புதன், 6 ஜனவரி, 2016

இசையும் நானும் (93)

இசையும் நானும் (93)

இசையும் நானும் (93)

இசையும் நானும்  தொடரில்
என்னுடைய 93 வது காணொளி

மவுத்தார்கன் இசை 

பாரதியார் -பாடல் -  காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

https://www.youtube.com/watch?v=4AjAOqZLHhs&feature=youtu.be

செவ்வாய், 5 ஜனவரி, 2016

வம்பு சண்டைக்கு வருபவனை..

உண்மையில் யார் ஞானி ? - ஸ்ரீ கிருஷ்ணர்

உண்மையில் யார் ஞானி ? - ஸ்ரீ கிருஷ்ணர்

உண்மையில் யார் ஞானி ? - ஸ்ரீ கிருஷ்ணர்ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.
மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.
கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.



Anbudan
<>KSR<>

Courtesy
swasthiktv

Pattabi Raman vijayakoti33@gmail.com

6:45 AM (0 minutes ago)
 
to RamakrishnanAbridged
 
வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.

அருமையான தத்துவம். முயற்சி செய்து பார்க்கலாம். 

TRPattabiraman 

சனி, 2 ஜனவரி, 2016

இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் ஒன்றுதான்.

மனித நேயம் 

பிறருக்கு உதவும் உள்ளம் 
படைத்தவர்கள் மனித  நேயம் 
கொண்டவர்கள் என்று 
அழைக்கப்படுகிறார்கள். 

ஆனால் அவ்வாறு அழைப்பது 
சரியில்லை என்றே தோன்றுகிறது. 

இந்த  உலகில் மனித வடிவில் 
விலங்குகளும் விலங்கு வடிவில் 
மனிதர்களும் இருக்கத்தான் 
செய்கின்றன 

நாய் நன்றியுள்ள பிராணி என்று அழைக்கிறோம். 
அது தன்னை வளர்ப்பவர்களிடம் காட்டும்  பாசம் 
நேசம், அன்பு எழுத்தில் வடிக்க இயலாதது. 
சில நாய்கள் தங்களின் எஜமானருக்காக உயிரை 
தியாகம் செய்திருக்கின்றன. 

மாடுகளை, யானைகளை ,குதிரைகளை 
மனிதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து எவ்வளவு 
துன்புறுத்தி வதைத்தாலும் அவனுக்காக உயிர் 
உள்ளளவும்  உழைக்கின்றன.

விலங்கினங்கள் பெரும்பாலானவை அவன் 
வயிற்றுக்குள்  தள்ளுவதற்காகவே தோன்றியவை 
என்று மனிதன் மமதை கொண்டு அவைகளை 
கொன்று அவன் மமதை கொண்டு திரிகிறான் 

அவன் கோடிக்கணக்கான உயிர்களை 
கொல்வதைப்  பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் ஒரு புலியோ பாம்போ அவன் இருக்குமிடத்தில் வேறு வழியின்றி புகுந்து ஒரு மனிதரைக் கொன்றுவிட்டால் அந்தஊரே திரண்டு அதை கொடூரமாக கொலை செய்ய பல ஆயிரம் ரூபாய்களை செலவழிக்க தயங்குவதில்லை இதுதான் அவனுடைய மனிதநேயம் (விலங்கு நேயம்) 

அதே நேரத்தில் அவனை பாம்பு கடித்துவிட்டால் எண்ணத்தில்   நஞ்சு தன்மை கொண்ட  அவன்  உயிர் காக்க அந்த பாம்பின்  நஞ்சுதான் நஞ்சு முறிப்பு மருந்தாக தேவைப்படுகிறது 


அந்த மனிதனை கொன்று தின்னும்  காபாலிக 
கூட்டம் அன்றும் உண்டு நர பலி என்ற பெயரில் 
இன்றும் உண்டு என்றும் உண்டு 

எந்த உழைப்பையும் செய்யாமல் மற்றவர்களின் 
உழைப்பின் பலன்களை பறித்து சென்று உடல் 
வளர்க்கும்  திருடர்கள், அரசியல் வாதிகள், கொள்ளையர்கள் சுயலபிசாசுகள்,ஏமாற்றுக்காரர்கள், பொய், பித்த லாட்டக்காரர்கள்
ஊடக தொலைகாட்சி நடத்துபவர்கள் போன்ற பலவகையான 
குரங்குகள் மனிதர்களிடையே ஏராளம் ஏராளம். 

