புதன், 16 ஜனவரி, 2013

தமிழ்நாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் தலைநகரின் அலங்கோல மஞ்சு விரட்டும்


தமிழ்நாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் 
தலைநகரின் அலங்கோல மஞ்சு விரட்டும் 

காணும் பொங்கலன்று தமிழ்நாட்டில்
ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டென்று
நடத்துகிறார்களாம்

காளைகளை கட்டிவைத்து கண்ணுக்கு கண்ணாக
கவனித்து கொழுக்கவைத்து காணும் பொங்கலன்று
பல்லாயிரம் மக்கள் கூடுமிடத்தில்
கட்டவிழ்த்து விடுவார் ஆரவாரம் பொங்க

மிரண்டோடும் காளைதனை
விரட்டி பிடிப்பார் வீரம்மிகு காளையர்கள் பலர்
விதியிருந்தால் வெற்றிபெருவோர் பெறுவார் பரிசு
இல்லாதோர் இன்னுயிரை இழப்போர் சிலர்
காயமுற்று மருத்துவமனையை அடைவோர் பலர்.

இங்கோ மிருகங்களை துரத்துகின்றனர்
ஜல்லிக்கட்டில்

ஆனால் அந்தோ தலைநகர் டெல்லியில்
நடக்கும் மஞ்சுவிரட்டில் மிருகங்கள்
மங்கையர்களை விரட்டி சென்று குதறி
சுவைக்கின்றன .

ஜல்லிகட்டோ ஆண்டில் சிலநாள் நடக்கிறது
ஆனால் டெல்லி மஞ்சு விரட்டோ நாள்தோறும்
நடக்கிறது நாடு முழுவதும்.

ஏன் இந்த அவலம்
காரணம் என்ன ?

ஒரு கவிஞன் பாட்டெழுதுகிறான்
புலி மானை  வேட்டையாடுமிடம் காட்டில்
பெண் ஆணை வேடையாடுமிடம் கட்டில் என்று.

திரைப்படத்தில் பெண்ணின் ஆபாச அங்க
அசைவுகலில்லா  படமும்,பெண்ணை விரட்டி
கற்பழிக்கும் காட்சிகளில்லா படமும்
பாம்புபோல் சுருண்டு பெட்டிக்குள் படுத்துவிடும்.

இதை காணுவோரும் அந்த காட்சிக்கு
உறு துணையாக இருப்போரும்
அதை வெறும் நடிப்பு என்பர்.

அதுவே உலகத்தில் நடந்துவிட்டால்
அந்த செயல் செய்தவனை அனைவரும்
வெறுத்து ஒதுக்குவார்.

சிலர் காசு வாங்கி கொண்டு செய்தால் அது நடிப்பு
மக்கள் காசு கொடுத்து அதை சென்று பலமுறை பார்ப்பார்
நடித்தவருக்கு விருதுகள்.

சிலர் அதை காம வெறி பிடித்து அதை செய்தால்
அவனுக்கு மரண தண்டனை


ஒழுக்கம் கெட்ட சமுதாயம்.
இப்படிதான் இனி இருக்கும்.


பெண்ண சிவனில் பாதிஎன்று  பெண்ணை போற்றி பாடி
 கும்பிடுவார் கோயிலில்

வீட்டிலோ அவளை தன் பெண்ஜாதி என்று விரட்டிடுவார்,
வேதனை செய்வார் வேலை வாங்குவார்

கேலி செய்வார் வீதியிலே நடந்துசெல்லும்போது

இடித்து இன்பம் காண்பார் பேருந்து ரயில் பயண
கூட்ட நெரிசலின் போது. பலர்

தங்கநகை அணிந்து சாலையில் தளர் நடை போட்டால்
வண்டியில் வேகமாக வந்து தாலி சரட்டோடு
பறித்து செல்வார் கயவர்கள் பலர்

வீட்டில்நகையணிந்துதனிமையில் இருக்கும்
பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை இந்நாட்டில்.

நகையை பாதுகாக்கவிரும்பும்
மங்கையருக்கு தன்னை
பாதுகாத்துக்கொள்ள பயிற்சியில்லை.

அதை அளித்தால் போதும் குற்றம் குறைய
வாய்ப்புண்டு

சிந்தியுங்கள் ஆட்சியாளர்களே



 







சனி, 12 ஜனவரி, 2013

உண்மையை உள்ளவாறு உணர்ந்து தெளிந்தவர்களிடம் பேதம் இல்லை.


எல்லா மதங்களும் பல பிரிவுகளும்
கணக்கற்ற உட்பிரிவுகளும் கொண்டது
ஒவ்வொரு பிரிவிலும் மக்கள் உள்ளனர்.

அவர்களிடையே பொதுவாக பேதம் இல்லை

ஆனால் அவர்கள் தங்கள் சார்ந்துள்ள பிரிவுகளின் தலைவர்களாக உள்ளவர்கள்தான் மக்களிடையே வேற்றுமையையும், வெறுப்பையும் ,விரோத மனப்பான்மையையும் விதைக்கிறார்கள்.

