ஞாயிறு, 13 டிசம்பர், 2015

இசையும் நானும் (80)

இசையும் நானும் (80)

இசையும் நானும் (80)

இசையும் நானும்  தொடரில்
என்னுடைய 80 வது காணொளி

மவுதார்கன் இசை

பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா (கே . பி.சுந்தராம்பாள்)

இணைப்பு:



செவ்வாய், 8 டிசம்பர், 2015

புறப்படுவீர் புதியதோர் எதிர்காலம் படைக்க

புறப்படுவீர் புதியதோர் எதிர்காலம் படைக்க


புறப்படுவீர் புதியதோர் 
எதிர்காலம் படைக்க 


புலம்பியது போதும்
புறப்படுவீர் புதியதோர்
எதிர்காலம் படைக்க

எங்கிருந்தோ வந்தார்கள்
ஏதும் எதிர்பாராது உணவளித்தார்கள்
தேங்கும்  நீர் வெள்ளத்தில் நீந்தி வந்து
நன்றிகள் கோடி அந்த நல்லுள்ளங்களுக்கு

அப்படிப்பட்ட நல்லதோர் பண்பினை
நம்மிடையே வளர்த்திடுவோம்
அதனால் நாம் அனைவரும்
நிச்சயம் நலம் பெறுவோம்.

இயற்கை தன்  கடமையை
செய்து முடித்து சென்று விட்டது
இனி நாம்தாம் அவரவருக்கு உள்ள
கடமையை தொடர வேண்டும்.

உடைமைகள் போனால்  போகட்டும்
மீண்டும் உழைத்தால் அவைகளை
அடைந்துவிடலாம்

இந்த இக்கட்டில்
நம் உயிர் போகாமல் காப்பாற்றிய
இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

இரவு பகல் பாராது பாதிக்கப்பட்டவர்களுக்காக
உழைத்த/உழைத்துக்கொண்டிருக்கும்
முகவரி தெரியாத அந்த
பல்லாயிரக்கணக்கான மனிதர்களின்
தொண்டை போற்றுவோம். அவர்களும்
அவர் குடும்பத்தினரும் நலமுடன் வாழ
பிராத்தனை செய்வோம்.

அனைவரும் இணைந்து உழைப்போம்
சுயநலமில்லாது வளமான
எதிர்காலத்தை  நோக்கி.நம்பிக்கையுடன்.

திங்கள், 7 டிசம்பர், 2015

வாரிக் கொட்டியது வான்மழை !

வாரிக் கொட்டியது வான்மழை !

வாரிக் கொட்டியது  வான் மழை !
ஆம் வாரிக் கொட்டியது வான்மழை !

ஆனால் அதை அணை கட்டி
தேக்கி வைக்க அணைகளும் இல்லை
ஏரிகள் இல்லை ,குளங்கள் இல்லை
குட்டைகள்  இல்லை

மாறாக வீடுகளில் நீர் புகுந்து
அனைத்தையும் இழந்துவிட்டோம்
என்று ஒப்பாரி வைக்குது மக்கள் கூட்டம்.

அண்டை மாநிலங்களுடன் நீர் தகராறு
நீதிமன்றங்களில் ஆண்டாண்டுகாலமாக
தொடரும் வழக்குகள் அற்ப அளவில்
நீர் பெற. போராடும் கையாலாகாத
சுயநல பேய்களாய் ஆளும் வர்கங்கள்.

ஆனால் இன்று அடுத்த தலைமுறைக்கும்
உணவு பஞ்சமின்றி வாழ ,குடிநீருக்கு
பஞ்சமின்றி வாழ இயற்கை அளித்த
கொடையினை வீணே கடலில்
கலக்கவிட்டுவிட்டு தெரு தெருவாக
பிச்சைஎடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட
மக்கள்-திட்டமிடாத ஆளும் வர்க்கம்
இந்த அவல நிலைக்கு யார் காரணம்?