இதைதவிர உழைத்து உடலை வளர்த்து மனிதர்களுக்கு 
பலவிதங்களில் தங்களை அர்ப்பணிக்கும் பசு, போன்ற 
விலங்குகளையே கொன்று தின்று வயிறாய் நிரப்பும் 
சிங்கம், புலி, போன்ற எண்ணற்ற விலங்குகளும் 
மனிதர்களிடையே ஏராளம், ஏராளம் .

இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் ஒன்றுதான்.
எல்லாம் பிறக்கும் வளரும் ஒருநாள் மறையும்  என்பது 
மாற்றமுடியாத நியதி. 
 
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வடிவங்கள் வேறுபடலாம் 
ஆனால் குணங்கள் வேறுபடுவதில்லை  என்பது உண்மை. 


வெள்ளி, 1 ஜனவரி, 2016

இயற்கையின் எதிரிகள்

இயற்கையின் எதிரிகள் 

இயற்கையின் எதிரிகள்
மனித வடிவில் உலவும்
சுயநல மிருகங்களே

ஒரு அற்ப காரணத்திற்க்காக
ஒரு பசுமை பகுதியையே
அழித்து எரித்து சாம்பலாக்கிவிட்டனர்.

Image result for snakes images

காரணம்- சில நாட்களுக்கு முன் பெய்த
மழையில் தண்ணீர் தேங்கியதால் ஒரு
பாம்பு வீட்டிற்குள் புகுந்து விட்டது.
அதை அந்த தெருவே கூடி அடித்து
கொன்றதுமட்டுமல்லாமல்
அது வாழுமிடத்தையும் எரித்து சாம்பலாக்கிவிட்டனர்.

அரசு பாம்புகளைப் பற்றிய அச்சத்தை போக்க
இயக்கம் நடத்தி  ஒவ்வொரு பகுதியிலும்
ஒரு நபருக்கு பயிற்சி அளித்து பாம்புகளை கவனமாக
பிடித்து காடுகளில் விட நடவடிக்கை
எடுக்கவேண்டும்.
காணொளி. இணைப்பு 



http://www.youtube.com/attribution_link?a=fVBpma6rHqc&u=/watch%3Fv%3D-Eufo81-eio%26feature%3Dem-upload_owner

இசையும் நானும் (90)

இசையும் நானும் (90)

இசையும் நானும் (90)

இசையும் நானும்  தொடரில்
என்னுடைய 90 வது  காணொளி.

மவுதார்கன் இசை 

தமிழ் பாடல் -


கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் 
காட்சியளிப்பது பழனியிலே(கலியுக )
மலை மகள் அருளிய சக்திவேல் முருகன் 
மரகத வண்ணனாம் திருமால் மருகன் (மலை )(கலியுக )

கண்ணுதற்  கண்மணியாய் வந்தான் 
கார்த்திகை பெண்களின் அணைப்பில் வளர்ந்தான் 
விண்ணவர்  குறைஎலாம் நொடியினில் களைந்தான் 
வேண்டுவோர் வேண்டுமும் வரமெல்லாம் தந்தான்( கலியுக )

 காணொளி இணைப்பு 



மனம் என்னும் மாடு

மனம் என்னும் மாடு

மனம் என்னும் மாடு 


Image result for mannargudi


மனம் என்னும் மாடு
நம் உள்ளம் என்னும் வீட்டில்
வசிக்கிறது

அவ்வப்போது புலன்கள்  என்னும்
வாயில்களின் வழியே வெளியே
மேயச் செல்கிறது.

வெளியில் மேய்ந்துவிட்டு
கொட்டடிக்கு திரும்பி வந்து
தினமும் இரவில் உறங்கி விடுகிறது

அது சில காலமாக ஊரார் நெல் வயல்களில்
போய்  மேய்ந்து வீண் வம்பை விலைக்கு வாங்கி
கொண்டு வருகிறது .

