வெள்ளி, 28 செப்டம்பர், 2012

அந்த நாள் நினைவில் வந்ததே(பகுதி-14

அந்த நாள் நினைவில் வந்ததே(பகுதி-14)

இன்று வளி மண்டலத்தில் 
ஓசோன் நிறைந்துள்ள பகுதியில் 
ஓட்டை விழுந்துவிட்டது என்று
மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது 
மேலைநாட்டு புளுகு கூட்டம் 
அதற்க்கு யார் காரணம்? 

கடந்த ஒரு நூற்றாண்டிற்குள் 
அவர்கள் இந்தஉலகை  நாசமாக்கிய 
விஷத்தை கக்கிய, அணுகுண்டுகள்,
ரசாயன குண்டுகள்,மற்றும் 
பலவிதமான நச்சு வாயுக்களை வெளிவிடும்,
அவர்கள் நிறுவிய 
தொழிற்சாலைகள்தான் காரணம். 

பல்லாயிரம் ராக்கட்டுகளை வானில் வெடித்து 
விண்வெளியில் செலுத்தி 
அது வெளியிட்ட  புகையும் விஷ வாயுக்களும் 
வான்  வெளியை ஒன்றுமே செய்யவில்லையாம் 
அவர்கள் கடந்த நூறு ஆண்டுகளாக நிறுவிய 
அணுஉலைகளிலிருந்து வெளியிட்ட கதிர்வீசுகளால் 
உலகம் பாதிக்கப்படவில்லையாம் 
அணுஉலைகழிவுகள் பல ஆயிரம் ஆண்டுகள் 
ஆனாலும் அபாயகரமானவை. அதை அவர்கள்.கடலில் 
கொண்டு யாருக்கும் தெரியாமல் கொட்டிகொண்டிருக்கிரார்கள்.
இன்னும் பூமியில் எங்கெல்லாம் புதைத்து வைத்திருக்கிறார்கள்
என்பது யாருக்கும் தெரியாது
இவர்கள் செய்த அக்கிரமங்களால் வான் வெளியில் 
ஓட்டை ஏற்பட்டதே தவிர மற்ற நாடுகளால் அல்ல 
என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.அதை மறைப்பதற்காக 
புதிது புதிதாக கரடி விட்டு கொண்டிருக்கிறார்கள்   

இன்று குண்டு பல்பு எரிவதால் பூமியே சூடாகிவிடுகிறதாம் 
காதில் பூ சுற்றுகிறார்கள்.  ,குளிர்சாதன பெட்டியிலிருந்து 
வாயு வெளியேறி வளி மண்டலத்தில் ஓட்டையாகிறது
என்று கொண்டையில் மேலும் பூ சுற்றுகிறார்கள் 

நாங்கள் மண்பானையில் எந்த சிலவும் இல்லாமல் சில்லென்று
வெட்டிவேர் போட்டு  சுவையான உடலுக்கு கேடு விளைவிக்காத 
தண்ணீரை குடித்து கொண்டிருந்தோம் அந்த காலத்தில்.
நீங்கள் உருவாக்கிய குளிர்சாதன பெட்டிகளை எங்கள் தலையில் கட்டி 
எங்களை அந்த மின்சார குப்பை தொட்டிக்குள் மீண்டும் எழமுடியாமல் தள்ளியதே மேலைநாட்டினர்தான் 

ஆர்டிக் பிரதேசத்தில் பனி உருகுகிறது,உலகம்மூழ்கிவிடும்
என்றெல்லாம் கதை விட்டு கொண்டிருக்கிரார்கள். 

விதவிதமான நச்சு தன்மைகளை கொண்ட கண்டுபிடுப்புகளை நிகழ்த்தி இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்களை மாற்றி  பூவுலகை புண்ணாக்கிய அவர்களின் கண்டுபிடிப்புகள்தான் மனித குலத்தின் துன்பத்திற்கு காரணம். 

பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி உடல்நல்திர்க்கு கேடுவிளைவிக்காமல் உணவு உற்பத்திசெய்து நலமாக வாழ்ந்து வந்த மக்களை நச்சுத்தன்மை கொண்ட ரசாயன உரங்களையும்,பூச்சி கொல்லி மருந்துகளையும் தலையில் கட்டி விவசாயிகளை கடன்காரர்களாக்கியும் , நல்ல நிலங்களை பழாக்கியும் ,மக்களை நிரந்தர நோயாளிகளாக்கிய அந்த கும்பல்தான் இன்று ரசாயன உரங்களை,பூச்சிமருந்துகளை உபயோகிக்காதீர்கள் என்று போதனை செய்கிறது 

இரண்டு உலக போர்களைநடத்தி கோடிகணக்கான மக்களை கொன்றும் இன்னும் உலகம் முழுவதும் வன்முறைகளை  தூண்டிக் கொண்டும் போர்களை நடத்திக்கொண்டும் டன் கணக்கில் வெடிமருந்துகளை வெடித்தும், விஷ வாயுகுண்டுக்ளை செலுத்தியும் இயற்க்கை வளங்களை அழித்து கொண்டிருக்கும் இந்த நாச கார கும்பல்கள் இந்த உலக மக்களுக்கு செய்துள்ள அராஜகம் எழுத்தில் அடங்காது.

