வெள்ளி, 5 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும் (2)

புச்சுக் குட்டியும் நானும் (2)

பூனைக் குட்டிகளுக்கு ஒரு நாள்தான் 
பால் தட்டில் ஊற்றி வைத்தேன்.
அவைகள் அதை அவசரம் அவசரமாக 
ரோஸ்  நிற நாக்கால் நக்கிக் குடித்து 
தட்டை காலி செய்து விட்டன. 

அப்புறம் என்ன,வாலை  தூக்கிக்கொண்டு
ஒரு சோம்பல் விட்டுவிட்டு 
என்னை ஒரு பார்வை. பிறகு கிணற்று சுவர் 
ஓரமாக போய்  விளையாட 
தொடங்கின. 





அவைகள் ஒன்றுக்கொன்று
கொஞ்சிக்கொண்டு பாசமாக 
விளையாடுவதை பார்ப்பதே
இன்பமாக இருந்தது. 

நான் அவைகளைக் கவனிப்பதைப் பார்த்ததும் 
இரண்டு பூனைக்குட்டிகள் அழகாக போஸ் 
கொடுத்தன 

அந்த படம்தான் கீழே. 






மன அழுத்தம் நீங்க மாத்திரைகள்
விழுங்கத் தேவையில்லை

பூனைகுட்டிகளுடன் சிறிது நேரம்
இருந்தால் போதும்
மனம் லேசாகிவிடும்.

இன்னும் வரும் 

வியாழன், 4 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும் (1)

புச்சுக் குட்டியும் நானும் (1)

புச்சுக்குட்டி என்றால்
என்னவென்று குழம்ப  வேண்டாம்.
பூனைக்குட்டிகளுக்கு
நான் வைத்த செல்லப் பெயர்.

எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும்.
இருந்தாலும் பூனைகள் என்றாலே
ஒரு பயம், ஒவ்வாமை வந்துவிடுமோ அல்லது
தன்  கூறிய  நகங்களினால் பிராண்டிவிடுமோ என்று பயம்.

எல்லாவற்றிற்கும் மேலாக பூனை உடலிலிருந்து
ஒரு மயிர் விழுந்தால்கூட அது பெரிய பாவம் என்று புராண கதைகளில் படித்தது .இவை எல்லாம் சேர்ந்து ஒரு குழப்பம் இருந்தது.

அதனால் பூனைகள்.  என்னிடம்
ஒட்டிக்கொள்ள வந்தால்கூட அதை துரத்தி விடுவேன்.

இருந்தாலும் விதி யாரை விட்டது.
என் வீட்டு தோட்டத்தில் கிணற்றில் ஓரத்தில் மூன்று பூனைக்குட்டிகள். மியாவ் மியாவ் என்று அழகாக கத்திக்கொண்டிருந்தன.




அப்போதுதான் இந்த உலகத்திற்கு வந்துள்ளது. போலும்.
பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.
அதன் தாய் இரை தேடப் போயிருந்தது

மனது கேட்கவில்லை .
ஒரு தட்டில் பால்  ஊற்றி வைத்தேன் .
அந்த மூன்று குட்டிகளும்  குடிப்பதை
பார்க்க இன்பமாக இருந்தது.

இப்படியாக பூனைக்குட்டிகளுடன்
ஒரு பந்தம் ஏற்ப்பட்டுவிட்டது.

அப்போதுதான் புதியதாக
ஒரு டிஜிட்டல் காமிராவாங்கியிருந்தேன்
.
அவைகளின் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடிக்க தொடங்கினேன்.
(தொடரும்)






செவ்வாய், 2 செப்டம்பர், 2014

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ? நாயைக் கண்டால் கல்லைக் காணோம்?

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ?
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்?

கல்லையும் நாயையும் மனிதர்களிடமிருந்து
பிரிக்க முடியாது  போலும்!

ஒரு நாய் தெருவில் ஓயாமல்
குரைத்துக் கொண்டிருந்தது,




அது போடும் இரைச்சல் மிகவும்
சகிக்க முடியாமல் இருந்தது,

அதை துரத்த கீழே குனிந்து ஒரு
கல்லை எடுத்து அதன் மீது வீச முனைந்தபோது
அந்த நாயை அங்கு காணோம், அது எங்கோ
ஓடிவிட்டது,

ஆனால் சிறிது நேரம் கழித்து அது மீண்டும்
குரைக்கத்  தொடங்கியது,

மீண்டும் அதே கதைதான், கல்லிருக்கும்போது போது நாயைக் காணவில்லை,
நாயிருக்கும்போது கல்லைக் காணவில்லை.

