செவ்வாய், 27 அக்டோபர், 2015

இசையும் நானும் (71)

இசையும் நானும் (71)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 71 வது காணொளி 

மவுதார்கன் இசை 
தமிழ் பாடல்- படம்- ஆடிபெருக்கு- 
பாடல்- காவேரி ஓரம் கவி சொன்ன காதல் 
அருமையான பாடல்.  வரிகள் -கண்ணதாசன்-இசை எ எம் ராஜா 



Image result for adiperukku tamil movie


காவேரி ஓரம் கவி சொன்ன காதல் 
கதை சொல்லி நான் பாடவா -உள்ளம் 
அலை மோதும் நிலை கூறவா 

அந்த கனிவான பாடல் 
முடிவாகும் முன்னே 
கனவான கதை கூறவா -பொங்கும் 
விழி நீரை அணை  போடவா 

பொருளோடு வாழ்வு 
உருவாகும் போது 
புகழ் பாட பலர் கூடுவார் 
அந்த புகழ் போதையாலே 
எளியோரின் வாழ்வை 
மதியாமல் உரையாடுவார் 

ஏழை விதியோடு விளையாடுவார் 
அன்பை மலிவாக எடை போடுவார் 
இந்த கனிவான காதல் 
முடிவாகும் முன்னே 
கனவான கதை கூறவா -பொங்கும் 
விழி நீரை அணை போடவா

அழியாத காதல்  நிலையானதென்று 
அழகான கவி பாடுவார்
வாழ்வில் வளமான மங்கை
பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் 

கொஞ்சும் மொழி பேசி வலை வீசுவார் 
பெண்ணை எளிதாக விலை பேசுவார் 
என்ற கனிவான காதல் 
முடிவாகும் முன்னே 
கனவான கதை கூறவா -பொங்கும் 
விழி நீரை அணை போடவா

மணவாழ்வு மலராத மலராகுமா 
மனதாசை விளையாத பயிராகுமா 
உருவான உயிர் அன்பு பறி போகுமா 
உயிர் வாழ்வு புவி மீது சுமை யாகுமா 
சுமையாகுமா .. 

காணொளி இணைப்பு 







திங்கள், 19 அக்டோபர், 2015

ரோஜா மலரே ராஜகுமாரி.

ரோஜா மலரே ராஜகுமாரி.

ரோஜா மலர் அழகோ அழகு.
அதன் மணமோ அலாதி.
அது மலரும் அழகை





நம் கண்களால் காண முடியுமா?
முடியாது.
ஆனால் அதை சாதித்து காட்டிவிட்டது
நவீன கருவிகள்.

கண்டு மகிழ  இணைப்பு கீழே.




https://www.facebook.com/TamilDiscoveryChannel1/videos/495441620629090/

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

இசையும் நானும் (6 8)

இசையும் நானும் (6 8)

இசையும் நானும்  தொடரில் என்னுடைய 68  வது காணொளி

மவுத்தார்கன் இசை 

தமிழ் படம்-மணியோசை
பாடல்-தேவன் கோவில் மணியோசை
சீர்காழி கோவிந்தராஜன் பாடியது.

காணொளி இணைப்பு.

சனி, 17 அக்டோபர், 2015

கல்லிலே கலைவண்ணம் கண்டான்.

கல்லிலே கலைவண்ணம் கண்டான். 

ஓடிஸா மாநிலத்தில் 
உள்ள கலைஞர்கள் மிக அழகாக 
மாக்கல்லில் சிற்பம் செதுக்குகிறார்கள். .

மிக குறைந்த விலையில் கிடைக்கும் 
25 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து 
வாங்கி வரப்பட்ட  சிற்பங்கள் கேட்பாரற்று 
கிடந்தது. அதை அழகாக தெர்மோகோல் 
பார்டர்  வைத்து ஒட்டியபின் அருமையாக 
காட்சி தருகிறது. 
உங்கள் பார்வைக்கு. 


வெள்ளி, 16 அக்டோபர், 2015

இருப்பதைக் கொண்டு .......


இருப்பதைக் கொண்டு .......


இருப்பதைக் கொண்டு சிறப்புடன் 
வாழும் இலக்கணம் வேண்டும் .

அதுதான் மன அமைதிக்கும் 
மகிழ்ச்சிக்கும் அடிகோலும். 

கீழே  கண்ட படத்தைப் பாருங்கள்.

இளநீரைக் குடித்து விட்டு வீசிஎறிந்த

தேங்காயை தன் குடியிருப்பாக

மாற்றிக்கொண்டு ஆனந்தமாய்

வாழும் இந்த கிளியிடம் நாம்

பாடம் கற்க வேண்டும்.

இன்று உலகில் மனிதர்கள் எல்லாம் இருந்தும்
அதை அனுபவிக்காமல் மலருக்கு மலர் தாவும் வண்டுபோல்
பொருட்கள் மீது மோகம் கொண்டு கை காசை ஒழித்து கொண்டு வருவது
ஒரு மன வியாதியாகி போய்விட்டது.







படம் நன்றி -முகநூல் பக்கம் 

நானும் ஒரு ஓவியன் தான்

நானும் ஒரு ஓவியன் தான்


மவுதார்கன் இசையில் 
காணொளிகள்  வெளியிடுவதில் 
கடந்த ஓராண்டாக முழு முயற்சியுடன் 
ஈடுபட்டுக்கொண்டிருப்பதால்
படம் எதுவும் வரைய 
நேரமில்லை.

இருந்தாலும் படம் வரைந்த 

கைகள் சும்மா இருக்குமா ?

சென்னையின் இரண்டு முக்கியமான இடங்களின் நுழை வாயில்கள். 

ஒரு வண்ண ஓவியம் தீட்டினேன்.

உங்கள் பார்வைக்கு. 








வியாழன், 15 அக்டோபர், 2015

இசையும் நானும் (67)

இசையும் நானும் (67)

இசையும் நானும் (67)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய
67 வது காணொளி.

மவுதார்கன் இசை. 

நவராத்ரி ஸ்பெஷல் 





ஓவியம்- தி.ஆர்.பட்டாபிராமன் 

தமிழ் பாடல். பாடியவர் .பி. சுசீலா

"கலைவாணி நின் கருணை தேன்  மழையே 
விளையாடும் என் நாவில் செந்தமிழே." 

காணொளி இணைப்பு.

https://www.youtube.com/watch?v=ywhFpxy3NAU

https://youtu.be/ywhFpxy3NAU