புதன், 29 ஏப்ரல், 2015

இசையும் நானும் (10)




இசையும் நானும் (10)

இசையும் நானும் (10)

மவுதார்கனில் என்னுடைய அடுத்த பாடல் 




கோரா காகஸ் என்னும் இந்தி திரைப்படத்தில் 
வரும் "மேரா ஜீவன் கோரா காகஸ் என்னும் பாடல்.

எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும். 

இணைப்பு கீழே.


https://www.youtube.com/watch?v=giiuC4GHUJ8&feature=youtu.be

புதன், 4 மார்ச், 2015

இசையும் நானும் (5)

இசையும் நானும் (5)

இசையும் நானும் (5)



Image result for mouth organ


மவுதார்கன் இசையில் என்னுடைய
ஐந்தாவது     பாடல்.







விநாயக பெருமான் மீது அருமையான தமிழ் பாடல்.

இந்த பாடலை பாடாத இசைக் கலைஞர்களே இல்லை.

நான் மவுத் ஆர்கனில் இசைக்க நினைத்து பல மாதம் முயற்சி செய்து
பாடியிருக்கிறேன்.

இந்த பாடலின் யு டியூப்  இணைப்பு கீழே

:https://www.youtube.com/watch?v=DahFBEU8Apg

புதன், 28 ஜனவரி, 2015

மகாத்மா காந்தியின் நினைவு நாள் (30-1-2015)

மகாத்மா காந்தியின் நினைவு நாள் (30-1-2015)

காந்தியை போல் ஒரு சாந்த
ஸ்வரூபனை இனி காண்பது
எளிதாமோ என்ற பாடலைக் கேட்பவர்
மனம் நெகிழ்ந்து போவார்கள்.


தவறுகளை ஒப்புக்கொண்டு அதை
தன் சுய சரிதையில் பதிவு செய்து
அவைகளை செய்யாமல் இறுதி வரை
முயற்சி செய்த நேர்மை வேறு எவருக்கும்
வராது.

இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில்தான்
இருக்கிறது என்று ஸ்வதேசி தொழில்களை
ஊக்குவித்து அவர்களின் வாழ்வில்ஒளி
ஏற்றிய ஒரு தீபத்தை இன்றைய ஆளும் வர்க்கம்
அழித்துவிட்டது.

குடியிலிருந்து மக்களைக்  காத்த
அந்த குடி மகனின் கனவுகள் தகர்க்கப் பட்டுவிட்டன

இன்று மீண்டும் மக்கள் மேனாட்டு கலாச்சாரத்திற்கும்
அவர்களின் பொருட்களுக்கும் அடிமையாகி
பரிதவிக்கின்றனர்.

பொது வாழ்வில் நேர்மைக்கும், உண்மைக்கும் சமாதி
எழுப்பிவிட்டு காந்தியின் சமாதிக்கு
இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.





இடையில் ஒரு துண்டு
இடுப்பில் ஒரு துண்டு அணிந்து மக்களோடு
மக்களாய் பழகிய அந்த மனித தெய்வம் எங்கே?

பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆடைகளை வடிவமைத்து
ஆயுதம்  தாங்கிய காவலர்களை சுற்றி நிற்க வைத்துக்கொண்டு கையை ஆட்டிவிட்டு டாடா சொல்லும் தற்கால தலைவர்கள் எங்கே?

எளிமையின் சின்னமாம் காந்தி எங்கே?
ஊதாரித்தனமும், வறட்டு ஆடம்பரமும் பளிச்சிட
பவனி வரும் தற்கால அரசியல் தலைவர்கள் எங்கே?


மகாத்மா காந்தியே நீ மீண்டும் பிறவி எடுத்து வா
இந்த நாட்டு மக்களை அடிமைத்தனத்திலிருந்து
மீட்டெடுக்க வா !

செவ்வாய், 27 ஜனவரி, 2015

எதற்கெடுத்தாலும் பழி போடும் கூட்டம்?

எதற்கெடுத்தாலும் பழி போடும் கூட்டம்?

ஆம் எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலங்கள் மீது
பழி போடும் தமிழ் நாட்டு வெற்று   வேட்டு அரசியல் வாதிகள்.

