புதன், 19 மார்ச், 2014

வண்ணக் கிளி




வண்ணக் கிளி 

வண்ணக் கிளி அழகோ அழகு

ஆனால் கிளி சொல்லும் கதையோ வேறு
அது என்னவாக இருக்கும்?
நீங்களே சொல்லுங்கள்.





https://www.facebook.com/Kadhambam/photos/a.363481737044604.73807372.363469940379117/660298000696308/?type=1&theater

செவ்வாய், 11 மார்ச், 2014

ஆர்வம் இருந்தால் போதுமே!

ஆர்வம் இருந்தால் போதுமே!

Acoustic Drum Sets
ஆர்வம் இருந்தால் போதுமே
அகிலத்தையும் கட்டி ஆளலாம்

மகாபாரதத்தில் ஏகலைவன்
துரோணரை மானசீக குருவாகக் கொண்டான்
அவர் சீடன் அர்ஜுனனையும் மிஞ்சி நின்றான்.

இந்தஇணைப்பில் உள்ள
காணொளியைக்  காணுங்கள்.

ஆர்வமும் முயற்சியும் இருந்தால்போதும்
நினைத்ததை சாதிக்க முடியும்
என்பதை நீங்களே உணருவீர்கள்.

இந்த சிறுவனின் அபாரத் திறமையை
கண்டு மகிழுங்கள்.


https://www.facebook.com/photo.php?v=654261971299911&set=vb.363469940379117&type=2&theater

புதன், 5 மார்ச், 2014

இந்த படத்தில் உள்ளது என்ன?


இந்த படத்தில் உள்ளது என்ன?

தெரிந்தால் சொல்லவும்.




பதில் நாளை -நாளை எதற்கு இப்போதே



செவ்வாய், 4 மார்ச், 2014

இது படைப்பாளிகளின் உலகம் (3)

இது படைப்பாளிகளின் உலகம் (3)

இது படைப்பாளிகளின் உலகம் (3)


கரையும் சோப்பில்  கலை வண்ணம்.

உடல்  முதல் குடல் வரை
தலை முதல் பாதம் வரை
ஆடை முதல் ஹாஸ்பிடல் வரை
எல்லாவற்றையும் சுத்தம்  செய்ய
சோப்பை பயன்படுத்துகிறோம்.
அது நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது.

அதற்காக பல ஆயிரங்களை
ஆண்டுதோறும் செலவிடுகிறோம்.

60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோப்பின்
விலை வெறும் 25 காசுகள். இன்றோ
சில நாள் மட்டுமே பயன்படும் ஒரு சோப்பின் விலை
25 ரூபாய்க்குமேல்.



சோப்பை கரைத்து  கரைத்து நம் கைக் காசுகரைந்து போய்க்கொண்டிருக்கிறது.

அது ஒரு பக்கம் இருக்க அதில் கண்கவர் வடிவங்களையும்
கலை படைப்புகளையும் உருவாக்கியுள்ளனர் கலைஞர்கள்.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.
கண்டு ரசித்து மகிழுங்கள்.































நன்றி -படங்கள்-கூகிள் 

திங்கள், 3 மார்ச், 2014

நாளை நமதே என்பது சரியா?

நாளை நமதே  என்பது சரியா? 

நாளை நமதே என்கிறார்கள்.

அப்படி சொல்வது
எந்தவிதத்தில் சரி என்று
புரியவில்லை

அடுத்த கணம் என்ன நடக்கும்
யார் உயிருடன் இருப்பார்கள்
என்பதை அறிய இயலாத
இந்த மனிதர்கள்  நாளை நமதே
என்று நம்பி ஏமாந்துகொண்டிருக்கிரார்கள் .

நமது என்று எதைச் சொல்லவேண்டும்
என்றால் இந்த கணம்தான் நம் கையில்
உள்ளது ,

அடுத்த கணம் ஏதாவது ஒரு பூதகணமாகதான்
போக நேரிடும்.

அதனால்தான் எதை செய்ய
வேண்டுமென்றாலும்
ஒன்றே செய், நன்றே செய்
அதை இன்றே செய், இப்போதே செய்,
இந்தக் கணமே செய் என்பார்கள் அறிவுடையோர்

நல்ல  செயல்களை நாளை நாளை
என்று தள்ளிப் போடுவதால்
அந்த வேலை என்றும்
நிகழப்போவதில்லை.