இந்த கண்ணாமூச்சி ஆட்டம்  தினமும் எல்லோர்  வாழ்விலும் நடக்கிற து, எனவே அதுவே ஒரு பழமொழியாக புழங்கத் தொடங்கிவிட்டது

உண்மையில் நாய் என்பது நம் மனம்தான்

அது ஏதாவது ஒரு பிரச்சினையைப் பிடித்துக்கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கிறது அதிலிருந்து விடுபட மனதை திசை திருப்ப கோயிலுக்கு சென்றுகல்லாய் நிற்கும் தெய்வ வடிவம் முன்பு நின்று பிரார்த்தனை செய்கின்றோம், அப்போது அந்த மனம் காணாமல் போகிறது, கோயிலுக்கு வெளியில் வந்ததும் அந்த மனம் மீண்டும் அதே பிரச்சினையைக் கிளப்புகிறது,

ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறும் இந்த சம்பவம்தான் ஒரு பழமொழியாக உருவெடுத்தது,

இதிலிருந்து ஒரு உண்மையைபுரிந்து கொள்ளவேண்டும்

பிரச்சினையிலிருந்து விடுபடவேண்டுமென்றால் அந்த பிரச்சினையுடன் நம்மை இணைத்துக்கொள்ளாமல் தனியாக நின்று அதை ஆராய்ந்தால் அதற்கான தீர்வு கிடைக்கும். அல்லது அந்த பிரச்சினையிலிருந்து மனதை திசை திருப்பினால் மனதிற்கு அமைதி உடனே கிடைக்கும்

எப்படிஎன்றால் தலைவலியின் கடுமையிலிருந்து மனதை திசை திருப்ப வலி வலிநிவாரணிகள்  பயன்படுத்துவதைப்போல்

நிவாரணியின்  வீரியம் குறைந்தவுடன் வலி மீண்டும் வந்துவிடும்.

வலிக்கான காரணத்தைகண்டறிந்து அதை  தீர்த்துவைத்தால் மீண்டும் வலி வராது ,அதுபோல் பிரச்சினைக்கான காரணத்தை அறிந்து அதை சரிசெய்தால் மனம் அமைதி அடைந்துவிடும்.


திங்கள், 1 செப்டம்பர், 2014

தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து ?

தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து ?

தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து என்று அடிக்கடி
ஒரு கூக்குரல் ஏதாவது ஒரு அரசியல் கட்சியால்
தமிழ்நாட்டில் இடைவிடாமல் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்
ஒரு அபாய சங்கு.

தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கும்
அரசியல் கட்சிகள் தங்கள்
சுய லாபத்திற்காக தனித் தனியாக
அமைப்புக்களை வைத்துக்கொண்டு
தமிழர்களை ஒன்று சேர விடாமல்
பிரித்து வைத்துகொண்டு தமிழர்களை
அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றன

மத்திய அரசு அல்லது மாநில அரசுகள்
மக்கள் நலம் கருதி எந்த திட்டத்தை
கொண்டு வந்தாலும், அதற்கு,அரசியல், மொழி, ஜாதி, இனம் என
சாயம்பூசி அதை தடுப்பதிலேயே பொதுவான
குறிக்கோளாய் வைத்திருக்கின்றன

தமிழர்களை பாதிக்கும் எந்த பிரச்சினைக்கும் ஒருமித்த
குரலை எழுப்புவது கிடையாது. மாறாக ஒருவர்மீது ஒருவர்
குறை கண்டுகொண்டிருப்பதால் தமிழ் மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினைக்கும் முடிவு ஏற்படாமல் அப்படியே கிடப்பில்
போடப்பட்டுள்ளன

தமிழர்கள் ஏற்கெனவே சுதந்திரமாக இருப்பதுபோலவும்
மற்றவர்கள் அவர்களை அடிமையாக்கி விடுவதுபோலவும் சுயநல அரசியல் கட்சி தலைவர்கள் ஒரு மாயையை உண்டாக்கி வைத்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்கள் சோம்பலை தங்கள் வாழ்வின் அடிப்படை கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அதனால்தான் வெளி மாநிலங்களிலிருந்து வரும்
லட்சக்கணக்காண  மக்களுக்கு இங்கு அபரிமிதமான வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

வெளிமாநில மக்கள்தான் தங்கள் புத்திசாலித்தனத்தாலும், உழைப்பாலும்
தமிழ் நாட்டில் வசதியாக வாழ்கிறார்கள்

அவர்கள்தான் பெரிய தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். இங்கிருப்பவன் அவர்களிடம் கூலிக்கு  மாரடிக்கிறான். மெத்தப் படித்த சிலரோ வெளி நாடு சென்று விடுகின்றனர்.

