திங்கள், 18 மார்ச், 2013

திருக்குறள் -என் பார்வையில் (2)


திருக்குறள் -என் பார்வையில் (2)


திருக்குறள் -என் பார்வையில் (2)

குறள் 2: 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

கல்வி கரையில 
கற்பவர் நாள் சில 
என்பார்கள்

கல்வி பலவகைப்படும் 
ஒரு குரு மூலம்  கற்பது
அனுபவங்கள் மூலம்  கற்பது

ஆனால் கற்று தெளிந்த ஒரு 
குருவிடம் கல்வி பயில வேண்டும்

வெறும் பட்டம் பெற்றவர்களிடமிருந்தும்,
நூல்கள் மூலம்  பெற்ற கல்வி,நூலை கொண்டு 
பட்டம் விடவும்.தம்பட்டம் அடித்துகொள்ளவும்தான் பயன்படும்

உலகில் இன்பமாக வாழவும்,
துன்பங்களை போக்கிக்கொள்ளவும் 
பயன்படும் கல்வி வேறு.

இறை ஞானத்தை அறிய
உதவும் கல்வி வேறு. 

உலக ஞானத்தை 
அடைய கணக்கற்ற குருக்கள் 

ஆனால் ஆத்ம ஞானத்தை 
சத்குருவிடம் மட்டும் தான் 
கற்றுக்கொள்ளமுடியும். 

தகுந்த குருவிடம் முறையாக 
கல்வி கற்று இவ்வுலக வாழ்க்கையை
நடத்தவேண்டும் 

அவ்வாறு பெற்ற கல்வியறிவைகொண்டு 
ஞானத்தை வழங்கக்கூடிய சற்குருவை 
அடைந்து அவர் பாதங்களில் 
பணிந்து ஞானத்தை பெறவேண்டும் 

அவ்வாறு செய்யாவிடில்
கற்ற கல்வியறிவினால் 
ஏதும் பயனில்லை என்பதுவே 
இந்த குறளின் கருத்து

ஞானம் ஹரியிடமிருந்து 
இந்த உலகத்திற்கு  வந்தது.

பரிமேலழகர் என்றும், 
பரிமுகபெருமான் என்றும், 
ஹயக்ரீவர் என்றும் பக்தர்களால் 
அன்புடன் அழைக்கப்படும்தெய்வம்தான்
ஞானத்தை அளிக்கும் கடவுள்

அந்த ஞானத்தை பரமசிவன்
நால்வர்களுக்கு. உபதேசித்தார்.
தக்ஷிணாமூர்த்தி வடிவத்தில் 
மெளனமாக நிலையில்
அவரே ஆதி குரு,

அடுத்து இவ்வுலக மக்களுக்காக 
மகா பாரத போரில் 
அர்ஜுனனுக்குஹரி கண்ணனாக 
அவதாரம்  செய்து 
பகவத்  கீதையை உபதேசித்தார். 
அதனால் அவர் ஜகத்  குரு 
என்றழைக்கப்பட்டார். 

அதற்க்கு பிறகு எண்ணிலடங்கா மகான்கள் 
இப்புவியில் தோன்றி ஞானத்தை 
உண்மையை அறிய நினைக்கும் சாதகர்களுக்கு
உபதேசித்துகொண்டு வருகின்றனர். 

ஞாயிறு, 17 மார்ச், 2013

திருக்குறள் -என் பார்வையில் (1)


திருக்குறள் -என் பார்வையில் (1)

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

திருக்குறளுக்கு உரை பலர் எழுதியுள்ளனர்.

யார் எதை எழுதினாலும் அதை நம்முடைய
அறிவு புரிந்துகொண்டு அதை வாழ்வில் செயல்படுத்துவதுதான் திருக்குறளைபடிப்பதின் நோக்கமாக இருக்கவேண்டும்.

அப்படி நான் புரிந்துகொண்டதை
இங்கு பகிர்ந்துகொள்கிறேன்
அவ்வளவுதான்.

நான்  சொல்லுவதை தவறு அல்லது சரி என்ற வாதம்
ஆராய்ச்சி இங்கு தேவையில்லை
என்பது என் தாழ்மையான கருத்து



ஆயிரம் உரைகள் வந்திருக்கலாம் 
திருக்குறளுக்கு

அவரவர் கற்ற கல்வி அறிவுக்கு தக்கபடி 

அவரவர் மன எண்ண ஓட்டத்தின்படி.