ஒவ்வொரு நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டின் பழங்குடிகளை கோடிகணக்கில் அழித்து, உயிரோடு அடிமைபடுத்தி விலங்கிலும் கேவலமாக இரும்பு சங்கிலியால்  கட்டிகொடுமைபடுத்தியதை  இன்றைய தலைமுறைக்கு வேண்டுமானாலும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கொடுமைபடுத்தப்பட்டு  மாண்டு போன அந்த ஆன்மாக்கள் இந்த அயோக்கியர்களை என்றும் மன்னிக்காது. 

நம் நாட்டில் அந்த காலத்தில் ஏது பிளாஸ்டிக்?
பயன்படுத்தியது எல்லாம் இயற்கையான் பொருட்களே
சாப்பிடுவதற்கு வாழை இல்லை 
சாப்பிட்டுவிட்டு போட்டால். மாடுகள் தின்றுவிடும், ஜீரணித்து சாணமாக மாற்றி அருமையான உரமாக மாற்றி நமக்கே தந்துவிடும். பாதா மரத்தின் இலை, , மந்தார இலை ஆல மர இலை போன்றவற்றில்தான் உணவு உண்டோம் .பிளாஸ்டி தட்டுகளிலா உணவு உட்கொண்டோம்?

அனைத்திற்கும் உடலுக்கு நன்மை பயக்கும் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்டங்களை பயன்படுத்தி நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தோம். 

ஆலகால் விஷம்போல் என்றும் அழியாத  பிளாஸ்டிக்கை நம் தலை மீது கட்டி அதை அனைத்து வகையில் பயன்படுத்தும் படுபாதக  நிலைக்கு நம்மைதள்ளியதே மேலை நாட்டினர்கள்தான்
இன்று பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். அதனால் புற்றுநோய் வரும் என்று அறிவுரை வேறு சொல்கிறார்கள். சாத்தான் வேதம் ஒதுவதைபோல 
(இன்னும் வரும்)

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-12)

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-12)

தலை வாசலை தலை குனிந்து 
வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் 
நடை இருக்கும். அங்கும்  
இரண்டு பக்கமும் நீண்ட திண்ணை இருக்கும் 
வழக்கம்போல் இடது பக்கம் இருக்கும் 
திண்ணை அகலம் குறைவாக இருக்கும்.
அதில் ஒரு வாளி நிறைய தண்ணீர் வைத்திருப்பார்கள்.
பக்கத்தில் ஒரு சொம்பும் இருக்கும் 
வீட்டிற்க்குள்  நுழைபவர்கள் தங்கள் பாதங்களை 
சுத்தம் செய்துகொண்ட பின்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும். 

நடைபகுதியும் ஓடுகள் வேயப்பட்ட பகுதியாகும்.
ஆனால் அது உயரமாக இருக்கும். 
உணவு உண்டபின் மதிய வேளையில் வலப்புறம் 
இருக்கும் நீளமான திண்ணையில் படுத்து
ஒரு பகல் தூக்கம் போட்டு எழுந்திருக்கலாம்.

 நடையை ஒட்டி ஒரு பெரிய அறை இருக்கும் 
அதன் மேல்பகுதியில் ஜன்னல்இருக்கும்.
அதற்க்கு மரக்கதவு அமைக்கப்பட்டிருக்கும்
அந்த அறைக்கு வாசல் கூடத்தின் உட்புறம் இருக்கும்.
அந்த அறையில்தான் வைக்கோல் கதிர்கள் அடுக்கிவைக்கப்பட்டு
 நன்றாக வெய்யிலில் காய வைக்கப்பட்ட நெல்மணிகள் 
மேல் வழியாக கொட்டப்பட்டு சேமிக்கப்படும். 
தேவைப்படும்போது நெல்மணிகளை வெளியே எடுத்து 
அரவை இயந்திரங்களுக்கு கொண்டு சென்று அரிசியாக்கி 
 உபயோகப்படுத்துவார்கள்.
தவிடு மாடுகளுக்கு உணவாகும் 
உமியை நெருப்பிலிட்டு கருக்கி,கற்பூரம் போன்றவற்றை 
சேர்த்து பல் துலக்க பயன்படுத்துவார்கள் 

அந்த காலத்தில் வெளியில் வேலைக்கு 
செல்பவர்கள் கிராமங்களில் இல்லை 
எனவே வீட்டு  செலவிற்கு அவ்வப்போது 
நெல்லை விற்று காசாக்கி
அதைக்கொண்டு  வீட்டிற்கு தேவையான
மளிகை சாமான்களை வாங்குவது உண்டு.

அந்த காலத்தில் நான்குவிதமான நெற்பயிர்கள்தான் பயிரிடப்படும்
கிச்சிலி சம்பா,வயக்கொண்டா ,சிறுமணி  கார்
 சம்பா அரிசியை விசேஷங்களுக்கும் மட்டும் பயன்படுத்துவார்கள். 
காரரிசியைதான் தினசரி உணவிற்கு பயன்படுத்துவார்கள் 
சிவப்பாக இருக்கும். இனிப்பாக இருக்கும். 

நடையை தாண்டி உள்ளே சென்றால் பெரிய கூடம் இருக்கும்
அது நான்கு புறமும் தூக்கி உயரமாக கட்டப்பட்டு 
தளம் அமைக்கப்பட்டிருக்கும். நான்கு பக்கமும் ஜன்னல்கள் இருக்கும்.
நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கும்.
தரை நன்றாக காவி கலர் பார்டர் கட்டி மழ  மழவென்று போடப்பட்டிருக்கும்.
வீட்டில் நடக்கும் விசேஷங்கள் எல்லாம் கூடத்தில்தான் நடக்கும்.
கூடம் பெரியதாக இருந்ததால் கல்யாண கூடம் என்று அழைக்கப்பட்டது யாரும் சத்திரம் என்று எங்கும் செல்வதில்லை. 

