திங்கள், 5 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் (தேர் சிற்பங்கள்)


நானும் ஒரு ஓவியன்
(தேர் சிற்பங்கள்)

அந்த கால தமிழர்கள் கலைகளை
 நன்கு கற்று தேர்ந்தவர்கள் போலும்.

அவர்களின் படைப்புகள்
இல்லாத இடமே கிடையாது.

வீட்டில் தொடங்கி வெளி உலகிலும்
அவர்களின் படைப்புகள் காலத்தை வென்று
 இன்றும் அவர்களின்
திறமையை பறை
சாற்றிகொண்டிருக்கின்றன

அவைகளில் ஒன்று கோயில் தேர் சிற்பங்கள்
 மரத்தில் அழகிய சிற்பங்களை
செதுக்குவதில் அவர்கள் தன்னிகரற்று விளங்கினர்.

ஆனால் அந்த கலை அழிந்தே போய்விட்டது.
எதோ ஒரு சிலரின் முயற்சியால் மட்டும்
அந்தக்கலை இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இன்னும் தமிழகத்தில் பாழடைந்த தேர்களின்
அடிப்பாகம் மட்டும் மக்களின் கவனக்குறைவால்
அப்படியே குட்டிசுவர்கள் போல் நிற்கின்றன

எதோ ஒரு சில ஊர்களில் மட்டும்
அவைகள் பழுதுபார்க்கப்பட்டு
தேரோட்டம் நடைபெறுகின்றன

நம்முடைய கலைசெல்வங்களை
பாதுகாத்து பராமரிக்க அரசு ஒரு தனி துறையே
அமைக்கலாம். ஆனால் யாருக்கும்
அதை பற்றியே அக்கறையில்லை.

சில விஷமிகள் தேரை நெருப்பு
இரையாக்கி விடுவதும் அவ்வப்போது
நடைபெறும் நிகழ்வுகளும் உண்டு.

அவ்வாறு ஒரு தேர் சிற்பத்தை நான்
ஏன் வரைந்து பார்த்தால் என்ன
என்று எனக்கு தோன்றியது.

பல ஆண்டுகளுக்கு முன் மதுராந்தகம்
ராமர் கோயில் தீக்கிரையானது.


பிறகு அந்த தேரை புதுப்பித்தார்கள்.
அதில் இராமாயண காட்சிகள்
 பல இடம் பெற்றிருந்தன
 அப்போது ஒரு தினசரியில் வெளியான படங்களில்
ஒன்றை தேர்ந்தெடுத்து பென்சில் ஓவியமாக வரைந்தேன்.

ராமாயணத்தில் ராமபிரான் சுக்ரீவனோடு நட்பு கொள்ளும் காட்சி
அதில் ஹனுமான் கை கூப்பி பணிவாக
நிற்கும் காட்சி அற்புதம்.

அந்த படம் இதோ.






என்னை பாதித்த ஓவியர்கள்.


என்னை பாதித்த ஓவியர்கள். 

எத்தனையோ ஓவியர்களை சொல்லலாம்.
சிம்ஹா, பாலு, வினு, மணியம், மணியம் செல்வன்,
ராமமூர்த்தி, அர்ஸ் .மருது ,ஜெயராஜ், வர்ணம்
பத்மவாசன், சில்பி, சித்ரலேகா ,மதன்
செல்லம், என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

 தற்கால ஓவியர்களை பற்றி எனக்கு பரிச்சயம் இல்லை.
தெலுங்கில் பிரஷில் பிரமாதமாக ஓவியம் வரையும்
ஒரு ஓவியரை பிடிக்கும். பெயர் தெரியாது

ஆர். கே.லட்சுமன் ,மரியோ மிராண்டா,
போன்ற ஓவியர்களை மிகவும் பிடிக்கும்.

எனக்கு நேரமின்மை காரணத்தால்.
இந்த துறையில் அதிக கவனம் செலுத்த இயலவில்லை.
இருந்தாலும் அவ்வப்போது சில இடைவெளிகளுக்கு பிறகு.
இந்த துறையில் கவனம் செலுத்திவருவதால்
படைப்புக்கள் உருவாகின்றன.

இந்தியன் இங்க்கை பயன்படுத்தி 
கோட்டு சித்திரங்கள் வரையவேண்டும் என்று ஒரு ஆசை.

கருப்பு இங்க் என்று அழைக்காமல்
ஏன் அதற்க்கு இந்தியன் இங்க் என்று பெயர் வைக்கப்பட்டது.
என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.

நம்மை ஆண்ட வெள்ளையர்கள் கருப்பாக உள்ள இந்தியர்களை இழிவு படுத்த கருப்பு நிற மைக்கு இந்தியன் இங்க் என்று பெயர் சூட்டி நம்மை இழிவு படுத்தியதை உணராமல் நாம்பெருமையுடன் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் அந்த பெயரையே அதற்க்கு சூட்டி மகிழ்ந்ததை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.

எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரியும்?   

என் மனதின் ஆசையை நான்
நிறைவேற்றாமல் யார் நிறைவேற்றுவது?.

இந்த படம் பல ஆண்டுகளுக்கு
முன் கல்கியில் வெளிவந்தது.
ஓவியர் யார் என்று நினைவில்லை.

அந்த படம் இதோ.





நானும் ஒரு ஓவியன்


நானும் ஒரு ஓவியன்

கருப்பு வெள்ளையில்
வேங்கடநாதனை வரைந்த எனக்கு
அவனை வண்ண படத்தில் காண ஆசை பிறந்தது.

முதற்கட்டமாக ஸ்கெட்ச் பென் வண்ணத்தை
 பயன்படுத்த முடிவு செய்தேன்.