அந்நாளில் முதலையின் வாயில்  சிக்கி 
மரணத்தின் வாயிலில் நின்று கதறியது 
ஒரு கரி .

அப்போது அது ஆதிமூலமே என்னை காப்பாற்று 
என்று அழைத்தது 

எண்ணிலா தெய்வங்கள் இருந்தும் அவைகள்
ஏதும் அந்த கரியை காப்பாற்றவரவிலை 

ஏனென்றால் அனைத்தையும் படைத்து 
அதன்உள்ளே இருந்து அவைகளை 
இயங்க சக்தி கொடுத்த பொருள் 
ஒன்று உண்டு 

அப்போது அந்த கரியை காப்பாற்ற வந்ததுதான் 
அந்த அரி என்ற ஆதிமூலம் 

அந்த ஹரியிடமிருந்துதான் அனைத்தும்
உண்டானது. அவனை முதலாக 
கொண்டதுதான் இந்த உலகம்.

ஒளியும் ஒலியும் 
அவனிடமிருந்தே வந்தது 

இதை ஏற்பாரும்  உண்டு
எதிர்ப்பரும்  உண்டு.இந்த உலகில்

அவர்களுக்கும் அதற்க்கான 
சக்தியை  கொடுப்பது அவன் தான்   

கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு



கவி சக்கரவர்த்தி 
கம்பன் கண்ட கனவு 






சா .கணேசன் அவர்களால் 
வித்திடப்பட்ட 
காரைக்குடி கம்பன் கழகம் 
மரமாக உயர்ந்து ,விரிந்து ,
பரந்து,வளர்ந்து வைர விழா 
ஆண்டை கொண்டாட உள்ளது. 

இந்த மரத்தின் நிழலில்தான் 
எண்ணற்ற தமிழ் பறவைகள் 
தஞ்சம் தேடி ஓடி வந்தன 

தமிழமுதை சுவைத்து 
பருகி மகிழ்ந்தன 

வந்தவர்களுக்கெல்லாம் 
கம்பனின் கவியமுதை 
வாரி வாரி வழங்கின .

இன்று உலகெங்கிலுமிருந்து 
தமிழின் பெருமை அறிந்தவர்கள் ,
தமிழின் மீது காதல் கொண்டவர்கள் கூடி 
எத்தனை முறை கம்பனின்
ராமாயணத்தை படித்தாலும் 
கேட்டாலும் தெவிட்டாத 
இன்பத்தை தரும் அதன் 
மாண்பை வியந்து 
போற்றி மகிழ்கின்றனர் 

அது சரி .வடமொழியில் இயற்றப்பட்டு 
பலயுகம் கடந்த நிலையில் காலமெல்லாம்
நிலைத்து நிற்கின்ற ராமாயணத்தை 
தீஞ்சுவை தமிழில் ஆக்கி தந்த 
கம்பரின் கம்ப ராமாயணத்தை 
தமிழுலகமும் தமிழ் பேசும் மக்களும்
உணர்ந்து போற்றி பயன் பெரும் வகையில் 
நமக்கெல்லாம் வழி காட்டிய 
அந்த பெருமகன்,
தமிழ் தாயின் தவப்புதல்வன் 
திரு. சா. கணேசன் அவர்கள். 

மண் தோன்றுமுன்னரே,கல்
தோன்றுமுன்னரே தோன்றி
தமிழை ஆராய்ந்த குடிமக்கள் 
தமிழ்மக்கள் 

ஒரு மொழிக்கு இலக்கணம் வகுக்கப்பட்டதும். 
ஒவ்வொரு செயலுக்கும், உணர்வுகளுக்கும் 
தனி தனியே சொற்கள் அமைந்துள்ளதும் 
எத்தனை முறை ஆராய்ந்தாலும் 
ஒவ்வொரு முறையும் புதிய புதிய
சிந்தனைகளை தோற்றுவிக்கும்  
ஊற்றுக்கண்ணாக விளங்கும் 
தமிழ் தாய் படைத்த நூல்கள் 
எண்ணிலடங்கா 

பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
தமிழ் தாயின் தவப்புதல்வர்கள் தோன்றி 
வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் 
தமிழ் நூல்களை படைத்து தமிழுக்கு 
பெருமை சேர்த்தது
மட்டுமல்லாமல் வரலாற்றிலும் 
அவர்கள் இடம் பெற்றுள்ளனர் 
இன்று தமிழை தமிழர்களை விட
பிற மொழியாளர்கள்
கசடற கற்று தமிழின் பெருமையை
உலக அரங்கில் கொண்டு 
சென்று வருகின்றனர். 

