ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

முழு தேங்காய்க்குள் என்ன இருக்கும்?

முழு தேங்காய்க்குள்  
என்ன இருக்கும்?



என்ன இருக்கும் ?
தேங்காய் இருக்கும்




இளநீர் இருக்கும்.

ஒரு  தேங்காய்க்குள்
என்னவெல்லாம்   இருக்கிறது
என்பதை பல கலைஞர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.

நாமெல்லாம் தேங்காய் ஓடுகளையும்
மட்டைகளையும் சாலை  ஓரத்தில்
வீசி எறிந்து விடுகிறோம். அவைகள்
எங்கு பார்த்தாலும் மலை போல் 
குப்பையாக குவிந்து கிடக்கின்றன.

பிள்ளையார் பிடிக்க
குரங்காக முடிந்தது என்பார்கள்.

ஒரு கலைஞன் தேங்காய்க்குள்
பிள்ளையார்  இருப்பதை கண்டுபிடித்தான்
அவனுக்கு பாராட்டுக்கள்






அடுத்தவன் மனது குரங்குபோலும்
அதற்குள் ஒரு குரங்கு உட்கார்ந்துகொண்டிருப்பதைக்
கண்டுபிடித்தான் போலும்.








அடுத்தவன் பாருங்கள். 
அவன் மிகவும் 
ரசனை  மிக்கவன்  போலும். 
அழகிய படைப்பினை 
நமக்காகத் தந்துள்ளான் .
அவனுக்கு பாராட்டுக்கள். 



பிலிப்பின்ஸ் நாட்டில் தேங்காய் ஒடுகளிலிருந்து கோட்டு மற்றும் சட்டை பட்டன்கள்  செய்கிறார்கள். அவைகள் உறுதியாக இருக்கின்றன. சுற்று சூழல் கேடும்  கிடையாது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக தேங்காய் ஓடுகளை பயன்படுத்தினால். செலவு மிச்சம், சுகாதார கேடும்   கிடையாது.  
ஆனால் யார் செய்யப் போகிறார்கள். ?

படங்கள் :நன்றி கூகிள் 

வியாழன், 20 பிப்ரவரி, 2014

மனிதர்கள் தனக்குதானே வைத்துக் கொள்ளும் வேட்டு

மனிதர்கள் தனக்குதானே 
வைத்துக் கொள்ளும் வேட்டு 



மரங்களால்தான் மனித இனம் மற்றும் அனைத்து
உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன.
என்பது அனைவருக்கும் தெரியும்

மரங்களை அழித்துவிட்டால் மழை வராது
சோலைவனம் பாலைவனம் ஆகிவிடும் என்றும் தெரியும்


மரங்கள் இல்லாவிடில் உலகில்
பிராணவாயு குறைந்து உயிர்கள்
 மாண்டுபோக நேரிடும் என்றும் தெரியும்.

மலைகளில் மரங்கள் இல்லாவிடில்
நில சரிவுகள் ஏற்படும் என்றும் தெரியும்,

கடற்கரையில் அலையாற்றிக் காடுகள்
இல்லாவிடில் சுனாமியின் கடுமை அதிகமாகி விடும்.
சேதம் ஏற்ப்படும் என்று தெரியும்.



எல்லாம் தெரிந்தும் யாரும் மரங்களை
நடுவதும் கிடையாது. அதை பாதுகாப்பதும் கிடையாது.

தன் தலையில் தானே நெருப்பு வைத்துக்கொள்ளும்
இந்த போக்கிற்கு என்ன சொல்வது?

ஒரு காலத்தில் மரங்களை கோடாலியால்
வெட்டினார்கள். அப்போது காடுகளும் இருந்தது.
விலங்குகளும் இருந்தது. இயற்கை காப்பாற்றப்பட்டது.

இப்போதோ அதற்க்கு
ராட்சத இயந்திரங்கள் வந்துவிட்டன.



பல ஆண்டுகளாக வளர்ந்த மரங்களை
ஒரு சில மணி நேரத்தில் வெட்டி சாய்த்துவிடுகிறது.

இன்னும் சில ஆண்டுகளில்
இயந்திரங்கள். இருக்கும்

அதை இயக்க டீசலும் இருக்காது.
காடுகள் இருக்காது

அதை இயக்க மனிதர்கள்.
இருக்கப்போவதில்லை என்பது உண்மை.