நாளை நாளை என்று கடமைகளை
தட்டிக் கழிப்பவனின் வாழ்க்கை
தோல்வியைத்தான் தழுவும்

மனதில் தெளிவில்லாதவன்தான்
எல்லாவற்றையும் தள்ளிப் போடுவான்

எனவே எந்த செயலை செய்யவேண்டுமென்றாலும்
அதைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்துகொண்டு
கால தாமதமில்லாமல் செய்பவனே
வாழ்வில் வெற்றி பெறுவான்.

காலம் ஓடிக்கொண்டே இருக்கும்.
அது யாருக்காககவும்  காத்து கிடக்காது

எதற்கெடுத்தாலும் இப்போது நேரம் இல்லை
என்று சோம்பி திரிபவன் வாழ்வில்
 முன்னேற்றம் அடையமுடியாது

அறிவுள்ளவன் கிடைக்கின்ற
வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுவான்.

எனவே நாளை நமதே என்று
இன்று சோம்பிக் கிடந்தால்
நாளை நம்முடையதாக  நிச்சயம் இருக்காது.
அது மற்றவ்ர்களுடையதாக்வே தான் இருக்கும்.

சனி, 1 மார்ச், 2014

இது படைப்பாளிகளின் உலகம் (2)

இது படைப்பாளிகளின் உலகம் (2)

இது படைப்பாளிகளின் உலகம் (2)


காகிதத்தில் கலை வண்ணம்.

காகிதம் எதற்கு பயன்படும்?
கடிதம் எழுத,
படம் வரைய என
எத்தனையோ பயன்பாடுகள்.


நாம் காகிதத்தை பயன்படுத்துவதை விட
அதில் கிறுக்கி கிறுக்கி ,சுருட்டி, கசக்கி
குப்பையில் வீசுபவர்கள்தான் அதிகம் .

இன்னும் சிலர் தங்கள் கோபத்தை காட்ட
 காகிதத்தை  சுக்கு நூறாக்கி
கிழித்து போடுவதில்
அதிக ஆவம் காட்டுவார்கள்

இன்னும் சிலர் அதைதீக்கு
இரையாக்குவார்கள்

சிலர் அதை கரையானுக்கு
உணவாகப்  போடுவார்கள்.

ஆனால் எதைக் கண்டாலும் அதை
கலைக் கண்ணோடு பார்ப்பவர்கள் வெகு சிலரே.

அப்படி  எதையுமே வித்தியாசமாக சிந்திபவர்கள்தான்
உலகின் கவனத்தை  கவர்கின்றார்கள்

காகிதத்தில் கண் கவர் படைப்புகளை
செய்யும் கலைஞர்கள் உலகெங்கும் உள்ளனர்.

அவர்களின் சில படைப்புகள்
உங்கள் பார்வைக்கு.

கண்டு மகிழுங்கள். இனிமேல் காகிதத்தை
மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள்.
புதிது புதிதாய் படைப்புகள் தோன்றும்.





















படங்கள்-நன்றி-கூகிள் 

இது படைப்பாளிகளின் உலகம் (1)

இது படைப்பாளிகளின் உலகம் (1)

ஆம் இது படைப்பாளிகளின் உலகம்

கம்பியில் கைவண்ணம் 

படைப்புக்களை அழிப்பதற்கென்றே
ஒரு கூட்டம் இந்த உலகில்
அங்குமிங்கும் அலைந்து
திரிந்து கொண்டிருந்தாலும்
அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்
தங்கள் படைப்புக்களை விட்டு
சென்றுகொண்டே
இருக்கிறது ஒரு கூட்டம்.

படைப்பாளிகளுக்கு கையில் எது கிடைத்தாலும்
அதில் ஒரு படைப்பை உருவாக்கிவிடுவான்போலும்.

அப்படிப்பட்ட சில அசாதாரணமான சில படைப்புகளை நாம் கண்டு மகிழ்வோம்.

ஆம் கம்பிகளிலிருந்து படைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன
















மேலே கண்டதைப்போல் ஏராளம்

ஆர்வம் இருப்போர் வீணாகும் கம்பிகளைக்  கொண்டு
பல புதிய படைப்புகளைப் படைக்கலாம்

இன்னும் வரும்.

நன்றி கூகிள் -படங்கள்.