ஆனால் தமிழ் பேசும் மக்கள் எப்போதுதான் 
தமிழின்  அருமையை, பெருமையை, 
அதன் வளமையை,அதன் தொன்மையை  
உணரபோகிறார்களோ தெரியவில்லை? 

கம்பனின் மீது கொண்ட காதலால் 
காரைக்குடி கம்பன் கழகத்தை தொடங்கி வைத்த
திரு. சா. கணேசன் பின்னாளில் 
கம்பன் அடிப்பொடி என்று அழைக்கப்பட்டார். 

அவருக்கும் கம்பன் மீதும் அவர் இயற்றிய 
காப்பியமான கம்ப ராமாயணத்தின் மீது 
எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது என்பதை இனி காண்போம்.

 நன்றி 
ஆங்கில மூலம்
சுகந்தி கிருஷ்ணமாச்சாரி 
(ஹிந்து நாளிதழ் )

The Kamban dream

SUGANTHY KRISHNAMACHARI


This year marks the 75th anniversary of the Karaikudi Kamban Kazhagam, the seeds of which were sown by Saw. Ganesan.
A neat turn of phrase, an apt simile, a brilliant metaphor, the euphony of a word -- can all delight, for the felicitous use of language does give one a frisson of thrill. But even so, will anyone deify a language, not figuratively, but literally? One man did. Kamban Adippodi Saw. Ganesan.


(இன்னும் வரும்) 
படங்கள்-நன்றிgoogle images 

வெள்ளி, 8 மார்ச், 2013

கணித மேதை ராமானுஜன் பற்றிய பதிவில் அவர் மறைவிற்கு என் அஞ்சலிகள்


கணித மேதை ராமானுஜன் 
பற்றிய பதிவில் 
அவர் மறைவிற்கு 
என் அஞ்சலிகள் 
link;
http://karanthaijayakumar.blogspot.com/ 


அருமையான பதிவு தந்தீர்
அகத்தை நெகிழ வைத்தீர் 
கரந்தையாரே 
கால வெள்ளத்தில் 
ராமானுஜன் போல் கரைந்து
காணாமல் போனவர்கள்
கோடி கோடி. 

























இந்த உலகம் 
இப்படிதான்  இருக்கும் 

புகழ்ச்சியும் 
இகழ்ச்சியும்  
போலியானவை 

உண்மை ஒன்றே 
என்றும் நிலையானது

புகழும் வாய்கள் 
இகழவும் செய்யும்

மீண்டும் அதே வாய்கள் 
மாற்றியும்  பேசும்

திறமையுடையாரை 
வாழும் காலத்தில் 
இந்த உலகம் 
மதிப்பதில்லை 

கண்டு கொள்வதும் 
இல்லை

காணாமல் போனபின் 
கல்லறைக்கு மலர் தூவி
சிலை அமைத்து 
ஆண்டுதோறும் மாலையிட்டு 
அன்னாருக்கு விழா எடுத்து 
விளம்பரம் தேடும்  
அற்பக்கூட்டம் 
இந்த மனித இனம்

வாடிக்கையாகிவிட்ட 
வழக்கத்திற்காக 
வருந்துவதில் 
பயனில்லை 

எதற்கும் உடனடி 
பலனை எதிர்பார்க்கும் 
பேராசைக்காரர்கள் 
நிறைந்த உலகம் இது

ஆராய்ச்சியாளர்களின் 
முடிவுகள் மக்களை நெருங்குவதற்குள் 
மரணம்அவர்களுக்கு முடிவு கட்டிவிடும்
இதுதான் இயற்கையின் விதி 

லேசான மனம் கனப்பதும் 
கனத்த மனம் லேசாவதும் 
மனதின் இயல்பு. 
அதனால் மனதை 
அழித்தொழி 
உனக்கு மட்டில்லா 
ஆனந்தம் பிறக்கும் 
என்றார்கள் ஞானிகள். 

ஆனால் மனம் 
யாரையும் விடுவதில்லை 
அதன் பிடியிலிருந்து 
விலகி செல்ல 

அதனால்தான் இன்னும் 
இந்த உலகம் 
இயங்கிகொண்டிருக்கிறது. 