இந்த காணொளியைக் காணுங்கள்.
எதிர்கால பாலைவனத்தை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

https://www.facebook.com/photo.php?v=274564209372616&set=vb.163335647162140&type=2&theater

திங்கள், 17 பிப்ரவரி, 2014

திரைப்படம் என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்!


திரைப்படம் என்றால் 
இப்படியல்லவோ இருக்க வேண்டும்!


திரைப்படம் என்றால் வன்முறை

ஆபாச அங்க அசைவுகள்,பாடல்கள்,,

நம்பமுடியாத காட்சி அமைப்புக்கள்

கதையே இல்லாமல் வெறும்
சதைகளையும், அர்த்தமற்ற வார்த்தைக்
கோர்வைகளைக் கொண்டு
இசை என்ற பெயரில் இசைக்கருவிகள் மற்றும்
இயந்திரங்களின் இரைச்சல்களையும்தான்
கேட்க, பார்க்க வேண்டியதாகி விட்டது.

வாய்பேச முடியாத ,காது கேளாத  ஒரு பெண்ணின்
உணர்வுகளை படமாக்கிய விதம்  அனைவரும்
காண வேண்டும்.

தவறாமல் கண்டு மகிழுங்கள்.

http://www.storypick.com/cute-10-minute-film-deaf-mute-girl-will-warm-heart/

சனி, 15 பிப்ரவரி, 2014

அன்பிலாரும் அன்புடையாரும் (நிறைவுபகுதி)


அன்பிலாரும் அன்புடையாரும் (நிறைவு பகுதி)


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் 
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு 

மரத்தின் தியாகமும் குழந்தையாய்  
உலகிற்கு வந்து முதுமைபருவத்தை அடைந்தும் 
சுயநலத்தையே பெரிதாகக் கருதும் 
மனித  குலத்தின்மாதிரியைக் கண்டோம். 

இந்த கதையில் வரும்  பாத்திரங்கள் கற்பனையல்ல 
அது அனைவரின் உள்ளத்திலும் பிரதிபலிக்கும் 
கருத்தே ஆகும். 

இங்கே  மரம் என்று குறிப்பிடப்படுவதுதன்  குழந்தைகள் மீது
பாசத்தை கொட்டி வளர்க்கும் பெற்றோர்களைக் குறிக்கும்.

சிறுவன் என்பது அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது
வளர்ந்த   குழந்தைகளைக் குறிக்கும்

 நாம் குழந்தைகளாக இருந்தபோது பெற்றோர்களை நேசித்தோம்
 விளையாடி மகிழ்ந்தோம்



சற்று வளர்ந்தபிறகு அவர்களை பிரிய நேரிட்டது 
அப்போதும்  நமக்கு தேவை என்றபோதோ அல்லது 
ஏதாவது பிரச்சினைகளில் சிக்கியபோதோ 
அவர்கள் உதவியை நாடினோம் 
 
எந்த நேரத்திலும் நாம் அவர்களை 
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 
அவர்கள் அவர்களிடம் உள்ளதை நமக்கு கொடுத்து  உதவ என்றும் தயங்கியதில்லை.அவர்களின் எண்ணம்  தாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை நாம்  மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் ஓங்கியிருந்தது 

நீங்கள் நினைக்கலாம் இந்த சிறுவன்  மரத்திடம் சிறிதும் இரக்கமின்றி நடந்துகொண்டான் என்று. 

ஆனால் உண்மையில் பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை இப்படிதான்  அன்பின்றி,இரக்கமின்றி, நன்றியின்றி நடத்துகின்றனர்.என்பதே உண்மை. 

அந்த பட்டியலில் நீங்களும்  இருக்கலாம். 

அவர்களிடமிருந்து  எதையும் கேளாமலே எடுத்துக்கொள்கிறோம் .
அவர்களை நாம் என்றும் பாராட்டுவது கிடையாது. 

மாறாக அவர்களின் மனதை புண்படுத்துகிறோம் 
.அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறோம் என்பதே உண்மை. 