வீடும் நாடும் சேற்றினால்  நிறைந்து  கிடக்க
வீதிகள் முழுவதும் வீட்டு  பொருட்கள்
சிதறிக்  கிடக்க அடுத்த வேளைக்கு  சோறின்றி
அலையும் நேரத்திலும் கூட ஒருவர் மீது
ஒருவர் குறை கூறி சேற்றை வாரி
இறைக்கின்றார் .அந்தோ பரிதாபம் !
இவர்களை யார் திருத்துவது. ?

எதற்கெடுத்தாலும் இவர்களை நெறிப்படுத்த
காவல்துறைதான் வரவேண்டும் என்ற
உன்னத நெறியை கடைபிடிக்கும் இவர்களை
யார் மாற்றுவது?

உதவிகள் மலைபோல் குவிகின்றன
உலகெங்கிலுமிருந்து அனுதினமும்

ஆனால் அவைகளை முறையாக
தேவைப்படுவோருக்கு சென்று சேர்க்க
அமைப்பு இல்லை .

ஆர்பாட்டம் செய்து
விளம்பரம் தேடும் மனிதர்களால்
உதவிகள் விழலுக்கு இரைத்த நீர்போல்
வீணாகிவிடுமோ என்ற அச்சம் உதவி
செய்பவர்களுக்கு.

கிடைக்கும் உதவிகளை அமைதியாக
அனைவரும் பகிர்ந்துகொண்டு
பயன்படுத்திக்கொண்டு சிக்கலிலிருந்து
முன்னேற வழி தேடாது அனைவர் மீதும்
குற்றம் சொல்லிக் கொண்டே போனால்
இவர்களுக்கு எந்நாளும் விடிவுகாலம்
என்பது கேள்விக்குறியே.

  

போனது போகட்டும். இனி வருங்காலம் நலமாக திகழட்டும்

போனது போகட்டும். இனி வருங்காலம் நலமாக திகழட்டும்


போனது போகட்டும். இனி வருங்காலம் 
நலமாக திகழட்டும் 

வெள்ளம் வந்தது
 பாடுபட்டு சேர்த்து வைத்து
வீ ட்டை நிறைத்த பொருளனைத்தும்
வெல்லம் போல்  கரைந்து காணாமல் போனது.

போன பொருளனைத்தும் மீண்டும்
பெற வழியுண்டு

ஆனால் உடலை
விட்டு உயிர் போனால் மீண்டும்
பெற வழியில்லை என்பதை உணர்ந்தோர்
அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு
வீதிக்கு வந்தனர்.

வெள்ளம் சில நாளில் வடிந்துவிடும் 
ஆனால் உள்ளத்தில் கள்ளம் இருந்தால் 
என்றும் வாழ்வில்லை  வளமில்லை 

நல்ல உள்ளம் கொண்டோரே பாசத்துடன் 
நாதியற்றவர்களை ஆதரித்து பசியாற்றினார்

உள்நோக்கம் கொண்டாரோ ஊருக்காக
உள்ளம் உருகுவதுபோல் நடிக்கின்றார்.

பொருட்கள் அத்தனையும் சாக்கடையில்
இருக்க வீடில்லை குடிக்க நீரில்லை
முகவரியில்லை என்ற நிலை
வந்தபின்னும் இருப்பதை மற்றவரோடு
பகிர்ந்து உண்ணும் பக்குவம் வரவில்லை

ஒழுங்கில்லை எதற்கெடுத்தாலும்
மற்றவரை குறை கூறும் தீய பண்பு
மாறவில்லை.சட்டத்தை மதித்து
வாழும் முறையை கற்கவில்லை.

இதுவும் கடந்துபோகும் .பொறுமையாய் 
சிந்தித்து கடுமையாய் உழைத்தால் 
முன்பிருந்த நிலையை விட வாழ்வில் 
முன்னேற்றம் காண வழியுண்டு.  

இசையும் நானும் (79)

இசையும் நானும் (79)

இசையும் நானும் (79)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 79 வது காணொளி

மவுதார்கன் இசை- தமிழ் பாடல்.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
என்ற TMS ன்  பாடல்

காணொளி இணைப்பு.



