ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

தமிழ் மொழியில் எண்களை எழுதுவது எப்படி?

தமிழ் மொழியில்  எண்களை  
எழுதுவது எப்படி?

இதோ எளிதான வழி .
அது சரி
அதை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது?

இனி படியுங்கள்..

எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?

""பத்தாம் வகுப்புப் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், தமிழ்ப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-இல் இருந்து 0 வரை உள்ள எண்களைத் தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது. எனக்கு அது தெரியாது என்பதால் அப்பெண்ணிடமே கேட்டேன்.

உடனே அப்பெண், "1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ,0' என்ற எண்ணுக்கு முறையே, "க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, 0' என்றாள்.

""இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?'' எனக் கேட்டேன். அத்தமிழ் எழுத்துகளை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாகக் கூறினாள். அதாவது, "க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சி, "சா'ப்பிட்டேன், "எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றேன்.


இந்த தகவலை எனக்கு மின்னஞ்சல் மூலம் முக நூலிலிருந்து மோப்பம்  பிடித்து அனுப்பியவர். Varagooran NarayananVaragooran Narayanan

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

Beware! GOD is watching

Beware! GOD is watching 





Heart is a temple
Everyone must allow GOD only
to reside in that holy place
and not the ego which
destroys our inner peace


Only lamp of love and wisdom  should be lighted
to radiate to remove the darkness of ignorance
and the evil thoughts of anger and jealousy
should not be allowed to burn our heart
leading to destruction and despair


Fragrant flowers with devotion and love  alone
should be garlanded to the deity at heart and
not any other artificial flowers of lust and pomp and publicity

The fragrance that emanates from the temple
delights the soul and spreads devotion all over



Let the heart overflow with love
love towards God in turn flows towards entire
God's creation and jealousy has no place
in the altar of GOD at heart


Peace should prevail before the shrine of God
which results in never ending happiness
in turn flows outside each person which
bring peace in the people around you
and the world you live


Whether one knows it or,
God resides within the heart of everyone
he takes care of all devotees
and attends to their welfare and also
watches each and every thought
whether good or bad



He who perceives this truth never think ill of others
and harm others by word and deed


But who fails to realize this truth
commits sins often and
land themselves in sufferings and
endless miseries in their life

those who realize this truth
are living in peace and happy in their life
in any situations unaffected by them

Beware all our actions are under
constant watch by GOD
within us and the GOD's forces around us


Those who commits wrong will never
go without being punished as the GOD will always wait
and watch whether the person repents for his wrong doing and correct

courtesy-google images

வியாழன், 5 செப்டம்பர், 2013

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா அல்லது மக்களுக்கா?

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா அல்லது மக்களுக்கா?

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா 
அல்லது மக்களுக்கா?

The Government is for the people 

of the people 

by the people.


But what is the reality ?

But nowadays the government is 
buying the people by distributing freebies
during election and run the government 
after winning the election 
with the same technique
 .
This is followed by all 
successive governments
in all the states in India 
with increased freebies at the
cost of taxpayers and 
law abiding citizens.

The so called poor who receive the 
maximum benefits are not contributing 
to the society as expected.
and improve their way of life 

Because they receive everything free 
they waste their precious earnings 
on liquor ,and destroys their family and 
they continue to live on poverty
and then starts blaming the government.

Under the influence of liquor
they indulge in all sort of anti-social
activities. and causing nuisance to
the law abiding citizens. 

TV channels ,cinemas, politicians 
always keep the masses under their 
control by brainwashing and changed their character
to blindly follow them for their selfish ends.

This bad practice has spread all over India like a decease
Masses are always emotional in approach and react to
any small incident provoked by the anti social elements 
and politicians and religious fanatics engage
themselves in destroying public properties and creating
social unrest between castes and religious followers.

The riches become richer and the poor becomes poorer 
thus the gap between them is widened day by day 

Haves and havenots gave way to corruption, 
exploitation  ,increase of anti social activities 
which make the  governments cannot go with their 
developments.

Their energy and resources are forcibly wasted 
in controlling useless agitations, arson and looting 
by anti social element triggered by selfish political and religious fanatics.

Due to wrong policies of governments. unemployment, poverty prevailing all over the world causing unrest in the 
minds of people resorting to agitations ,protests,creating unrest.by suppressing the feelings of the people the governments are waging war against their own people and kill the innocents mercilessly in many parts of the world. 

Any  type of government whether it is dictatorship or democratic ,if they fail to serve people to improve their living condition will not survive. 

But it has become a distant dream now. 

.
This situation should be changed 
for the welfare of all 

GOD alone can save this planet and its people 
in this situation. 