நாம்  நம்முடைய தவறை  உணர்வதே கிடையாது 
உணரும்போது காலம்  கடந்துவிடுகிறது.

அது அவர்களுக்கு ஒரு  நன்மையையும் செய்யப்போவதில்லை. அல்லது   மகிழ அவர்கள் இந்த உலகில் இருப்பதில்லை 
எனவே  இந்த கணம் வரை யாராவது ,மாறாமல்  இருந்தால்  
தங்களை மாற்றிக்  கொள்ளுங்கள்

.உங்கள் பெற்றோரின் மனதில் உள்ள ரணங்களை 
ஆற்ற மருந்து போடுங்கள். 

வேறொன்றுமில்லை. அன்பான வார்த்தை. 
சிறு உதவிகள் அதுவே போதும் .
அவர்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள்.
 
இல்லாவிடில் அவர்கள் இந்த உலகை விட்டு 
நீங்கியபிறகு அவர் உட்கார்ந்த நாற்காலியையும்
படத்தையும் பார்த்து வருந்துவதில் பயன் ஒன்றுமில்லை.

பெற்றோரின் அன்பையும் பாசத்தையும் 
நீங்கள் உணரும் காலம் ஒருநாள் வரும். 

எப்போது?

நீங்களே பெற்றோர்கள் ஆகும்போது 

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

மீண்டும் நமது இந்திய கலாசாரத்திற்கு மாறுவோம்

மீண்டும்  நமது  இந்திய  கலாசாரத்திற்கு  மாறுவோம்

காலையில்  எழுந்ததும்  பல்  துலக்க 
டூத்  ப்ருஷையும் பற்பசையையும் 
பல்லாண்டுகளாக  நாம் 
பயன்படுத்தி  வருகிறோம்

முற்காலத்தில் விரல்களால் ஈறுகளை அழுத்தி 
பல் தேய்த்து வந்ததால் பற்கள் முறையாக 
முளைத்து முத்துப் பற்கள்போல் உறுதியாக இருந்தன 



ப்ரஷ் பயன்பாடு வந்தவுடன் பற்கள் 
கோணல் மாணலாக வளர்ந்து அவைகளை ஒழுங்குபடுத்த 
அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்றுவிட்டது இந்நாளில் 

விளைவு  ஒவ்வொரு  ஆண்டும் 
இதற்காக  மட்டும் ஒவ்வொரு குடும்பத்தில்  மக்கள் 
பல  ஆயிரம்  ரூபாய்களை தொலைக்க வேண்டியுள்ளது 

ஒரு ப்ரஷ் 10 ரூபாயிலிருந்து
 பல் நூறு ரூபாய் வரை விற்கிறது.
எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் 
அதன் வாழ்வு 2  மாதங்கள்தான். 

அப்படி அதைக்கொண்டு பல் விளக்கினாலும்.
 பற்கள் சுத்தமாவதில்லை.

பற்களில் சிக்கிக்கொள்ளும் உணவுப் பொருட்களை 
எடுக்க டூத் பிக்ஸ் மாதம் ஒரு டப்பா வாங்க வேண்டும்.

அப்படி  இருந்தும்  
பற்கள்  கெட்டு  போய்விடுகின்றன



காரணம்  பற்பசையில்  
எந்த  மருத்துவ  குணங்களும்  கிடையாது 
சுண்ணாம்பும்  ,நுரை  வரும்  
ஒரு  ரசாயனமும்தான்  உள்ளது 
.
இதைதவிர  சில மாதங்களுக்கு  ஒரு முறை 
டூத் ப்ருஷை   மாற்ற  வேண்டும் 
அதற்க்கு  வேறு  செலவு செய்ய   வேண்டும்

இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை 
சுலபமாக மேனாட்டு நிறுவனகள் 
நமது நாட்டின் வளத்தை 
கொள்ளையடித்து கொழுக்கின்றன

இந்த ப்ரஷ்கலால் பல்லில் 
படியும் காரையை 
நீக்க முடியாது 

அதற்க்கு பல்மருத்துவர்களிடம்தான் 
செல்ல வேண்டும் 
அவர்கள் எந்திரத்தின் உதவிகொண்டு 
சுரண்டி தள்ளுவார்கள் ஏற்கெனவே
 நம்  பல்லின்  மேல் உள்ள எனாமலையும்.  சேர்த்து. 