இன்று இந்த உலகில் ஒரு தனி மனிதனாகட்டும்
அல்லது ஒரு கூட்டத்தின் தலைவனாகட்டும்
தாங்கள் செய்யும் தவறுகளை உணருவதே இல்லை

மாறாக எல்லாவற்றிற்கும் பிறர் மீது
குற்றச்சாட்டுகளை சுமத்துவதே குறியாக
கலையாக, வாடிக்கையாக
கொண்டுள்ளனர்.

இயற்க்கை அளித்துள்ள என்றும் குறைவில்லா
வளங்களை வீணடித்துவிட்டு  அதன் இருப்பிடங்களை
பாழடித்து  ஐயோ ஐயோ என்று காட்டு கூச்சல் போட்டு
முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

முதலில் நீர்  என்னும்
இறைவனின்கொடையைப்  பார்ப்போம்.

75 விழுக்காடுகளுக்கு மேல் உள்ள கடல் உப்பு நீரிலிருந்து
நாம் உயிர் வாழ அமிர்தமென மாற்றி மழையாய்
தருகின்றான் இறைவன்.

முன்னாளில் அந்நீரை சேமித்து வைத்து மீண்டும்
மழை வரும் வரை பயன்படுத்த கிணறுகளையும், குட்டைஏரிகளும், 
ஏரிகளையும், குளங்களையும், நீர்த்தேக்கங்களையும். ஏற்படுத்தி
முழுமையாக ஏற்பாட்டை செய்து வைத்தனர். நம் முன்னோர்.

பெரும்பகுதியை பயன்படுத்திய பின்னர் சிறிதளவே கடலை சென்றடைந்த்தது.

இப்போது எல்லாவற்றையும் அழித்து ஒழித்துவிட்டனர்.
பெரும்பகுதி நீர் ஆங்காங்கே தேங்கி நோய்க்கிருமிகள் உண்டாகி நோய் பரப்பும் உற்பத்தி தளங்களாக இருப்பதுடன் மிகுதியான நீர் யாருக்கும்
பயன்படாமல் கடலுக்கு சென்று வீணாகிறது.

போதாக்குறைக்கு பூமித்தாய் பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்காக
சேமித்து வைத்திருந்த  நீரூற்றுகளையும் உறிஞ்சி காலி செய்துவிட்டனர்.
இந்த அரக்க கும்பல்கள்

இப்போது குய்யோ முறையோ என்று கூச்சல் போடுகின்றனர்.

அண்டை மாநிலங்களோடு அனுதினமும் சண்டை .அவர்கள் புத்திசாலித்தனமாக தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்வதால்
நமக்குதண்ணீர் விட தயக்கம் காட்டுகின்றனர்.

தமிழர்களோ அல்லது அவர்களை ஆளும் அரசு வர்க்கமோ மழை காலங்களில் கொட்டோ கொட்டு என்று கொட்டும் தண்ணீரை சேமித்து வைக்க
எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை.

எடுக்க போவதுமில்லை. அப்படி செய்தால் அவர்கள வெள்ள   நிவாரணம், வறட்சி நிவாரணம், என்று பல வகைகளில் கொள்ளை அடிக்க முடியாது.

இதுபோதாதென்று தமிழ்நாட்டில் ராட்சத பம்புகளை  போட்டு மிச்சம் மீதி உள்ள நிலத்தடி நீரையும் உறிஞ்சி காசாகி கொண்டிருக்கின்றன பன்னாடை நிறுவனங்கள்.

அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று இங்கிருக்கும் பல நிறுவனங்கள் பகல் கொள்ளை அடிக்கின்றன

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்முடைய விருந்துகளில், விழாக்களில் ,கூட்டங்களில்.பிளாஸ்டிக் பாட்டில்களில் 
பாக்கட்டு களில் அடைத்து விற்கப்படும் நீரில் பாதிக்குமேல் வீணடிக்கப்படுகிறது.

அவைகளை தயாரிக்க ஆகும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், மின் சக்தி ,அனைத்தும் வீண். 

