வெள்ளி, 10 ஜனவரி, 2014

சித்திரமும் கைபழக்கம் என்பார்கள்

சித்திரமும் 
கைபழக்கம்  என்பார்கள்

சித்திரமும்
கைபழக்கம்  என்பார்கள்

ஆனால் கைகளே இல்லாத இந்த மனிதருக்கு
வாய்தான் பழக்கமாய் இருக்க முடியும் .



வாயில் ப்ருஷை பிடித்து
ஓவியம் வரைவதைப் பார்த்து ரசியுங்கள்.

இரண்டு கைகளை இறைவன் நன்றாக அளித்திருந்தும்
அதை பயன்படுத்தி உழைக்காது பிச்சை எடுக்கும் சோம்பேறிகளும்,
திருட்டு தொழில் செய்து வயிற்றைக் கழுவும்  ஈனப்பிறவிகளும் ,
கைகளைக் கொண்டு லஞ்சம் வாங்கி
சொத்து சேர்க்கும் ஜன்மங்களும் திருந்தட்டும்

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை
என்பதை செய்கையில் காட்டும்
இந்த மனிதரைப் பாராட்டுவோம்.


https://www.facebook.com/photo.php?fbid=622217187827487&set=a.453214531394421.93932.453205841395290&type=1

வியாழன், 9 ஜனவரி, 2014

யார் இந்த பெண் தெய்வம்?


யார் இந்த பெண் தெய்வம்? 


யார் இந்த பெண் தெய்வம்?
இருமுடி கட்ட தயாராகுங்கள்

விரதம் இருந்து வரங்களைப் பெற தயாராகுங்கள்
பாத யாத்திரை செய்ய தயாராகுங்கள்.

விரைவில் போற்றி மாலை
துதிகள் வெளியிடப்படும்.

கசங்கிய காகிதகசங்கிய காகிதம் ம்


கசங்கிய காகிதம் 





கசக்கப்பட்டால்  தூர
குப்பையில் விசிறி எறியப்படும் காகிதம்

ஆனால் முயற்சிசெய்தால்
கலை படைப்புகளை உருவாக்கலாம்.
சில உதாரணங்கள்.



அழகிய வேலைப்பாடு


பூட்டு சாவி வைக்கும் கூடை 



பேப்பர் கப் 

ஆனால் விஞ்ஞானத்தின் துணை
என்ன வேண்டுமானாலும் நிகழ்த்திக் கட்டலாம்
என்பதை விளக்கும் காணொளி

கண்டு மகிழுங்கள்.




https://www.facebook.com/photo.php?v=627807657278676

புதன், 8 ஜனவரி, 2014

புகை பிடிக்கும் இந்திய பெண்கள்


புகை பிடிக்கும் இந்திய பெண்கள் 


நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

உலக அளவில் இந்திய பெண்கள்தான்
அதிக அளவில்புகை  பிடிக்கிறார்கள் என்று
இன்று செய்தி வெளியாகி உள்ளது.

அரசு புகை பிடித்தால் புற்று நோய் வரும்
என்று விளம்பரம் செய்கிறது.

மார்பக புற்று நோயாலும், கர்ப்ப பை புற்று நோயாலும்
இன்று லட்சக்கணக்கான பெண்கள்
உயிரோடு மரணத்தின் கொடுமையை அனுபவிப்பதைக்
கண்டும் இவர் போன்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது தற்கொலைக்கு சமானமானது அன்றி வேறு என்ன ?

ஆனால் நாகரீகம் என்ற பெயரில்
அனைத்தையும் காற்றில் பறக்க விட்ட
 நம் நாட்டு பெண்கள் தற்போது புகையையும்
பறக்க விடத் தொடங்கி விட்டார்கள்

அவர்கள் புகை பிடித்து நாசமாகப்
போகட்டும் அவர்களை
யாரும் திருத்த முடியாது.

அவர்கள் நம் நாட்டின்
எதிர்கால சந்ததிகளை உருவாக்கும்
முக்கிய பொறுப்பை இறைவன்
அவர்களுக்கு தந்திருக்கிறான்.

