வியாழன், 12 ஜனவரி, 2017

இசையும் நானும் (156)Film பக்த பிரகலாதா-நாராயண மந்த்ரம் -அதுவே நாளும் பேரின்பம்

இசையும் நானும் (156)Film பக்த பிரகலாதா-நாராயண மந்த்ரம் -அதுவே நாளும் பேரின்பம்

இசையும் நானும் (156)Film பக்த பிரகலாதா

இசையும் நானும் (156)

இசையும் நானும் (156) Mouthorgan song-தமிழ்  song-

Film பக்த பிரகலாதா 


by TR PATTABIRAMAN



Movie Name:

பக்த பிரகலாதா 

Song Name:


நாராயண மந்த்ரம் -அதுவே 
நாளும் பேரின்பம் 





ஓம் நமோ நாராயணாய 
ஓம் நமோ நாராயணாய 
ஓம் நமோ நாராயணாய 

நாராயண மந்த்ரம் -அதுவே நாளும் பேரின்பம் 

பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமன் அருள் 
தரும் சாதனம் 

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை 

உயிர்களை வதைத்து ஓமங்கள்  வளர்க்கும் 
யாகங்கள் தேவையில்லை 

மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை 

ஆதியும் அந்தமும் நாராயணனே 
அன்னையும் தந்தையும் நாராயணனே 
பக்தியும் முக்தியும் நாராயணனே 
பகலும் இரவும் நாராயணனே 

பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமன் அருள் தரும் சாதனம் 

நாராயணா  ஹரி நாராயணா 
நாராயணா லட்சுமி நாராயணா 

நாராயணா  ஹரி நாராயணா 
நாராயணா  ஹரி நாராயணா 


https://youtu.be/Eqzi9qlaVMk

சனி, 7 ஜனவரி, 2017

கடவுள் என்றால் என்ன ?(2)


கடவுள் என்றால் என்ன ?(2)


சரி .கடவுள் என்ற அது 
ஒவ்வொரு உயிரின் உள்ளே இருக்கிறது.

சரி.உடனே உள்ளே சென்று அதை 
கண்டுவிட வேண்டியதுதானே 

கேட்பதற்கு எளிதாக இருக்கிறது.

எப்படி உள்ளே செல்வது?
அது உடலில் எங்கே இருக்கிறது ?
அது எப்படி இருக்கும்?

அதை நாம் பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும்
அல்லது நமக்கு அதனால் என்ன பயன்?
என்றெல்லாம் கேள்விகள் எழுவது இயல்பு.

இன்னும் சிலர் நாம் எதற்காக  போய் 
அதை தேட வேண்டும் அல்லது 
நாட வேண்டும் என்றும் கேட்கிறார்கள். 

நமக்கும் கடவுளுக்கும் இடையில் 
எது வந்து அதை அறிய விடாமல் 
தடுக்கிறது?

ஏன்  நினைத்தவுடன் அந்த 
செயலைச் செய்ய முடியவில்லை.?

சற்று ஆழ்ந்து  சிந்தித்துப் 
பார்க்க வேண்டும். 

இவ்வுலகம்அ தோன்றிய காலம் 
முதற்கொண்டு அவ்வாறு  ஆழ்ந்து சிந்தித்து 
பல உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள் 
பல ஆழ்வார்களும், நாயன்மார்களும் மற்ற 
எண்ணற்ற சித்த மகான்களும் ரிஷிகளும். 

அவற்றில் ஏதாவது ஒன்றை ஊன்றி 
பற்றிக்கொண்டு அவ்வழி நின்றால் 
அந்த உண்மைப்பொருளை 
உணர்ந்து கொள்ளலாம்.

 (இன்னும் வரும்)

கடவுள் என்றால் என்ன ?

கடவுள் என்றால் என்ன ?

கடவுள் என்றால் என்ன?
அது அதுவா அல்லது
அவனா அல்லது
அவளா அல்லது
இரண்டுமா ?

எல்லாவற்றையும் கடந்து உள்ளே
சென்றால் அங்கிருப்பது கடவுள் என்கிறார்கள்.