போதாக்குறைக்கு சுற்று சூழல் பாதிப்பு வேறு. புற்றுநோய் பாதிப்பு வேறு, தண்ணீரை சுத்திகரிக்க அதில் கலக்கப்பட்டுள்ள பலவிதமான நசுகளால், சிறுநீரக பாதிப்பு ,ஈரல் பாதிப்பு வேறு என மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதலில் விருந்துகளில் ஒவ்வொரு சாப்பாட்டு இலைக்கும் பாட்டிலில் குடிநீர் வழங்கும் பழக்கம் நிறுத்தப்பட்டு குவளைகளில் வழங்கினாலே பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக்குவது மிச்சப்படும். 

அடுத்து மழை நீரை சேமிக்க தற்போது எஞ்சியுள்ள நீர்நிலைகளை ஆழப்படுத்தி, பாதுகாப்பதுடன், புதிய நீர் தேக்கங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படாதவரை எந்த முன்னேற்றமும் இந்த முக்கிய பிரச்சினை தீரப்போவதில்லை

அவர்களின் துயரங்களுக்கு முடிவும் இல்லை.




ஞாயிறு, 25 ஜனவரி, 2015

குடியரசு தினம்(66)

குடியரசு தினம்(66)

குடியரசு தினம்(66)

இந்தியாவின் குடியரசு அமைக்கப்பட்டு
66 ஆண்டுகள் கடந்துவிட்டது



மக்கள் தங்களை ஆள்பவர்களை
அவர்களே தேர்ந்தெடுத்துக்கொண்டு
நல்லதோர் வாழ்வை அமைத்துக்கொள்வதே
இதன் உண்மையான நோக்கம்.

ஆனால் நடந்தது என்ன?


1).மக்கள் குடிக்கு அடிமையாகி நாசமாய்ப்
போய்க்கொண்டிருக்கின்றனர்.

2)ஆண்டுதோறும் உள்நாட்டிலேயே பல லட்சக்கணக்கான
மக்கள் அகதிகளாய் எந்த உரிமையும், பாதுகாப்பின்றி.
சாலை ஓரங்களில் அல்லபடுகின்றனர். அவர்களின்
எதிர்கால வாழ்வு கேள்விக்குரியதே

 3)பல லட்சம் கோடிகளுக்கு மேல் ஆண்டு தோறும்
அரசு பணத்தை செலவு செய்தும் வறுமையில் வாடும்
மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.

4) செலவழித்ததொகையில் பெரும்பகுதி அரசியல்வாதிகளும்,
லஞ்ச லாவண்ய பேர்வழிகளும் சுருட்டிவிட்டனர்.

5)ஆளும் வர்கத்தினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் பல கோடி ரூபாய் செலவில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு

ஆனால் அடித்தட்டு மக்களுக்கும்,சட்டத்தை மதித்து  நடக்கும் குடி மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை.

6)நாட்டு மக்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது..வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து  தொழில் செய்து நம் நாட்டு வளங்களை சுரண்டி  கொழுக்க
மட்டும் வசதி மற்றும் பாதுகாப்பு.

7)   ஒருநாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே வந்து போகும் வெளி நாட்டு தலைவர்களுக்கு பல் கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு

இங்கிருக்கும் குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கும்
இந்திய அரசின் . போக்கு

8)இருக்க  இடமில்லை, வீடில்லை, வேளா வேலைக்கு உணவில்லை ,வேலை  ,வாய்ப்பு இல்லை, சுகாதார ,மருத்துவ வசதிகள் இல்லை நிதி வசதி இல்லை, பாதுகாப்பான எதிர்காலம்  இல்லை..இவைகளை அளிக்க எந்த அரசுக்கும்   நாதியில்லை.

9)கொள்ளை அடிப்பவர்களுக்கு ,எல்லா பாதுகாப்பு,வரி சலுகைகள், அரசு உதவிகள் உண்டு

ஆனால்  உழைப்பவர்களையும் வறியவர்களையும் வாழ்வில் முன்னேறாமல் அழிக்க ,முடக்கிபோட பலமுனை  வரிகள், கட்டுப்பாடுகள்.இதுதான் குடியாட்சியில் நம் நாட்டு மக்கள் .  கண்ட பலன்

10)மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினைகளுக்கும்  தீர்வு காணாத கையாலாகாத அரசியல்வாதிகளைக் கொண்ட அரசுகள் ,அவர்களையே நம்பி மோசம் போகும் அப்பாவி மக்கள்.