மகளிர் தின சிந்தனைகள்(2)


மகளிர் தின சிந்தனைகள்(2)






மோகம்
கொள்ளாதிரு மனமே
பெண்களிடம் மோகம்
கொள்ளாதிரு மனமே

கண்களால் அவர்கள்
வீசும் வலையில்
விழுந்துவிடாதே மனமே
விழுந்துவிடாதே மனமே

மோகம் கொண்ட பெண்ணிடம்
உறவு கொண்டால் அவள்
உனக்கு  சோகம் என்னும்
குழந்தையைத்தான்
பரிசாக தருவாள்.

ஊரறிய உலகெல்லோர் எல்லாம்
வாழ்த்த உத்தம குல பெண்ணை
மணமுடித்தால் அந்த பத்தினிபெண்
பெற்று தருவாள் உன் குலம்
விளங்க ஓர் வாரிசு.


ஒருவனுக்கு ஒருத்தி என்று
இவ்வுலகில் வாழும் காலம் வரை
அன்பும் அறமும் இரு கண்களாய்
கொண்டு அவளோடு இல்லறம்
நடத்தினால் அதுவே நல்லறமாகும்

மலருக்கு மலர் தாவும் வண்டுகள்
போல் இல்லாது நல்லம் குணம்
படைத்த  மங்கையரை மனமொத்து
மணந்து மகிழ்வுடன் நடத்துவதே வாழ்க்கை.

அழகற்றவளே ஆனாலும் அன்புள்ளம்
கொண்டவளே அருமையானவள்
அவளுடன் வாழ்க்கை நடத்தினால்
அனைத்து செல்வங்களும் உன்னை
தானே தேடி வரும் என்று உணர்

மேனிமுழுவதும் நகைகள் பூட்டி
அலங்கரித்து எதற்க்கெடுத்தாலும்
முகம் சுளிக்கும் பெண்ணை விட
எந்நிலையிலும் முகத்தில் மட்டும்
புன்னைகையை மாறாமல் தேக்கி
அன்பு காட்டும் பெண் ஒரு தேவதையே

(இன்னும் வரும்)

மகளிர் தின சிந்தனைகள்(1)


மகளிர் தின 
சிந்தனைகள்(1)








ஆண்களே 
பெண்களை நேசியுங்கள் 
அவள் உடலை அல்ல 

அவள் உள்ளத்தை 

அவள் தாயுள்ளத்தை
அவள் பண்பை
அவள் தியாகத்தை 
அவள் மென்மையை
அவள் மேன்மையை 
அவள் இனிமையை 
அவள் வீரத்தை 
அவள் தீரத்தை 
அவள் அன்புள்ளத்தை 
அவள் கருணையை 
அவள் காருண்யத்தை
அவள் பாசத்தை 
அவள் பரிவை 
அவள் நெகிழ்வை 
அவள் அறிவை
அவள் பொறுமையை
இன்னும் எத்தனையோ 
பண்புகளுக்கு சொந்தமானவள்
ஒவ்வொருவரின் குடும்ப 
சொத்தானவள் அவள்

ஆண்களே பெண்களை நேசியுங்கள் 

அவள் உள்ளத்தை நேசித்தால்
அவள் உங்களுக்கு தேவதையாய் 
தெரிவாள் 

அவளை மதித்தால் 
உங்கள் வாழ்வு சிறக்கும்
குடும்பத்தில் இன்பம் பிறக்கும் 

(இன்னும் வரும்)



Pic-courtesy Google-

ஞாயிறு, 3 மார்ச், 2013

கருமாந்திரம் என்ற சொல் அமங்கலமா?



கருமாந்திரம் என்ற
சொல் அமங்கலமா?







சமீபத்தில் ஒரு 
வலைப்பதிவு பார்த்தேன்

அதன்தலைப்பு காசு கொடுத்து 
கருமாந்திரங்களை தரும் 
இணையதளம் அல்ல என்றும் 
இலவசமாக பல்சுவை 
தகவல்களை தந்து உங்கள் இதயங்களை 
கொள்ளைடிக்கும் இணையதளம்
என்று தலைப்பை இடப்பட்டிருக்கிறது. 

அந்த தலைப்பே கருமாந்திரம் என்ற சொல் 
ஒரு இழிவான பொருளை தரும் சொல்
என்பது போலவும் அந்த துறையில் 
ஈடுபட்டுள்ள ஒரு இனத்தவரின் மீது 
காழ்ப்புணர்ச்சியை காட்டும் முகமாகத்தான் 
அமைக்கப்பட்டிருக்கிறது என்பது 
அனைவரும் அறிந்ததே

ஆனால் உண்மையில் 
இந்த கருமாந்திர தொழிலில் 
பல்லாயிரக்கணக்கான்
மனிதர்களும்
வெவ்வேறு பிரிவு மதம் 
இனத்தை சேர்ந்தவர்கள்
ஈடுபட்டிருக்கிறார்கள். 