அதற்கு  இந்த உயிர் இடம் கொண்டுள்ள
உடலே ஆலயம் என்கிறார்கள்.
புறத்தே திரியும் நம் மனதை
உள்ளே திருப்பினால் இந்த
உடலுக்குள் இருக்கும் "அதை"
காணலாம் என்கிறார்கள்.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்
புறத்தே ஆலயங்களை நிர்மாணித்தார்கள்.

அதன் கருவறையில் ஒரு வடிவத்தை அமைத்தார்கள்.
இருளில் ஒன்றும் தெரியாமையால் ஒரு தீபத்தை
ஏற்றி வைத்தார்கள்.

அப்படியும்  தெளிவாக தெரியாமையால்
சூடத்தை ஏற்றி தெளிவாக வடிவத்தை காணுமாறு
செய்தார்கள்.

அந்நேரம் கோயில் மணி ஒலிக்கச் செய்தார்கள்

அங்கு குழுமியிருந்த அனைவரும் அனைத்தையும் மறந்து.தன்னையும் மறந்து சுற்றுப்புறத்தையும் மறந்து அந்த வடிவத்தின் மீதும் ஒளியின் மீதும்
தங்கள் கவனத்தை சிதறாமல் நிலைக்க செய்தார்கள்.

அந்த குறிப்பிட்ட நொடியில் அடைந்த அமைதியும் ஆனந்தத்தை
தினமும் தங்கள் வாழ்வில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அனுதினமும்  ஆலய வழிபாடு செய்ய சொன்னார்கள்.

இவ்வாறு செய்த புற  வழிபாட்டை அக  வழிபாடாக  செய்து
பழகுமாறு அறிவுறுத்தப்பட்டது.

செய்தவர்கள் தனக்குள் அந்த கடவுளை கண்டுகொண்டார்கள்

செய்யாதவர்கள் இன்னும் ஆலயங்களுக்கு இயந்திரம் போல்
சென்று வந்து கொண்டு இருக்கிறார்கள்.

நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள்  மனதிற்கு தோன்றிய
கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கிறர்கள்.

இன்னும் தொடரும்

இருக்கின்ற காசை எல்லாம்

இருக்கின்ற காசை எல்லாம்


இருக்கின்ற காசை எல்லாம் 

இருக்கின்ற காசை எல்லாம்
இங்கேயே செலவு செய்துவிடு
ஞான தங்கமே

கையில் இருக்கின்ற காசை எல்லாம்
இங்கேயே செலவு செய்துவிடு
ஞான தங்கமே

உடலை விட்டு உயிர் நீங்கும்போது
அதில் ஒரு சல்லிக்  காசு கூட
உன் கூட வாராது என்பதை
உணர்ந்துகொள் ஞானத்தங்கமே

தேவைக்கு அதிகமாய் உடலுக்கும்
குடலுக்கும் போடும் காசு
உபத்திரவத்தைத்தான் தரும் என்பதை
உணராதுபோனால் ஊசி போட்டே
கொன்னு போடுவான் மருத்துவன்
உன்னிடம் உள்ள காசை எல்லாம்
பறித்துக்கொண்டு  (இருக்கின்ற)

அதிகமாக ஆசைப்பட்டால்
இளமையிலேயே மீசை நரைக்கும்
இதயம் வேகமாக துடிக்கும்
இன்பம் பறிபோய்விடும்
துன்பமே பரிசாக கிடைக்கும் (இருக்கின்ற)

இருப்பதை இல்லாதவரிடம் பகிர்ந்து கொள்
பொல்லாதவரைக் கண்டால் நில்லாது ஓடு
நல்லவரோடு நட்பு கொண்டு நல்லவை எண்ணி
நல்ல செயல்கள்; செய்து நன்றி மறவாமல்
வாழ்ந்து நன்மை அடைவாய் மனிதா (இருக்கின்ற)

வியாழன், 5 ஜனவரி, 2017

இசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது


இசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது


இசையும் நானும் (155)

இசையும் நானும் (155) Mouthorgan song-தமிழ்  song-


Film அமர தீபம்  (1956)

 

by TR PATTABIRAMAN




Singers:ஜிக்கி 


Music Director:

டி .சலபதிராவ் -ஜி.ராமநாதன் 


Cast:சிவாஜி கணேசன் -பத்மினி 





61 ஆண்டுகள் கடந்தும்  இனிக்கும் இசை.

