செவ்வாய், 2 அக்டோபர், 2012

கர்ம வீரர் காமராஜரை நினைவு கூறுவோம்

கர்ம வீரர் காமராஜரை
நினைவு கூறுவோம்  














கிராமந்தோறும் 
கல்விசாலைகளை   திறந்தவர் 
அறிவு பசியோடு 
வயிற்று பசியையும் தீர்த்தவர்

விரைந்து முடிவெடுத்தவர் 
வெட்டி செலவுகள் செய்யாதவர் 
தன்னை மட்டும் முன்னேற்றிகொண்டு
செல்லும் இக்கால 
அரசியல்வாதிகளைபோல் அல்லாது 
தமிழ் நாட்டை முன்னேற்ற 
 பாதையில் கொண்டு சென்றவர்

நேர்மையை பறைசாற்றும் 
நெடிய உருவம் கொண்டவர் 

எளிமையை பறைசாற்றும் 
கதர் வேட்டியும் சட்டையும் அணிந்தவர் 

நாட்டின் விடுதலைக்கு 
உழைத்த தியாகி 

அடித்தள மக்களின் 
உயர்வுக்கு உழைத்த யோகி 

அகில இந்திய அரசியலில் 
அடியெடுத்து வைத்தார்
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் 
வகையில் முடிவெடுத்தார் 

வாழ்க என்றும் அவர் புகழ் 

லால் பகதூர் சாஸ்திரி

எனக்கும் இன்று பிறந்த நாள் 


யார் அந்த குரலுக்கு சொந்தக்காரர்?


இவர்தான் லால் பகதூர் சாஸ்திரி 

உருவத்தால் சிறியவர்
உள்ளத்தால் உயர்ந்தவர்

பாகிஸ்தான் படையெடுப்பின்போது
நம் நாட்டின் வீரர்களையும் 
மக்களையும் தட்டிஎழுப்பி 
நாட்டை காத்தவர் 

ஜெய் ஜவான் 
ஜெய் கிசான் என்ற 
தாரக மந்திரத்தை  தந்தவர் 

உயர் பதவி வகித்தாலும் 
எளிமையின் சின்னமாய் 
வாழ்ந்தவர் 

சமாதானத்தின் தூதுவராய்
தாஷ்கண்ட் சென்றவரை 
இறைவனின் தூதர்கள் 
தங்கள் நாட்டிற்கு அழைத்து 
சென்று விட்டனர் 

சுயனலமற்றவர்
என்றும் மற்றவர் 
நலம் விரும்பியவர் 

வாழ்க என்றும் உன் புகழ் 


திங்கள், 1 அக்டோபர், 2012

இந்த கதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

இந்த கதை போதுமா  
இன்னும் கொஞ்சம் வேணுமா?

எனக்கு ஒரு உண்மைதெரிஞ்சாகனும் ?
என்ன சொல்லு
இன்னிக்கு  என்ன?
காந்தி பிறந்த நாள் 
எந்த காந்தி ?
சோனியா  காந்தியா ?
இல்லை 
ராகுல் காந்தியா?
இல்லை 
இந்திராகாந்தியா ?
இல்லை 
சஞ்சய் காந்தியா ?
என்னப்பா எதற்கெடுத்தாலும் இல்லை என்கிறாய்.
அப்படி அந்த காந்தி யார் கொஞ்சம் சொல்லு?
அவர்தான் நம் நாட்டிற்கு ஆங்கிலேயர்களிடமிருந்து 
சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்
அது சரி அதற்க்கு அவர் எவ்வளவு லஞ்சம் கொடுத்தார்? 
அவருக்கு லஞ்சம் என்றால்  பிடிக்காது அவர் நேர்மையானவர் 
நேர்மை என்றால்என்ன ?
நேர்மை என்றால்  எதையும் 
ஒளிவு மறைவு  இல்லாமல் சொல்வது, செய்வது 
அது எப்படி முடியும். ?
அது அவரால் மட்டும் தான் முடியும். 
அவர் உயிரோடு இருந்தால் பிழைப்பு நடக்காது 
அதனால்தால் சுதந்திரம் பெற்றபின் 
அவர் கதையை முடித்துவிட்டார்கள்