11)மக்களின்  எதிர்பார்ப்புகளை  நிறைவேற்றாது எப்போதும் அரசு  காவல் துறையை ஏவி அவர்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கம்

12)  குழந்தைகளுக்கும் பெண்களுக்கும்  பாதுகாப்பில்லை.

இதுதான் நாம் 66 ஆண்டு  குடியாட்சியில் கண்ட பலன்.

முன்னேற்றம் இல்லை என்று   ஒட்டு மொத்தமாக  கூறிவிட முடியாது   பயிரைவிட களைகளே அதிகம் முளைத்துள்ளன . அதை அதை அகற்றாவிடில்  எந்த முன்னேற்றமும் உரிய பயனை  தரப்போவதில்லை.

லஞ்சமும்,  நிர்வாக திறமையின்மையும் ,நிர்வாக  சீர்கேடுகளும்,ஒழிக்கப்படாவிடில் பெற்ற
சுதந்திரம் நாட்டு மக்களுக்கு  பயன்தரப் போவதில்லை.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

ஆனந்தம் அடையும் வழி

ஆனந்தம் அடையும் வழி

 ஆனந்தம் அடையும் வழி 

காடு மலை  எல்லாம்
இரவு பகல் பாராமல்
கணக்கற்ற முறை பறந்து திரிந்து

 

மலர்ந்த மலரின் உள்ளே புகுந்து
சுரக்கும் தேனை உறிஞ்சி
கூட்டில் கட்டி கட்டியாய் தேனடை
சேர்க்கும் தேனீ.

ஐயோ பாவம் !ஆனால் அதை
சுவைத்து இன்புறுமோ ?
யாரோ ஒருவன் கூட்டிற்கு தீ
வைத்து அவைகளை விரட்டியும்
கொன்றும் தேன் முழுவதையும்
கொள்ளை அடித்து சென்றிடுவான்.

மனிதர்களே ,விழிக்கும் நேரமெல்லாம்
உழைத்து காசை சேர்க்க பாடுபடுவார்
பல மனிதர்கள் இவ்வுலகில்
சிலரோ உறக்கத்தை விட்டொழித்து
பணத்தை சேர்ப்பார் .

பொய்யான இன்பத்தை அடைந்திடவே
நம்மோடு என்றும் வராத தங்கத்தையும்
வீடு முழுவதும் நிறைக்கும் பொருட்களையும்

 

வீட்டில் வாங்கி நிரப்பினால் இன்பம்
தருவதாக ஆசை காட்டும்
பேய்க் குணம் கொண்ட காசு பிசாசை
நம்பியவர் எவரேனும் நிலையான
இன்பம் அடைந்தனரோ?

காசைக் கொடுத்து கல்வி கற்று
அந்த கல்வியைக் கொண்டு காசு தேட
உறக்கத்தையும், உடல் நலத்தையும்
விட்டொழித்து எப்போதும் அமைதியில்லா
மனதோடு ,பிறர்முன் நடித்து போலியான
வாழ்க்கை வாழ்ந்து பல கோடிகளை
பன்னாட்டு வங்கிகளில் போட்டு வைத்து
பாஸ் புக்கை பார்த்து பார்த்து இன்பம்
அடைவார் பலபேர் இவ்வுலகில்.

சேர்த்த காசு போடும் வட்டிகளைக்
கண்டு மட்டும் இன்புறாமல் ,பசித்தோருக்கு
உணவிட்டு, வறியவருக்கு வாழ்வளித்து
துன்புற்றோர்க்கு உதவி செய்து இன்புற
பழகாதோர்க்கு இவ்வுலகிலும்
அமைதியில்லை மறுவுலகில் அமைதியில்லை.

ஐயப்பா என்றாலும்,
மலையப்பா என்றாலும்
வேலப்பா என்றாலும்,
சிவனப்பா  என்றாலும்
ஈன்றெடுத்த பெற்றோரை
ஈவிரக்கமில்லாமல் முச்சந்தியில் விடுவோரும்
அவர்களின் தியாகத்தை மதியாது முதியோர்
இல்லத்தில் தள்ளுபவர்களும் பெறமாட்டார்
இறைஅருளை என்றென்றும்.