சனி, 5 டிசம்பர், 2015

தவறு செய்தால் தண்டனை உறுதி

தவறு செய்தால் தண்டனை உறுதி 

ஆம் தவறு செய்தால்
தண்டனை உறுதி

வடிநீர் கால்வாய்களில்
நாள்தோறும் குப்பைகளை கொட்டினோம்.
நீர் செல்லும் வழிகளை அடைத்தோம்.

அதனால் வேறு வழியின்றி
கால்வாய்களில் செல்லும் நீர்
வீதிக்கு வந்தது .அப்படியே நம்
வீட்டிற்குள்ளும் புகுந்தது

வீட்டை நரகமாக்கி நாறடித்தது
இனி அவ்வாறு செய்யமாட்டோம் என்று
உறுதி எடுத்துக்கொள்வோமா ?

பயிர் நிலங்கள் நம்மை வாழ  வைக்கும்
உயிர் நிலங்கள் அதில் வீட்டைக்
கட்டினோம் அந்தோ ! இன்று நீர்
சூழ்ந்து கூழ் கூட கிடைக்காமல்
கதறுகின்றோம் -அரசைக் குறை
கூறி  என்ன பயன்?

ஏரி ,குளம், குட்டை எல்லாம்
காணாமல் போயிற்று -பெய்யும் மழை நீர்
தங்க இடம் இல்லாமல் போயிற்று

ஆற்று படுகையிலே வில்லாக்கள்
கட்டினோம். இன்று அனைத்தையும்
இழந்து ஒன்றும் இல்லாமல் தவிக்கின்றோம்.

இனியாவது மனிதர்கள் தாங்கள்
செய்யும் தவறுகளை திருத்தி கொள்ளவேண்டும்

இல்லை யெனில் நாமிருக்க மாட்டோம்
இவ்வுலகில் இவைகளைக் காண. 

மழையும் மக்களும்

மழையும் மக்களும் 

மழை இறைவன் அளிக்கும் கொடை
அது இடைவிடாது பெய்யும்
அடைமழை ஆனாலும் சரி
கோடையிலே வரும் குளிர்விக்கும்
தூரலானாலும்   சரி.

இறைவன் அளிக்கும் கொடையை
பெற்றுக்கொள்ள நம்மிடம்
பாத்திரம் இருக்கவேண்டும்
ஆனால் பாத்திரம் நம்மிடம் இல்லை
மாறாக ஆத்திரம்தான் வருகிறது

Image result for chennai floods update

வட்டியும் முதலுமாக கிடைத்த
விண் நீரை  பயன்படுத்த வழியை
தேடாது மண் மீது வீணாக கடலில்
ஓடவிட்டுவிட்டு ஒருவர் மீது ஒருவர்
சேற்றை வாரி இறைத்துக்கொண்டு
அழுது புலம்புகின்றனர் ஒவ்வொருவரும்

Image result for chennai floods update

ஓடையிலே வீட்டை கட்டினால்
கோடையிலே வேண்டுமானாலும்
இன்பத்தை தரலாம் ஆனால்
வெள்ளம்   வந்தால் அனைத்தையும் இழந்து
நடைபாதைக்குதான் தான்
போக வேண்டும் என்பதை அறிந்தும்
அசட்டையாய் இருந்தனர்  இந்த மக்கள்

Image result for chennai floods update

ஏரியிலே கட்டிய வீடு ஒருநாள்
நீரில் மூழ்கி விடும் என்பதை எடுத்து
காட்டியதுதான் இவ்வாண்டு
பெய்த பெருமழை .

இறைவனை இகழ்வதை விடுத்து
இயற்கையை பழிப்பதை விடுத்து
இயற்கையுடன் இணைந்து வாழ
கற்றுக்கொள்ள வேண்டும் இந்த
மனித சமுதாயம்

இனியும் திருந்தாவிடில்
வருந்துவதை தவிர வேறு வழியில்லை