பச்சை கிளி பாடுது
பக்கம் வந்தே ஆடுது -இங்கே பாரு
உன் துன்பம் பறந்தோடுது ( பச்சை)

கள்ளம் அறியாதது -ரொம்ப சாது
வேறெங்கும் ஓடாது- உன் சொல்லைத் தள்ளாது (பச்சை )

உன்னைக் காணாவிட்டால் உயிர் வாடும்
கண்டால் இன்பம் கூடும்
சந்தோஷம்  கொண்டாடும் (பச்சை)

காதல் கதை சொல்லவோ மனம் கூசும்
கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீசும். (பச்சை)




புதன், 4 ஜனவரி, 2017

இசையும் நானும் (154)-ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது



இசையும் நானும் (154)-ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது


இசையும் நானும் (154)

இசையும் நானும் (154) Mouthorgan song-தமிழ்  song-

Film பச்சை விளக்கு 

by TR PATTABIRAMAN




Singers:டி எம் .சௌந்தரராஜன்


Music Director:

Viswanathan Ramamoorthy 


Cast:சிவாஜி கணேசன் 

Image result for olimayamana ethirkaalam lyrics



ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

(ஒளிமயமான)

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் (நால்வகை)

மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

(ஒளிமயமான)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக (குங்குமச்)

மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

(ஒளிமயமான)


திங்கள், 2 ஜனவரி, 2017

இசையும் நானும் (153)-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

இசையும் நானும் (153)-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

இசையும் நானும் (153)

இசையும் நானும் (153) Mouthorgan song-தமிழ்  song-

Film ஆண்டவன் கட்டளை 

by TR PATTABIRAMAN




Singers:டி எம் .சௌந்தரராஜன் /சுசீலா 


Music Director:

Viswanathan Ramamoorthy 


Cast:சிவாஜி கணேசன் /தேவிகா 




பாடல் வரிகள் கண்ணதாசன்

இசையும் நானும் (153)-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்


------------------------------------------------------------------------------------------------

ஆ: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்,
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்,
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்...
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்....


ஆ: தென்னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே 
தாலாட்டும் தென்றலது,
தென்னம் இளங்கீற்றினிலே 
தாலாட்டும் தென்றலது,
தென்னைதனைச் சாய்த்துவிடும் 
புயலாக வரும்பொழுது,
தென்னைதனைச் சாய்த்துவிடும் 
புயலாக வரும்பொழுது,
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்......

ஆ: ஆற்றங்கரை மேட்டினிலே 
ஆடி நிற்கும் நாணலது,
ஆற்றங்கரை மேட்டினிலே 
ஆடி நிற்கும் நாணலது,
காற்றடித்தால் சாய்வதில்லை 
கனிந்தமரம் வீழ்வதில்லை,
காற்றடித்தால் சாய்வதில்லை 
கனிந்தமரம் வீழ்வதில்லை,
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.....
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்....

பெ: ஓ..ஓஓ...ஓ....
நாணலிலே காலெடுத்து நடந்து 
வந்த பெண்மை இது,
நாணலிலே காலெடுத்து 
நடந்து வந்த பெண்மை இது,
நாணம் என்னும் தென்றலிலிலே 
தொட்டில் கட்டும் மென்மை இது,
நாணம் என்னும் தென்றலிலிலே 
தொட்டில் கட்டும் மென்மை இது,
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.....

பெ: அந்தியில் மயங்கி விழும்  
காலையில் தெளிந்துவிடும்,
அந்தியில் மயங்கி விழும் 
காலையில் தெளிந்துவிடும்,
அன்பு மொழி கேட்டுவிட்டால் 
துன்பநிலை மாறிவிடும்,
அன்பு மொழி கேட்டுவிட்டால் 
துன்பநிலை மாறிவிடும்...

இருவரும்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்


அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.....