வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

சிந்திக்க சில செய்திகள்..

சிந்திக்க சில செய்திகள்..

சிந்திக்க சில செய்திகள்..

ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும்
துன்பம் என்கிறார் திருமூலர்.

ஓசையின்றி உயிர் போகும் முன்னே
ஆசைகளை விட்டொழிக்க பழகு.

கோமா நிலைக்கு செல்லும் முன்னரே
ராம நாமத்தை சொல்லி பழகு.

அழகு என்பது வடிவிலோ அல்லது
நிறத்திலோ இல்லை
அது காண்பவன் இதயத்தில் இருக்கிறது

உண்மை பேச மனம் தேவையில்லை
பொய் பேசத்தான் மனம் வேண்டும்.

உண்மை உடனே கொல்லும்
பொய் நாட்பட்ட தீராத நோய்களை
அளித்து வருத்தி  கொல்லும் .

உழைப்பு மட்டும் என்றும் உயர்வு தராது.
எந்த நோக்கத்திற்காக என்பதை பொறுத்துதான்
உயர்வையோ தாழ்வையோ தரும்.

கொடுத்துக்கொண்டே இருப்பவனிடம்
செல்வம் தங்குவதில்லை.

கொடுக்காத கருமியிடம்
செல்வம் தங்கும்

ஆனால் அந்த செல்வத்தை அனுபவிக்க
அவன் தங்குவதில்லை.

ஈரம் உள்ள  மண்ணில்தான்
பசுமையான புற்கள் முளைக்கும்

இதயத்தில் அன்பு  உள்ளவனின்
வாயிலிருந்துதான் அன்பான
சொற்கள் வெளிவரும். 

மண்ணிலிருந்து வந்த நாம் ...

மண்ணிலிருந்து வந்த நாம் ...


மண்ணிலிருந்து வந்த நாம்
நம்மை முளைக்க வைத்த
மன்னவனை அறியாது போனால்
மீண்டும் மண்ணுக்குள்தான் போகவேண்டும்.

எம்மதமும் சம்மதம் என்று மேடையிலே
முழங்குவது இவ்வுலக வழக்கு.

ஆனால் பாடையிலே போகும்வரை
தன் மதமே உயர்ந்ததென்று தன்
பாதையில் வருவோரையெல்லாம்
அழித்தொழிப்பதே பலரின் இலக்கு

எத்தனை சாத்திரங்கள் படித்தாலும்
உடல் என்னும் பாத்திரத்தில் உள்ள
குடலை நிரப்ப யாரிடமாவது
பிச்சை எடுத்துதான் ஆகவேண்டும்
அல்லது  பிடுங்கித்தான் தின்ன வேண்டும்.

எல்லாவற்றையும் அவன் இலவசமாக
கொடுக்கையில் இவன் எல்லாம்
அனைத்தையும் தானதாக்கிக் கொள்கிறான்.

எதிர்த்தவரை கொல்கின்றான் .காலன்
அவனை எந்நேரமும் கொல்ல காத்திருக்கின்றான்
என்பதை அறியாமல்.

ஒரு உயிர் மற்றொரு உயிருக்கு
இரையாவது இந்த உலகத்தின் விதி.
சில கண் முன்னே நடக்கும்
பல கண்களுக்கு புலப்படாமல் நடக்கும்

இந்த உண்மையை அறியாது
பிதற்றி திரிபவன் எண்ணையில்லாது
எரிந்து கண நேரமே ஒளி சிந்தி
அழியும் சாம்பலாகும்
விளக்கு திரி   போன்றவன்.

புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு
கோளை விண்ணில் செலுத்த
விண்கலம் தேவை

உலக ஆசைகளிலிருந்து விடுபட்டு
மனம் அமைதி  அடைய
உடல் என்னும் விண்கலம் தேவை.

கோளை  செலுத்திய பின்
விண்கலம் புவி மீது விழுந்துவிடும்.

அது போல் உலக  ஆசைகளிலிருந்து
விடுபட்டபின் இந்த உடலும்
மண்ணில் விழுந்து விடும்

தாவரங்கள் விதைகளை உற்பத்தி செய்யும் வரை 
மீண்டும் மீண்டும் முளைக்கத்தான் செய்யும்.

ஆசைகள் இருக்கும் வரை உயிர்கள்
மீண்டும் பிறக்கத்தான் செய்யும்.

இன்ப துன்பங்களை
அனுபவிக்கத்தான் செய்யும்.