கூடத்தில் மேலே ஜன்னல் ஓரமாக 
ஒரு ஓரத்தில் குருவிகள் கூடு கட்டி வாழும்.
ஆனந்தமாக க்ரீச் அன்று கூவி கொண்டு 
அவைகள் பறந்து திரிவது
பார்க்க இன்பமாக இருக்கும். 


அதன் பக்கத்திலேயே அதை ஒட்டி உயரம் குறைந்த அளவில்
 மற்றொரு கூடம் இருக்கும். அதில் அலமாரிகள் இருக்கும் .அலமாரிகள் கூட 
 கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருக்கும். 
கூடத்திற்கு நேராக  பின் கட்டு ஒன்று இருக்கும். 
அதில் திறந்தவெளி தாழ்வாரம் இருக்கும். 
 அதைத்தாண்டி புழக்கடைக்கு செல்லும் வழி இருக்கும்.  

வீட்டின் பின்புறம் தோட்டம் இருக்கும். 
வாழைமரம், பழ செடிகள், காய்கறி தோட்டங்கள் எல்லாம் இருக்கும்.
வீட்டிற்கு தேவையான் அனைத்து காய்கறிகளும் வீட்டிலேயே பயிரிடுவார்கள். 
விஷேஷங்களுக்கு மட்டும்தாம் வெளியில் சந்தையிலிருந்து காய்கறிகளை வாங்குவார்கள். 

கூடத்திலிருந்து வலது பக்கம் போனால் சமையல்கட்டு வரும். 
அதற்கிடையில் ஒரு நடை இருக்கும். 
அங்குதான் ஆண்டு முழுவதற்கும் தேவையான 
அனைத்துஉணவுபொருட்களும் சேமித்து வைக்கப்படும். 

அதைதாண்டி உள்ளே சென்றால் ஒரு மூலையில் கிணறு இருக்கும்
கிணற்றுக்கு ஒரு பக்கம் சமைலறை மறுபக்கம் குளியலறை  இருக்கும் 
கிணற்றில் ராட்டினம் பொருத்தப்பட்டிருக்கும் 
தேங்காய் நாரினால் செய்யப்பட்ட  கயிறால் தண்ணீர் சேந்தி எடுத்து கொள்ளலாம். 
தண்ணீரை மொண்டு மொண்டு தலையில் குடம் குடமாக 
 ஊற்றிக்கொண்டு குளிப்பதே ஒரு தனி சுகம் 
குளிர்காலத்தில் கிணற்றுநீர் கதகதப்பாக இருக்கும். 
கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்கும். 

சில கிணற்று நீர் உப்பு கரிக்கும்
சில கிணற்று நீர் சுவையாக இருக்கும். 
அந்த காலத்தில் தெரு குழாய்கள் கிடையாது.
இது போன்ற நல்ல  குடிநீர் கிடைக்கும் கிணற்றிலிருந்து 
பெண்கள் இடுப்பின் குடங்களை சுமந்துகொண்டு 
குடிப்பதற்கு குடிநீர் எடுத்து செல்வார்கள்.அதுதான் பெண்களுக்கு 
ஒருவரை ஒருவர் சந்திக்கும் இடம்  

தரையில் மண் அடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். 
விறகுகளை உபயோகித்துதான் சமையல்  
அடுப்பு பக்கத்திலேயே சாதம் வடிக்க ஒரு கட்டை பொருத்தப்பட்டிருக்கும் 
சாதம் வெந்த உடனேயே அதை துளைகள் உள்ள மூடியால் மூடி 
 வடிகட்டியின் மீது வைத்து விட்டால் சிறிது  நேரத்தில் 
கஞ்சி முழுவதும் வடிந்துவிடும்
சாதம் மல்லிபூ போல் உதிர் உதிராக இருக்கும். 
வடிகட்டிய கஞ்சியில் சிறிது மோர்,மற்றும் 
உப்பு சேர்த்து குடித்தால் சுவையாக இருக்கும். 

அடுப்பு பக்கத்திலேயே நீண்ட மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் அம்மி குழவி பொருத்தப்பட்டிருக்கும்.
 சமையலறையின் ஒரு பகுதியில் மாவு அரைப்பதற்கு உரல் மற்றும் கொழுவியும் இடித்து போடி செய்தல் போன்றவைகளுக்கு இரண்டு பகுதிகளாக உரலும் அமைக்கப்பட்டிருக்கும் கீழ்பகுதி தரையில்
பொருத்தப் பட்டிருக்கும். மேல் பகுதி எடுத்து வைக்கும்படியாக அமைக்கபட்டிருக்கும் .
உரலில்தான் அனைத்து பொருட்களும் இடித்து தூளாக்கப்படும் ,
நெல் குத்தி அரிசியாக்கப்படும். கைகுத்தல் அரிசியில்தான் முழு சத்துக்களும் உள்ளது. 
அதற்க்கு மரத்தால் செய்யப்பட்ட உலக்கை பயன்படுத்தப்படும். 
இவைகளையெல்லாம் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். 
ஒரு பகுதியில் அதன் பக்கத்தில் பாத்திரங்கள்
கழுவ  வசதி இருக்கும் அதிலிருந்து வெளியேறும் நீர் புழக்கடையில் உள்ள செடிகளுக்கு போய் சேரும். 

அதன் பக்கத்தில் குடிநீர் பாத்திரங்களில்நிரப்பி  வைக்கப்பட்டிருக்கும். 

