புதன், 9 செப்டம்பர், 2015

இசையும் நானும் (48)

இசையும் நானும் (48)

இசையும் நானும் (48)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய  48 வது காணொளி.

மவுதார்கன் இசை 

தமிழ் பாடல்.

"முரளீதர  கோபாலா " என்னும் இனிமையான 
பிரபலமான பாடல். 

பெரியசாமி தூரன் அவர்கள் இயற்றியது.

காணொளி இணைப்பு.

http://www.youtube.com/attribution_link?a=7RGUQCASSS4&u=/watch%3Fv%3DLO0r6IiuRok%26feature%3Dem-upload_owner"https://www.youtube.com/embed/LO0r6IiuRok

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

இசையும் நானும்(47)

இசையும் நானும்(47)

என்னுடைய இசையும் நானும் தொடரில் 
47 வது காணொளி 
மவுதார்கன் இசை 

இந்தியன் திரைப்படத்தில் வரும் 
பச்சைக் கிளிகள் தோளோடு 
என்ற இனிமையான பாடல். 

Radha Narayanan's photo.

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூரானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

இசை காணொளி இணைப்பு:

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஜே.கே யின் சிந்தனைகள்...

ஜே.கே யின் சிந்தனைகள்...


Image result for j.krishnamurti



1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள்
இல்லையென்று நினைத்து விடாதே”>>

2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான
நேரம் தெரியும். இரு கடிகாரம்
கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம்
தான்.>>

3) எங்கே விழுந்தாயென பார்க்காதே,
எங்கே வழுக்கினாயென பார்.>>

4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட,
முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.>>

5) நீ சொல்வதை வேண்டுமானால்
சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ
செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.>

6) முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு.
ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால்
யாராவது உதவுவார்கள்..>>

7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?
இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.>>

8) ”ஒரு மலரையோ, ஒரு பட்டுப்
பூச்சியையோ அதன் தோற்றத்தைக்
கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால்
மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட
இயலாது!”>>

9) வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் - நழுவ
விடாதிருங்கள் ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள் ஒரு சோகம் -
தாங்கிக்கொள்ளுங்கள் ஒரு போராட்டம் -
வென்றுகாட்டுங்கள் ஒரு பயணம் -
நடத்தி முடியுங்கள்>

10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில்
அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்
!!! பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில்
முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!>>

11) நாம் ஒருவருக்கொருவர்ஒரு ரூபாய்
கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய்
தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர்
ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம்
இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள்இருக்கும்>>

12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.

13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல்
போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக*கிடைத்தே தீரும்..

நன்றி-Courtesy:Sri.GS.Dattatreyan

அகத்தில் இருக்கும் அவனை அறிந்துகொள்

அகத்தில் இருக்கும் அவனை அறிந்துகொள் 




                                                                        ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்


நான் உன்னுள்ளே இருக்கிறேன் !

எங்கும் நிறைந்த இறைவன்
அறிவே வடிவானவன்

அவனை அறிந்துகொள் என்பதை
நமக்கு உணர்த்தவே அவன்
"ஹரி" என்று பெயர் கொண்டான்

மனதின் எழும் எண்ணங்கள்
போடும் இரைச்சல்கள் அவன்
நம்மை அழைக்கும் குரலை
கேட்கவிடாமல் செய்துவிட்டது

மனதில் குவிந்துள்ள எண்ணங்களை
எட்டி வெளியே தள்ளிவிட்டால்
பெட்டிப் பாம்பாய் மனம் அடங்கிவிடும்

மூலாதாரத்தில் அடங்கியுள்ள
குண்டலினி பாம்பு தன் குருநாதனை
அடைய தானே மேல்நோக்கி
தன் பயணத்தை தொடங்கும்


