புதன், 21 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் Brush and pen sketches.

நானும் ஒரு ஓவியன் தான் 
Brush and pen sketches. 

50 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுக்காக இரண்டு இதழ்கள்தான் வெளி வந்தன. ஒன்று கண்ணன், மற்றொன்று அம்புலிமாமா .

கண்ணன் இதழின் அட்டைப்படம் நன்றாக இருக்கும்

அம்புலிமாமாவில் கதைகளும்,
 பல அதிசய தகவல்களும் வெளிவரும்.
பொதுவாக சரித்திரம்,புராணம்,நீதிகதைகள்
அழகிய படங்களுடன் வெளிவரும்.
அதில் உள்ள படங்கள் பொதுவாக
கோட்டு சித்திரங்களாகதான் இருக்கும்.
ஆனால் தெளிவாக பிசிறில்லாமல் இருக்கும்.

அதில் வெளிவந்த படங்களில்
அப்போது brush/,pen ஆகியவற்றை
பயன்படுத்தி வரைந்தேன்

அந்த படம் இதோ
.இந்த படம் வரைந்து
40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும்.  .



செவ்வாய், 20 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (பென்சில் ஓவியங்கள்)

நானும் ஒரு ஓவியன் தான் (பென்சில் ஓவியங்கள்)

குழலூதும் கண்ணனை வரைய வேண்டும்
என்று நெடுநாளைய ஆசை

 ஏற்கெனவே பலமுறை வரைந்திருந்தாலும்
பென்சிலால் வரையவேண்டும் என்ற ஆசையை
 இன்று தீர்த்துக்கொண்டேன்

 படமும் அருமையாக  வந்துள்ளது 
அவன் கருணையே

இன்று காலை 10 மணிக்கு வரைய தொடங்கினேன்.
இரவு 10 மணிக்கு முடித்துவிட்டேன்.

என் வலைப்பதிவுநண்பர்களுக்கு அவன் அருளை
வாரி வாரி வழங்க இதோ வந்துவிட்டான்.






திங்கள், 19 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (கணினி ஓவியங்கள்


நானும் ஒரு ஓவியன் தான் (கணினி ஓவியங்கள்)

கணினியை பயன்படுத்தி வித்தியாசமாக
குருவாயுரப்பன் படத்தை வரைந்தேன்


அதில் நிஜ மலர்கள், சர்ப்பங்கள் ஆகியவற்றை 
இணைத்து வரைந்துள்ளேன்

அந்த படம் இதோ 






நானும் ஒரு ஓவியன் தான் (PENCIL SKETCHES )

நானும் ஒரு ஓவியன் தான் (PENCIL SKETCHES )

எந்த செயல் செய்யவேண்டும் என்றாலும் 
மனமும்,உடலும் அறிவும் 
ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும் 

அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.
நம்மில் பல பேருக்கும் இந்த மூன்றும்
ஒன்று சேர்வதே கிடையாது. 

சோம்பேறித்தனம், புறங்கூறுதல்,
 பிறர் மீது பழி போடுதல், தன்  தவறுகளை 
ஏற்றுக்கொண்டு அதை சரி செய்யாமல் விட்டுவிடுதல்,
ஆர்வமின்மை,மன உறுதியின்மை
,பொறாமை,நேரத்தை வீணடித்தல் 
,முயற்சியின்மை போன்ற தீய பண்புகள்தான்
 நம்  மனதை ஆக்கிரமித்துக்கொண்டு
 நம்மை பாழ்படுத்தி கொண்டிருக்கின்றன 

பெரும்பாலானோர் வாழ்வில் வெற்றி பெறாமல் போவதும் 
ஒரு சிலர் மட்டும் வெற்றி படிக்கட்டில் ஏறுவதும் 
இந்த உலகில் அன்றாடம் காணும் நிகழ்சிகள் 

ஒரு சிலரே வெற்றியின் ரகசியங்களை கண்டு பிடித்து முன்னேறுகிறார்கள்.

நம்மில் அநேகம் பேர் முயற்சியின்றி ரேடியோ மிர்ச்சி கேட்டுவிட்டு புலம்பிகொண்டிருப்பதோடு  நின்றுவிடுகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மன ஒருமைப்பாடு மிக அவசியம். 

அதை பெறுவதற்காக சிலர் யோகாபயில்கிறார்கள் 
சிலர் பல ஆயிரம் ரூபாய்கள் காசு அழுது
பல பயிற்சி வகுப்புகளுக்கு சென்று 
நேரத்தை தொலைக்கிறார்கள். 

அவைகளினால் இவர்களுக்கு.கிடைக்கும்
பலன்  வெகு சொற்பமே. 

மாறாக இந்த பயிற்சியை நடத்துபவர்கள்
பணம் நோகாமல் அள்ளுகிறார்கள். 
என்னை கேட்டால் செலவில்லாமல் மன ஒருமைப்பாட்டை அடைய மிக சுலபமான செலவில்லாத வழி படங்கள் வரைவதுதான். அல்லது ஏதாவது ஒரு கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதுதான் 

துவக்கத்தில் போரடிக்கும்.
 உடல் வணங்காது. மனம் ஈடுபடாது. 
ஆனால்  தொடர்ந்து தினம் முயற்சியும் பயிற்சியும் செய்துவந்தால் மனம் ஒருமைப்படும்.
மனதில் இன்பம் பிறக்கும், 
அமைதி உங்கள் உள்ளத்தில் தானே வந்து அமர்ந்து விடும். 