  
பல்வலி  என்று  பல் வைத்தியர்களிடம்  சென்றால்
பல ஆயிரங்களை  இழக்க  வேண்டியுள்ளது 



ஒரு தடவை நுழைந்தால் போதும் சாகும் வரை அல்லது மொத்த பற்களும் விழுந்து, பல் செட் கட்டும் வரை போய்க்கொண்டேதான் இருக்கவேண்டும். 



ஒரு காலத்தில் பெரு  நகரங்களில் மட்டும் இருந்த பல் வைத்தியர்கள். இன்று தெருவு தெரு மருத்துவ மனைகளை திறந்து வைத்துள்ளனர். 
.
ஆனால்  கடந்த  காலங்களில் 
எங்கும் இலவசமாக கிடைக்கும் 
வெறும்  ஆலம்  குச்சி  அல்லது  
வேப்பம்  குச்சிகளால்  பல் துலக்கினர் 

நூறு  வயது  வரை  பற்கள் நன்றாக  இருந்தது 
பல்  நோய்கள்  கிடையாது 
.
இன்று  பிறக்கும்  குழந்தைகளே  
பல் நோயுடனும்   பிறக்கின்றன 
வாலிப  வயதிற்குள் மொத்த  பற்களும்  
சொத்தை  பிடித்து  விடுகின்றன

இனிப்பு  பொருட்களும் , மாவு  பொருட்களும் 
பல்லை  சீரழிக்கின்றன 
இதை  யாரும்  கண்டு  கொள்வது  கிடையாது

ஒவ்வொருவரும் தம்  வாழ்நாளில்  பல்லுக்கு  மட்டும்
பல ஆயிரங்களை  செலவழிக்கிறார்கள்

அதற்காக  அவர்கள்  கூடுதலாக உழைக்க  வேண்டியிருக்கிறது 
பல் கெட்டு விடுவதால்  கிருமிகள்  உற்பத்தியாகி
முழு  உடல்நலமும்  கெட்டு  சம்பாதிப்பது    அனைத்தையும் 
உடலுக்கே  செலவழித்து  மாத்திரைகளை முழுங்கியே
ஆயுளை இக்கால  மக்கள் முடிக்கின்றன 
.
இந்நிலை  மாற  வேண்டுமென்றால் 
மக்கள் வேப்பம் குச்சியை  மெதுவாக 
மென்று பிரஷ்  போல்  ஆக்கி  அதில்  பல்லை துலக்கினால் 
பல்லில்  உள்ள  கிருமிகளும்  சாகும்
பல்லும்  சுத்தமாகும்

வீணான  செலவும்  மிச்சம்  ஆகும் 
உடல்நலமும் காக்கப்படும் 

பற்கள் கெட்டு சிகிச்சைக்காக  பலமணி நேரம் பல் மருத்துவமனைகளில்
காத்திருக்கும் நேரத்தை விட சில நிமிடங்கள் 
தினமும் பொறுமையாக பல் துலக்கவும் நேரம் 
ஒதுக்கினால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை பெறலாம்

ஆனால் மேனாட்டு  மோகத்தில்  மூழ்கி  கிடக்கும்  இந்த  சமூகம்   இதை  நிச்சயம்    ஏற்றுகொள்ளாது 

படங்கள் கூகிள்  நன்றி 

வியாழன், 13 பிப்ரவரி, 2014

அன்பிலாரும் அன்புடையாரும் (பகுதி-1)

அன்பிலாரும் அன்புடையாரும் (பகுதி-1)


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் 
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு 

எங்கோ இந்த வரிகளை படித்திருக்கிறோம். 
அல்லவா ?

ஆம் திருக்குறள்தான். 

அதை விளக்கும் ஒரு சம்பவம் (மூலம்  ஆங்கிலத்தில்) 

வெகு காலத்திற்கு  முன்பு,
ஒரு ஊரில் ஒரு  பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. 



