சனி, 18 ஆகஸ்ட், 2012

மக்களின் மனம் ஏன் மரத்துப்போய்விட்டது?


மக்களின் மனம் ஏன் மரத்துப்போய்விட்டது?

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததை 
மக்கள் சுற்றி நின்று  அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த  செயல்

மேற்கண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த கண்டன குரல்கள் எழுந்தன

குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று மாதர் சங்க அமைப்புகள் வழக்கம்போல குரல் முழக்கம் எழுப்பி அறிக்கைகள் விட்டு தங்கள் கடமையை முடித்து கொண்டன 

மக்கள் ஏன் இந்த பாதக செயலை தடுக்கவில்லை என்று சிலர் கேள்வி கேட்கின்றனர் 

ஆனால் இதற்க்கு காரணம் ஏன் என்று யாரும் ஆராய்வதில்லை 

மக்களின் மனம் இந்த அளவிற்கு மரத்து போவதற்கு யார் காரணம் ?

பத்திரிக்கை துறையும் தொலைகாட்சி மற்றும் திரைப்பட துறையினரும்தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்ர் 

இன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகள் இல்லாத பத்திரிகைகளோ தொலைகாட்சி தொடர்களோ திரைப்படமோ இல்லை என்பதை அனைவரும் அறிவர்
பெண்களை பெண்களே துன்புறுத்துவதும் கொடுமைபடுத்தப்படுவதும்  சிறுமைப்படுத்தப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகி கிவிட்ட நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை 

தினம் தினம் இந்த காட்சிகளை சிறுவர்முதல் மண்டையை போடபோகும் கிழங்கள் வரை ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு ரசித்து கொண்டிருக்கின்றனர்

அந்த காட்சியை நேரில் பார்க்கும்போது அவர்களுக்குள் எந்த உணர்சிகளையும் ஏற்படுத்தவில்லை என்பதே மக்கள் அவ்வாறு நடந்துகொண்டவிதம்

இனிமேலாவது இதுபோன்ற காட்சிகளில் நடிக்க பெண்கள் .முன்வராமல் இருப்பார்களா?
திரைப்படம்தொலைகாட்சி தொடர்களில், பத்திரிகைகளில் இவைகள் தவிர்க்கப்படுமா? 

குற்றம் புரிபவனை விட குற்றத்தை தூண்டுபவர்களுக்குதான் அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்பதுதான் மரபு 






இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகம்

இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகம்

மக்களும் அரசுகளும்

நாட்டைஆளுபவர்களும் அவர்களின் செயல்பாடுகளும்
பற்றிஅக்கறையில்லா பொதுஜனம்

இலவசங்களுக்கு அலையும்
சாதாரண குடிமகன்கள்

ஒப்பந்தங்களுக்கு  அலையும் தொழிலதிபர்கள்

நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கும்
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள்

அன்றாடம் ஒரு பிரச்சினையை கிளப்பி
அதில் குளிர் காயும் அரசியல் கட்சிகள்

ஊடகங்களும் அவர்கள் மக்களுக்கு செய்திகள்
என்று தரும் புளுகு மூட்டைகளும்

அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்ற அவர்கள் சகட்டு மேனிக்கு அள்ளிவிடும் புள்ளி விவரங்களும்நிறைவேறாத வாக்குறுதிகளும்

நாடே கொள்ளை போனாலும் அதை பற்றி கவலைப்படாது
தங்களின் தினசரி வாழ்வை பற்றி மட்டும்
கவலைப்படும் சராசரி குடிமகன்களும்

உண்டு கொழுத்து ஊதாரித்தனமாக செலவுகள் செய்து
உருப்படாத விஷயங்களை பேசி பொழுதை
கழிக்கும் மேல்தட்டு மக்களும்