அதன் பக்கத்தில் வித விதமான வருடம் முழுவதும் 
பயன்படுத்தும் வகையில் ஊருகாய் ஜாடிகள் வைக்கப்பட்டிருக்கும்.

 இறைவனின் படங்களை வைத்து வழிபடுவதற்கு மேடை அமைக்கப்பட்டிருக்கும். 
எந்த உணவை உண்பதற்கு முன் அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்த பிறகே உண்ணும் வழக்கம் அந்த காலத்தில் உண்டு.
அதை தவிர கர்ப்பிணிகள்,மற்றும் வயதானவர்கள் நின்று கொண்டு சமையில் செய்ய சிறு மேடை அமைத்து அது குமிட்டி எனப்படும் கரியை பயன்படுத்தும் அமைக்கபட்டிருக்கும். (இன்னும் வரும்)

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-11

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-11)

அந்த காலத்தில் வீடுகளில் 
ஒரு கலை நயம் இருக்கும்
எதை செய்தாலும் 
அதில் ஒரு வேலைப்பாடு இருக்கும்

வீட்டிற்குள் நுழையும்போதே படிக்கட்டுக்கள் இருக்கும்
அந்த படிக்கட்டுக்களின் இரு புற சுவர்களிலும் ஒரு டிசைன் இருக்கும்
பெரும்பாலும் யானையின்  தலையும் தும்பிக்கையும்
 இருப்பதுபோல் வடிவமைத்திருப்பார்கள்
பார்க்க அழகாக இருக்கும் 

வீட்டில் நுழையும்போதே 
இரண்டு பக்கமும் திண்ணைகள்  இருக்கும்
இடது  புறம் இருக்கும் திண்ணை அகலம் குறைவாகவும்,
வலது  புறம் இருக்கும் திண்ணை 
அகலமாகவும் விசாலமாகவும் இருக்கும் 

திண்ணைகளுக்கு மேலே விளக்குகள் வைப்பதற்கு 
இரண்டு முக்கோண வடிவில் அல்லது அழகிய 
வேலைப்பாடுகளுடன் கூடிய பரைகள்  இருக்கும்
அதில் தினமும் அதிகாலையிலும், 
மாலையிலும் விளக்குகள் ஏற்றுவார்கள். .

அதைத்தவிர இடது பக்கத்தில் கொஞ்சம் பெரிய அளவில் பரை இருக்கும். 
அதில் வாசலை பெருக்கி சுத்தம் செய்தவுடன் கோலம் போட 
கோலமாவு கிண்ணம் போன்றவற்றை வைத்திருப்பார்கள். 

திண்ணைகளின் இரண்டு பக்கமும் உட்கார்ந்துகொண்டு 
சாய்ந்து படுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கும் 
அதைத்தவிர சுவற்றின் ஓரம் படுக்கும் போது 
தலையணைக்கு பதிலாக தலை வைத்து படுக்க 
 நீளமாகமேடை அமைக்கப்  பட்டிருக்கும்.
அதில் வசதியாக அமர்ந்து சாய்வு மேடையில் சாய்ந்து கொண்டு
குட்டி தூக்கம் போடலாம். புத்தகம் படிக்கலாம்
,சிறிது ஓய்வெடுக்கலாம் 
இடது பக்கம் உள்ள திண்ணையில் வீட்டிற்கு வருபவர்களை 
உட்காரசொல்லி  அளவளாவலாம். 
தூக்கம் வந்தால் துண்டை விரித்து 
திண்ணையில் சுகமாக தூங்கலாம்.
நன்றாக காற்றுவரும். 
காற்று வராவிட்டாலும் உடல் வேர்க்காது.
அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது.
 பனைஓலை விசிறிகள்தான் 
கொஞ்சம் தண்ணீர் தெளித்து விசிறினால் 
 ஜில்லென்று காற்றுவரும்.
மேலும் பனை ஓலையிலிருந்து 
நல்ல வாசனை வேறு வரும். 
கைகளுக்கும் நல்ல  உடல்பயிற்சி 

வீட்டிற்கு புதியவர்களோ, வழிபோக்கர்களோ வந்தால் 
அந்த திண்ணையில் தங்கி இளைப்பாறலாம்.
வீட்டில் விசேஷம் என்றால் பலபேர் அங்கு 
உட்கார்ந்து  ஜாலியாக பேசிக்கொண்டிருக்கலாம். 

அந்த காலத்தில் திருமணம் போன்ற நாட்களில் 
வீட்டு திண்ணைகளில்தான் விடிய விடிய சீட்டு கச்சேரி நடக்கும்
சீட்டாடுபவர்களை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் 
அவர்களை சுற்றி உட்கார்ந்து கொண்டிருக்கும் 

நாதசுரம் வாசிப்பவர்கள் அவர்களின் 
குழுவுடன் உட்கார்ந்து 
இசை மழை பொழிவார்கள் 
இப்படியாக பலவிதமாக திண்ணைகள் 
அந்த காலத்தில் பயன்பட்டன

வீட்டு வாசலின் முன்புறம் நாட்டு ஓடுகளால் 
செய்யப்பட்ட கூரை வேயப்பட்டிருக்கும் 
அது மர சட்டங்களின் மேல் சதுர ஓடுகள் பரப்பப்பட்டு 
அதன் மேல் ஓடுகள் அழகாக வேயப்பட்டிருக்கும் 
செங்கல் நிறத்தில் அது தனி அழகை கொடுக்கும் 
வெய்யில் காலத்தில் வெயிலின் தாக்கமே இருக்காது.
மழை காலத்தில் தண்ணீர் அதன்மீது விழுந்து 
அழகாக வரிசையாக குழாயிலிருந்து நீர் ஊற்றுவதுபோல் 
பார்க்க ரம்யமாக இருக்கும். மழை நின்றவுடன் 
நீர் சொட்டு சொட்டாக சொட்டிகொண்டிருக்கும்.