இப்போது அவர் எங்கிருக்கிறார் ?
சிலைகளாக ,ரூபாய் நோட்டுக்களில் படமாக 
,பள்ளிக்கூட புத்தகங்களில்,பாடமாக.
வெளிநாட்டுக்காரன் காந்தியாக நடித்து எடுத்த திரைப்படமாக, 
அவரை பற்றிய மகாகவி பாடிய பாடல்களாக, இருக்கிறார்




















அது சரி .அதெல்லாம் இருக்கட்டும்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்?
கேளு,சொல்றேன் 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம்தேதி மட்டும் 
அவர் படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து
,மலர்கள் தூவி, காந்தி குல்லா யுனிபார்ம் போட்டு
பூஜை செய்து கை கூப்பி பிரார்த்தனைகள் செய்கிறார்களே 
அப்போது அவரிடம்  என்ன வேண்டிக்கொள்கிறார்கள்
 என்பது எனக்கு தெரிஞ்சாகனும் ?

ஒவ்வொருவர் பிரார்த்தனை 
ஒவ்வொரு மாதிரி இருக்கும்
அது என்ன?

மத்திய அமைச்சர்கள்,மாநில முதலமைச்சர்கள், மற்றும் அமைச்சர்கள்: 
காந்தி மகாத்மாவே, நீங்கள் மீண்டும் இந்த உலகத்தில் பிறந்து  விடாதீர்கள். பிறந்தால் எங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும். நீங்கள் மது அரக்கனை ஒழித்தீர்கள். நாங்கள் மது அரக்கனுக்கு தீனி போடத்தான் மதுக்கடைகளை அரசு செலவிலேயே திறந்து மக்களனைவரையும் குடிமன்னர்களாக்கி  அவர்களை எங்கள் பிடியில் வைத்துக்கொண்டு எங்கள் வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கிறோம்
.
குடிமகன்கள்:
காந்தி  மகானே நீங்கள் மீண்டும் பிறந்து வந்து விடாதீர்கள்.நீங்கள் வாங்கி தந்த சுதந்திரத்தை எங்களை ஆளும் கொள்ளையர்களே பறித்து கொண்டு விட்டார்கள். எங்களால் வாழவும் முடியவில்லை சாகவும் சாகவும் முடியவில்லை. ஏதோ உழைத்து கிடைத்த காசில் கொஞ்சம் குடித்து விட்டு போதையில் மயங்கி கிடக்கிறோம். அதையும் கெடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டு விடாதீர்கள் என்று பணிவுடன்  வேண்டிகொள்கிறோம். 

அரசியல்வாதிகள்/லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் :
காந்தி மகானே நீங்கள்  பிறந்தால் உண்மை வெளிப்படும். எல்லாம்  உண்மையாக இருக்கவேண்டும் எங்கள் பிழைப்பு நடக்காது ஆகவே நீங்கள் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் எண்ணத்தை கைவிட்டுவிடுங்கள்

பன்னாட்டு நிறுவன முதலைகள்:
நீங்கள் மீண்டும் பிறந்தால் சுதேசி இயக்கம் முளைக்கும். 
அது எங்களுக்கு ஆபத்தாக முடியும். அகவே மீண்டும் பிறக்கும் எண்ணத்தை கைவிட்டுவிடுங்கள்.அப்படி நீங்கள் மீண்டும் பிறந்தால் எங்கள் செயற்கைகோள்கள் அதை எங்களுக்கு காட்டிகொடுத்துவிடும் 
அப்புறம்?
அப்புறம் என்ன எங்களிடம் உள்ள ஆளில்லா  விமானத்தை கொண்டு பிறக்கப்போகும் காந்தியை அழித்துவிடுவோம்

இந்த கதை போதுமா  ,இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஐயா போதுமடா  சாமி,தலை சுத்துது 


மலங்களே ..மலங்களே இது என்ன நிஜமா ?


மலங்களே  ..மலங்களே  இது  என்ன  நிஜமா ?
மலங்களே  மலங்களே  இது  என்ன  நிஜமா ?

அடங்கியதே  என்  அகந்தை 
ஒழிந்ததே  என்  தற்பெருமை . 

என்ன  இது  ஒரு  பிரபல  தமிழ் 
திரைப்பட  பாடலின்  வரிகளின்  சாயல் .

என்ன இது என்று முகம் சுளிக்க வேண்டாம்
முழுவதும் படியுங்கள்  

மலம்  என்றால்  அசிங்கமா ?
மலம்  அள்ளுவது  கேவலமா ?
மலம்  அசிங்கம்  இல்லை 
மலம்  அள்ளுவது  கேவலம்  இல்லை .

