திங்கள், 31 மார்ச், 2014

நீங்கள் வாழும் உலகம் எது..?

நீங்கள் வாழும் உலகம் எது..?
நான் வாழ்வது கனவுலகமா அல்லது நிஜவுலகமா???

இதைக்கேட்டுப்பாருங்கள் பின்னர் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.


கீழ்கண்டுள்ள காணோளியைக் காணுங்கள் 

https://www.facebook.com/photo.php?v=666312143428227&set=vb.363469940379117&type=2&theater

வியாழன், 27 மார்ச், 2014

மெய் சிலிர்க்க வைக்கும் சாகசம்.....

மெய் சிலிர்க்க வைக்கும் சாகசம்.....
இந்திய வீர தம்பதிகளின் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசம்.....
இவர்கள்..என்னமோ..கூலா தான் செய்கிறார்கள்..பார்க்கும் நமக்கு தான் பக் பக்...என்கிறது...


பெண்களை பேதைகள் என்றும், பேதலிக்கும் புத்தி உடையவர்கள் என்றும், பெண்கள் பலகீனமானவர்கள் என்றும். சில மூடர்கள் கதை கட்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் இந்த காணொளியைக்  கண்ட பிறகு பெண்களைப் பற்றிய அபிபிராயத்தை ஆண்கள் கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும். 

https://www.facebook.com/photo.php?v=664106813648760&set=vb.363469940379117&type=2&theater

புதன், 26 மார்ச், 2014

எழுமுனை பரிமாண அதிசயம்.


எழுமுனை பரிமாண அதிசயம். 

எல்லோரும் முப்பரிமான படத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
தற்ப்போது முப்பரிமான படங்களைக் காட்டும் தொலைக்காட்சி திரையும், திரைபடங்களும் வந்துவிட்டன.



ஆனால்   அவற்றையெல்லாம் தாண்டி எழுமுனைப்  பரிமாண
காட்சிகளைக் கொண்ட தொழில் நுட்பம் வந்துவிட்டது.



அதை நேரில் கண்டால்தான் அதன் அதிசயம் புரியும்.

இணைப்பு கீழே.


https://www.facebook.com/photo.php?v=663544380371670&set=vb.363469940379117&type=2&theater

செவ்வாய், 25 மார்ச், 2014

எனக்கு நேரமில்லை?

எனக்கு நேரமில்லை?





இப்போது யாரைப் பார்த்தாலும்
எதற்கெடுத்தாலும் எனக்கு நேரமில்லை
என்று அங்கலாயிக்கிறார்கள்

அனால் சிலர் எனக்கு நேரமே
போதவில்லை என்கிறார்கள்.

ஒரு சிலரோ எனக்கு நேரமே
போகவில்லை போரடிக்கிறது என்கிறார்கள்.
இவர்களின் கூட்டம்தான்  இந்த உலகில்
அதிகம் .

இவர்போன்றவர்கள் இந்த உலகின்
சுமைகள்.

இறைவன் அனைவருக்கும் சமமாக
24 மணி நேரம் அளிக்கின்றான்.

உறங்கும் நேரம் தவிர்த்து விழித்திருக்கும் நேரத்தை
சரியாக ,பயனுள்ள வகையில்
பயன் படுத்துபவர்கள் மிக சிலரே.

அப்படிபட்டவர்கள் தான் வாழ்க்கையில்
உயர்ந்த நிலையை எட்டுகிறார்கள்.

வாழ்க்கையில் குறிக்கோளே இல்லாதவர்கள் 
இந்த உலகில் பலர் உள்ளனர். 

குறிக்கோள் உள்ளவன் அதை அடைய
கடுமையாக உழைக்கின்றான். பல நேரங்களில்
உறக்கத்தையும் விடுகின்றான்.

பல விருப்பங்களை தியாகம் செய்கின்றான்.
அவனுக்கு இன்னும் நேரம் கிடைத்தால்
நன்றாக இருக்குமே என்று நினைக்கிறான்.

ஆனால் சோம்பேறிகளுக்கோ
எவ்வளவு நேரம் கொடுத்தாலும்
ஒன்று தூங்கி  தொலைப்பார்கள்.

அல்லது வெட்டி பேச்சில் காலம் கழித்து பிறரின் நேரத்தையும்  வீணடிப்பார்கள். அல்லது

இறுதி நேரம் வரை தொலைகாட்சியில்
நம்முடைய நேரத்தை வீணடிக்கும் கயவர்களின்
பேச்சுக்களை /படங்களை பார்த்துக்கொண்டு
நேரத்தை வீணடிப்பார்கள்.