தமிழ் நாட்டில் ஒவ்வொரு துறையிலும் திறமை இன்மை, லஞ்சம், நாணயமின்மை கொடி கட்டிப்பறக்கிறது.

தமிழ் நாட்டு கனிம வளங்கள்,நதி நீர், நிலம்,வன கடல் வளங்கள் தனியார்களால் சுரண்டப்படுகின்றன , தட்டிக்கேட்க ஆளில்லை.

அடித்தட்டு மக்கள் அரசு அறிவிக்கும் இலவசங்களுக்கும், அரசு விற்கும்
மதுவுக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

அவர்களது   வாழ்வும், எதிர்காலமும் அவர்களின் உடல்நலமும் நாசமாகிகொண்டிருக்கிறது. அரசுக்கு அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும், சுகாதார பிரச்சினைகளும் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றன .நாடு முழுவதும் புற்றீசல்போல் பெருகிவரும் மருத்துவ மனைகளே இதற்கு சான்று.

சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் தமிழ் மக்களுக்கும் வெகு தூரம்.
அரசு கோடிக்கணக்கான  ரூபாய் செலவில் கிராமந்தோறும் கட்டிகொடுத்த
அனைத்து கழிவறைகளும் பாழ். ஒரு குட்டிசுவர்,பள்ளி சுற்றுசுவர், பேருந்து நிலையம், கோயில் சுற்றுசுவர், ரயில் நிலையங்கள், கடற்கரை என எந்த இடத்தையும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்காமல் அவர்களால் இருக்க முடியாது

அதனால்தான் ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி  சொன்னார். இந்திய நாடு ஒரு திறந்த வெளிக்  கழிப்பிடம் என்று.
அவர் சொன்னதில்  சிறிதும்  தவறில்லை.

எதையும் ஆராய்ந்து பார்க்காமல் உணர்ச்சிவசப்பட்டு பொது சொத்துக்களை
சூறையாடுவதில் அவர்கள் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள்.அல்லர்

வாய்சொல்லில் வீரர்கள் பாரதியார் அன்றே பாரதியார் எழுதி வைத்தார்.

எந்த செயலை செய்வதற்கு முன்பும் அதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது கிடையாது அதனால்தான் மிக எளிதாக அனைவராலும் ஏமாற்றப்படுகிறார்கள்


 அயல் நாட்டில் வேலைக்கு செல்வதாகட்டும். குறுக்கு  வழியையே
தேர்ந்தெடுத்து அயோக்கியர்கள் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்க்கையை  தொலைப்பது  வாடிக்கையாக உள்ளது

அதுபோல்  ,சேர்த்த பணத்தை முதலீடு செய்வதாகட்டும். முன் பின் யோசியாமல் ஏமாற்றுப்பேர்வழிகளின் வாய் ஜால பேச்சுக்களை  நம்பி லட்சக்கணக்கான தமிழர்கள் ஏமாந்தது கணக்கில்லை என்பது அனைவருக்கும் தெரியும்

இருந்தும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை  என்பது அன்றாடம் தொடரும் அவலங்கள். காட்டும்.

தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை முறையாக, பிழையறக் கற்பதுமில்லை,பேசுவதுமில்லை,எழுதுவதுமில்லை, ஆனால் தமிழ் மீது பற்று இருப்பதுபோல் நடிக்கிறார்கள். தமிழை . இவர்களே  கொஞ்சமாக அழித்துவிடுவார்கள்

வீரம் தேவைதான். ஆனால் விவேகம் ,சமயோசித புத்தி,  இல்லாவிட்டால் அனைத்தும் பாழ் என்பதை கண்கூடாக கண்டும் இன்னும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கும் இந்த சமூகம்  எப்போது விழிக்கப்போகிறதோ?

தங்களின் இந்த நிலையை தமிழன் என்று புரிந்துகொள்ளப்போகிரானோ?


ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

நீயெல்லாம் ஒரு ...........?

நீயெல்லாம் ஒரு ...........?