மயில்கள் என்றால் எனக்கு மிகவும் பிரியம். 
அது அகவுவது கேட்க மிகவும் இன்பமாக இருக்கும்
47 ஆண்டுகளுக்கு முன் நான்  ஆனைமலை பகுதியில்
பணியாற்றியபோது அங்குள்ள மலைகளில்
மயில்கள் சர்வ சாதரணமாக  
சுற்றி திரிவதை பார்த்திருக்கிறேன்.அது தாழ்வாக தன் தோகையை நீட்டிக்கொண்டு பறப்பதே அழகு. 
அது தோகையை  விரித்து ஆடுவதும் ஒரு அழகு.
 பார்த்துக்கொண்டே இருக்கலாம். 

வானம் மேக  மூட்டத்துடன் இருக்கும் போது 
பல மயில்கள் மாற்றி மாற்றி அகவுவது 
கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கும். 
அவைகளின் குரல் மனதில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும். 

நான் 1995 ஆம் ஆண்டு. பென்சிலால் வரைந்த மயிலின் படம் இதோ 



நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)

நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)

எனக்கு விநாயகரை வரைய பிடிக்கும்.
நான் அதிகம் வரைந்த படம் வினாயகராகதான் இருக்கும்.

வீட்டில் உள்ள வெள்ளி படங்களை பார்த்த பின் நாம் ஏன்
மெடல் பாயிலில் வினாயகர்  செய்யகூடாது என்று முயற்சி செய்தேன்.

பொதுவாக கடையில் கிடைக்கும் படங்கள் மெல்லிய தகட்டில் டை மூலம் அழுத்தப்பட்டு பின்புறம் அரக்கால் நிரப்பப்பட்டு ப்ரேம் செய்து விற்கப்படும் 

ஆனால் நான் டை பயன்[படுத்தாமல் கையினாலேயே இந்த படத்தை தயார் செய்துள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது . 

சீன மண்ணில் தமிழ் (Part-2)





சீன மண்ணில் தமிழ் (Part-2)

ஆம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 
சீனாவில் தமிழ் பரவிஇருந்தது 
இந்த செய்தி ஒரு கல்வெட்டு 
மூலம் தெரிய வருகிறது 



 கண்டன் நகரை தவிர தமிழர்கள்
அந்நாளில் மற்ற நாடுகளுக்கும் சென்று
குடியேற்றங்களை அமைத்துள்ளனர் .
திசை ஆயிரத்து ஐந் நூருவர் என அழைக்கப்பட்ட
வணிகர் சங்கங்கள் உலகின்
பல பகுதிகளுக்கு சென்று தமிழர்களின்
பெருமையை பரப்பியுள்ளனர்.

 (Chuan chav),குவான் சாவ என்ற இடத்தில்
ஒரு சிவன் கோயில் இருந்துள்ளது .
அப்போது அங்கு ஆட்சி செய்த அரசன்
 செகசைகான் 'Sekasai Khan'உத்திரவின்படி
 இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது
              
அந்த அரசனின் உடல் நலத்திற்க்காக
இந்த ஆலயம் அமைக்கப்பட்டது .
 'Sekasai Khan' செகாசாய் கான் என்று
கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது
KublaiKhan குப்லாய் கான்
என்று தெரிய வருகிறது
              
அவன் முழு பெயர்
 Kublai Sekcen Khan.
 Sekcen Khan became Sekasai Khan in Tamil.
அந்த சிவன் கோயில் திருகதலீச்வரம்
என்று அழைக்கப்பட்டது இறைவன் திருநாமம்
திருக்கதலீச்வரம் உடைய நாயனார் என்று அழைக்கப்பட்டது

அரசனின் இந்த உத்திரவை செயல்படுதியவரின்
பெயர் தவ சக்ரவர்த்திகள் சம்பந்த பெருமாள் என்பவர்.
சக ஆண்டு சித்ரா பௌர்ணமி 1203 - 1281 AD.
1260 ஆம் ஆண்டு முதல் 1294 வரை
சீனாவை ஆண்ட குப்லாய் கான்
காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது  


குப்லாய் கான் மற்றும் மங்கோலிய
அரசர்களை பற்றி தொடர்ந்து காண்போம்

(இன்னும் வரும்)
நன்றி: VIDYALANKARA 
DR.S.JAYABARATHI

JayBeeமூல பதிவு.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

நானும் ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஓவியன் தான் (Pencil sketches)

2007  ஆண்டு ஒரு மாத இதழின் இணைப்புடன் வெளியான ஒரு வித்தியாசமான விநாயகரின் படம் என்னை கவர்ந்தது

அதை பென்சில் ஓவியமாய் வரைந்தேன்
வரைவதற்கு மிகவும் கடினமாய் இருந்தது.
இருந்தும் வரைந்து முடித்ததும் ஒரு திருப்தி.

மேலே உள்ள அந்த படம்தான் ராசிகளின் 
தோஷம் போக்கியருளும் ராசி கணபதி    

பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் விநாயகரின் 
படத்தில் அமைந்துள்ளது 
இந்த படத்தில் உள்ள விசேஷமான அம்சம்
மற்றும் அயிந்து விநாயகர் உருவங்களும்
இந்த படத்தில் இருப்பதை காணலாம்