பிறகு குய்யோ முறையோ என்று அலறிக்கொண்டு  ஓடுவார்கள்.
வீட்டில் உள்ளவர்களையும் குறை சொல்லிவிட்டு ,

முடிந்தால் தன்னுடைய சோம்பேறித்தனத்தை மறைக்க
ஒரு சண்டையை கிளப்பிவிட்டுப் போய்விடுவார்கள்.

இப்படிப்பட்ட கூட்டத்தை சேர்ந்த ஒருவர்
ஒவ்வொரு வீட்டிலும் உண்டு.
அதுபோல நாட்டிலும்
லட்சக்கணக்கான மக்கள் உண்டு.

இவர்களால்தான் வீடும் நாடும்
அமைதியின்றி இருக்கிறது.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி  கெடுத்தவர்கள்
வீட்டையும்  கெடுக்கிறார்கள்.நாட்டையும் கெடுக்கிறார்கள்.
அவர்களையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் வாழ்வில் சந்திப்பது  தோல்விகளையும்
தொந்தரவுகளையும்.தான்


திங்கள், 24 மார்ச், 2014

காவியம் கைவிரலின் நிழல்களில் !

காவியம் கைவிரலின் நிழல்களில் !



அந்த காலத்தில் விளக்கின் ஒளியில் 
கைவிரல்களின் நிழலைக்கொண்டு 
நாய்,முயல், கருடன்,குதிரை ,மான் 
போன்ற உருவங்களை சுவற்றில்
காட்டி மகிழ்ந்ததுண்டு.

ஒன்று அந்தக் கலை 
உச்சிக்கு சென்றுவிட்டது.

விரல்களின் நிழல்கள் மூலமே 
காவியங்களை படைக்கத்  தொடங்கி விட்டனர். 
கைதேர்ந்த கலைஞர்கள். 

அமிர்தசரஸ் பொற்கோயில் தோற்றம் ,
அதைக் கட்டிய குருவின் வாழ்க்கை வரலாறு 
-அற்புதம் கண்டு மகிழுங்கள்/
இணைப்பு கீழே .

http://www.youtube.com/watch?v=Y4FMOpRSvHo

வெள்ளி, 21 மார்ச், 2014

தந்தையின் அன்பை உணராத சிறுவன்

தந்தையின் அன்பை உணராத சிறுவன் 

ஒரு சிறுவன் அவன் மீது அன்பு காட்டிய
தந்தையை அவர்  இவ்வுலகில்
உள்ளவரை வெறுத்து ஒதுக்கினான்

காரணம் அவர் அவனுக்கு கைசெலவிற்கு
 பணம் கொடுப்பதுபோல் கொடுத்து உடனே வாங்கி
அங்கு வைத்திருக்கும் உண்டியலில் போட்டுவிடுவார்.

அதே சமயம் அவரும் அதே தொகையை
தன் பங்காக உண்டியலில் போட்டுவிடுவார்.

அவர் அடிக்கடி தன் மகனிடம் சொல்வது
நாம் பிறருக்கு கொடுக்கத்தான் வேண்டுமே ,
பிறருக்கு உதவத்தான் வேண்டுமே தவிர
நமக்கே அனைத்தையும் செலவு
செய்துகொள்ளக் கூடாது என்பார்.

இதை புரிந்துகொள்ளாத அந்த மகன்
அவர் இறந்தபின் ஒரு அநாதை விடுதியிலிருந்து
அவர் தந்தையைப் பாராட்டி வரப்பெற்ற நன்றி கடிதங்களைப் பற்றி அறிந்துகொண்டு தான் தந்தையை தவறாக புரிந்துகொண்டுவிட்டதாக வருந்துகிறான்.

தந்தையைப் போல் அவனும் பிறருக்கு
உதவும் பணியில் ஈடுபடத் தொடங்குகிறான.

அவசியம் அனைவரும்
காணவேண்டிய காணொளி இது.

இணைப்பு. கீழே. 
http://vitaminl.tv/video/3149?ref=fbsm

புதன், 19 மார்ச், 2014

வண்ணக் கிளி




வண்ணக் கிளி 

வண்ணக் கிளி அழகோ அழகு

ஆனால் கிளி சொல்லும் கதையோ வேறு
அது என்னவாக இருக்கும்?
நீங்களே சொல்லுங்கள்.





https://www.facebook.com/Kadhambam/photos/a.363481737044604.73807372.363469940379117/660298000696308/?type=1&theater