இனிமேல் அதை வீட்டில் கட்டிப்போட்டு
இருக்கும் இடத்திலேயே வைக்கோலும்
தண்ணீரும் வழங்க வேண்டிய
சூழ்நிலையை அது உருவாக்கிவிட்டது.

ஆனால்  அதை வெளியே மேய
அனுப்பாவிடில் அது சண்டித்தனம்
செய்து அதன் கோபத்தை வெளிப்படுத்துகிறது.
தாறுமாறாக கத்துகிறது. அருகில் சென்றால் முட்டுகிறது.
கட்டிய கயிறை  அறுத்துக்கொண்டு வெளிய ஓட முயற்சிக்கிறது.

ஏனென்றால் அதற்கு தினமும் வெளியே
சென்று மேய்ந்து வருவது வழக்கமாகிவிட்டது.

மாட்டைப் போன்றது போல்தான்
நம் மனமும். அது காலம் காலமாக
ஒரு குறிப்பிட்ட செயல்களையே செய்து கொண்டு வருகிறது

அது அலுத்துப்போன காரணத்தால்
பல தில்லு முல்லு  வேலைகளைச்
செய்து நம்மை சிக்கல்களிலும் துன்பத்திலும்
மாட்டி விடுவதையே வழக்கமாகி கொண்டுள்ளது

இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால்
அதற்கு கடிவாளம் போட்டுத்தான் ஆகவேண்டும்
அது சண்டித்தனம் செய்யும். அதை பொருட்படுத்தாது
நாம் அதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துதான் ஆகவேண்டும்.

கட்டுப்பாட்டில் வைத்தாலும் அது மிகவும் சாமர்த்தியமாக
நம்மை ஏமாற்றிவிடும்.. நாம் எப்போதும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.

அதற்கு நாம் நம் உள்ளம் என்னும் மாட்டை
அந்த மாடு மேய்த்த கண்ணனிடம் ஒப்படைத்தால் போதும்
அவன் அதை நன்றாக பார்த்துக்கொள்வான்
பார்த்தனுக்கு தேரோட்டிய பார்த்தசாரதியைப். போல.

உன்னை காக்கும் கடவுள் என்று !

உன்னை காக்கும் கடவுள் என்று !

உன்னை காக்கும் கடவுள் 
என்று !



அபயம் என்ற கரியை
காத்திட்ட ஹரியே
உன்னை காக்கும் கடவுள்
என்று உலகோர் போற்றி
புகழ்வது சரியே

தவம் செய்து வரம் பெற்று
அகந்தை கொண்டு
தகாத வழியில் நடந்த
அசுரர்களை  அழித்து
தர்மத்தை நிலைநாட்ட
அயோத்தியில் அரசன்
ராமனாய் அவதரித்தாய்

அடுத்த யுகத்தில் தர்மம் தவறி
தறி கெட்டலைந்த
அரசர்களை அழித்தொழிக்க
ஆயர்பாடியில் ஆடு மேய்க்கும்
சிறுவனாய் உருவெடுத்து வந்து
அடியவர்களை காத்து நின்றாய்

ஊரும் பேரும்  அற்ற உன்னை
உள்ளத்தில் நினைந்து உருகி வழிபட
ஆயிரம் நாமங்களை பீஷ்மர் வாயிலாக
பாடக் கேட்டு எமக்களித்தாய் (அபயம்)

காலம்தோறும் உந்தன் பெருமை
பேச கணக்கில்லா உந்தன் அடியார்கள்
தோன்றி தோன்றி உந்தம் பெருமையை
பாடி பாடி பரப்பி மகிழ்கின்றாரன்ரோ !

மாநிலத்து உயிர்கள் யாவும்
நீங்காத  இன்பம் பெற்று வாழ
நில  மடந்தை கோதை யன்னை
நின் புகழ் பாடும்
திருப்பாவை தந்தனளே

உன்னை காக்கும் கடவுள்
என்று உலகோர் போற்றி
புகழ்வது சரியே