சுத்தம் தான் கடவுள்

சுத்தம் தான் கடவுள்


சுத்தம் தான் கடவுள்



















அசுத்தம் அவலத்தில் தான் போய் முடியும் 

இன்று தமிழ் நாட்டில் சுத்தம் இருக்கிறதா? 

பதில் இன்று தமிழ் நாட்டில் மக்கள் அசுத்தம் 
செய்யாத இடம் ஒன்று இருக்கிறதா என்று 
உருபெருக்கி கண்ணாடி கொண்டுதான் பார்க்கவேண்டும்.
அந்த அளவிற்கு மக்கள் அசுத்தம் செய்யாத இடமே இல்லை

அரசுகள் கழிப்பிடம் கட்டி கொடுத்தால் அதன் உள்ளேயும் வெளியேயும் அசுத்தம் செய்து அதை பயன் படுத்த முடியாத நிலைக்கும் கொண்டு வருவதில் நீ நான் என போட்டி போட்டு கொண்டு செயல்படுவதில் இவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படவேண்டும்

அதில் உள்ள குழாய்கள், கதவுகள், மின் மோட்டார்(இருந்தால்) ,விளக்குகளை திருடி அதை காயலான் கடைக்குபோட்டு அதில் வரும் காசை கொண்டு குவார்ட்டர் அடித்து மகிழும் ஈன பிறவிகள். 

சாலை ஓரங்களாகட்டும்,ஏரி மற்றும் குளம், கடற்கரைகளாகட்டும் ஆடுமாடுகளைபோல் கழிந்தும் சிறுநீர் கழித்தும் அசிங்கப்படுத்துவதில் இவர்களுக்கு நிகர் உலகில் யாரும் இருக்கமுடியாது
.
ஒரு கட்டிடத்தின் சுற்று சுவர் கிடைத்தால் போதும் அது பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, மருத்துவ மனையாக இருந்தாலும் சரி, ஏன் கோயிலாக இருந்தாலும் சரி. அது அவர்களுக்கு கட்டணமில்லா கழிப்பிடம் ,சிறுநீர் கழிக்கவும் எச்சில் துப்பவும் செய்யாமல் இருக்க முடியாது.

பல ஆயிரம்மக்கள் புழங்கும், பேருந்துநிலையங்கள், ரயில் நிலையங்கள் திரையரங்குகள், கண்காட்சி திடல்கள் ஆகியவற்றில் நாம் நுழையும்போது நம்மை வரவேற்ப்பது மூக்கை துளைக்கும் துர்நாற்றம்தான்.

அங்குதான் நமக்கு ஆரோகியத்தை தரும் (?) பழக்கடைகளும், காய்கறி கடைகளும் அப்படியே அசுத்தமான தரையில் போட்டு விற்கப்படும் அதை மக்கள் மலிவு விலையில் வாங்கி சென்று வாங்கி சென்று உண்டு நோயுற்று மருத்துவர்களுக்கு தண்டம் அழுது போலி மருந்துகளை வாங்கி விழுங்கி. நோய் தானாகவே போய்விடும், அல்லது அவர்கள் போய்விடுவார்கள் மருந்தினால் அல்ல என்பது கலப்படமற்ற உண்மை.

அரசுகள் கோடிக்கணக்கான் ரூபாய்களை கொட்டி கழிவு நீர் கால்வாய்களை அமைத்து கொடுத்தால் அதில் முதலில் குப்பைகளை கொட்டி அதை மூடுவதையே தங்கள் கொள்கையாக கொண்டுள்ள தமிழ் நாட்டு மக்கள் உருப்படுவது எவ்வாறு ?

பிளாஸ்டிக் பைகளையும் நாப்கின் களையும் தெருவில் வீசி எறிவதும் சக்காடையில் வீசி எறிவதும் அவர்களுக்கு கைவந்த கலை.
அதில் அசுத்தநீர் தேங்கி கொசுக்கள் கோடிக்கணக்கில் உற்பத்தியாகி அது போடும் ஊசிகளின்  வலியை  தாங்கமுடியாமல் கொசு விரட்டி திரவம்,புகை,என நஞ்சு கலந்த ரசாயநங்களுக்காக மாதாமாதம் நூற்றுக்கணக்கில் தண்டம் அழுது நுரையீரல், ஈரல் கெட்டு நிரந்தர நோயாளிகளாகி மாண்டு போவதுதான் கலாசாரம் .இதுவே அனைவருக்கும் வாடிக்கையாகிவிட்டது. 

எல்லாவற்றிற்கும் காரணம் சுத்தம் இல்லாமை தான் காரணம்.
இவர்களுக்கு யார் புரிய வைப்பது.?

தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிக்கும் இவர்களை யார் எழுப்புவது?
.
மழைக்காலத்தில் வரும் வெள்ளம்தான் அதன் பங்கிற்கு நாட்டை சுத்தம் செய்கிறது. அவ்வளவுதான். 

சென்றதினி மீளாது மூடரே

சென்றதினி மீளாது மூடரே

என்றான் மகாகவி பாரதி

சென்றதினி மீளாது மூடரே
என்றான் மகாகவி பாரதி



ஆனால் யார் அவன் பேச்சை கேட்கிறார்கள்?


அவன் பேச்சை கேட்டிருந்தால்
இன்று லட்சகணக்கான மன நோயாளிகள்
இந்த உலகில் உருவாகியிருப்பார்களா?
பல ஆயிரம் மனநல காப்பகங்களில்
உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும்
மக்கள் துன்பப்பட்டு கொண்டிருப்பார்களா?

மனநோயாளிகளை பேய் பிடித்தவர்கள் 
என்று பெயரிட்டு பலவிதமான கொடுமைகளுக்கு 
ஆளாக்கி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும்
மாந்திரீக வாதிகளுக்கு 
பிழைப்பு ஏற்பட்டிருக்குமா?

மனநோயாளிகள படும் துன்பமல்லாது 
அவர்களின் பெற்றோர்கள், உறவுகள் 
மற்றும் இந்த சமூகம் படும் பாடுகளுக்கு 
என்றுதான்முடிவு ?

அவர்களுக்கு மற்றவர்கள் கொடுக்கும் துன்பங்களும்
இழிவுபடுதுதலும் அவர்களை மென்மேலும்
 மீள முடியாத புதை குழியில்தள்ளி 
அவர்கள் வாழ்க்கை எதற்கும்
 பயனற்று போய்விடுகிறது
.
தேர்வில் தோல்வி, வியாபாரத்தில் தோல்வி,
காதலில் தோல்வி என பலவிதமான 
தோல்விகளில் சிக்கியவர்கள் 
அந்த நிகழ்விலிருந்து மீளாமல்
மன நோயாளிகளாக மாறி போதை, மது 
போன்றவற்றிற்கு அடிமையாகி
தங்களை அழித்துக்கொண்டு 
தங்களை சார்ந்தவர்களையும் 
துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள்

மன நோயாளிகளுக்கு மருத்துவ  உதவிகள் 
செய்வதை விட அவர்கள் உருவாகுவதை தடுக்க
சமூகமும் அரசும் முயற்சி எடுக்க வேண்டும்
குழந்தைகளின் இளமை பருவத்திலேயே 
மன நலம் காக்க ,தோல்விகளை   சமாளிக்க, 
பிரச்சினைகளை எதிர்கொள்ள,
பிரச்சினைகளை உணர்ச்சி பூர்வமாக
அணுகாமல் அறிவு  பூர்வமாக அணுகி 
அவைகளை வெற்றி கொள்ளும் வகையில்
பாட திட்டம் வகுக்க பட்டு பள்ளிகளில் 
கட்டாய பாடமாக்கபடவேண்டும் .

அவைகளை அனைத்து பள்ளிகளிலும்
எல்லா நிலைகளிலும் செயல்படுத்த
நடவடிக்கை  மேற்கொள்ளவேண்டியது 
காலத்தின் கட்டாயம். 

புதன், 28 ஆகஸ்ட், 2013

கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளை தேடி அலைகின்றார்

கருணை  மறந்தே  வாழ்கின்றார்
கடவுளை தேடி அலைகின்றார் 

மனிதர்கள் மற்றவர்களிடம்
கருணை காட்டுவதேயில்லை

ஆனாலும் அவர்கள் குற்றம்
புரிந்துவிட்டால்மட்டும்
அவர்களிடம்  மற்றவர்கள்
கருணை காட்டவேண்டும்
என்று எதிர்பார்க்கிறார்கள்.

அதே சமயத்தில் யாராவது அவர்களிடம்
 "நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன்"
என்று மன்றாடினால் அந்த கோரிக்கையை
அவர்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை.

மாறாக மன்னிப்பு என்பது
என் அகராதியிலேயே இல்லை.
எங்கள் பரம்பரையிலும்
அந்த வழக்கம் கிடையாது
என்று ஈவிரக்கமின்றி பேசுகிறார்கள்

அவர்கள் செய்த தவற்றிற்கு
ஒரு நீதிமன்றம் தண்டனை அளித்தால்
அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

தங்களுக்குசெல்வாக்கு, பணம்
ஆகியவற்றைக் கொண்டு மேல் நீதிமன்றத்தில்
முறையீடு செய்துகொண்டே வாழ்நாளை
கழிப்பதுடன் அனைத்தையும் இழந்து
நடுத் தெருவில் நிற்ப்பவர்களும்  உண்டு.

