செவ்வாய், 16 அக்டோபர், 2012

சிந்திக்க சில வரிகள்


சிந்திக்க சில வரிகள்

                                              













 உழைத்து பிழைப்பவனை
 ஊரே போற்றும்

ஊழலில் கொழுத்து திளைப்பவனை
நாடே தூற்றும்

கற்களை வெட்டி எடுத்து
இறைவனுக்காக காலத்தால்
அழியாத கோயில்களை
கட்டினார்கள் மன்னர்கள் அன்று

கற்களை திருட்டுத்தனமாக
வெட்டிஎடுத்து விற்று
காசு பார்க்கின்றனர்
ஊழல் மன்னர்கள் இன்று

கடவுளை நம்பாமல் கருப்பு
அ ங்கிக்குள்ளும்
காவி கட்டிடத்திர்க்குள்ளும் இருக்கும்
மனிதர்களை மட்டும் நம்புபவனின்
காசும் மன நிம்மதியும்
காணாமல் போய்விடும் விரைவில்

திங்கள், 15 அக்டோபர், 2012

பாரதியின் கனவு கனவாகவே போய்விட்டது?


பாரதியின் கனவு 
கனவாகவே போய்விட்டது?


செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்ப தேன்  வந்து பாயுது காதினிலே
என்று அன்று பாரதி எழுதி வைத்தான்

















அவன் எழுத்தில் எழுதி வைத்தது
மட்டும் நடந்துவிட்டது
சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்டது
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றுவிட்டது

தமிழ் மொழி செம்மொழி
என்று தகுதி பெற்றுவிட்டது

யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டில்
தேனும் பாலும் ஓடப்போவதில்லை
இது சத்தியம்

சாராயமும்,மதுவும், சாக்கடையும்
கண்டிப்பாக ஓடும் ,ஓடிக்கொண்டிருக்கும்

இல்லை தேங்கி கொசுக்களை
உற்பத்தி செய்து கொண்டு
மக்களின் உயிரை
பலி வாங்கிக் கொண்டு இருக்கும்.
இது என்றும் மாறப்போவதில்லை

ஏனென்றால் மக்களுக்கும்
தங்கள் நல வாழ்வை பற்றியோ
சுற்றுப்புற சுகாதார கேடுகளை பற்றியோ
அக்கறை இல்லை

பாரதி அன்று சொன்னான்
தனி ஒருவனுக்கு
உணவில்லையெனில் இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் என்று.
அவன் நாம் வாழும் இந்த உலகை மட்டுமல்ல
அனைத்து உலகையும் சேர்த்துதான் சொன்னான்

முடிவில் அவன் பட்டினியால் வாடி வருந்தி
வறுமையில் மாண்டு போனான்

இந்த உலகத்தில் அவனை தத்தெடுத்து
அவன் வாழும் காலம் வரை அவனை ஆதரிக்க
வெள்ளையனின் கோபத்திற்கு பயந்து
அன்று இருந்த எட்டயபுர
சமஸ்தான மன்னர் மறுத்துவிட்டார்

இப்படிப்பட்ட எத்தனையோ
வள்ளல்களை கொண்ட நாடு தமிழ் நாடு .

இன்றும் அப்படிதான் உள்ளது
நம் நாட்டின் நிலைமை

இல்லாவிடில் இத்தனை பிச்சைக்காரர்கள்
ஒவ்வொரு நகரத்திலும் ஒரு வேளைக்கு
கூட உண்ண உணவின்றி உடையின்றி
இருக்க இடமின்றி திரிவார்களா?

