சனி, 8 ஆகஸ்ட், 2015

ராம நாமம் சொல்லுவோம்

ராம நாமம் சொல்லுவோம் 





ராம நாமம் சொல்லுவோம் 
நாம் வாழும் இவ்வுலகம் நலம் பெற 


உண்மை அன்பும் பண்பும் பரிவும் பாசமும் 
இவ்வுலகை விட்டு என்றோ அகன்றுவிட்டது 


பொய்மையும் பொறாமையும் அனைவரின் 
உள்ளங்களை ஆட்கொண்டது 



வெறுப்பும் விரோதமும்,சுரண்டலும் 
இவ்வுலக மனிதர்களின் மதமானது 


விட்டுகொடுத்து ,பிறருக்கு உதவி  வாழும் பண்பு 
இவ்வுலகை விட்டு சென்றுவிட்டது 


அற்ப காரணங்களுக்காக ஒருவரோடொருவர் 
சண்டையிட்டு மாண்டு போகும்
போக்கு பெருகிவிட்டது 


இவ்வுலகத்தில் அமைதி நிலவ வேண்டும் 
வறுமையும் சிறுமையும் அகல வேண்டும் 


விருப்பும் வெறுப்பும் நம் உள்ளே இருக்கும் எதிரிகள் 
காமமும் சினமும் நம்மை புறத்தே தாக்கும் எதிரிகள் 



நம் இதயம் இறைவன் வாழும் இல்லம்
அதை அன்பால் நிறைந்தால் 
இவ்வுலக வாழ்வு இன்பம் .


அகந்தையை விட்டொழிப்போம் 
அனைவருடன் அன்பால் இணைந்து 
ஆனந்தமாய் வாழ்வோம். 


வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

கடவுளை எங்கே தேடுவது?

கடவுளை எங்கே தேடுவது?

கடவுளை எங்கே தேடுவது?

கடவுளை எங்கே தேடுவது?

புத்தகத்தில் கடவுளை தேடாதே
கற்பனைக் கெட்டாத கடவுளை
புத்தகத்தில்போய்  தேடாதே
புத்தி கெட்டு  மயங்கி
வீணே மாளாதே  (புத்தகத்தில்)

புத்தனும் சித்தனும்
புத்தகத்திலா கடவுளை தேடினான்
எத்தனும் மத்தனும் நம்மிடம்
எதை எதையோ சொல்லி
ஏமாற்றி  திரியறான்.( புத்தகத்தில்)

விண்ணையும் மண்ணையும்
படைச்சவந்தான் உன்னையும்
என்னையும் படைச்சான்
படைச்ச பின்னே அந்த படைப்புக்குள்
தன்னை மறைத்துக் கொண்டான் (புத்தகத்தில்)

இதை அறியாத மூடர்கள் அவனை
எங்கெங்கோ தேடி அலைகின்றார்.
எவெறேவரோ   சொல்லும் பொய்களை எல்லாம்
நம்பி மோசம் போகின்றார். (புத்தகத்தில்)

கண்டவங்க சொன்ன பேச்சைக் கேட்காமல்
கடவுளைக் கண்டவங்க சொன்னபேச்சைக்  கேட்காமல்
கண்டவங்க சொன்ன பேச்சைக் கேட்டாக்கா
காசும்,காலமும்தான்  வீணாகும்
முடிவில் காலனுக்குதான்
நம் உயிர் இரையாகும்  (புத்தகத்தில்)

கருவறையிலிருந்து கல்லறை
போவதற்குள் நம் இதயக் கோயிலில்
குடியிருக்கும் கடவுளை நாம்
அறிந்துகொள்ளோணும்

இல்லையெனில்
மீண்டும் தாயின் வயிற்றில்
மல மூத்திரக் குட்டையில் ஊறி
உப்பிபோய் மண்ணில் பிறந்து
துன்பப்படோணும்  . (புத்தகத்தில்)

புதன், 5 ஆகஸ்ட், 2015

இசையும் நானும் (37)

இசையும் நானும் (37)

இசையும் நானும் (37)


இசையும் நானும் என்னும் தொடரில்

என்னுடைய 37 வது காணொளி.