காலை 8 மணி

வீதியில் ஒரு வயதான் மூதாட்டி தலையில் கீரை கட்டுகள் நிறைந்த
கூடையைக்  சுமந்து கொண்டு "கீறே  கீரே " என்று உரக்க கத்திக்கொண்டு
செல்கிறாள்.

ஏனென்றால் இரைச்சல் போட்டுக்கொண்டிருக்கும், டெய்ப்  ரெகார்டர், தொல்லை காட்சி பெட்டி ஆகிய இரண்டும் போடும் கூச்சல்களைத் தாண்டி வீட்டிற்க்குள்ளிருப்பவர்களுக்கு  அவள் குரல் போய்ச்  சேர வேண்டும்.

அப்போதுதான் யாராவது வந்து கீரையை வாங்குவார்கள்.

Average weight of a bunch is about 150g, Weight may slightly vary from ...

மனைவி அடுக்களையில் இருப்பதால் தன்  மணாளனை கீரை வாங்க அனுப்புவாள். அவள் கேட்பார் கீரை கத்தை என்ன விலை ? என்று

அவள் கேட்டவுடன் கத்தை கத்தையாய் நோட்டை எடுத்துக் கொடுப்பவர் போல

ஒரு கத்தை 15 ருபாய் என்றவுடன் "என்ன அநியாயம் ஒரு கத்தை 15 ரூபாயா என்று துள்ளி குதிப்பார். 10 ரூபாய்க்கு கொடு என்பார். முடிவில் 15  ருபாய் கொடுத்துவிட்டு ஒரே ஒரு கத்தை வாங்கி செல்வார்.

உள்ளே அவருக்கு பூஜை காத்துக்கொண்டு இருக்கும்  என வாடல் கீரையை வாங்கியிருக்கிறீர்கள்?
பாத்து வாங்கக்கூடாதா ? இதற்க்குபோய் 15 ரூபாய்  வேறு.அதனால்தான் நான் உங்களை அனுப்புவது கிடையாது. ஏதோ  வேலையாய்  இருந்ததினால் உங்களை அனுப்பினேன் என்று  சலித்துக் கொள்வாள்  அவள்.

ஆனால் இந்த புண்ணியவான்கள் இரண்டும் பழக்கடைக்கு சென்றால் 4 ஆப்பிளை 180 ரூபாய்க்கு வாயை மூடிக்கொண்டு வாங்கி வரும். அந்த ஆப்பிளின்  பொவுஷு  அதை அரிந்து  பார்த்தால்தான் தெரியும் பாதி அழுகலாக இருக்கும், தோல். நடுபகுதி என பாதிக்கு மேல் வீணாகி போய்  விடும்.



ஒரு விவசாயி கீரை விதையை விதைத்து அதை பாதுகாத்து வளர்த்து வளர்ந்தவுடன் ஒவ்வொரு கீரையாக  பிடுங்கி அதை சுத்தம் செய்து கட்டு கட்டாக கட்டி பேருந்து வரும் சாலைக்கு நடந்து வந்து, பேருந்தில் ஏறி அதை நகரத்தில் தெரு தெருவாக  கால் கடுக்க நடந்து விற்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பவேண்டும். அவர் படும் கஷ்டங்களை சிறிதும் உணராமல் இந்த மனிதர்கள் இரக்கமின்றி நடந்து கொள்கிறார்கள்.

தயவுசெய்து இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்

அப்படி பேசினால் அவர்களெல்லாம்
......அவர்களை என்னவென்று சொல்வது ?

புதன், 13 ஆகஸ்ட், 2014

கண்ணா இளநீர் குடிக்க ஆசையா?


கண்ணா இளநீர் குடிக்க ஆசையா?


Image result for tender coconut


நம் நாட்டில் இளநீர் குடிக்க தேங்காயை கூரான கத்தியால் 10 வெட்டுகளாவது வெட்ட வேண்டும்.
அப்புறம் குடிக்க ஒரு ஸ்ட்ரா தேடவேண்டும்.
வெளிநாட்டில் எவ்வளவு சுலபாக  வெட்டி இளநீர் எடுக்கிறார்கள்

இந்த முறை நம் நாட்டிற்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

கீழ்கண்ட காணொளியை  காணுங்கள்.


https://www.facebook.com/photo.php?v=10152372655484398&set=vb.661484397&type=2&theater

செவ்வாய், 10 ஜூன், 2014

இதுதான் இந்தியா?

இதுதான் இந்தியா?