உடலை காட்டி கோடி கோடியாய் காசை ஏப்பம் விடும்  கவர்ச்சி கன்னிகளும் அவர்களை சுற்றி சுற்றிவந்து மேலேவிழுந்து புரளும்  வில்லன்களை அடித்து நொறுக்கும் நடிகர்களும் அவர்கள் பின்னே சுற்றி அலையும் மக்கள் கூட்டமும் 

உண்மையும் போலியும்

உண்மையும் போலியும் 

பாரதி தான் கூறியபடி தேச பக்தனாக வாழ்ந்தான்
உடல் மறைந்தது அவன் எண்ணங்கள் இன்னும்
வாழுகின்றன

இன்று அவன் எழுதி வைத்ததை
அனைவரும் படிக்கிறார்கள்
பட்டி மன்றம் போட்டு பேசுகிறார்கள்
ஆனால் அவன் கொள்கைகளை
காலில் போட்டு மிதிக்கிறார்கள்
வாழ்வில் கடைபிடிப்பாரில்லை

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை 
கொளுத்துவோம் என்றான் அவன் 

ஆனால் மாமியாரும் மருமகனும் கேட்ட உடைமைகளை 
தராததால் மருமகளை கொளுத்திவிட்டு சிறை செல்கின்றனர் 

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும்போதும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்றான் பாரதி

இன்று வாலிபர்களின் மனதில் காம தீயை மூட்டி கச்சை  அணிந்து தாறுமாறாக குத்தாட்டம் போட்டு தங்களை தாழ்த்திக்கொண்டு
காசு பார்க்கும் மாதர் பெருகிவிட்டனர்
ஆனால் எய்தவன் இருக்க அம்பை தண்டிக்கிறது மக்கள் கூட்டம் 

வெள்ளையனை எதிர்த்து சுதேசி கப்பலோட்டி சிறை சென்று
செக்கிழுத்து புகழ் படைத்தார் வ வு சிதம்பரனார்

நம் நாட்டு சொத்துக்களையே கொள்ளைஅடித்து மக்களை ஏமாற்றி
சொகுசு கார்களில் வலம் வருகின்றனர் தேச துரோகிகள்

உண்மையாய் வாழ்ந்தவர்கள் நாட்டிற்காக தங்கள் உயிரை துறந்தனர் அன்று
அவர்கள் போல் நடித்துவிட்டு காட்சிக்கு காட்சி பீர் அருந்தி மகிழ்கின்றார் இன்று

பல தலைவர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரம் இன்று பறி போய்கொண்டிருக்கின்றது சுயநலம் கொண்ட அரசியல் தலைவர்களால் 

உண்மையை போலிகள் விழுங்கிகொண்டிருக்கின்றன 
எலிகள் பயிர் செய்த உணவை விழுங்குவதுபோல் 

மதவெறி,ஜாதிவெறி என்னும் நச்சு பாம்புகள் பெருகிவிட்டன 
சாலையில் நடப்போரைஎல்லாம் கடித்து கொல்லுகின்றன 
தடுப்பாரும் இல்லை அவைகளை அடித்து கொல்வாரும் இல்லை

உழைப்பவர்களின் உடைமைகளை
கொள்ளைஅடிக்கும்   கூட்டம் பெருகிவிட்டது
தடுக்க வேண்டியவர்களோ அவர்களின் தலைவர் ஆகிவிட்டனர்
.
பாவம் மக்கள். 

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

உள் நாட்டு அகதிகள்

உள் நாட்டு அகதிகள் 

சர்தார் வல்லபாய் படேல் கண்ட கனவு 
சிதறிக் கொண்டிருக்கிறது 

சிதறிப்போன இந்தியாவை ஒருங்கிணைந்து 
ஒரே நாடாக மாற்றிய அவர் முயற்சி நல்ல பலன்களை தந்தது நம் நாட்டை நல்ல தலைவர்கள்  ஆட்சி செய்த வரையில் 