வரும்போது நாம் முற்பிறவியில் சேர்த்த
சொத்துக்களை கொண்டு வர அனுமதியில்லை
இப்பிறவியிலும் அதே சட்டம்தான் என்று
உணராத அறிவிலிகள் தான் மீண்டும்
சொத்துக்களைச் சேர்ப்பார் சொகுசான
வாழ்வை நாடிடுவார். எல்லாவற்றையும்
 

விட்டுவிட்டு மாண்டு போவார்

 Image result for trailanga swami photo

இறைவனை உணர்ந்த பெரியோர்கள்  சொற்படி நடந்தால்
வாழும் இவ்வுலகம் சொர்க்கமாகும், இந்த உடலை
விட்டு நீங்கினாலும் சொர்க்கத்தில் இடம் . கிடைக்கும்

சுயநலம்  விட்டொழித்து ,பிறருக்கு இயன்ற அளவில்
நன்மை செய்து ,அனைத்து  உயிர்களையும்  அந்த
ஆண்டவனின் வடிவென்று உள்ளத்தில் கொண்டு
அவன் நாமத்தை எப்போதும் உச்சரித்து அன்போடு
நடந்து கொண்டால் .ஆனந்தம் நிறைந்திடும் வாழ்விலே.

படங்கள்- நன்றி-கூகுள்

செவ்வாய், 13 ஜனவரி, 2015

இது தாண்டா தமிழ்நாடு

இது தாண்டா தமிழ்நாடு 

போகி திருநாளை புகையில்லா
தினமாக கொண்டாடுங்கள் என்று
கூப்பாடு போடுபவர்கள் போடட்டும்

ஊர்திகளில் ஏறிக்கொண்டு வீதிகள் தோறும்
நச்சுப் புகையை கக்கும் பிளாஸ்டிக் மற்றும்
ரப்பர்  பொருட்களை எரித்து நாசமாய்ப்
போகாதீர் என்று கரடியாய் (மனிதர்களின்
மொழி தமிழ் நாட்டு மக்களுக்கு (புரியாது )
சமூக  ஆர்வலர்களும் ,அரசு  இயந்திரங்களும்
கத்தியும்  பயனுமில்லை

அதிகாலையில்  வீட்டின் கதவைத்
திறந்தால் மூச்சு திணறியது.

நல்லதோர் புத்துணர்ச்சி தரும்
குளிர்ந்த காற்றை சுவாசிக்கலாம் என்ற ஆசை

தெருவெங்கும் காணு மிடமெல்லாம்   குவிந்துள்ள கருகிப்போன
டயர்களும்,அதில் எலும்புகூடுகளாய் தோற்றமளிக்கும்
கருகிய கம்பிகளும் எரியாமல் இன்னும்
புகைந்து கொண்டிருக்கும் பிளாஸ்டிக்
எச்சங்களும்,மிச்சங்களும்.

அதனால்தான் அன்றே ஒரு கவிஞன் பாடி வைத்தான்
"திருந்தாத  ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்" என்று

நோய்க்கிடம் கொடேல் என்றாள்
அவ்வை பாட்டி

ஆனால் நம் நாட்டு மக்களோ
நோய்க்கு வழி வகுக்கும்
கிருமிகளுக்கும், கொசுக்களுக்கும்
இடம் கொடுப்பது மட்டுமல்லாமல்
தங்கள் உடலையே அவைகளுக்கு தானமாக
வழங்கி பெருமை சேர்க்கின்றார் .
என்னே அவர் பெருந்தன்மை!

அதிகாலையில் கோயிலுக்கு சென்று
ஆண்டவனை வழிபடுகின்றார்.
தங்கள் வாழ்வு நன்றாக இருக்கவேண்டுமென்று.

கோயிலின் உள்ளே சிலைக்கு பன்னீரால் அபிஷேகம்
கோயிலுக்கு வெளியே சுற்றுசுவருக்கு
காரி துப்பும்எச்சிலாலும்
சிறு நீராலும்  நீராட்டு.விழா நடத்துகின்றார்.