 அவர்கள் வயிற்றில் வளரும் பிஞ்சுகள் பிறக்கும்போதே மனதில் புகை பிடிக்கும் கொடிய பழக்கம் பதிவாக பதிய வழி வகுக்கவும் உடலிலும் நிகோடின் என்னும் நஞ்சு கலந்து அவர்களுக்கு உருவாகும் குழந்தைகள் பிறக்கும்போதே பலவிதமான உடற்குறைபாடுகளுடனும், மூளை செயல்பாட்டு குறைபாடுகளுடன் பிறக்கும் என்று அறிந்தும் தவறு செய்யும் இவர்களை யார் திருத்த்வது?


கடவுள்தான் இவர்களுக்கு
நல்ல  புத்தி அளிக்க வேண்டும்.

படம்-தகவல் -ஒன் இந்தியா-செய்தி வலைத்தளம். 

திங்கள், 6 ஜனவரி, 2014

அபர காரியங்கள்

அபர  காரியங்கள் 



கருமாந்திரம் என்ற
சொல் அமங்கலமா?

சமீபத்தில் ஒரு
வலைப்பதிவு பார்த்தேன்

அதன்தலைப்பு காசு கொடுத்து
கருமாந்திரங்களை தரும்
இணையதளம் அல்ல என்றும்
இலவசமாக பல்சுவை
தகவல்களை தந்து உங்கள் இதயங்களை
கொள்ளைடிக்கும் இணையதளம்
என்று தலைப்பை இடப்பட்டிருக்கிறது.

அந்த தலைப்பே கருமாந்திரம் என்ற சொல்
ஒரு இழிவான பொருளை தரும் சொல்
என்பது போலவும் அந்த துறையில்
ஈடுபட்டுள்ள ஒரு இனத்தவரின் மீது
காழ்ப்புணர்ச்சியை காட்டும் முகமாகத்தான்
அமைக்கப்பட்டிருக்கிறது என்பது
அனைவரும் அறிந்ததே

ஆனால் உண்மையில்
இந்த கருமாந்திர தொழிலில்
பல்லாயிரக்கணக்கான்
மனிதர்களும்
வெவ்வேறு பிரிவு மதம்
இனத்தை சேர்ந்தவர்கள்
ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட
சமுதாயம் செய்யும் செயலை
மட்டும் பிரித்து அவர்கள்தான்
அனைத்திற்கும் காரணம் என்று
என்றோஎழுதப்பட்டு
தற்போது நடைமுறையில்
இல்லாத விஷயங்களோடு
ஒப்பிட்டு நோக்கி
ஆனந்தப்படுவது
ஒரு சிலரின் சுதந்திரம்

அதில் யாரும்
தலையிடவேண்டாம்.
அவர்கள் அப்படியே
இருக்கட்டும்
.
இப்போது இந்த கட்டுரை
இந்த கருமாந்திரத்தை பற்றி
ஆராய்வதுதான் நோக்கம்.

நாம் வாழும் இந்த
பூமி கரும பூமி.

இந்த உலகில் பிறந்த
எந்த உயிரும் சும்மா
இருக்க முடியாது.

 பிறந்ததிலிருந்து
இறக்கும் வரை ஏதாவது
ஒரு கர்மாவை அதாவது
செயலை செய்து கொண்டுதான்
இருக்கவேண்டும். .

எந்த செயலை செய்யவேண்டும்
என்றாலும் அதற்க்கு
மனம் திறனுடையதாக
இருக்கவேண்டும். அதை
திறனுடையதாக செய்வதற்கு
உதவுபவைகள்தான்
இந்த மந்திரம் என்பது.

பொதுவாக இறப்பு
தொடர்பான கர்மங்களை.
கர்மாந்திரம் என்று அழைக்கிறோம்.
அதை அமங்கலமாகவும்
அதை செய்பவர்களை
 மட்டமாகவும் நினைக்கிறது
இந்த நன்றி கெட்ட உலகம்.

துன்பத்திலும், துக்கத்திலும்
துயரத்திலும் வீழ்ந்து என்ன
செய்வதென்றறியாது குழப்பத்தில்
ஆழ்ந்துபோயிருக்கும் மக்களை மீட்டு
அவர்களின் துன்பசுமையை
படிப்படியாக குறைத்து
அவர்களை மீண்டும்
வாழ்க்கை பயணத்தை
தொடர உதவும் இந்த
துறையில் இருப்பவர்களை
மனம் திறந்து பாராட்டவேண்டும்.
ஆனால் மாறாக அவர்களை
பழித்துரைக்கின்றனர்.