வீடில்லா மக்களுக்கு இரவு நேரத்தில் தங்கி
அவர்கள் பகல் பொழுதில் உழைப்பதர்க்கோ
அல்லது பிழைப்பதர்க்கோ வசதிகள் செய்து தர
அரசுகளும் போதிய வசதிகள் செய்து தரவில்லை
நம் நாடு சுதந்திரம் பெற்று 65ஆண்டுகளாகியும்

நாட்டில் இருக்கும் மக்கள் தொகையை
விட கார்களும், கைபேசிகளும்,
அரசியல்கட்சிகளும்,
தான் இன்று அதிகம் இருக்கின்றன

வாழ்வில் வீழ்ந்தவர்களை தூக்கிவிட
கோடியில் புரளுபவ்ர்களுக்கு மனமில்லை

சுற்றுபுறத்தை மாசுபடுத்தும் தொழிற்சாலை
முதலைகளுக்கு எப்போதும் தங்கள்
போட்ட முதல் மேலேதான் கண்

மற்றவைகளைபற்றியோ அந்த பகுதியில்
வாழும் மக்களை பற்றியோ கவலை இல்லை


சொந்த சோதரர்கள் துன்பத்தில் சாதல்
கண்டும் சிந்தை இரங்காதகூட்டம்
தமிழ் மக்கள் கூட்டம்

கூட்டம் போட்டு மக்களின்
உணர்சிகளை தூண்டி
பிழைப்பு நடத்தும் கூட்டம்?

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி
இடத்தாற்செயின் என்ற வள்ளுவனின்
கூற்றை சரியாக புரிந்துகொள்ளாமல்
போர் தொடுத்து கூற்றுவனுக்கு இரையாகி
அழிந்து போன கூட்டம்.


குள்ளநரி தந்திரத்தை பயன்படுத்தவேண்டிய இடத்தில்
கூச்சல் போட்டு பொறியில் சிக்கி மாளும் கூட்டம்


உலகெங்கும் பரவி இருந்தும் உலக அனுபவம்
பெறாத கூட்டம் தமிழ் கூட்டம்



அறிவிருந்தும் ஆத்திரம் கொள்வதால்
அனுதினமும் துன்பம் அடையும்கூட்டம் உண்மை சுடும் என்ன செய்ய?

உண்மை உண்மைதான்
அதை யாராலும் மாற்றமுடியாது

மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளாதவரை


சனி, 13 அக்டோபர், 2012

தீபாவளி பரிசு மழையும் மின் கட்டணஉயர்வும்-தமிழ்நாடு


தீபாவளி பரிசு மழையும் 
மின் கட்டணஉயர்வும்-தமிழ்நாடு

வரலாறு காணாத வகையில்
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு 
அறிவிக்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டது 

வழக்கம்போல் எதி(ரி) கட்சிகள்
தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்க போய்விட்டன

மக்கள் என்ன செய்வார்கள்? பாவம் 
அவர்களால் என்ன செய்ய முடியும்?

ஓசியில் மிக்ஸி மின்விசிறி  
தொல்லை காட்சிபெட்டி, 
இண்டக்ஷேன் அடுப்பு,
 மாவு இயந்திரம்வாங்கி,
வீட்டில் ஜம்பமாக 
வைத்து கொண்டதற்கு 
மக்கள் தண்டனையாக 
மின் கட்டணத்தை செலுத்தி 
தொலைக்க வேண்டியதுதான்

நடுத்தர மக்கள் தரமற்ற மின்சாரத்தை 
பெற்றுக்கொண்டு தரமற்ற தொலைகாட்சி
பெட்டிகளில் தரக்குறைவான காட்சிகளை 
கண்டு அழுதுகொண்டிருப்பதோடு 
மற்ற அறிவிப்புகளையும் ரசித்து கொண்டு 
மின் கட்டணத்தை அழுது தொலைப்பதில்லை
தவிர வேறு வழியில்லை 

வீட்டில் மின்விசிறி,பிரிஜ் தொலைகாட்சி பெட்டி, ஏசி 
துணியை நனைத்து சாயம் போடும் இயந்திரம், 
மாவு இயந்திரம், அழுக்கு துணியானாலும் அயன் பண்ணி போடு என்ற புதுமொழிக்கிணங்க மின்சார அமுக்கு பெட்டி , தண்ணி மோட்டார் , இண்டக்ஷேன் அடுப்பு, என ஏராளமான கருவிகளை வாங்கி வைத்துள்ளதால் மாதம்500யூனிட்டுக்களுக்கு கண்டிப்பாக ஆகும்.