குருவாயுரப்பன் மீது இரயிம்மன்  தம்பி

என்ற பக்தர் மலையாள மொழியில்.

இயற்றியுள்ள பாடல்.



Drawing by T.R.Pattabiraman 


பக்தி ரசம் ததும்பும் இந்த பாடலை

செம்பை வைத்தியநாத பாகவதர்

தன்னுடைய கச்சேரிகளில் பாடி

பிரபலப்படுத்தினார்.

எனக்கு பிடித்த குருவாயுரப்பன் மீது பாடல்

எந்த மொழியில் இருந்தால் என்ன ?

அந்த பாடலை நானும் பாடவேண்டும் என்று

நினைத்தேன்.  பாடிவிட்டேன்.

காணொளி உங்களுக்காக. இணைப்பு.

https://youtu.be/VmztknupXfI

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நான் யார் ?(தொடர்ச்சி)(2)

நான் யார் ?(தொடர்ச்சி)(2)





நான் யார் ? என்ற கேள்வியைக் 

யாரிடம் கேட்கவேண்டும்?

யார் பதில் சொல்லுவார்கள் 

கேள்வி கேட்பவர் யார் 

பதில் சொல்பவர் யார் 

நான் யார் யார் என்பதை தெரிந்துகொண்டு என்ன 
ஆகப்போகிறது ?

தெரிந்துகொள்ளவிட்டால் என்ன ஆகும். ?

தெரிந்து கொண்டுவிட்டால்
நம்முடைய எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடுமா ?

வாழ்வில் துன்பம் துயரம் வராமல் எப்போதும் இன்பமாய்
இருந்துவிடுமா ?

நோய் வராமல் இருக்குமா ?

பிறர் நமக்கு தொல்லை தராமல் இருப்பார்களா ?

நாம் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளமுடியுமா ?

தோல்விகள் வாழ்வில் இல்லாமல் எப்போதும் வெற்றி காண முடியுமா?

மரணத்தை வெல்ல முடியுமா?

போன்ற பல கேள்விகள் பலருக்கு எழும்

ஆனால்  எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான்

எல்லாம் அப்படியே இருக்கும்

வரும் போகும் அனைவரின் வாழ்வில்

வருவதைப் போல

ஏனென்றால் நம்முடைய இந்த உலக வாழ்வு

நம்முடைய கர்மங்களை அனுபவித்து தீர்ப்பதற்காக

இறைவனால் வழங்கப்பட்டது.

ஆனால் நான் யார் என்பதை உணர்ந்துகொண்டால்.

அனைத்தும் கனவுபோல தோன்றும்.

எப்படி கனவு உண்மையாய் இருப்பதுபோல் தோன்றினாலும்

உண்மை இல்லையோ அதுபோல இவ்வுலக வாழ்வு இருக்கும்

எதுவும் நம்மை பாதிக்காது.

முயற்சி செய்வோம் வெற்றி பெறுவோம்.



சனி, 1 ஆகஸ்ட், 2015

இசையும் நானும் (35}

இசையும் நானும் (35}

இசையும் நானும் (35}

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 

35 வது காணொளி. மவுத்தார்கானில் இசைத்துள்ளேன் 

உங்களுக்காக 

Image result for atho antha paravai lyrics












ஆயிரத்தில் ஒருவன் பட பாடல் 

அதோ  அந்த  பறவை போல  வாழ வேண்டும்  
இதோ  இந்த  அலைகள் போல ஆட வேண்டும் 
ஒரே வானிலே ஒரே மண்ணிலே   
ஒரே  கீதம்  உரிமை கீதம் பாடுவோம் 




காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே 

கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே 

சுடுவதில்லையே 


காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே 

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே  

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே 

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே  

பேசவில்லையே 

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே 
போகும்போது வேறு பாதை போகவில்லையே  

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை 
கோயில்போல நாடு காண வேண்டும் விடுதலை 

வேண்டும் விடுதலை 
அச்சமின்றி ஆடிப் பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை 

பாடலின் காணொளி இணைப்பு. 

https://youtu.be/pOE3UyeM7Xk

Picture google--images 

வெள்ளி, 31 ஜூலை, 2015

இசையும் நானும் (34)

இசையும் நானும் (34)

இசையும் நானும் (34)

இசையும்   நானும் என்னும் தொடரின்
என்னுடைய 34வது காணொளி

நானே இயற்றி பாடியுள்ள பாடல்.