Image result for dakshinamurthy

அகத்தில் இருக்கும் அவனை
அறிந்துகொள்ளவே அந்த
ஆதி சங்கரன் மௌன மொழியை
விழி மூடி அவனையே தியானித்திருந்த
நால்வருக்கு மொழியாமல் மொழிந்தான்

ஆனால் எப்போதும் விழி திறந்து
உலக மோகத்திலே மூழ்கி
அறியாமை சேற்றில் கிடந்த
நம்மைப் போன்ற பேதைகளுக்காக
மறைகளிலே மறைந்து கிடந்த
உண்மைகளை கண்ணன்
கீதையை அளித்து மறைந்தான்


Image result for geethopadesam

இந்நாளில் அவன் அறிவுரைகளை
செவிமடுப்போம். செம்மையான
வாழ்வு  வாழ்ந்து சீலத்தை அடைவோம்.

images courtesy-google images

வியாழன், 3 செப்டம்பர், 2015

மனம் என்னும் மாய சக்தி மகேஸ்வரியின் அற்புத சக்தி

மனம் என்னும் மாய சக்தி
மகேஸ்வரியின் அற்புத சக்தி




அடைய முடியாதது 
என்று ஏதேனும் உண்டோ ?





கணினி ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

தன்  பக்தனின் அன்பால் கட்டுண்டு
பிடி அவலை உண்ட கண்ணனையும்
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி
வாங்கிய  முக்கண்ணனையும்
முக்காலமும் நினைப்பவர்தம்

வாழ்வில் இல்லாமையும்
இயலாமையும் வந்திடுமோ?


அருணனை   நெஞ்சிலே  வைத்தான்
திருச்சுழி  வெங்கடராமன் -
அவன் தலை சுழி மாறி பிஞ்சிலேயே
பழுத்து முருகனின் ஞானப்  பழமானான்.



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


அரம்பையர் மோகத்தில் சிக்கிய
அருணகிரியோ அகிலமே  போற்றும்
அருணனின் மைந்தன் குமரனை துதித்து
பாடி அழியாப் புகழடைந்தான்


மனம் என்னும் மாய சக்தி
மகேஸ்வரியின் அற்புத சக்தி




ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

முடியும்  என்பாரின் பிடியில் சிக்கும் சக்தி
முயற்சிகளை திருவினையாக்கும் சக்தி
முக்தியை தரும் சக்தி

முகுந்தனோடு இணைக்கும் சக்தி
தாளினை சிந்திப்போம் .


மனமிருந்தால் மகிழ்ச்சியாக வாழ
மார்கமுண்டு இவ்வுலக வாழ்வில்

மனமிறந்தாலோ மகேசனைக் கண்டு
மாறா இன்பம் பெற்றிட வழியுண்டு

இந்த உண்மைதனை உணர்ந்திடுவோம்
சீலமுடன் சிறப்புற   வாழ்வோம்
இவ்வுலகில் வாழும் காலம் வரை.

புதன், 2 செப்டம்பர், 2015

இசையும் நானும் (46)

இசையும் நானும் (46)

இசையும் நானும் (46)

இசையும் நானும் என்னும் தொடரில் 
என்னுடைய 46 வது காணொளி.

மவுதார்கன் இசை 

பத்மஸ்ரீ டி .எம். சவுந்திரராஜன் பாடி பிரபலமாகிய 
முருகன்  பாடல் 


                                                           ஓவியம்-தி.ஆர்.பட்டாபிராமன் 


காணொளி இணைப்பு 



செவ்வாய், 1 செப்டம்பர், 2015

இசையும் நானும் (44)

இசையும் நானும் (44)

இசையும் நானும் (44)

இசையும் நானும் என்னும்
இத்தொடரில் என்னுடைய4
44 வது பாடல்.

மவுத்தார்கன் இசையில்

தெய்வ மகன் திரைப்படத்தில் வரும்

 "கேட்டதும் கொடுப்பவனே "
ன்ற அருமையான பாடல்.


வீடியோ  காணொளி. இணைப்பு.


https://youtu.be/GRK1CzaLq3g