ஓடுகளின் இடையே தேள்கள் குடித்தனம் செய்யும்.
பல ஆண்டுகளுக்கு பிறகு உடைந்த ஓடுகளை மாற்றி,
ஓடுகளிடையே தங்கியுள்ள குப்பைகள் பறவைகளின் எச்சங்கள்
பலவிதமான சிறு பூச்சிகள் , மண் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்து 
ஓரத்தில் சுண்ணாம்பால் கட்டை கட்டி விட்டால் 
வீடு பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்கும் (இன்னும் வரும்) . . 

அந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி-௦10)

அந்த  நாள்  நினைவிலே வந்ததே (பகுதி-௦10) 

அந்த காலத்தில் கிராமங்களில் 
உள்ள வீடுகளின் அமைப்பே அலாதியானது
காண்பதற்கு அழகானது 
இன்னும் கூட பல கிராமங்களில் அந்த நாளைய வீடுகள் 
சிலரால் பாது காத்து வைக்கப்பட்டுள்ளன 
மற்றவைகள் பராமரிப்பின்றி அழிந்துபோய்விட்டன 
அந்த கால வீடுகள் இயற்கை தட்ப வெப்ப சூழ்நிலைகளை 
கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் .
ஏழைகள் மண்ணால் சுவர் எழுப்பி 
ஓலைகளால் கூரை வேய்ந்து 
வைக்கோலால் பரப்பி இறுக கட்டி இருப்பார்கள்.

வாழ்வில் மேம்பட்டவர்களின் 
வீடுகள் சுட்ட செங்கலால்,சுண்ணாம்பு 
கலவை கொண்டு பூசி கட்டி இருப்பார்கள். 

மேல்தளங்கள் எல்லாம் தேக்கு மரத்தை குறுக்காக பொருத்தி 
அழகிய செவ்வக வடிவான செங்கல்களை அதன் மீது 
அதை ஒட்டுவதர்க்காகவே தயாரிக்கப்பட்ட 
சுண்ணாம்பு பசையை கொண்டு ஓட்டுவார்கள்.  

வேலை முழுவதும் முடிந்தவுடன் இரண்டு மாதம் தண்ணீரில் 
கடுக்காய் ஊறவைத்த தண்ணீரை கொண்டு தேங்க வைப்பார்கள்
தளம் பாறை போல் உறுதியாகிவிடும் அதற்க்கப்புறம் பல நூறு ஆண்டுகளுக்கு
வீட்டின் உள்ளே கோடைகாலத்தில் அனல் தெரியாது
மழை காலத்தில் ஒழுகாது,குளிர் காலத்தில் குளிறேடுக்காது  
பிறகு பூச்சு வேலை செய்து விடுவார்கள். 
அந்த காலத்தில் சிமெண்ட் உபயோகம்  பொதுவாக கிடையாது 

சுண்ணாம்பு அரைப்பது பெரிய அளவில் என்றால் அதற்கென 
வட்ட வடிவமான தொட்டியில் வட்ட வடிவமான 
பெரிய கல் உருளையை ஒரு நீண்ட மரதூணில் பொருத்தி  மாட்டை
 கட்டி சுண்ணாம்புடன் கடுக்காய்,வெல்லம்  முட்டையின் கரு 
 போன்றவற்றை சேர்த்து மை போல் அரைப்பார்கள். அதைத்தான் 
 வீட்டு வேலைகளனைதிர்க்கும் பயன்படுத்துவார்கள்.
இன்னும் கூட சில கிராமங்களில் அதை பார்க்கலாம் 
 நன்றாக பூச்சு வேலை செய்யப்பட்ட சுவர்கள் மழ  மழவென்று 
பளபளப்பாக பார்ப்பதற்கு இருக்கும். முகம் கூட அதில் பார்க்கலாம். 

ஒரு வீடு என்று எடுத்துகொண்டால் கண்டிப்பாக 
முன் வாசல் மற்றும் பின் வாசல்தான் இருக்கும் 
முன்வாசலை தலைவாசல் என்று அழைப்பார்கள்
அதைதெய்வீகமாக  கருதி அதற்க்கு மதிப்பளிப்பார்கள்
வீட்டு வாசற்படியை சற்று உயரம் குறைவாகத்தான் வைத்திருப்பார்கள். 
வருபவர் சற்று குனிந்து அதற்கு வணக்கம் சொல்வதுபோல் 
குனிந்து தான்  உள்ளே செல்ல வேண்டும்   
அதில் அழகிய வேலைப்பாடுகளும் கஜ லக்ஷ்மியும் செதுக்கப்பட்டிருக்கும்
 அழகிய வேலைப்பாடமைந்த பித்தளையாலான பிடியும் அமைக்கபட்டிருக்கும். 
மற்றொன்று மடி படியேறி வெளியே செல்வதற்கு ஒரு வாசல்தான் இருக்கும். 