இன்று நாம் நாட்டை ஊழல் பெருச்சாளிகள் கைப்பற்றிவிட்டனர் 
அவர்கள் நம் நாட்டை கொள்ளையிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் 
மக்களிடையே இணக்கத்தை வளர்க்காமல்பிணக்குகளை  வளர்த்துவிட்டு அவைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டு தங்கள் வயிற்றை நிரப்பிகொள்வதிலேயே குறியாய் இருக்கின்றனர் 

நம் நாடு பல மொழி பேசும் மக்கள்,பல  மதங்களை பின்பற்றும் பல இனங்கள்,பல ஜாதிகள் என இருந்தும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை சிதைக்கும் வகையில் சமூக விரோதிகளும், அரசியல் வியாதிகளும், அரசுகளும், தேச துரோகிகளும் தொடர்ந்து சில ஆண்டுகளாக முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர் 

மைய அரசு மாநிலங்களிடையே உள்ள எந்த பிரச்சினைகளையும் தீர்க்க முயலுவதில்லை. மாறாக வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சியினை கடைபிடித்து மோதல் போக்கையே  ஊக்குவிக்கின்றன 

நம் நாடு முழுவதும் உழைப்பவர்கள் சுரண்டப்படுகின்றனர்.ஊடகங்கள் சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தி மக்களிடையே மோதல்களை ஊக்குவிக்கின்றன .சமீப காலமாக நம் நாட்டை கொள்ளைஅடித்த தேச துரோகிகள்,அரசியல்வாதிகள், நீதியையே விலைக்கு விற்ற நீதிபதிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தண்டிக்கபடுவார்களா அல்லது தப்பிவிடுவார்களா என்பது கேள்விக்குறியே 

வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு அகதிகளாக வருபவர்களுக்கு காட்டும் அக்கரையில் ஒரு சதவிகிதம் கூடஉள்நாட்டில் அகதிகளாய் போய்விட்ட மக்களின் மறுவாழ்விற்கு மைய அரசு கவனம் செலுத்துவதில்லை 

இன்று நம் நாட்டில் காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்ட லட்சகணக்கான இந்துக்கள் மீண்டும் அவர்கள் பிறப்பிடம் செல்ல வழியில்லாமல் அகதிகளாய் அலைந்து கொண்டிருக்கின்றனர்
.
அசாமில் நடந்த கலவரம் இன்னும் ஓயவில்லை அதை காரணமாய் வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வட கிழக்கு மாநில மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து தங்கள் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கில் திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர்.

மாநில அரசுகளும், நம் பாரத பிரதமரும் வழக்கம்போல் அறிக்கை விட்டு கொண்டு காலத்தை கழித்து கொண்டிருக்கின்றன

பங்களா தேசம் அகதிகள் பிரச்சினைக்கு அளித்த முக்கியத்துவத்தை சிறிலங்காவில் லட்சகணக்கான தமிழ்மக்கள் கொன்று குவித்த நிகழ்விற்கு மைய அரசு காட்டவில்லை 

ஆனால் மைய அரசு ஒரு வட இந்தியன் வெளி நாட்டில் தாக்கபட்டால் மட்டும் அதை கண்டிக்க முழு மூச்சோடு செயல்படுவது அது தமிழர்கள் மீது வைத்துள்ள மாற்றந்தாய் மனப்பான்மையையே தெள்ள தெளிவாக காட்டுகிறது இதற்கு காரணம் தமிழக மக்களிடையே, அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தோ ஒற்றுமையோ  கிடையாது என்பதுதான் உண்மை. 

நாடு முழுவதும் தீவிரவாத குழுக்களுக்கும் அரசு காவல் துறைக்கும் மோதல்கள் அதிகமாகிகொண்டிருக்கின்றன.

இந்த நிலை நீடித்தால் பாடுபட்டு நாம் அடைந்த சுதந்திரம் நம்மிடமிருந்து
பறிபோகும் நாள் வெகு தூரத்தில் இல்லை .அதற்குள் ஆட்சியாளர்களும் மக்களும் விழித்து கொண்டால் நல்லது   

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

உண்மையான தமிழன் யார்?