கோயிலில் வருமானத்தில் குறியாய் இருக்கும்
நிர்வாகங்களுக்கு மக்களின் மல உபாதைகளை
தீர்த்து வைக்க ஒரு கழிப்பிடம் ஏற்படுத்தி அதை பராமரிக்க
மனம் கிடையாது.

புற்று நோயிலிருந்து நம்மை காக்கும்
தக்காளி விலை சரிந்தாலும் அதை வாங்கி
உணவில் சேர்க்கார்.

புற்று நோய் வந்தபின் கையில் இருக்கும் காசை
ஒழித்து நடைபிணம் போல் வாழ்வார்.

டாஸ்மாக் சாராயம் விலை விண்  முட்டும்
உயர்ந்தாலும் கவலைப்படாது
வயிறு முட்டக் குடித்துவிட்டு
வானத்தை நோக்கியபடியே
நடு வீதியில் விழுந்து
கிடப்பதையே வாழ்வில்
பெருமையாக கருதுவார்.

விலை மலிவாக கிடைக்கும் இனிக்கும்
கரும்புச்சாரை சுவைத்து  இன்புறார்.

அதன் சக்கையிலிருந்து கிடைக்கும் கழிவுநீரை
கூடுதல் விலை கொடுத்து
வாங்கி குடித்து மதி மயங்கி மயக்கத்தில்
கிடப்பதே ஆனந்தம் என்பார்.

கள்ளை ஒழித்த காந்திக்கு சிலை வைப்பார்
அவர் நினைவு நாளில் மலரிட்டு வணங்குவதுபோல்
பாசாங்கு செய்வார். ரகுபதி ராகவ ராஜாராம் என்று
பாட்டுப்பாடுவார்.

அடுத்த கணமே சாராயப் பாட்டிலை கையில்
ஏந்தி பாட்டிலு, பீரு, என்று தமிழ் திரைப்பட பாடலை
முணுமுணுத்துக்கொண்டே வீர நடை போடுவார்.

அன்று மட்டும் அரசு மதுவுக்கு விடுமுறை விடும்.
ஆனால் குடி பிரியர்களோ முதல் நாளே சரக்கை வாங்கி வைத்து காந்தி ஜெயந்தி அன்று குடித்து கும்மாள மிடுவார்.

சட்டத்தை மதிப்பதுமில்லை 
சான்றோர் வார்த்தைகளை செவி மடுப்பதுமில்லை 

ஒருவரை ஒருவர் வசை பாடி அழிந்துபோக சளைப்பதுமில்லை 
அற்ப காரணங்களுக்காக  அனுதினமும் ஒரு போராட்டம் 
ஒழுக்கமுமில்லை ஒழுங்குமில்லை.

வாழ்வில் லஞ்சமும் , வஞ்சமும் அதனால் எங்கு நோக்கினும்
பஞ்சமும் தலைவிரித்தாடுது நம் நாட்டில்

ஏழைப் பங்காளர்கள்  என்று சொல்பவர்கள் வாழுவது அடுக்கு மாடி கட்டிடங்கள் ,அனைத்து  வசதிகளுடன்.

அவர்களை வாழ வைக்கும் ஏழைகளோ எப்போதும் இருப்பது, பாம்புகளும் பூச்சிகளும்  வசிக்கும் சாலைகளிலும், பாழும் கட்டிடங்களிலும் தாம்

உழைக்கும் அம்மக்கள் என்றென்றும் அவர்களிடம் கையேந்திதான் 
வாழ்க்கை நடத்தவேண்டும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என்பதே அவர்கள் வகுத்த திட்டம். 

அவர்களின் தந்திரம் புரியாத அப்பாவி மக்கள் கூட்டம் நாள்தோறும் பெருகுதடா நம் நாட்டில். 

மனிதர்களை நம்பியும் பயனில்லை
மகேசனையும் நம்பி  பயனில்லை இந்நாட்டில்
யாரை நம்புவது?

இனி தன் கையே தனக்குதவி என்று தன்னை நம்புவதுதான் 
தரணியில் உள்ளோர்க்கு தங்கள் கண் முன்னே 
உள்ள தகைமையான வழி.