குடிசைகள் சிறியதாக இருந்தமையால் 
ஒரு வாசல் மட்டும்தான் இருக்கும்
ஆனால் கண்டிப்பாக வீட்டின் வாசலில் இரு  பக்கமும் 
திண்ணைகள் இல்லாமல் இருக்காது 
குடிசை வீட்டு திண்ணைகளை பசும் சாணி போட்டு நன்றாக 
மெழுகி கோலம் இட்டு வைத்திருப்பார்கள் 
.பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அது போல்தான்
 வீட்டின் முன்னே சாணி தெளித்து பெருக்கி  மெழுகி 
ஒரு கோலத்தை போட்டு வைத்திருப்பார்கள். (இன்னும் வரும்)

வியாழன், 27 செப்டம்பர், 2012

ஓய்வு என்னும் வரம்

ஓய்வு என்னும் வரம்  

இந்த உலகில் இயங்கிகொண்டிருக்கும் 
அனைத்திற்கும் ஓய்வு  தேவை 
ஓய்வு எதற்கு?
அது தொய்வு இல்லாமல் 
தொடர்ந்து இயங்குவதற்கு 
அந்த ஓய்வு தேவை. 

நம்  இதயம் ஓயாமல் இயங்கிகொண்டிருக்கிறது 
நாம் தூங்கும்போதுகூட அது தூங்குவதில்லை 
அது தூங்கிவிட்டால் நம்மை தூக்கி போட்டு 
கொளுத்திவிடுவார்கள் அல்லது புதைத்துவிடுவார்கள். 

ஆனால் உண்மையில் இதயம்கூட அதற்க்கு தேவையான 
ஓய்வை எடுத்துக்கொள்கிறது என்பது  உண்மை. 
எப்படி என்றால் ஒரு துடிப்பிற்கும் அடுத்த துடிப்பிற்கும்
 உள்ள இடைவெளியில் அது ஓய்வை எடுத்து கொள்கிறது
வேகமாக ஓடும் ரயில் என்ஜின் இறக்கத்தில் 
ஓடும்போது என்ஜினை நிறுத்திவிட்டால் 
அதற்க்கு ஓய்வு கிடைக்கும் 

ஒரு மனிதன் தன் உடலில் உயிர் உள்ள வரை 
 இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்
அப்போதுதான்அவம் உடலில் உள்ள அனைத்து
கருவிகளும் ஒழுங்காக செயல்படும்
அனைத்து கருவிகளும் நன்றாக செயல்படும்போது 
அவன் செயல்திறனும் நன்றாக இருக்கும்
உடல்நிலை நன்றாக இருக்கும்போது 
மன நிலையும்  நன்றாக இருக்கும். 

ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் போது பணியிலிருந்து
விடுவிக்கப்படும்வரை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றார் 
பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்  அவரின் மனநிலையும்,
உடல்நிலையும் சோர்வடைந்து விடுகின்றன.

இனி நம் வாழ்வு அவ்வளவுதான் என்று நினைக்க தொடங்குகின்றார். 
ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றி விடுகிறது.

ஆனால் உண்மையில் அவருக்கு உண்மையான சுதந்திரம்
 பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்தான்  கிடைக்கிறது 
என்பதை வசதியாக மறந்துவிடுகின்றார். 
ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனையோ நோக்கங்கள் 
ஆசைகள், தேடல்கள் இருக்கும்,
 பணியில் இருக்கும்போது அதற்கெல்லாம் நேரமிருக்காது.
 அனுமதி கிடைக்காது,கட்டுப்பாடுகள் இருக்கும் 

 பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அந்த நோக்கங்களை
 நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபட்டால் பொழுதும் போகும், 
ஆத்ம திருப்தியும் கிடைக்கும். 
ஏன் சிலருக்கு பெருமையும் புகழும் கூடும். 
எல்லாம் நம் சிந்தனையில்தான்  இருக்கிறது

சிந்தனையில் மேடை கட்டி
செந்தமிழை ஆடவிடலாம்
செயல் வடிவம் கொடுக்கலாம்.
சிலருக்கு அறுபது வயதுக்கு மேல்தான் இளமை திரும்பும். 
அந்த இளமை நன்றாக பழுத்த  சுவையான 
கனி போன்று இனிக்கும் 

தமிழ் பேசும் ஏமாளிகள்

இன்றைய செய்தி 

25 விழுக்காடுகள் வட்டி தருவதாக கூறி 
கேரளாவை சேர்ந்தவர்கள் விரித்த வலையில் 
விழுந்து  லட்சக்கணக்கில் ஏமாந்து தலையில்
கை வைத்து கொண்டு புலம்பும் 
தமிழ் பேசும்  ஏமாளிகள் 
இந்த விஷயத்தில் ஜாதி,இனம், மதம்,படித்தவன்,பாமரன் 
என பேதம் பாராது தமிழ்நாட்டு மக்கள் 
ஒற்றுமையாக  செயல்படுகின்றனர் 

மற்றபடி அவர்களை பாதிக்கும்  எந்த பிரச்சினையை எடுத்தாலும் ஒன்று சேராது  இருந்து  தனி தனியாக தனி ஆவர்த்தனம் வாசிப்பார்கள். 

அவர்களை ஒன்று சேரவும் தமிழக அரசியல் தலைவர்கள் விடமாட்டார்கள். விட்டால் அவர்கள் தொழிலுக்கு பங்கம் வந்துவிடும் 

இந்த வேலையை அவர்கள வெற்றிகரமாக பல ஆண்டுகளாக செய்து வெற்றியும் பெற்றுவிட்டார்கள் இனி தமிழக மக்களை என்றும் ஒரே அணியில் காண்பது குதிரைகொம்புதான்.  