உண்மையான தமிழன் யார்?

உண்மையான தமிழன் யார்?

மலையாளி என்றால் அவன் எங்கிருந்தாலும் ,எந்த பிரிவை சார்ந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் அவன் மலையாளியாக்தான் இருக்கிறான்.அப்படித்தான் தெலுங்கனும் மற்ற மொழி பேசுபவர்களும் 

ஆனால் தமிழனோ ஈழ தமிழன்,மலேசிய தமிழன், கேரளா தமிழன் ,என இருக்கும் இடத்தின் மற்றும் நாட்டின் பெயர்  இணைத்துதான் அறியபடுகிறான்

இதில் போதாகுறைக்கு உயர்சாதி,தாழ்த்தப்பட்டவர்கள்,மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர்,ஆத்திகர்கள்,நாத்திகர்கள், எந்த பிரிவிலும் சேராதவர்கள் என ஒருவரைஒருவர் எதிரியாக பார்க்கும் மனப்பான்மை வேறு

போதாகுறைக்கு தமிழனில் பல மொழி கலப்பு,இன கலப்பு, ஜாதி கலப்பு,அரசியல்கலப்பு,மத கலப்பு என எண்ணிலடங்கா பிரிவுகள்

ஒரு தலைவன் சொல்லுவதை மற்ற தலைவன் ஏற்றுகொள்ளுவதில்லை
அதைபோல் அவர்களை பின்பற்றும் ஆதரவாளர்களும் அப்படியே

தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டனைவர்களும் 
தமிழர்களாக அங்கிகரிக்கும் மனப்பான்மை வளரவேண்டும்
எத்தனை உள் வேறுபாடுகள் இருந்தாலும் அத்தனையும் மறந்துவிட்டு
பொதுநலனுக்காக தமிழர்கள் இணைந்தால்மட்டுமே தமிழனுக்கு எதிர்காலம் உண்டு

தமிழன் தங்களுக்குள்ளேயே ,தங்களுக்குதானே
குழி வெட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும்
நமக்குள் கருத்து வேற்றுமை இருக்கலாம்

ஆனால் அது நம்மையே கருவறுக்கும்
அருவறுக்கும் நிலமைக்கு செல்வதை
இனியாவது தவிக்க வேண்டும்

நம்மை நாமே எத்தனை  நூற்றாண்டுகள்
தாழ்வாக விமரிசித்து பிறரின்
கேலிபோருளாக ஆகவேண்டும்
.
குறையில்லாத மனிதனில்லை
குறை காண்போரிடமும் குறைகள் உண்டு
கடந்தகால கறை படிந்த வாழ்க்கையுண்டு
குறைகள் நிறைந்த இவ்வுலகில்நிறைகளை
காண முயற்சிப்போம் 

உண்மைகளை உணர முற்படாது
உணர்ச்சி வசப்பட்டு தமிழர்களையும் 
தமிழ்நாட்டையும் சிதைத்தது
போதும் .போதும்

நிகழ்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் கடந்த கால
கசப்பான் நிகழ்வுகளை மறப்பதுதான் அனைவருக்கும் நல்லது
அதை விடுத்து அதையே தோண்டி துருவி பகைமையை
வளர்ப்போர் தமிழ் மக்களுக்கு  செய்யும் தொண்டாகாது
அது அவர்கள் தங்களுக்கு  தானே வைத்துகொள்ளும் குண்டு


இந்த அடிப்படையில் விட்டுகொடுத்து அனைத்து தமிழர்களும்
தங்கள் மனதை விரிவாக்கி இணைந்தால்தான் தமிழர்கள் உலக அரங்கில் பாதுகாப்பாக வாழ முடியும்

