வியாழன், 14 ஏப்ரல், 2016

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும்

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும்

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் 

நம் இதயத்தினுள்ளே ஒளிந்து கொண்டு
ஓயாமல் நம்மை இயக்கிகொண்டிருக்கும்
இறைவனை உள்ளே சென்று காணாது
உலகம் முழுவதும் சுற்றி திரிந்து
தேடுவதால் பயன் ஏது ?

தன் வடிவாய் மனிதனை படைத்தவனுக்கு
வடிவங்கள் சமைத்து வாழ்நாள் முழுவதும்
வழிபாடு செய்வதால் மட்டும் அவனைக்
காணுதல் எளிதாமோ ?

வடிவமற்ற பரம்பொருளுக்கு வடிவம்
கொடுத்தோம் தவறில்லை .

தான் கொடுத்த வடிவம்தான்
உயர்ந்த தெய்வம் என்றும் மற்ற
வடிவங்கள் தாழ்ச்சி  என்று
ஏற்ற தாழ்வுகள் கற்பித்து அறியாமையில்
உழலும் மூடர்களை என்னவென்று சொல்லுவது?

வெட்ட வெளியிலிருந்து தான்  அனைத்தும்
உருவாகி மிதக்கின்றது சில காலம்
நாம் வாழும் உலகம் உட்பட

பிறகு மறைந்து வேறொரு உருவெடுக்கிறது
முடிவில்லா இந்த செயற்பாட்டில் பின்
உள்ளவனின் நினைவொன்றே போதும்
நிலையான இன்பம் அடைய

நிலையில்லா உலகில்
நாம் உருவாக்கும் சிலைகளும்
தப்புமோ அழிவிலிருந்து  ?
அவைகளை வழிபடும் நாமும்தான் ?

இந்த உலகில் அனைத்தும் நாம் இன்பமாக
வாழ இறைவனால் அளிக்கப்பட்டவையே

அதை அனைவரும் தனக்குமட்டும்தான்
சொந்தம் என்று உரிமை கொண்டாடுவது
அறிவீனம் .

அதனால்தான் நாம் அனைவரும்
அடைகின்றோம் ஒவ்வொரு கணமும்
சொல்லொணா துன்பங்கள்.

இருப்பதை கொண்டு இன்புறுவதில்லை
அனைத்தையும் தரும் தில்லை நாதனையோ
நம்முள் இருக்கும் திருவரங்கத்தானையோ
நினைப்பதில்லை.

நம்மோடு சேர்ந்து அழியும் பொருட்கள் மீது
நாட்டம் கொண்டு வாழ்நாள் முழுவதும்
வாட்டம் கொண்டு அழிகின்றோம்.

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்று
நினைப்போம் .

யாருக்கும் மனதாலும் தீங்கு நினையோம்.
பிறர் தரும் தொல்லை பொறுப்போம்

எல்லையில்லாத பரம்பொருளை சரணடைந்து
அன்பால் அனைவரும் இணைந்து ஆனந்தமான
வாழ்வு வாழ்வோம் 

புதன், 13 ஏப்ரல், 2016

துர்முகி ஆண்டே வருக! வருக !

துர்முகி ஆண்டே வருக! வருக !

துர்முகி ஆண்டே வருக! வருக !




பரிமேலழகர் பவனி வரும் ஆண்டு
பாரிலுள்லோரின் பவங்களை
தீர்க்கும் ஆண்டு

பல்லாண்டு பாடி பரவிய பரமனின்
புகழ் கூறும் நல்லோர்கள்
போற்றும் ஆண்டு

உள்ளத்தில் நல்லதோர் எண்ணங்களை
விதைத்து நன்மைகளை நானிலத்தோருக்கும்
நன்மைகளை நல்கிடும் ஆண்டு

தீய எண்ணம் கொண்டோர் மனங்களில்
நல்லதோர் மாற்றத்தை விளைவித்து
நற்செயல்கள் ஆற்றிட தூண்டும்
துர்முகி ஆண்டே வருக! வருக !

அன்பில்லா மனிதர் உள்ளங்களில்
அன்பு பயிர் தழைத்து தழைத்து
செழித்து வளர்ந்து அகிலமெல்லாம்
இன்பம் நிறைந்திட செய்யும்
துர்முகி ஆண்டே வருக! வருக!

பகையெல்லாம் உறவாக மாறிட
ஏற்ற தாழ்வுகள் நீங்கிட

பொறாமை சுயநலம் போன்ற
தீய குணங்கள் நீங்கிட

அறியாமை இருள் விலகி
ஞான ஓளி தோன்றிட

ஞான கடவுளாம் பரிமேலழகரை
போற்றிபணிந்திடுவோம்

பாரில் ஆனந்த வாழ்வு
அடைந்து மகிழ்ந்திடுவோம்

புதன், 6 ஏப்ரல், 2016

சிக்கலை தீர்க்கும் வழி

சிக்கலை தீர்க்கும் வழி

ஜோதி வடிவானவன் நீ
ஆதி சிவனின் அம்சம் நீ
அவன் பாதி வடிவான ஆதி சக்தியின்
அருள் வாசம் செய்யும் ஆலயமும் நீ

மனம் என்னும் கடலில்
வந்து போகும் ஆசைகள்
ஆயிரமாயிரம்

ஆயிரம் நாமம் கொண்டவனின் வடிவை
அனுதினம் துதித்து வந்தால் அமைதியாய்
அடங்கி விடும்நம்மை ஆட்டுவிக்கும்
எண்ண   ஓசைகள்

வாழ்வின் பொருள் ஓடியோடி
உழைத்து பொருள் சேர்க்க அன்று

அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும்
பரம்பொருளை அறிந்து தெளிந்து
ஆனந்தமாய் வாழ்வதே நன்று

அண்டத்தில் சுற்றி வரும் கோள்கள்
நம் மனதிலும் சுற்றி வரும்
எண்ணங்கள் வடிவில்

அவைகளே  நம் வாழ்வில் தோற்றுவிக்கும்
அனுதினமும் எண்ணிலடங்கா சிக்கல்கள்.