அதனால்தான் மக்களிடையே மோதல்கள் நிகழுகின்றன .
உயிர் பலி மற்றும் சேதங்கள் தொடர்ந்து
 உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன

சில மதங்கள்/பிரிவுகளின் தலைவர்கள் தாங்கள்
கடைபிடிக்கும் கொள்கைதான் உண்மை என்றும்,
தாங்கள்வணங்கும் கடவுள்தான் சக்தி வாய்ந்தவர் என்றும்
 பல நூல்களை மேற்கோள் காட்டி மக்களிடையே
பேதங்களை உருவாக்குகின்றனர்.

மற்ற கடவுள்களை பல நேரங்களில் இழிவு படுத்துவதற்கும் அவர்களின் வழிபாட்டு தலங்களை அழிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

இந்த போராட்டம் உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு நடந்துகொண்டு வருகிறது. தற்காலத்திலும் நடக்கிறது. எதிர்காலத்திலும் நடக்கும். அதை தடுக்க முடியாது.

ஆனால் பரம்பொருள் என்று ஒன்று இருக்கிறது என்று அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். நாத்திகர்களும் கூட. ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பெயரை அதற்க்கு வைத்திருக்கிறார்கள்.

இறைவன் அன்பு மயமானவன் என்று அனைவரும் சொல்லுகிறார்கள். அன்பாய் இருப்பவனிடம் எதற்கு கையில் பல அபாயகரமான ஆயுதங்களைவைத்திருக்கிறான். என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள்

இறைவன் கருணையுடைவன் என்று சொல்கிறார்கள்
ஆனால் அவன் பலர் வாழ்வில் என் கருணையின்றி
துன்பங்களை பரிசாக அளிக்கிறான் என்று சிலர் கேட்கிறார்கள்

எல்லோரையும் இறைவன்தான் படைத்தான் என்றால்
அசுரர்களையும், ராஷசர்களையும், தீயவர்களையும்
அவன்தானே படைத்திருக்க முடியும்.

அவன் எதற்க்காக அவர்களையும் படைக்கவேண்டும்?

பிறகு அவர்களை அழிக்க அவன் எதற்கு
அவதாரங்கள் எடுக்க வேண்டும்?

உட்கார்ந்த இடத்திலேயே அவர்களை படைக்க தெரிந்த
இறைவனுக்கு அவர்களை இருந்த இடத்திலேயே
அழிக்கும் சக்தி கிடையாதா?



மெத்த படித்தவனை விட பாமரனிடம்தான் நம்பிக்கை, பக்தி இருக்கிறது.
படித்தவர்கள் வாதம் செய்வதோடு சரி.
பாமரன் கையில் அம்மன் முன்பு காப்பு கட்டிய உடனே தீயில் இறங்குவதற்கு பயப்படுவதில்லை .ஆனால் படித்தவன் அதை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி தள்ளி விடுகிறான்

இவ்வுலகில் அனைவரும் இன்பமாக வாழவேண்டும்.
அமைதியாக வாழ வேண்டும்.
அதற்க்கு அன்பு ஒன்றுதான் வழி

.மதங்களும் சாத்திரங்களும் மக்களிடையே பிரிவுகளையும் மோதல்களையும்தான் உண்டாக்கியுள்ளன.
என்றால் அது மிகையாகாது.

கேட்டால் அவைகளில் தவறு ஒன்றுமில்லை அதை சரியாக நடைமுறைப்படுதாமையால்தான் கோளாறு. என்பார்கள்.

ஆனால் உண்மையை உள்ளவாறு உணர்ந்து
தெளிந்தவர்களிடம் இந்த பேதம் இல்லை.

வெறும் உண்மையை பற்றி வாழ்நாள் முழுவதும்
பேசிக்கொண்டிருப்பவர்கள்
இன்று உலகில் நிறைந்துவிட்டார்கள்.
அதுதான் இத்தனை குழப்பத்திற்கும் காரணம்
.

வியாழன், 10 ஜனவரி, 2013

இந்த அழகிய நீரூற்று


இந்த அழகிய நீரூற்று அஜபர்ஜைஜானில் உள்ளது.




இதுவே தமிழ்நாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்?

இதோ இப்படிதான் இருக்கும்.


புதன், 9 ஜனவரி, 2013

நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)



செவ்வாய், 8 ஜனவரி, 2013

நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


திருப்பதி பத்மாவதி தாயார் படம் வரைந்தேன். 1997ல் ஆரம்பித்து 2006ல் தான் முடித்தேன். அந்த படம் இதோ 




சனி, 5 ஜனவரி, 2013

தங்கமே தங்கம்...தங்கம்


தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

தங்கத்தின் மீது மோகம் கொண்டவர்களே 
தங்கம் வாங்கும் முன்பு 
இந்த உண்மையை 
தெரிந்துகொள்ளுங்கள்


.


இது என்னுடைய சொந்த பதிவல்ல
எனக்கு வந்ததை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்.
நகை கடை அதிபர்கள் வழக்கம்போல் 
அவர்களின் வியாபார தந்திரங்களை 
காட்டி மக்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம். 

"நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு

மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். 

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! 

இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"

அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள்

 நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? 

இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? 

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? 

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? 

அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?

 பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? 

ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? 

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. 

இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப் பட வேண்டும்.

நன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது

புதன், 2 ஜனவரி, 2013

நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)




நானும் ஒரு ஓவியன் தான்  (Ball Point Pen sketches