பூமியில் இனி எவர்க்கும் அடிமை செய்வோம் என்றன் பாரதி 
ஆனால் தமிழர்கள் யாருக்காகவாவது அல்லது போதைக்கு அடிமைகளாக இருப்பதில்தான் பெருமை கொள்கிறார்கள் 
தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிகொல்பவர்கள் இதை கருத்தில் கொள்ளாத வரையில் உலகில் எங்காவது தமிழ் ஆடுகள் பாதிக்கப்படும்போது மற்ற தமிழ் ஆடுகள் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கதான் செய்யும் 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
என்ற பாரதியின் வாக்கு நமக்கு உலக அரங்கில் செல்வாக்கை தேடி தரும் 

வதந்திகளும் வன்முறைகளும்

வதந்திகளும் வன்முறைகளும்

வதந்தி மனித குலத்தை பீடித்து இவ்வுலகில் நிரந்தரமாக தங்கிவிட்ட 
ஆட்கொல்லி நோய் 

அது செல்லும் இடமெல்லாம் மக்கள் மனதில் பீதியை தோற்றுவித்து 
மக்களை வீதியில் போராட வைக்கிறது

வதந்திகள் பெரும்பாலும்  மதம் சார்ந்தும் மக்கள் இனம் சார்ந்தும் 
உள்ளன .மற்ற மதத்தினரால் அல்லது இனத்தினரால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற வகையில் வதந்திகள் உருவாக்கப்பட்டு விஷமிகளால் 
பரப்பபடுகின்றன .அரசும் காவல் துறையும் மெத்தனமாக இருப்பதால் பாதிக்கப்படும் மக்கள் பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகிறார்கள்.

பன்னெடும் காலம் பல லட்சம் மக்கள்  பாடுபட்டு உருவாக்கிய சொத்துக்களையும் உறவுகளையும் ஒரு நொடி பொழுதில் அழித்து நாசமாகிவிடுகிறது 

ஒரு நொடியில் பல்லாண்டுகளாக நண்பர்களாக ,மத நல்லிணக்கம் கொண்டவர்களாக இருந்த  நண்பர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டு மாண்டு போகின்றனர் 

இந்த நோய்க்கு படித்தவரும், பாமரரும் ஏன் நாடுகளுமே பலியாகிவிடுகின்றன

இந்த அவ நம்பிக்கைகள் மக்களை அவர்கள் தோன்றி வாழ்ந்துவளர்ந்த நாட்டிலேயே அகதிகள் ஆக்கிவிடுகின்றன 

அகதிகளாக ஆனவர்கள் மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு செல்லும் சூழ்நிலைகள் ஏற்படுவதே கிடையாது 
அவர்கள் வாழ்க்கை சாலை ஓரங்களிலும் மற்ற மனிதர்களின் தொடர்ந்த அச்சுறுத்தல்களினாலும்  எத்தகைய பாதுகாப்புமின்றி அவர்களின் துன்பங்கள் தொடர்ந்து அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது 

உலகம் முழுவதும் இந்த அவல நிலை நீடித்துக்கொண்டே இருக்கிறது
எந்த அரசுகளும் அவர்களை பற்றி கவலைப்படுவதில்லை

வதந்திகளை பரப்பும் கொடியவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதுதான் பொருத்தம் ஆனால் அவர்களுக்கும் ஆதரவு தர ஒரு கூட்டம் காத்துகொண்டு இருக்கிறது. இவர்கள் வதந்திகளை பரப்புபவர்களை விட கொடியவர்கள் என்றுதான் கருதவேண்டும். 

புதன், 15 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவின் ஊதாரித்தனம்

அமெரிக்காவின் ஊதாரித்தனம்?

அமேரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கோளை ஆராய விண்கலங்களை அனுப்பி வைத்து அங்கு அது இறங்கிவிட்டதாக பொய் மூட்டைகளை அவிழ்த்து  விட்டுள்ளது இந்த ஊதாரிதனத்தினால் உலக மக்களுக்கு என்ன பயன்?