ஆனால் அது மிகவும் பளிச்சென்று இருந்ததால்
உபயோகித்து தீரும் நிலையில்
உள்ள ஸ்கெட்ச் பென்களை
பயன்படுத்தி வண்ணம் கொடுத்தேன்.

அந்த படம் இதோ.


ஞாயிறு, 4 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன்



நானும் ஒரு ஓவியன் 

முறையான பயிற்சியும் கிடையாது.
நேரமும் கிடைக்கவில்லை இருந்தாலும்
 ஒரு ஆத்மா திருப்திக்காக
படங்கள் வரைந்தேன்/வரைகிறேன்
அவ்வளவுதான்.

நான் பள்ளியில் படிக்கும்போதே
திருப்பதி வெங்கடேச பெருமானை
வரைய வேண்டும் என்று ஆசை.

அந்த ஆசை 35 ஆண்டுகள்
கழித்துதான் நிறைவேறியது.

பால் பாயிண்ட் பேனாவால்
அந்த படம் வரைந்தேன்

அந்த படம் இதோ.




சனி, 3 நவம்பர், 2012

என்னை பாதித்த ஓவியர்கள் (2)


என்னை பாதித்த ஓவியர்கள் (2)

அடுத்ததாக நான் மிகவும் விரும்பி
ரசித்த ஓவியர்
மாயா அவர்கள்.

ஆனந்த விகடனில் அவர் வரையும்
 படங்களை கண் கொட்டாது
 பார்த்துக்கொண்டிருப்பேன்.

ஆம் அவர் வரையும் படங்களில்
கண்கள் அழகை வெளிபடுத்தும்,
பாவங்களை வெளிபடுத்தும்.
கை,கால் விரல்களை அழகாக வரைவார்.


அவர் வரையும் ஆண் படங்களில் கூட
பெண்மையின் நளினம் இழையோடும்.

படங்கள் பிசிறுகள் இல்லாமல்
தெளிவாக இருக்கும்.


அவர் வரைந்த ஹனுமான் படம்
அவருக்கு பெரும்புகழை அளித்தது.

மயிலை பார்த்து வான்கோழி ஆடியது போல்
நானும் அவர் படம் ஒன்றை மாதிரிக்காக
நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரைந்தேன்.

அந்த படம் இதோ

.

என்னை பாதித்த ஓவியர்கள்


என்னை பாதித்த ஓவியர்கள்(திரு கோபுலு)

எனக்கு ஓவியம் வரைவது
என்றால் மிகவும் பிரியம்
ஆனால் முறையாக பயிற்சி
 பெற வாய்ப்பிலாமல் போய்விட்டது

அதற்காக நான் கவலைப்படவில்லை.
ஓவியத்தில் பல பரிமாணங்களை
 நான் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.

நான் ஒன்றும் அப்படி கைதேர்ந்த ஓவியன்
இல்லாவிட்டாலும் பென்சில்,பால் பாயிண்ட் பென்
பிரஷ் ,மெடல் பாயில், சிற்பம், வண்ண ஓவியம்,
கருப்பு வெள்ளை ஓவியம் என
எல்லாவற்றிலும் கையை நனைத்து விட்டேன்.

அவற்றில் பலவற்றை என்னுடைய
ஒன்பது வலைப்பதிவுகளில்
பயன்படுத்தியுள்ளேன் .

என்னை பாதித்த ஓவியர்கள் 
பலர் இருக்கிறார்கள். 
அவர்களில் திரு கோபுலு .

என்னை சிறு வயதிலிருந்தே  என்னை கவர்ந்தவர்
அவர் படங்களில் ஸ்ட்ரோக்குகள்
பிரமாதமாக இருக்கும். பாவங்கள் அற்புதமாக இருக்கும்.
கண்கள் நம்மை காந்தம் போல் இழுக்கும்.

அவர்.நான் சிறு பையனாக இருந்த காலத்தில்
ஆனந்த விகடனில், திரு சாவி எழுதிய வழிபோக்கன்
என்ற கதைக்கு அவர் வரைந்த படங்கள் என்னை கவர்ந்தன.


அந்த கதா பாத்திரத்தோடு. ஒன்றி போனேன்.
பிறகு அவரின் பலவிதமான பரிமாணங்களை
நான் மிகவும் ரசித்தேன். புராண படங்களாகட்டும்,
சரித்திர,சமூக,கேலி சித்திரங்களாகட்டும் ,
தீபாவளி மலரில் முகப்பு வண்ண படங்களாகட்டும்
அவருக்கு நிகர் அவர்தான்.


ஏகலைவன்போல் அவர் வரைந்த நித்திலவல்லி
என்ற சரித்திர தொடரிலிருந்து அவர் வரைந்த
ஒரு படத்தை நான் முயற்சி செய்து வரைந்தேன்.


அந்த படம் இதோ. 







வியாழன், 1 நவம்பர், 2012

யார் இவர்.?


கண்ணோடு காண்பதெல்லாம் என்று
உரக்க பாடி உலகை தன் பக்கம்
திரும்பி பார்க்க வைத்தவர்

புன்சிரிப்போடு தமிழை
உச்சரித்து இசையால்
அனைவரையும்
வசப்படுத்தியவர்

மின்சாரக்கண்ணி 

எந்த நாட்டு இசையானாலும்
இவரின் குரலுக்கு இசைபடாமல்
இருக்கமுடியாது

கண்டத்திலேயே ஒலி பெருக்கி
இயற்கையாக அமையபெற்ற
இன்னிசை அரசி.

தன் பாட்டியின் பாட்டையும் பாடுவார்
தன்பாட்டுக்கும் பாட்டு பாடுவார்

யார் இவர்.?