எந்த துறையிலும்
அயோக்கியர்கள் உண்டு.

அதேபோல்தான்
இந்த துறையிலும்.
கிடைத்தவரை சுருட்டுவது.

புதுப்படம் வரும்போது கருப்புசந்தையில்
பலமடங்கு காசு கொடுக்க தயங்குவதில்லை.
எவ்வளவு விலை விற்றாலும்
குடிப்பதற்கு காசு செலவு செய்ய
தயங்குவதில்லை இந்த மனிதர்கள்.
இதுபோல் ஏராளம்.

இன்று இன்று மன நல மருத்துவர்கள்
மருத்துவ மனைகள்
நகை மோசடிகள்
பன்னாட்டு வியாபாரிகள்
,மதவாதிகள், மந்திரவாதிகள்,
போலிசாமியார்கள், நிதி,நிலமோசடி,
கள்ளகடத்தல், போதை கும்பல்கள்
காம வியாபாரிகள், தொலைகாட்சிகள்
அரசியல்வாதிகள்
பலவிதமான கொள்ளையர்கள்
கேடிகள் இவர்களை விடவா
இந்த துறையில் இருப்பவர்கள்
மக்களை ஏமாற்றிவிட
போகிறார்கள்?

சிந்திக்கவேண்டும்.
எதிர்ப்பில்லை என்று தொடர்ந்து
ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது.
 இன்றுமட்டுமல்ல
அது உலகம் தோன்றிய நாள்
முதலிருந்து உண்டு.

ஒரு மனிதன் மற்றொருவனை
இழிவுபடுத்துவது அகந்தையின்பால்
பட்டதே  ஒழியே மற்ற
எந்த காரணத்தையும் சார்ந்தது
அல்லஎன்பதே உண்மை.

கல்வி மனிதனின் வாழ்வின்
தரத்தை மேம்படுத்தலாமே அன்றி
நல்ல பண்புகளே அவன் வாழ்வை உயர்த்தும்.

இன்றைய கல்வி காசைச் செலவழித்து காசை 
சேர்க்க வழி காட்டும் கல்வி.

அதில் பணத்திற்கும் பதவிக்கும்தான் இடம் உண்டு.
பண்புக்கோ அன்புக்கோ அதில் இடம் கிடையாது. 

இன்று எந்த துறையை எடுத்தாலும்  அதில் ஆதிக்கமும், 
கிடைத்தவரை பிறரை ஏமாற்றியோ சூழ்நிலையை பயன்படுத்தியோ 
சுருட்டும் மனப்போக்குதான் நிலவுகிறது. இந்த துறையிலும் அதுபோன்ற நிலை உள்ளது .



இந்த துறையை மட்டும் தனிமைப்படுத்தி குறை கூறாமல் இதிலுள்ள குறைபாடுகளை அனைவரும் சேர்ந்து ஒழுங்குபடுத்தினால் அனைவருக்கும் நன்மை பயக்கும். அதற்க்கு பொதுநல சங்கங்கள் கூடி பேசி ஒரு நல்ல முடிவைக் காணுதல் அவசியம். 






மேல்நாட்டு மோகம் ஒழியட்டும்.

மேல்நாட்டு மோகம் ஒழியட்டும். 

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி  செய்யப்பட்ட 
மெழுகு மற்றும் ரசாயனம் பூசப்பட்டு 
நாம் நாட்டில் விற்கப்படும் 
ஆப்பில் பழங்களை உண்ணாதீர். 

அவைகளில் சத்தும் இல்லை 
சாரும் இல்லை 

நம் நாட்டு மக்கள் தேவையில்லாமல் 
அதிக விலை கொடுத்து அதை வாங்கி 
தன் உடல்நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.

நம் நாட்டில் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கேற்ற 
அந்தந்த பகுதிகளில் ஏராளமான் வகையான சுவையான  கனிகள் விளைகின்றன. 
அவைகள் விலை மலிவானவை. சத்து மிக்கவை. 
அவைகளை அந்தாத கால கட்டங்களில் உண்ணுங்கள்.
 நம்முடைய உடல் நலம்நன்றாக இருக்கும். 