ஒரு சிறுவன் ஒவ்வொரு நாளும் 
அந்த மரத்தின் அடியில் வந்து 
விளையாடுவதை விரும்பினான் 

மரத்தின் கிளைகள் மீது ஏறினான்,
பழங்களை பறித்து உண்டான் 
அதன் நிழலில் படுத்து ஒரு குட்டி தூக்கமும் 
சில நாள் போட்டான் 



அவனைஆப்பிள் மரமும் நேசித்தது. 
அவனும் அதை நேசித்தான் 

காலங்கள் உருண்டோடியது. 
அந்த சிறுவன் பெரியவனாக வளர்ந்துவிட்டான். 
அவன் இப்போது அந்த மரத்தடியில் விளையாடவே வருவதில்லை. 

இப்படியிருக்க ஒரு நாள் அந்த வளர்ந்துவிட்ட சிறுவன் 
அந்த மரத்தடியில் வந்து சோகமாக உட்கார்ந்திருந்தான் 

நெடுநாள் கழித்து அங்கே வந்த சிறுவனை 
என்னோடு  விளையாட வா என்று கேட்டது அந்த ஆப்பிள் மரம். 

உடனே அந்த சிறுவன் பதிலளித்தான் 

மரமே  நான் இப்போது சிறு குழந்தையல்ல
 உன்னை சுற்றி சுற்றி விளையாடுவதற்கு.



நான்  இப்போது சிறுவனாகிவிட்டேன் 
எனக்கு விளையாடுவதற்கு பொம்மைகள் வேண்டும் 
அவைகளை வாங்க எனக்கு பணம் வேண்டும்
, என்ன செய்வதென்று தெரியவில்லை. என்றான். 

உடனே மரம் சொல்லியது, 

என் அன்பிற்குரிய சிறுவனே  என்னிடம் பணம் இல்லை. 
ஆனால் என்னிடம் ஆப்பிள்ள் உள்ளது 
அவைகளைப் பறித்துச் சென்று விற்று காசு சம்பாரித்துக்கொண்டு 
அந்த காசை வைத்து பொம்மைகளை வாங்கி கொள் என்றது. 

ஆஹா நல்ல யோசனை. என்று கூறிக்கொண்டே மரத்தில் உள்ள அத்தனை  ஆப்பிள்களையும் பறித்துக்கொண்டு அதன் தலையை மொட்டைஅடித்தான். 

அங்கிருந்து ஒரு நன்றி கூட சொல்ல்லாமல்
 மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டான். 
நெடு நாட்கள் அவன் அங்கு வரவே இல்லை.
 மரம் மிகவும் சோகமாக இருந்தது. 

காலம் உருண்டோடியது .

சில காலம் கழித்து அந்த சிறுவன் இளைஞனாக
மரத்திடம் திரும்ப வந்தான். 
உடனே அவனைக் கண்டதும் 
மரம் மகிழ்ச்சியடைந்தது.

வா என்னோடு விளையாட 
என்று அன்புடன் அழைத்தது. 

உன்னோடு விளையாட எனக்கு நேரமில்லை.

நான் என் குடும்பத்தை கவனிக்க வேண்டும்.
நாங்கள் வசிக்க ஒரு வீடு கட்ட வேண்டும் .
அதற்கு உன்னால் உதவ முடியுமா என்றான். 

மன்னிக்கவும் என்னிடம்  வீடு கிடையாது. 

ஆனால் என்னுடைய கிளைகளை எல்லாம் 
வெட்டிக்கொண்டு எடுத்துப்போய் வீட்டை கட்டிகொள்
என்றது அந்த அப்பாவி மரம்.

வழக்கம்போல் நன்றிகூட தெரிவிக்காமல் 
கிளைகளை எல்லாம் வெட்டிக்கொண்டு மகிழ்ச்சியோடு போய் 
வீட்டைக் கட்டிக் கொண்டான்  அந்த இளைஞன். 

வழக்கம்போல் நீண்ட காலம் அவனைக் காணவில்லை.

மரம் தனி மரமாக சோகத்தில் நின்றுகொண்டிருந்தது. கிளைகள் இல்லாமையால் பறவைகளோ, விலங்குகளோ
யாரும் அதை சட்டை செய்வதில்லை. 