அண்டத்தை படைத்த ஈசனும்
பல்லுயிர்களை படைத்து அவைகளின்
இதயத்தில் உறையும்  ஈசனும் ஒன்றே.

அவனை அறிந்த பின்தான்
அனைத்தும் ஒன்றே என்று அறிய இயலும் .

அதை விடுத்து அவன் படைப்புகளை
கூறாய்வு செய்து கொண்டிருந்தால்
கூற்றுவனுக்கு மீண்டும் மீண்டும்
இரையாவதை தவிர்க்க இயலாது.

விண்ணிலே ஒளி வீசும் விண் மீன்களுக்கும்
புவியில் வாசம் செய்யும் பல்லுயிர்க்கும்
ஆன்மா ஒன்றே என்பதை உணராதுபோனால்
உள்ளத்தில் அன்பென்னும் பயிர் விளையாது.

உள்ளத்தில் அன்பிருந்தால்
சொல்லிலும் செயலிலும் இன்பம் பரவும்
விருப்பு வெறுப்பென்னும் அம்புகள்
வெளிப்பட்டால் வேதனைகள்தான் மிஞ்சும்.

  

இசையும் நானும் (322)-திரைப்படம்-காத்திருந்த கண்கள் -1962 பாடல்::காற்று வந்தால் தலை சாயும்



இசையும் நானும் (322)-திரைப்படம்-காத்திருந்த கண்கள்      -1962

பாடல்::காற்று வந்தால் தலை சாயும்

 

MOUTHORGAN VEDIO(322)



பாடகி : பி.சுசீலா 
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண் : { காற்று வந்தால் தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால் தலை சாயும்
பெண் : நாணம் } (2)
ஆண் : ஆற்றினிலே கரைபுரளும்
பெண் : வெள்ளம்
ஆண் : ஆசையிலே கரை புரளும்
பெண் : உள்ளம்
பெண் : ஆடை தொட்டு விளையாடும்
ஆண் : தென்றல்
பெண் : ஆசை தொட்டு விளையாடும்
ஆண் : கண்கள்
பெண் : ஒருவர் மட்டும் படிப்பதுதான்
ஆண் : வேதம்
பெண் : இருவராக படிக்க சொல்லும்
ஆண் : காதல்
ஆண் : காற்று வந்தால் தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால் தலை சாயும்
பெண் : நாணம்
பெண் : { மழை வருமுன் வானை மூடும்
ஆண் : மேகம்
பெண் : திருமணத்துக்கு முன் மனதை மூடும்
ஆண் : மோகம் } (2)
பெண் : ஓடி வரும் நாடி வரும் உறவு
கொண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்
ஆண் : மானும்
பெண் : பாடி வரும் பருவ முகம் 
பக்கம் வந்து நின்றவுடன்
பாசத்தோடு சேர்ந்து கொள்வேன்
ஆண் : நானும்
பெண் : நானும்
ஆண் : நானும்
ஆண் : காற்று வந்தால் தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால் தலை சாயும்
பெண் : நாணம்
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : { அஞ்சி அஞ்சி நடந்து வரும்
பெண் : அன்னம்
ஆண் : அச்சத்திலே சிவந்து விடும்
பெண் : கன்னம் } (2)
ஆண் : கொஞ்சிவரும் வஞ்சி முகம் கோபுரத்து
கலசமென அந்தி வெயில் நேரத்திலே
பெண் : மின்னும்
ஆண் : மின்னி வரும் நேரத்திலே மேனி
கொண்ட பருவத்திலே முன்னிருந்தால் தோற்று விடும்
பெண் : பொன்னும்
ஆண் : உள்ளம்
பெண் : துள்ளும்
ஆண் : காற்று வந்தால் தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால் தலை சாயும்
பெண் : நாணம்
ஆண் & பெண் : ஆஹா
ஹாஹா ஆஆ ஆஹா
ஹாஹா ஆஆ ஹா

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (321)-(முருகன் பாடல்கள்) பாடல்::ஓராறு முகமும் ஈராறு கரமும்


இசையும் நானும் (321)-(முருகன் பாடல்கள்) பாடல்::ஓராறு முகமும் ஈராறு கரமும்

MOUTHORGAN VEDIO(321) 

 பாடல் வரிகள்-வாலி 
பாடியவர்-- டி .எம் .சவுந்தரராஜன் 



ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் - ஐயன்

(ஓராறு)

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

(ஓராறு)

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த - அந்த

(ஓராறு)