 எல்லா நிலையிலும் அவர்கள் கோரிக்கை
நிராகரிக்கப்பட்டு தண்டனையை
அனுபவிப்பவர்களும்  உண்டு.

இன்று பெரும்பாலான மனிதர்கள்
தங்கள் வீட்டில் வளர்க்கும் வாயில்லா
ஜீவன் நாய்க்கு ராஜ  உபசாரம் செய்வார்கள்.

ஆனால் அதே போன்று வாயில்லா பிராணிகளான
 ஆடு, மாடு, கோழி, பறவைகள், கடல் வாழ் ஜந்துக்கள்
ஆகியவற்றின் மீது துளி கூட இரக்கம்  காட்டுவதில்லை

அவைகளை கொன்றோ அல்லது
உயிருடன் பிடித்தோ
வயிற்றுக்குள்  தள்ளுகிறார்கள்.

அவைகளை அவர்கள் உயிராக
கருதும் பண்பு இல்லை.
மாறாக அவைகள் தங்கள்
வயிற்றுக்குள் உணவாக கொள்வதற்காகவே
படைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்
ஒருநாள் மண்ணின் வயிற்றுக்குள்
போகப்போகும் இவர்கள்.

பிற உயிர்கள் மீது ,
சக மனிதர்கள் மீது இரக்கம்  இல்லாதவர்கள்.
தங்கள் மீது மட்டும் சக மனிதர்களோ
அல்லது கண்ணுக்கு தெரியாத இறைவனோ
இரக்கம்  காட்டுவார்கள் என்று
எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம் ?

வாழ வைக்கும் தமிழை போற்றுவீர்


வாழ வைக்கும் 
தமிழை போற்றுவீர்





தமிழ் மொழியில் பேசு
அது வாழ்த்தும் மொழி,
வாழ   வைக்கும் மொழி

ஆனால் இன்று தமிழை
வைத்து பலர் பிழைக்கின்றார்

சிலர் அதை வைத்து பிறரை
வசை பாடியே  காலத்தை
ஓட்டுகின்றார்

சிலர் பண்ணிசையால்
அதை இசைக்கின்றார்.

ஒரு சிலரோ மங்கலமான
இனிய தமிழ் சொற்கள்
நிறைந்திருக்க  அவைகளைவிடுத்து
அமங்கல சொற்களைக் கொண்டு
ஏதேதோ பாடல்கள் எழுதி மனிதர்களின்
மனதைகுப்பையாக்கி காசை அள்ளுகிறார்

தெளிந்த நீரோடைபோல்
பொங்கி பரந்து விரிந்து
ஓடும் காவிரிபோல  என்றும்
நிலைத்து நிற்கும் மொழி

நீ எப்படி வேண்டுமானாலும் பேசு
தமிழை. தமிழ்த்தாய் ஏற்றுக்கொள்வாள்.

தமிழனாய் பிறப்பெடுத்து
தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு
தாய் மொழியாம் தமிழை
மேடையில் தமிழ் தமிழ்
என்று முழங்கிவிட்டு
வீட்டினில்தமிழை புறக்கணித்து
அந்நிய மொழியை அரங்கேற்றும்
பல வேடதாரிகளை  தமிழ்த் தாய்
ஏளனம் செய்கின்றாள்,
எள்ளி நகையாடுகின்றாள் .


கம்பன் வீட்டு
கட்டுத்தறியும் கவி பாடும்

ஆனால் தமிழை மறந்தோர்
தறி கெட்டுத்தான்  போவார்கள்.
தங்க இடமில்லாமல் உலகெங்கும்
நாடோடிகள்போல்  சுற்றி திரிவார்கள்.

நயவஞ்சகர்கள்
விரிக்கும் வலையில்
வலியச் சென்றுவிழுந்து
சிந்திக்கும் திறனின்றி
சிக்கிக்கொண்டு செய்வதறியாது.
வீரம் பேசி மாள்வார்கள்
என்பது காலம் புகட்டும் பாடம்

தெய்வத்  தமிழ்
இசையால் பாடி இறைவனை
வணங்குவதர்க்கே

பிறரை வசை பாடி
துன்புறுத்துவதர்க்கல்ல

தன்னை வாழ்த்துபவரை
வாழ்த்தி வாழ வைக்கும்
தமிழை போற்றுவீர்
புகழ்வீர்.புவியில்
இன்பமாய் வாழ்வீர்.  

pic-courtesy -google images