நம் நாட்டில் உள்ள பீகார் மாநிலம் பற்றிய உண்மை நிலையினை
தெளிவாக விளக்கியுள்ளார் அம்மாநிலத்தில் ஆசிரியராக
பணி புரியும் அன்பர்.


நாம் வாழும் தமிழகம் பாரதி அன்றே கூறியுள்ளதுபோல் சொர்க்கம் .


ஆனால் இங்கிருப்பவர்கள் நம் தாய்  மண்ணின் அருமை பெருமைகள் புரியாமல் நரகமாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய செய்தி.








அன்பரின் செய்தி கீழே.


from: Principal SMA noreply-comment@blogger.com

கங்கை நதி தீரம் பீகார் மாநிலம் நீர்வளமும் நிலவளமும் நிறைந்தது ... மக்கள் மைதிலி மொழியும் போஜ்புரியும் பேசுகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளம் வந்து புரட்டிபோடும் அது அடுத்த மாதம் ஆரம்பம் ஆகும் .வாழைபழம் கிடைக்கிறது மிக மெல்லிதாக ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறது. லிட்சிபழம் இங்கு அதிகம் ,அது பீகாரில் மட்டுமே கிடைக்கும் அரிய பழம். மாம்பழம் கிடைக்கிறது. மக்கள் மிகவும் ஏழ்மையில் இருக்கிறார்கள். லஞ்சம் அதிகம்.கல்வி குறைவு. படித்த மக்கள் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஏழையை விவசாயியை கவனிக்க யாரும் இல்லை. ஆங்கிலம் என்பதே இங்கு இல்லை. ஒரு விசயத்தில் இவர்களை பாராட்டலாம் ..என்னவெனில் ஹண்டி மொழியில் ஆங்கிலம் கலப்பு இல்லை .நம் தமிழர்கள் போல ஆங்கிலத்தை hindiy இல் கலப்பது இல்லை.அந்த விசயத்தில் இவர்களை பாராட்டியே ஆக வேண்டும்..ஆங்கிலம் தெரியாது என்பது வேறு ...அதனால் கலப்பு இல்லை என்பதே உண்மை..மற்றபடி 10 அடியில் இனிப்பான சுவை உள்ள நல்ல நீர் கிடைக்கிறது. எல்லாம் கங்கா மாதாவின் கடாக்ஷம் ....ஹம்கோ அன்கேரேசி நஹி ஆத்தா ஹாய்l மாணவர்கள் அங்கு உள்ளது போலவே இங்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால் நல்ல உடற்க்கட்டு இல்லை. காரணம் maalnutrition தான். சத்தான உணவு இல்லை .சப்பாத்தி தான் எங்கும் ...வேறு எதையும் நான் பார்க்கவில்லை .நம் தமிழகம் உணவில் variety அதிகம். இங்கு vairiety இல்லை ...மின்சாரம் 4 மணிநேரம் முழுமையாக வந்தால் ஆச்சரியம்.சுத்தம் என்பதே எங்கும் இல்லை. நகராட்சி தெருகூட்ட பணம் ஒதுக்கவில்லை போல.தமிழகம் சொர்க்கபூமி ..சாலைவசதி ரொம்ப மோசம்.போக்குவத்து அதவிட ரொம்ப மோசம் .ரயில்பயணம் மட்டுமே பேருந்து சொற்பமே.ஆனால் pollution குறைவு ....இணையம் பயன்பாடு மிக மிக குறைவு.அரசு பள்ளிகளின் நிலை மிக மோசம். ஆங்கிலம் என்பதே அறவே இல்லை.நாமெல்லாம் எவளவோ தேவலை ..புண்ணியம் செய்தவர்கள்.இன்னும் எழுதுகிறேன்...நேரம் கிடைக்கும் போது...நான் ஹிந்தி 1978 இல் படித்தேன் அதனால் தப்பித்தேன். இதற்க்கு முன் நான் ராஜஸ்தான் மாநிலத்திலும் முதல்வராக பணியாற்றினேன். அங்கு சம்பளம் குறைவு. எனவே இங்கு வந்தேன். மீண்டும் இங்குஇருந்து குஜராத் மாநிலத்தில் பணியாற்ற விருப்பம். பார்ப்போம்.நண்பர் கண்ணன் கூட tnptf கமெண்ட் போட்டு இருக்காப்ல ...பார்த்தேன்.மீண்டும் எழுதுகிறேன் நண்பரே