எதையும் இனி நிறுத்த முடியாத முடியாது. எனவே வயிற்றில் ஈர துணியை போட்டு கொண்டு மின் கட்டணத்தை செலுத்த வேண்டியதுதான் 

பிரணாப் மாமா 12.அரை விழுக்காடு சேவை வரி எல்லாவற்றிலும் போட்டு நம்மையெல்லாம் ஏற்கெனவே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டு ஜனாதிபதி மாளிகைக்குள் போய்புகுந்து கொண்டு விட்டார். இனி அவருக்கு எல்லாமே இலவசம் 

வீட்டு வாடகைக்கிருப்போர் வீட்டு வாடகைக்கும்,
மின்கட்டணத்திற்கும் தங்கள் சம்பாதிப்பதில் 
பாதிக்கு மேல் அழுதுவிட்டு 
மின் விசிறியையும், ஏசிமசினையும் நிறுத்திவிட்டு,
கொசுக்கள் பாடும் கொலைவெறி பாட்டை கேட்டுக்கொண்டே இனி உறங்க பழகி கொள்ளவும், அகப்பட்ட கொசுக்களை போட்டு தள்ளவும் பழகி கொள்ள வேண்டும்.

காலையில் குழாயில் தண்ணீர் வராது. பவுடர் மற்றும் சென்ன்ட்டை அடித்துக்கொண்டு அவரவர் அவரவருக்கு குறிப்பிட்ட திசைகளை நோக்கி ஓடவேண்டும். வியர்வை தண்ணியில் நீராட வேண்டியதை தவிர வேறு வழி கிடையாது 

வாடகைக்கு குடியிருப்போர் இனி நடு தெருவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை

கையாலாகாத அரசியல்வாதிகளை நம்மை மேய்க்க அனுப்பி வைத்தால் அவர்கள் அரண்மனையில் உல்லாசமாக பவனி வருவதும், ஆடம்பரமான கார்களில் சுற்றி வந்து பந்தா காட்டுவதும் மக்களை ஏமாற்றி திரிவதும் வாடிக்கையாகிவிட்டது
.
இதற்க்கு காரணம் மக்கள் தங்கள் பிழைப்பு எப்படியாவது நடந்தால் போதும் என்று ஒவ்வொருவரும் நினைப்பதுதான். இந்த துன்பத்திற்கு காரணம் .

எல்லாவற்றையும் மொத்தமாக தண்டம் அழுதுவிட்டு மகிழ்ச்சியாக கோவணத்தை கட்டி கொண்டு கிளம்பிவிடலாம். தயாராக இருக்கவும்  

மின்சாரத்தை இலவசமாக வாரி இறைக்கும் இந்த அரசியல்வாதிகளால் ஆளப்படும் அரசுகள் வோட்டு வங்கிக்காக அதை என்றும் நிறுத்த போவதில்லை

தொடர்ந்து தரமான மின்சாரத்தை வழங்க எந்நேரமும் எல்லா பிரிவினருக்கும் வழங்க நடவடிக்கை அரசுகள் என்று எடுக்கும் என்று யாருக்கும் தெரியாது

மின்கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் செலுத்த அரசு மக்களுக்கு 
உதவி செய்தால் 500 யூனிட்டுக்களுக்கு மேல் ஆகும் மின்சார அதிர்ச்சியிலிருந்து மக்கள் தப்பிக்க உதவியாய் இருக்கும்

இந்த உதவியையாவது மாண்புமிகு முதல்வர் செய்தால் மக்கள் அவரை வாழ்த்துவார்கள்.