ஏற்கெனவே ஆளில்லா விமானங்களை கொண்டு உலகம் முழுவதும் யாரை வேண்டுமானாலும் தன்னால் தாக்கி அழிக்க முடியும் என்று நிரூபித்துவிட்டது. 
தானே அராஜகமாக நடந்துகொண்டு தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டி அழிக்கின்றது. 
.
இன்னும் இந்த உலகிலேயே அறியப்படாத விஷயங்கள் உள்ளன
அவைகளை கண்டுபிடித்து மனித குலத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தன்னுடைய சுய நலத்திற்க்காக வான்  வெளியை பயன்படுத்தி கொண்டிருக்கிறது
  
அமெரிக்க ஜானதிபதி செல்வாக்கு சரிந்து விட்ட நிலையில் அதை தூக்கி நிறுத்த இந்த டிராமா நடத்தப்பட்டுள்ளது 

தன்னிடம் உள்ள அபரிமிதமான செல்வத்தையும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் உலகில் உள்ள நூற்றுகணக்கான வறுமையில் சிக்கி தவிக்கும் நாடுகளுக்கும் அதன் மக்கள் முன்னேற்றத்திற்கும் உதவும் மனம் அதன் ஆட்சியாளர்களுக்கு இல்லை 

மாறாக ஆளில்லா விமானங்களை கொண்டு பிற நாடுகளுக்கும் புகுந்து மக்களை கொல்வது அதற்க்கு வாடிக்கையாகிவிட்டது
.
உலகம் முழுவதும் தீவிரவாதிகளை  ஊக்குவித்து அவர்களுக்காக ஆயுதங்கள் வழங்குவதும் பிறகு அவர்களை ஒழிக்க அந்தந்த நாடுகளுக்கு உதவுவதுபோல் அந்த நாட்டில் நுழைந்து அந்நாட்டை அதன் கட்டுபாட்டில் கொண்டுவருவதும் அமரிக்க அரசின் கொள்கையாகிவிட்டது
.
உலக நாடுகளில் வன்முறை கலாசாரத்தை பெருக்கி ஒவ்வொரு நாடுகளிலும் அமைதியின்மையை உண்டாக்கி பிறகு உதவுவதுபோல் அங்கு வந்து ஜனநாயகம் நிறுவுவதாக ஆசை காட்டி அந்நாட்டு மக்களை அடிமைபடுத்து வதிலும் அங்குள்ள சொத்துக்களை தன்  பன்னாட்டு  நிறுவனங்களின் மூலம் கொள்ளையடிப்பதும் அதற்க்கு வாடிக்கையாகிவிட்டது
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கொலைக்கருவிகளை கண்டுபிடித்து ஒவ்வொரு நாட்டிலும் வன்முறையை தூண்டி மக்களை கொலை செய்து கொண்டிருக்கிறது
அயிக்கிய நாடுகள் சபையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு அதை எதிர்க்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்து அந்நாட்டையும் மக்களையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறது. 

இந்த நிலைமையை உலக மக்கள் புரிந்துகொள்ளாமல் அமரிக்கா ஜனநாயக நாடு என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை யார் யாரை வேண்டுமானாலும் துப்பாக்கியால் சுட்டு கொல்லலாம் என்பதை அங்கு நடைபெறும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன

அவர்கள் போடும் பிச்சை காசிற்காக இந்திய மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு அடிமை சேவகம் செய்ய லட்சகணக்கான இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் முண்டியடித்து பறக்கின்றனர்

சொரணை உள்ள அமரிக்கர்கள் சிலர் அதை எதிர்த்தால் உடனே புலம்பி  
தவிக்கின்றனர்.நிலைமை கைமீறும போது அந்த அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தால் கூப்பாடு போடுகின்றனர்

அனைத்து நாடுகளும் இந்த உண்மையை புரிந்துகொண்டு ஒன்றுபட்டு இந்த அடிமைதனத்திலிருந்து நீங்க முயற்சி செய்ய வேண்டும்