இதுவரை 32000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி 
நிறுவன அதிபர்கள் தலைமறைவு 

ஏற்கெனவே பல ஆயிரம் கோடி ரூபாய் 
ஈமு கோழி மோசடியில் ஏமாந்து 
இன்னும் தலை காய்வதற்குள் 
இன்னும் ஒரு மகா ,மெகா ஹிட் மோசடி. 

இன்னும் தினம் தினம் ஒவ்வொரு மோசடியாக புற்றீசல்கள்போல் 
போல் வெளி வந்து கொண்டிருக்கின்றன
இன்னும் வாராமல் அமுங்கி கிடப்பது எத்தனையோ  யார் அறிவார்?

தமிழர்களே உங்களை கேட்கிறேன்?
உங்களுக்கு நேர்மையாகவே வாழ தெரியாதா?
ஏன் உங்கள் முதலீடுகளை இது போன்ற 
புரட்டர்களின் மாய பேச்சுக்கும்
பொய்யான வாக்குறுதிக்கும்
நம்பி கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறீர்கள்?

நியாயமான வட்டி தரும், அரசு முதலீடுகளிலோ
அல்லது வங்கிகளிலோ ஏன் முதலீடு செய்ய தயங்குகிறீர்கள் 
அல்லது செய்ய மறுக்கிறீர்கள்?

எத்தனை முறை ஏமாந்தாலும் திருந்தவே மாட்டேன் 
என்கிறீர்களே அது ஏன்?

இதற்கெல்லாம் ஒரே பதில்

உங்கள் பேராசை. 
நியாயாமான முதலீட்டை செய்ய  வேண்டுமென்றால் 
நேர்மை வேண்டும் அரசுக்கு செலுத்தவேண்டிய
வருமான வரியை செலுத்த வேண்டும். 
அவர்கள் உங்களிடம் கணக்கு கேட்பார்கள் 
ஏது இவ்வளவு பணம் என்பார்கள்?
அது நேர்மையான வழியில் தேடிய பணம்
என்றால் உங்களால் பதில் சொல்ல முடியும்?
அது வந்த வழி உங்களுத்தான் தெரியுமே?'

அதனால்தான் திருடனுக்கு தேள் கொட்டினால் 
வாயை மூடிக்கொண்டு பொறுத்து கொண்டுதான் ஆகவேண்டும். 
சத்தம் போட்டால் அவன் ஆட்டம் க்ளோஸ்

தமிழ்நாடு மக்களை  மிக சுலபமாக  ஏமாற்றலாம் 
அதற்க்கு பெரிய திறமை தேவையில்லை 
கவர்ச்சியாக இரண்டு நடிகைகளை 
அவர் எதிரில் நிறுத்தினால் போதும் 
உண்டி உடனே நிறைந்துவிடும் 
யார் வேண்டுமானாலும் எதை 
சொல்லி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.

அரசியல்வாதிகள் பொய்யை சொல்லியே 
ஆட்சியை பிடித்து பல தலைமுறைகளுக்கு 
சொத்து சேர்க்கலாம்.
வழக்கு வந்தால் பார்த்துகொள்ளலாம். 
அதற்குள் பலமுறை ஆட்சியை பிடித்து வழக்கை தள்ளி போட்டுகொண்டே  போகலாம்.
மக்கள் மறந்து விடுவார்கள்.
வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவருக்கு வயதாகிவிடும்
இல்லை மாண்டு விடுவார். 

நடிகர்கள் பொய்யான தோற்றத்தை காட்டி,
ஒவ்வொரு படத்திலும் வெவேறு நடிகைகளுடன் 
உருண்டு கட்டி முத்தமிட்டு  நடித்து உங்கள் மனதில் 
கிளர்ச்சியை ஊட்டி அதற்க்கு பரிகாரமாக
 உங்களிடம் கோடிகோடியாய் பணத்தை அள்ளலாம்

நடிகைகள் சதையை காட்டி அவர்கள் பங்குக்கு
 உங்களை குஷிப்படுத்தி 
உங்கள் மடியில் உள்ள காசை பறிக்கலாம்.
அவர்கள் ஜாலியாக செய்வது நடிப்பு 
.உண்மையில் காலியாவது உங்கள் பையில்
 உள்ள காசும் இன்னொன்றும் ...

உலகில் உள்ள அத்தனை 
 மோசடிகளுக்கும் தாய்நாடு தமிழ்நாடு.
அனைத்து மோசடி மன்னர்களுக்கும்  தமிழ்நாடு ஒரு சொர்க்கம். 
பொன் முட்டையிடும் வாத்து. ஏன், வெள்ளி, வைரம், கூட

இங்குதான் அனைத்து விதமான மோசடிகளும் சுலபமாக அரங்கேறுகின்றன.

இம்மாநிலத்தவர்களும்  வெளி மாநிலத்தவர்களும் ,ஏன் வெளிநாட்டினரும் இங்கு வந்து எந்த உரிமமின்றி ,
பயமுமின்றி  தொழில் செய்து
கோடிகணக்கில் சுருட்டி  கொண்டு போகலாம்.
 மக்கள் விழித்து கொள்வதற்குள் 
அவர்கள் தங்கள் கூடாரங்களை காலி செய்து
வேறு ஒரு ஊரில் புதிய கணக்கை 
துவங்கி வெற்றிகரமாக் தொழில் நடத்தி கொழிக்கலாம்

ஏனெனில் தமிழனுக்கு மறதி அதிகம்,
சிந்திக்கும் திறன் மழுங்கி போய்விட்டது 
எதையும் ஏன் என்றும் எப்படி என்றும்
 கேள்வி கேட்க மாட்டான்

தெரு குழாயில் தண்ணீர் வராவிடில் 
அந்த பகுதி அரசியல்வாதிகளை சேர்த்துக்கொண்டு 
போராட்டம் நடத்துவான். தெரு குழாய் உடைந்து 
தண்ணீர் வீணாய் போனால் சும்மா பார்த்துகொண்டு நிற்பான்  மாநகராட்சி ஊழியர் வரட்டும் என்ற
 பரோபகார சிந்தனை உள்ள மற தமிழன்.