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த
(ஓராறு)

Image courtesy-google-images 







வியாழன், 9 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (320)-(முருகன் பாடல்கள்) பாடல்::பன்னிரு விழிகளிலே

இசையும் நானும் (320)-(முருகன் பாடல்கள்) பாடல்::பன்னிரு விழிகளிலே 

MOUTHORGAN VEDIO(320) 

 பாடல் வரிகள்-கந்தஸ்வாமி 
பாடியவர்-- டாக்டர் .சீர்காழி கோவிந்தராஜன் 

பன்னிரு விழிகளிலே ...
பன்னிரு விழிகளிலே 
பரிவுடன் ஒரு விழியால் 
என்னை நீ பார்த்தாலும்  போதும் 
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும் .ஷண்முகா (பன்னிரு)

உன்னிரு பதம் நினைந்து 
அன்புடன் தினம் பணிந்து .முருகா..முருகா.. (உன்னிரு)
திண்ணமாய் போற்றும் என்பால் 
நின் திருவுளம் கனிந்து (பன்னிரு)

பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா 
பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா 
வண்ண மயில் ஏறும் வடிவேல் அழகா 
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா 

வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா (பன்னிரு)



செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (319)-(முருகன் பாடல்கள்) பாடல்::வேலுண்டு வினை நீக்க..

இசையும் நானும் (319)-(முருகன் பாடல்கள்)

பாடல்::வேலுண்டு வினை நீக்க..


MOUTHORGAN VEDIO(319)

இசை- டி எம் .எஸ். 


பாடல் வரிகள்-கோவை கூத்தன் 

பாடியவர்-- டி .எம் சவுந்தரராஜன் 

வேலுண்டு வினை நீக்க 
மயிலுண்டு எனைக்  காக்க 
பாரினில் பயமேது...

பழனிமலை முருகா 
வடிவேலுண்டு வினை நீக்க 
மயிலுண்டு எனைக்  காக்க 
பாரினில் பயமேது...

பாலுண்டு தேனுண்டு 
பழமான உனைக் கண்டு 
பதி ஆறும் படைவீடும் பணிவார்க்கு 
அருள் தந்த.(வேலுண்டு)

எண் உண்டு எழுத்துண்டு 
இனிய முத்தமிழ் உண்டு 
கண் உண்டு கருத்துண்டு 
கவிதைத் திறம்  கொண்ட 

பண்  உண்டு இசைப்பாட 
பரவசமாய்க் கேட்டு 
அன்பெனும் அருள் காட்டும் 
அப்பா நின் கரம் கொண்ட (வேலுண்டு )





புதன், 1 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை -1962 பாடல்::பூஜைக்குவந்த மலரே வா

இசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை     -1962

பாடல்::பூஜைக்குவந்த மலரே வா 

MOUTHORGAN VEDIO(318)

இசை- எம் .எஸ். விஸ்வநாதன் 

பாடல் வரிகள்-கண்ணதாசன்
பாடியவர்கள்- பி.பி.ஸ்ரீனிவாஸ் -எஸ். ஜானகி. 

56 ஆண்டுகளானாலும் வாடாது

மணம்  வீசும் வாடா மலர் 


பூஜைக்கு வந்த மலரே வா 
பூமிக்கு வந்த நிலவே வா 
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த 
பொன் வண்ணமேனி சிலையே வா 

மலர் கொள்ள வந்த தலைவா வா 
மனம் கொள்ள வந்த இறைவா வா 
கையோடு  கொண்டு தோளோடு சேர்த்து 
கண் மூட வந்த கலையே வா 

கோடைகாலத்தின்நிழலே நிழலே 
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா 
ஆடை கட்டிய ரதமே  ரதமே  
அருகில் அருகில் நான் வரவா 

அருகில் நின்றது உருகி நின்றது 
உறவு தந்தது முதல் இரவு 
இருவர் காணவும் ஒருவர் ஆகவும் 
இரவில் வந்தது பெண்ணிலவு (மலர்)

செக்கச் சிவந்த இதழோ  இதழோ 
பவளம் பவளம் செம்பவளம் 
தேனில் ஊறிய மொழியில் மொழியில் 
மலரும் மலரும் பூ மலரும் 

எண்ணி வந்தது கண்ணில் நின்றது 
என்னை வென்றது உன் முகமே 
இன்ப பூமியில் அன்பு மேடையில் 
என்றும் காதலர் காவியமே(மலர்)(பூஜைக்கு)