ஹரி  என்று சொன்னாலும்
ஹரன் என்று சொன்னாலும்







அறியப்படும் பொருள் ஒன்றுதான்.
முடிவில் அறியப்படும்
பொருள் ஒன்றுதான் (ஹரி)






இதை அறியாது அனுதினமும்
வாதம் செய்யும் மனிதர்களே

உங்கள் பிடிவாதத்தை விட்டுவிட்டு
உங்கள் இதயத்தின் உள்ளே
சென்று பாருங்களே  (ஹரி)

கல்லினில் இருப்பவன்
நாம் சொல்லும்
சொல்லினில் இருப்பவன் (கல்லினில்)

நம் கண்கள் காணும்
உயிர்கள் யாவுமாய் இருப்பவன் (ஹரி)

இந்த உண்மையை உணர்ந்துகொண்டு
உள்ளத்தில் பேதம் நீங்கி
உலகில் மகிழ்வோடு வாழுங்களே.


காணொளி இணைப்பு:

https://youtu.be/QL84i7AUqnU 
Pictures-courtesy-google images. 

செவ்வாய், 28 ஜூலை, 2015

நான் யார் ?(தொடர்ச்சி)(1)

நான் யார் ?(தொடர்ச்சி)(1)





நான் யார் என்ற இந்த கேள்வியை
யாரிடம் கேட்பது?

மற்றவர்களிடம் போய்க் கேட்டால்.
இவன் ஒரு மன நலம் சரியில்லாதவன்
போல் தெரிகிறது.

நம்மிடம் வந்து "நான் யார்" என்று கேட்கிறான்
என்று கிண்டல் செய்வார்கள்.

இதில் ஒரு உண்மை என்னவென்றால்
எவரைக் கேட்டாலும் அவர்களுக்கே
அவர்கள் யார் என்று தெரியாது
என்பதே உண்மை.

அதனால்தான் "நான் யார் " என்று
உனக்குள்ளேயே கேட்டுக்கொள்
என்றார் பகவான் ரமணர்.

ஆனால் நீங்கள் கேள்வி கேட்டால்
உங்கள் மனது பல பதில்களை சொல்லும்
எப்படி?

அது தனது நினைவில் சேமித்து வைத்துள்ள
தகவல்களிலிருந்து ஒவ்வொன்றாக
புருடா (அவிழ்த்து விட்டுகொண்டிருக்கும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும். ?

அந்த புருடாக்களை நம்பாதீர்கள்.

சும்மா பார்த்துக்கொண்டிருங்கள்.
அது போதும்.

எவ்வளவு காலம்?

சில மணியிலோ அல்லது சில மாதங்களிலோ 
அல்லது சில வருடங்களிலோ
அந்த பொய் மூட்டைகள் காலியாகிவிடும்
.
ஆனால் நீங்கள் புதிதாக குப்பைகளை
அதில் போடாமல் இருந்தால்.

உங்களுக்கு பதில் சொல்ல மனம்
என்று ஒன்று இருக்காது.

அப்போது நீங்கள் யார் என்று உங்களுக்கு
புரிந்துவிடும்

ஆனால் அது வரைக்கும்
பொறுமை காக்க வேண்டும்.

தயார் என்றால்
வெற்றி உங்கள் பக்கம்

கஷ்டம்தான். பாஸ்ட் புட்  சாப்பிடும்
எங்களுக்கு இது ரொம்ப  ரொம்ப கஷ்டம்தான் .

ஏதாவது குறுக்கு வழி இருந்தால்
சொல்லுங்கள் என்கிறீர்களா.?

இல்லை சாமி .
பாடுபட்டால்தான் பலனுண்டு.