ஆனால் ஒரு குறிப்பிட்ட 
சமுதாயம் செய்யும் செயலை
மட்டும் பிரித்து அவர்கள்தான் 
அனைத்திற்கும் காரணம் என்று 
என்றோஎழுதப்பட்டு 
தற்போது நடைமுறையில் 
இல்லாத விஷயங்களோடு 
ஒப்பிட்டு நோக்கி 
ஆனந்தப்படுவது 
ஒரு சிலரின் சுதந்திரம்

அதில் யாரும் 
தலையிடவேண்டாம். 
அவர்கள் அப்படியே 
இருக்கட்டும்
.
இப்போது இந்த கட்டுரை 
இந்த கருமாந்திரத்தை பற்றி 
ஆராய்வதுதான் நோக்கம். 

நாம் வாழும் இந்த 
பூமி கரும பூமி.

இந்த உலகில் பிறந்த 
எந்த உயிரும் சும்மா 
இருக்க முடியாது.

 பிறந்ததிலிருந்து 
இறக்கும் வரை ஏதாவது 
ஒரு கர்மாவை அதாவது 
செயலை செய்து கொண்டுதான் 
இருக்கவேண்டும். .

எந்த செயலை செய்யவேண்டும் 
என்றாலும் அதற்க்கு 
மனம் திறனுடையதாக 
இருக்கவேண்டும். அதை 
திறனுடையதாக செய்வதற்கு 
உதவுபவைகள்தான் 
இந்த மந்திரம் என்பது. 

பொதுவாக இறப்பு 
தொடர்பான கர்மங்களை. 
கர்மாந்திரம் என்று அழைக்கிறோம். 
அதை அமங்கலமாகவும் 
அதை செய்பவர்களை
 மட்டமாகவும் நினைக்கிறது 
இந்த நன்றி கெட்ட உலகம். 

துன்பத்திலும், துக்கத்திலும் 
துயரத்திலும் வீழ்ந்து என்ன 
செய்வதென்றறியாது குழப்பத்தில் 
ஆழ்ந்துபோயிருக்கும் மக்களை மீட்டு 
அவர்களின் துன்பசுமையை
படிப்படியாக குறைத்து 
அவர்களை மீண்டும் 
வாழ்க்கை பயணத்தை 
தொடர உதவும் இந்த 
துறையில் இருப்பவர்களை
மனம் திறந்து பாராட்டவேண்டும்.
ஆனால் மாறாக அவர்களை 
பழித்துரைக்கின்றனர். 

எந்த துறையிலும் 
அயோக்கியர்கள் உண்டு. 

அதேபோல்தான் 
இந்த துறையிலும். 
கிடைத்தவரை சுருட்டுவது. 

புதுப்படம் வரும்போது கருப்புசந்தையில் 
பலமடங்கு காசு கொடுக்க தயங்குவதில்லை.
எவ்வளவு விலை விற்றாலும் 
குடிப்பதற்கு காசு செலவு செய்ய 
தயங்குவதில்லை இந்த மனிதர்கள். 
இதுபோல் ஏராளம். 

இன்று இன்று மன நல மருத்துவர்கள் 
மருத்துவ மனைகள்
நகை மோசடிகள்  
பன்னாட்டு வியாபாரிகள் 
,மதவாதிகள், மந்திரவாதிகள்,
போலிசாமியார்கள், நிதி,நிலமோசடி, 
கள்ளகடத்தல், போதை கும்பல்கள்
காம வியாபாரிகள், தொலைகாட்சிகள் 
அரசியல்வாதிகள்
பலவிதமான கொள்ளையர்கள்  
கேடிகள் இவர்களை விடவா
இந்த துறையில் இருப்பவர்கள்
மக்களை ஏமாற்றிவிட
போகிறார்கள்? 

சிந்திக்கவேண்டும். 
எதிர்ப்பில்லை என்று தொடர்ந்து 
ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது.
 இன்றுமட்டுமல்ல 
அது உலகம் தோன்றிய நாள் 
முதலிருந்து உண்டு. 

ஒரு மனிதன் மற்றொருவனை
இழிவுபடுத்துவது அகந்தையின்பால் 
பட்டதே  ஒழியே மற்ற 
எந்த காரணத்தையும் சார்ந்தது 
அல்லஎன்பதே உண்மை. 

(இன்னும் வரும் )