அவன் காது வழியாகவும் ,கண் வழியாகவும் 
வரும் செய்திகள் என்றும் அவன் மூளைக்கு
என்றுமே போவதேயில்லை 

வழியில் பேராசை ,சுயநலம் என்னும் 
இரண்டு வழிப்பறி  கொள்ளையர்கள் 
அதை தடுத்தி நிறுத்திவிடுவார்கள்.
அப்புறம் என்ன ?

காண வாருங்கள் .
அடுத்த தொலைகாட்சிக்கு
அலைவரிசைக்கு பேட்டி  கொடுக்க
தயாராகும் ஏமாளிகளின் 
சோகம் கப்பிய முகங்கள்தான்  

Everybody commits mistakes 
But fools alone will repeat them 

அந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -9)


அந்த  நாள்  ஞாபகம்  வந்ததே (பகுதி -9)

அந்த  காலத்தில் குடும்பத்தில் பெண்கள்  கருவுற்றாள் என்றால் 
குடும்பத்தில் அவளை அனைவரும் மகிழ்சியாக வைத்து கொள்ளுவார்கள்.

அதற்காக அந்த பெண்ணும் எந்த வேலை 
செய்யாமல் சோம்பி திரிந்தது கிடையாது 
பிள்ளை பெறும்வரை வீட்டில் அனைத்து 
வேலைகளும் செய்து வந்ததால் 
அதனால் உடல் பிள்ளை பெறுவதற்கு
 சாதகமாக நிலையில் இருந்தது

ஒவ்வொரு பிரசவமும் வீட்டில்தான் நடக்கும் 
அதுவும் சுக பிரசவமாகதான் இருக்கும் 
எப்போதாவது ஒரு சூழ்நிலையில்தான் மரணம் நிகழும் 
ஒரு பெண் பல குழந்தைகளை அந்த காலத்தில் 
அனாயாசமாக ஈன்றெடுத்தாள்
அவைகளை நல்ல பண்புள்ள 
மக்களாக பாசமுடன் வளர்த்தாள்.
ஒருவரை ஒருவர் மட்டம் 
தட்டி பேசுவது கிடையாது 
அனைவரையும் ஒன்றாகத்தான் பார்த்தாள்.  

ஆனால் இன்றைய நிலை என்ன?
பெண் கருவுற்றாள் என்று தெரிந்ததிலிருந்தே 
பரிசோதனைகள் என்ற பெயரில்
பெண்ணுக்கும் கணவனுக்கும் சோதனைகளும் 
வேதனைகளும் ஆரம்பமாகிவிடுகின்றன 
சில ஆயிரங்களிலிருந்து பல லட்சம் வரை
காசு கரைந்து போகின்றது 

இக்கால பெண்கள் கருவுற்றவுடனே மருத்துவர்கள் 
அவள் எந்த வேலையும் செய்யக்கூடாது 
வேலை செய்தால் கரு கலைந்துவிடும் என்று பயமுறுத்தியே
அவர்களை மன நோயாளிகளாக்கி விடுகிறார்கள். 
வேலை எதுவும் செய்யாமையால் உடல் எடை அதிகமாவதும்
நீரிழிவு நோய் தாக்குவதும் ,ரத்த சோகை நோய் பிடிப்பதும் 
அதற்க்கு சிகிச்சை செய்வதும், 
நோய் நிலையை பரிசோதிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
அந்த காலத்தில் பல பிள்ளைகளை பெற்றும் 
முதுமைகாலத்திலும் சுறுசுறுப்பாக இருக்கும்
பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். 
ஆனால் இக்காலத்தில் ஒரு  பிள்ளை பெறுவதற்குள் 
அவர்கள் முதுமைஅடைய துவங்கிவிடுகிறார்கள் 
ஏனெனில் அவர்களை வளர்த்து ஆளாக்குவது பெரும்பாடு 

இக்காலத்தில் பல குடும்பங்களில் பிறக்க போவது 
பெண் குழந்தைகள் என்றால் இரக்கமின்றி கொன்றே விடுகிறார்கள் 

குழந்தைகளை வளர்க்கும் முறையும் இக்காலத்தில் சரியில்லை
அனைவரும் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள் 
அல்லது அவர்களை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்
தங்கள் குழந்தையின் திறமையை கண்டறிந்து அந்த துறையில் அவனை கொண்டு செல்லும் பெற்றோர்கள் மிக குறைவு. 
பிறரோடு ஒப்பிட்டு பார்த்து தன் குழந்தை அவர்களைபோல்
வரவில்லையே என்று கொடுமைபடுத்தும்
பெற்றோர்கள்தான் இன்று அதிகம். 
 
இந்த இரண்டு செயல்களும் பிற்காலத்தில் அவர்களுக்கு 
தீர்க்க முடியாத தலைவலிகலாக உருவெடுக்கின்றன. (இன்னும் வரும்).