நாளொன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் 
மருத்துவரை தொலைவில் வைக்கலாம் 
என்பது ஒரு பொய்ப் பிரசாரம்

இன்று ஆப்பிள் கிலோ 160 ரூபாய்க்கு 

குறையாமல் விற்கப்படுகிறது. ஒரு கிலோ ஆப்பிளில் 
அதன் தோல் மற்றும் நடுப்பகுதி 
என 250 கிராமுக்கு மேல் வீணாகி விடும்

மக்களுக்கு கிடைக்கும் ஆப்பிள்கள் அனைத்தும் 

குறைந்தது மரத்திலிருந்து பறிக்கப்பட்டு குறைந்தது 
30 நாட்கள் கழித்துதான் கிடைக்கிறது. 
அதில் வெறும் மாவு சத்துதான் இருக்கிறது.

அதுவும் வெளிநாட்டிலிருந்து வரும் ஆப்பிள்களில் 

மெழுகு மற்றும் ரசாயனம் பூசப்படுகிறது.
அது பறித்து எத்தனை மாதங்கள் ஆகியதோ அந்த 
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
 ஒன்றும் அறியாத மக்கள் 
அதை அப்படியே உண்கின்றனர். 



நம் நாட்டில் கிடைக்கும், நெல்லிக்காய், 
கொய்யா, சப்போட்டா, ஆரஞ்ச் பலவிதமான 




வாழைப்பழங்கள்,




 மாங்கனிகள், பலாப்பழம் சீதாப்பழம், 
வெள்ளரிபழம், கிருநிபழம், பப்பாளி பழம், எளிமிச்சை, 
சாத்துக்குடி, என ஏராளமான பல வகையான பழங்கள், 
சத்து மிகுந்தவை, மலிவானவை. 
அவைகளை சாப்பிட்டு 
ஆரோக்கியமாக  வாழுங்கள். 

வெளிநாட்டில் ஆப்பிள்களை கொதிக்கும் மெழுகில் இட்டு 
மெழுகு பூசும் காநோளியைக் காணுங்கள். 
அதைக் கண்ட பிறகாவது மனம் திருந்துங்கள். 

https://www.facebook.com/photo.php?v=578186105592548

திருந்தினால் நம் நம் நாட்டிற்கும் உங்களுக்கும் நல்லது. 

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

இந்த அப்பாவி பறவையின் மரணத்திற்கு யார் காரணம்?

இந்த அப்பாவி பறவையின் மரணத்திற்கு யார் காரணம்? 

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்
ஒரு பறவை உட்கார்ந்திருக்கிறது
அருகே ஒரு பறவை மாண்டு கிடக்கிறது










இதற்க்கு யார் காரணம் ?
சிலர் விதி என்பார்.
அதன் ஆயுள் முடிந்துவிட்டது.
அதனால் மடிந்து விட்டது என்பார்.

பிறந்த எல்லா உயிரும்
மடியத்தான் வேண்டும் ஒருநாள்.

ஆனால் இந்த சிறிய அழகான,
வண்ண வண்ண சிறகுகளுடன் சிறகடித்து திரிந்த
பறவை மாண்டதற்கு பொறுப்பற்ற மனிதர்கள்தான்
 காரணம் என்றால் அது மிகையாது.

சிறுவர்களும் பெரியவர்களும் (chewingGum)மென்று சப்பிவிட்டு போட்ட சுயிங்கம்தான் அதன் உயிரை குடித்தது.
ஏதோ உணவு பொருளென்று அலகால் கொத்தி தின்றதும்
அதன் வாய் ஒட்டிக்கொண்டது.
உண்ண முடியாமல் நீரருந்த முடியாமல் மாண்டு போயிற்று.

இனிமேலாவது மனிதர்களே சுயிங்கத்தை
கண்ட இடங்களில் எறிந்து
ஒரு அப்பாவி பறவையின் உயிரை பறிக்க
துணையாக இருக்காதீர்கள்.

மூலம்-கதம்பம் -முகநூல்