காலமாக
ஒரு குறிப்பிட்ட செயல்களையே செய்து கொண்டு வருகிறது

அது அலுத்துப்போன காரணத்தால்
பல தில்லு முல்லு  வேலைகளைச்
செய்து நம்மை சிக்கல்களிலும் துன்பத்திலும்
மாட்டி விடுவதையே வழக்கமாகி கொண்டுள்ளது

இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால்
அதற்கு கடிவாளம் போட்டுத்தான் ஆகவேண்டும்
அது சண்டித்தனம் செய்யும். அதை பொருட்படுத்தாது
நாம் அதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துதான் ஆகவேண்டும்.

கட்டுப்பாட்டில் வைத்தாலும் அது மிகவும் சாமர்த்தியமாக
நம்மை ஏமாற்றிவிடும்.. நாம் எப்போதும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.

அதற்கு நாம் நம் உள்ளம் என்னும் மாட்டை
அந்த மாடு மேய்த்த கண்ணனிடம் ஒப்படைத்தால் போதும்
அவன் அதை நன்றாக பார்த்துக்கொள்வான்
பார்த்தனுக்கு தேரோட்டிய பார்த்தசாரதியைப். போல.

உன்னை காக்கும் கடவுள் என்று !

உன்னை காக்கும் கடவுள் என்று !

உன்னை காக்கும் கடவுள் 
என்று !



அபயம் என்ற கரியை
காத்திட்ட ஹரியே
உன்னை காக்கும் கடவுள்
என்று உலகோர் போற்றி
புகழ்வது சரியே

தவம் செய்து வரம் பெற்று
அகந்தை கொண்டு
தகாத வழியில் நடந்த
அசுரர்களை  அழித்து
தர்மத்தை நிலைநாட்ட
அயோத்தியில் அரசன்
ராமனாய் அவதரித்தாய்

அடுத்த யுகத்தில் தர்மம் தவறி
தறி கெட்டலைந்த
அரசர்களை அழித்தொழிக்க
ஆயர்பாடியில் ஆடு மேய்க்கும்
சிறுவனாய் உருவெடுத்து வந்து
அடியவர்களை காத்து நின்றாய்

ஊரும் பேரும்  அற்ற உன்னை
உள்ளத்தில் நினைந்து உருகி வழிபட
ஆயிரம் நாமங்களை பீஷ்மர் வாயிலாக
பாடக் கேட்டு எமக்களித்தாய் (அபயம்)

காலம்தோறும் உந்தன் பெருமை
பேச கணக்கில்லா உந்தன் அடியார்கள்
தோன்றி தோன்றி உந்தம் பெருமையை
பாடி பாடி பரப்பி மகிழ்கின்றாரன்ரோ !

மாநிலத்து உயிர்கள் யாவும்
நீங்காத  இன்பம் பெற்று வாழ
நில  மடந்தை கோதை யன்னை
நின் புகழ் பாடும்
திருப்பாவை தந்தனளே

உன்னை காக்கும் கடவுள்
என்று உலகோர் போற்றி
புகழ்வது சரியே

வியாழன், 31 டிசம்பர், 2015

இசையும் நானும் (89)

இசையும் நானும் (89)

இசையும் நானும் (89)

இசையும் நானும் (89)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 89  வது காணொளி

மவுதார்கன் இசை 




திருப்பாவை - மாலே மணிவண்ணா.மார்கழி நீராடுவான் 




மாலே மணிவண்ணா 
மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் 
வேண்டுவன கேட்டியேல் 
ஞாலத்தை எல்லாம் நடுங்கமுரல்வன பாலன்ன வண்ணத்துன் 
பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே 
சாலபெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே 
கோலவிளக்கே கொடிய விதானமே 
ஆலில் இலையாய்  அருளேலோ ரெம்பாவாய்  


காணொளி இணைப்பு.  

இசையும் நானும் (88)



இசையும் நானும் (88)

இசையும்  நானும் என்னும் தொடரில்

என்னுடையே 88 வது காணொளி

மவுதார்கன் இசை 

ஹிந்தி திரைப்பட பாடல் -"நாகின்"(1954)

மன்  போலே மேரா தன் டோலே ...பிரபலமான பாடல். 






புத்தாண்டு சிந்தனைகள் (2016)

புத்தாண்டு சிந்தனைகள் (2016)

வருகின்ற புத்தாண்டில் வாழ்த்துகளை
பரிமாறிக்கொள்ளுவது ஒரு புறம் இருக்கட்டும்.

சில நல்ல பழக்க வழக்கங்களை  கைகொள்ள
முயற்சி செய்வோமாக.

1)புறங் கூறுதலை அடியோடு நிறுத்த வேண்டும்

2)இன்னாத சொற்களை விடுத்து இனிய சொற்களை
பேச பழகவேண்டும்

3)பொன்னான நேரத்தை வீணடிக்கும் செயல்களை செய்யாது
பொறுப்போடு ,விருப்பு வெறுப்பின்றி செயல்பட முயற்சித்தால்
வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

4)எதையும் திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும்.

5)எந்த செயலுக்கும் பிறர் கையை எதிர்பாராது முடிந்தவரை
தானே பணிகளை செய்து முடித்தல்.

6)எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடித்தால்.

7) தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாது இருத்தல்

8)முடித்தால் பிறருக்கு உதவுதல் இல்லையெனில் தொல்லை தராது இருத்தல்.

9) கடமைகளை காலத்தே கருத்தோடு தள்ளிப் போடாமல் முடித்தல்.

10) தான் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ளுதல்

11)முயற்சியின்மைக்கு பிறரை குறை கூறுவதை தவிர்த்தல்

12)சுத்தமான ,சத்தான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல்.

13) போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருத்தல்.

14) தனி மனித ஒழுக்கம், இறை பக்தி போன்றவற்றை அனுசரித்தல்.



மேற்கண்ட விஷயங்களை  கடைபிடித்தால். புத்தாண்டு ஜோதிட பலன்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை ஆண்டு முழுவதும் நல்ல பலன்களே நடக்கும். 

செவ்வாய், 29 டிசம்பர், 2015

உள்ளம் என்னும் கோயிலே

உள்ளம் என்னும் கோயிலே


உள்ளம் என்னும் 
கோயிலே



உடல் என்னும்
கூட்டில்  சிக்கிக் கொண்டேன்
உள்ளே வந்து போகும் காற்றினால்
உலகில் அங்குமிங்கும் அலைகின்றேன்

விருப்பு வெறுப்பு என்னும்
நச்சுக் காற்றால் ஒவ்வொரு கணமும்
மாறி மாறி அடைகின்றேன்
இன்பமும் துன்பமும்
இரவும்  பகலும் போல்

சோதனைகளும் வேதனைகளும்
நோய்வாய் படுவதால் வரும்
வாதனைகளும் வந்து வந்து
மனம் நொந்து சோர்ந்து போனேன்

உள்ளம் என்னும்
கோயிலே உறைகின்ற
உத்தமனே ,உலகளந்த பெருமானே

உந்தன் பாதம் பணிகின்றேன்
என் உள்ளத்தில்நிலையாய்
என்றென்றும்  வீற்றிருப்பாய்
நிம்மதியை தந்திடுவாய் .

திங்கள், 21 டிசம்பர், 2015

இசையும் நானும் (83)

 இசையும் நானும் (83)

இசையும் நானும்  என்னுடைய
83. வது  காணொளி

மவுதார்கன் இசை -தமிழ் திரைப்பட பாடல்

'அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா -அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா"

இனிமையான  இதயத்தை தொடும் பாடல்.

இணைப்பு.