ஒருநாள் அவன் வந்தான் 

சற்று வயதானவனாக .
அது கடும்கோடை க்காலம் 

மரம் உடனே என்னோடு விளையாட வா என்றது.
அது இன்னும் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை 

அவன் உடனே சொன்னான் 
,நான் உன்னோடு விளையாடவில்லை. 
நான் கடலில் படகில் சென்று மகிழ்ச்சியாக 
இருக்க விரும்புகிறேன். நீ எனக்கு ஒரு படகு கொடு என்றான் 

வழக்கம்போல் மரம் என்னிடம் படகு கிடையாது. 
என்னிடம் நடுப்பகுதி மட்டும்தான்உள்ளது  அதை வெட்டி எடுத்துக்கொண்டு,அதிலிருந்து படகை செய்துகொண்டு
 கடலில் பயணம் செய்து மகிழ்ச்சியாக இரு 
என்றது அந்த தியாகி மரம். 


அதற்கு பிறகு சில ஆண்டுகள் அவனைக் காண வில்லை. 

கிழவனாக ஆகிவிட்ட அந்த சிறுவன் 
அந்த மரத்திடம் பல ஆண்டுகள் கழித்து வந்தான். 

மன்னிக்கவேண்டும் சிறுவனே, 
என்னிடம் உனக்கு கொடுக்க ஒன்றும் இல்லை.
ஆப்பிள்களும் இல்லை என்று வருத்தத்துடன் மரம் கூறியது. 


உடனே அவன் பரவாயில்லை.

ப்பிள்கள் இருந்தாலும் கடித்து தின்ன எனக்கு பற்கள் இல்லை
எல்லாம் விழுந்துவிட்டது  என்றான். 

நீ ஏறிவிளையாட என்னிடம்  
மரத் தண்டும்  இல்லை என்றது மரம் 

உடனே அவன், எனக்கு வயதாகிவிட்டது
 மரத்தின் மீது ஏறி விளையாட உடலில் 
சக்தியும் இல்லை என்றான் 


அப்போதும் கூட அந்த மரம் தற்போது என்னிடம் 
 உனக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை.  
என்னிடம் மடிந்துகொண்டிருக்கும் வேர்கள்தான் உள்ளது என்று 
மிகுந்த வருத்தத்துடன் கண்ணீர் வழிய அவனிடம் சொன்னது 


எனக்கு எதுவும் வேண்டாம், 
மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்  
நான் ஓய்வு எடுக்க வேண்டும். 

ஓய்வெடுக்க பழைய மரங்களின் அடிபகுதிதான் ஏற்றவை.
என்  வேர்கள் மீது தலை வைத்துப் படுத்து 
ஓய்வெடுத்துக்கொள் என்று  மகிழ்ச்சியுடன் 
கண்ணீர் வழிய மரம் கூறியது.

மரத்தின் தியாகமும் சிறுவனின் சுயநலமும் ஏதோ 
ஒன்றை சுட்டிக் காட்டுவதை உணர்ந்து கொள்ள முடிகிறதா?
அடுத்த பதிவில் காண்போம். 

படங்கள்-நன்றி-கூகிள் 



கைகள் போனால் என்ன ?


கைகள்  போனால் என்ன ?


கைகள்  போனால் என்ன ?
உடலில் இன்னும் உயிர் இருக்கிறதே !
உள்ளத்தில் உறுதி இருக்கிறதே!

தொடர்ந்து என்னை போன்று
மனித  வடிவில் உலவும் மிருகங்களின்
கொடிய செயல்களுக்கு இலக்காகிய
மக்களுக்காகவே பாடுபடுவேன்
என்று புறப்பட்டுள்ள இந்த
பெண் சிங்கத்தின் வாழ்க்கை
துயரம் நிறைந்தது.

அதை தெரிந்துகொண்டால்
இதயத்தில் இரத்தம் கசியும்.
கண்களிர் கண்ணீர் வடியும்.

அவளின் மன உறுதியைக்  காணும்போது
துன்பங்களுக்கு சாவு ஒன்றுதான் வழி
என்று எண்ணும்  கோழைகளுக்கும்
தான் வாழத்தான் பிறந்திருக்கிறோம் என்ற
உணர்வு நிச்சயம் பிறக்கும் 





இணைப்பில் அவள் கடந்து வந்த
பாதையைக் காணுங்கள்.

http://karanthaijayakumar.blogspot.com/2014/02/blog-post_13.html