சிக்கலை தீர்க்கும் வழி சிந்தனையை
சீராக வைத்துக்கொள்வதே

போதுமென்ற மனமும் பிறர் மீது
பொல்லாங்கு சொல்லாத குணமும்
அனைத்துயிர்களிடம் அன்பு மாறாது
பணி  செய்யும் பாங்குமே பாரினில்
நல்லதோர் வாழ்வை அளிக்குமே 

இசையும் நானும் (121)


இசையும் நானும் (121)

இசையும் நானும் (121)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  121வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ்    பாடல்-

Image result for thangathile oru kurai song lyrics in tamil

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்- பாக பிரிவினை 


தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ
சிந்தையும் செயலும்  ஒன்று பட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ

கால்கள் இல்லாமல் வெண்மதி தவழ்ந்து வரவில்லையா
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா

காலம் பகைத்தாலும் கணவன் பணி  செய்து காதல் உறவாடுவேன்
உயர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் வாழ்வின் சுவை கூறுவேன்.

https://www.youtube.com/watch?v=jB3Wp_OFwSQ&feature=youtu.be

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு

கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு

கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு 




அனுதினமும் காலையில் எழுந்திடு
கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு
கவலைகள் உன்னை அணுகாது மனமே

மணம்  வீசும் மலர்களின் வாசம்
நுகரட்டும் உந்தன் சுவாசம்
அது உன் உள்ளத்தில் உருவாக்கும்
இன்பம் தரும்  இனிய பிரகாசம்

அனைத்தையும் அளிக்கும் காமதேனு
அவளை "அம்மா" என்றழைக்கும்
அகிலத்தை வாழ வைக்கும் பசுவை
அன்போடு வணங்குவோம்

அம்மையப்பனை அரவு மீது  பள்ளி கொண்டானை
அல்லும் பகலும் நம்மை  அரவணைத்துக் காப்பானை
அவனியெங்கும் பவனி வந்து அருள் செய்யும்
ஆதவனை பணிந்து அருள் பெறுவோம்.

அன்பின் வடிவாய் இறைவன் நம்
அனைவரின் அகத்தினில் வீற்றிருக்கையில்
அதை உணராது அல்லல் தரும் வழியை நாடி
ஆயுள் முழுதும்  அலைகின்றோம்

நல்லதோர் வாழ்வை தரும்
நற்குணமதை நாளும் கைகொள்வோம்
தன்னலம்  விடுத்து நானிலத்து மக்களும்
நலமாக வாழ நான்மறை தந்த
நாயகனை வேண்டிடுவோம்

இசையும் நானும் (120)


இசையும் நானும் (120)

இசையும் நானும் (120)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  120வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ்    பாடல்-





Image result for enthan ullam thulli lyrics

படம் -கணவனே கண்கண்ட தெய்வம் 
பாடல் பாடியவர்- பி. சுசீலா 
பாடல் வரிகள்/இசை-ஆதி நாராயணராவ் 
நடிப்பு- லலிதா 

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ 
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தைதானோ 

ஆசைதான் மீறுதே யாரிடம் சொல்வேன் 
எவ்விதம் அவன் உள்ளம் நான்தான் அறிவேன் 
எண்ணாத  எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் 
எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ 


பாரினிலே எனக்கே நிகர் யாரோ 
கண்ணாலே உள்ளந்தன்னை கொள்ளை கொண்ட கள்வனே 
எண்ணாத  எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் 
எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ 






சனி, 2 ஏப்ரல், 2016

இசையும் நானும் (119)

இசையும் நானும் (119)

இசையும் நானும் (119)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  119வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ்    பாடல்-

மலருக்கு தென்றல் பகையானால் ....

என்னும்  இனிமையான  பாடல்.





மலருக்கு தென்றல் பகையானால் 

அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு 

நிலவுக்கு வானம் பகையானால் 
அது நடந்திட வேறு வழியேது (மலருக்கு) 

பறவைக்கு சிறகு பகையானால் 
அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு 
உறவுக்கு நெஞ்சே பகையானால் 
மண்ணில் உயிரினம் பெருகிட வழியேது (நிலவுக்கு)(மலருக்கு) 

படகுக்கு துடுப்பு பகையானால் 
அங்கு பாய் மரத்தாலே உதவியுண்டு 
கடலுக்கு நீரே பகையானால் 
அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது (மலருக்கு )

கண்ணுக்கு பார்வை பகையானால் 
அங்கு கருத்தால் உணர்ந்திட வழியுண்டு 
பெண்ணுக்கு துணைவன் பகையானால் 
அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது (மலருக்கு)
நிலவுக்கு வானம் பகையானால் 
அது நடந்திட வழியேது (மலருக்கு)

https://youtu.be/rD8L8AAstjY