ஆனால் அது நடக்கபோவதில்லை என்று தெளிவாக அறிவிப்பு வெளியாகிவிட்டது. இனி மின்சார துறை செய்யும் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். .அதோடு மக்கள் விரோத போக்கான மத்திய அரசு தன்  பங்குக்கு மக்கள் மீது விதித்துள்ள சேவை வரியும் வசூலிக்கப்படும் என்பதே மக்களுக்கு தீபாவளி பரிசாக கிடைக்கபோவது உறுதி. 

இந்த தீபாவளிக்கு பலகாரம் செய்கிறேன் என்று மின்சாரம், சமையல் எரிவாயு,மற்றும் விலைவாசி விண்ணை எட்டிவிட்ட உணவு பொருட்கள் ஆகியவை கருத்தில் கொண்டு வீட்டில் எதுவும் செய்து காசை வீணாக்காமல். கடையில் பலகாரங்களை வாங்கி தின்று,கொடுத்து இன்புற்று வாழ்வீர்களாக  


தீபாவளிக்கு பட்டாசு வாங்கி காசை கரியாக்காதீர்கள்
ஒரு கொசு அடிக்கும் மின் மட்டையை வாங்கி குழந்தைகளுக்கு கொடுங்கள் அவர்கள் நாள் முழுவதும் மட்டையை வைத்துக்கொண்டு கொசுக்களை வேட்டையாடிகொண்டிருப்பார்கள். பளிச் பளிச் என்று ஒளித்துக்கொண்டு சத்தத்துடன் நாரகாசுற கொசுக்களை வானுலகம் அனுப்பி வைக்கும் காட்சி ரசிக்க நன்றாக இருக்கும்.நமக்கும் கொசு தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். டாக்ட்டர் பில்லும் மிச்சமாகும் 


என் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்    

கற்சிலைக்கும் உயிர் கொடுத்த கலைஞர்கள்


கற்சிலைக்கும் உயிர் கொடுத்த 
கலைஞர்கள் 

தனிமையிலே
இனிமை காண முடியுமா?

ஏன் முடியாது ?

மனிதன் என்பவன்
அகமும் புறமும்
இணைந்த
ஒரு அற்புத பிறவி

வாழ்வின் மகிழ்ச்சியான
தருணங்கள் நம் மனதில்
நினைவுகளாக பதிவாகியுள்ளன
அதை மீண்டும் நினைவுக்கு
கொண்டு வருவதன் மூலம்
அந்த இனிமையை அனுபவிக்கலாம்

விழிகளை மூடிக்கொண்டு உறங்கும்போது
நம் முகத்தில் அந்த மகிழ்வின் சாயலை
விழித்திருப்போர் கண்டு மகிழலாம்.

சிறு குழந்தைகள் உறங்கும்போது பார்த்தால்
சில சமயம் அழகாக சிரிக்கும்
சில நேரங்களின் அது பயந்து
நடுங்கும். அதை காண்பதற்கு
மிக அழகாக இருக்கும்
அதை ரசித்தவர்கள் உள்ளத்தில்
அந்த காட்சிகள் என்றும் பசுமையாக இருக்கும்.

அதைபோல்தான் உள்ளத்தில் உறையும்
இறைவனை கண்டுதரிசிப்பவர்களின்
முகத்தில் அந்த தெய்வீக புன்னகை பளிச்சிடும்.

அது மற்ற உலகியல் காட்சிகளை காணும் போது 
வெளிப்படும் புன்னகையிலிருந்து  வேறுபடும்
அதை கண்டவர்களுக்குதான் அதன் வேறுபாடு தெரியும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
தற்காலத்தில் இருப்பதுபோல்
அத்தகைய காட்சிகளை படம்பிடிக்க
எந்த சாதனங்களும் கிடையாது.
அத்தகைய காட்சிகள் கல்லிலே உயிரோடு
நம் கண்முன் ந்கொண்டு வந்து நிறுத்திய
அந்த கலைஞனை பாராட்ட வார்த்தைகளே கிடையாது.

ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும்
அந்த புன்னைகை மாறாது இன்றும்
மங்காமல் அப்படியே இருப்பது வியக்கத்தக்கது.
அதுபோன்ற இரு சிலைகளின்
முக பாவங்களை கண்டு மகிழுங்கள்
(தாராசுரம்-இராவதேஸ்வரர் கோயில்)



சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்


சிரித்தாலும் கண்ணீர் வரும்
அழுதாலும் கண்ணீர் வரும் 

சிரித்தால் வரும் கண்ணீர் 
உடலிலும் உள்ளத்திலும்

நீரின்றி வாடிய பயிர்களுக்கு 
சக்தியை தரும் மழை போன்றது 
















அழுதால் வெளிவரும் கண்ணீர் 
உள்ளத்தில் தேங்கியுள்ள மாசு
படிந்த நீரை வெளியேற்றுவது போன்றது 
















மாசு நீங்கியவுடன் 
உள்ளம் லேசாகிவிடும் 

இதயம் நலமாய் இயங்கிட  
இரண்டுமே மனிதர்களுக்கு தேவை 


சிரித்து வாழ வேண்டும்
பிறர் நம்மை ஏளனமாய் பார்த்து 
சிரிக்கும் வகையில் வாழக்கூடாது 

பிறர் துன்பப்படுவதை கண்டு 
அவர்களை ஏளனம் செய்து 
அவர்களை மேலும்
துன்பப்படுத்தும் வகையில்  
சிரித்து மகிழ்வது மிருக குணம் 

வெள்ளி, 12 அக்டோபர், 2012

சிந்திக்க சில வரிகள்









சிந்திக்க சில வரிகள் 







யாகாவாராயினும் நா காக்க 
என்றான் வள்ளுவன் 

தன்னை தான் காக்க சினம் காக்க 
என்றான் அதே வள்ளுவன்
பிறிதோரிடத்தில் 

அவன் கூறியதை கருத்தில் 
கொள்ளாது கடவுளை நோக்கி 
அனுதினமும் 
காக்க காக்க என்று 
கரடியாக கத்தினால் மட்டும்
காப்பாற்ற வருவானோ 
அந்த இறைவன்.?  

அன்பே சிவம் என்றார் திருமூலர் 
அவன் படைப்புகளிடம் 
அன்பாய் வாழ்வதை விடுத்து 
இவர்கள் படைத்த சிலைகளிடம்
மட்டும் அன்பு செலுத்தி யாது பயன்?

பசித்தோர்க்கு உணவிடாமல்
உண்ட உணவு செரிக்காது 
எந்நேரமும் மாத்திரைகளை
உணவாக கொள்ளும் 
மாந்தர்களுக்கு விருந்து
படைத்து என்ன பயன்? 

நம் உள்ளத்தில் அழுக்காறு 
ஒடுவதனால்தான் என்னவோ
வெளியுலகில் பாலாறு 
போன்ற ஆறுகள் 
வற்றிவிட்டனவோ?

பிறரை நிந்திப்பதை விடுவோம்
சிந்திப்பதை செயல்படுத்தி
வாழ்வில் வெற்றி காண்போம் 

திருவள்ளுவரின் புலம்பல்


திருவள்ளுவரின் புலம்பல்

வாமனனாய் அவதரித்து
மூவடியால் உலகை அளந்த
ஆழி சூழ் உலகில்
மக்கள் நலமாய் வாழ
ஈரடியாம் திருக்குறளை அளித்தேன்




அதை விரும்பாத மனிதர் சிலர்
எனக்கு கல்லால் சிலை செய்து
ஆழி பேரலையின் நடுவிலே
நிற்க வைத்ததேனோ?









மனிதனுக்கு நலமாக வாழ
நா நயமும் நாணயமும்
இருக்க வேண்டும் என்பதற்கு
பரிகாரமாக என்னை
நாணயத்தில் அச்சிட்டு
கைக்கு கை மாறி நாட்டை
சுற்றி அலையவிட்டு
அலைக்கழிப்பது
தர்மந்தானோ?