அசிங்கம்  என்று  நினைத்திருந்தால்  தாய்  
தன்  குழந்தையின்  மலத்தை  அள்ளுவாளா ?
செவிலியர்கள்  அசைய   முடியாத  நிலையில் 
படுத்திருக்கும்  நோயாளிகளின்  மலத்தை  
அப்புறப்படுத்துவார்களா?

இன்று  குடலில்  உள்ள   நோய்  கிருமிகளை  
கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க 
மலத்தை  அல்லவோ    ஆய்வு  செய்து  உலகம்  முழுவதும் 
தெருவுக்கு   தெரு  சோதனை  கூடம்  வைத்து 
காசு  வாங்கி  பிழைப்பை  நடத்தி  கொண்டிருக்கிறார்கள் 

மலம்  அள்ளுவது  கேவலம்  என்றால்  
மகாத்மா  காந்தி  தானே 
அந்த  வேலையை  செய்தது  ஏன் ?
சேவா  தளத்தில்  சேர  சென்ற  மற்றவர்களுக்கும்  
முதலில்  அந்த  பணியை 
அளித்தது  ஏன் ?

மலம்  அசிங்கம்  என்றால்  அதை  சேகரித்து
மாட்டு  சாணத்துடன் 
சேர்த்து சாண  எரிவாயு  உற்பத்தி  செய்து  
பெட்ரோலிய   ஏறி  வாயுவிற்கு  பதிலாக 
இன்று  இந்தியா  முழுவதும்  செயல்பட்டு  
கொண்டு  வருகிறது   உங்களுக்கு  தெரியுமா !

மாடு வெளியே தள்ளுவதை   சாணி  என்கிறோம் 
மனிதர்கள்  சாணி  போடுவதை  மலம்  என்கிறோம் 
அவ்வளவுதான் 

சாணத்தின்  வாசனையை  ஏற்றுகொள்ள  மனம்  பழகிவிட்டது .
ஆனால்  நாம்  போடும்  சாணியின்  வாசனையை  ஏற்றுகொள்ள 
மனம் மறுக்கிறது 
அதுதான்  இத்தனை  விபரீதங்களுக்கும்  காரணம் 

இன்னும் உங்களுக்கு தெரியாது மலம் மண்ணோடு கலந்து 
மக்கி விட்டால் அதிலிருந்து ஒன்றும் நாற்றம் வராது.  

அதை நாம் முறைப்படி அழிக்காமையால்  அது நாற்றம்
 தரும் வாயுக்களை வெளிவிடுகிறது 

ஒன்றை  நீங்கள்  நினைவில்  கொள்ள  வேண்டும் 
உங்கள்  உடலின்  இரண்டு   கால்கள்  மீதுதான் 
உங்களின்  கழிவுகளையும்  கெட்ட  கழிவு 
நீரையும்  சேமித்து  வைக்கும்  தொட்டி 
கட்டப்பட்டுள்ளது  என்பது  உங்களுக்கு  தெரியுமா ?
நீங்கள்  சுவைத்து  சுவைத்து  உள்ளே தள்ளும்  உணவுகள்தான் 
பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு பிறகு சத்துக்களை உறிஞ்சியபின் 
மலமாக  மாற்றப்படும்  குடல்  அதன்  மேல்தான்  உள்ளது .

மற்றொன்றையும்   புரிந்து  கொள்ளுங்கள் 
நீங்கள்  சாப்பிடும்  உணவுகள்  மலமாக   மாற்றப்பட்டு 
இரண்டு  விழுக்காடுகள்தாம்  வெளியேறுகிறது 
மீதி  98 சதவிகித  மலம்  உங்கள்  உடல்  முழுவதும் 
பரவியிருக்கிறது ,அதனால்தான்  மனிதன்  உடலில் 
அவன்  வெளியேற்றும்  மலத்தில்  தூர்  நாற்றத்தை  விட 
உடலின்  ஒவ்வொரு  பகுதியிலிருந்து  வெளியேறும்  நாற்றம் 
மூக்கை  துளைக்கிறது .அதை  மறைக்க  நீங்கள்  மாதா  மாதம் 
ஆயிரகணக்கான  ரூபாய்க்கு  சோப்புகளையும் , சந்தனத்தைலமும்  , வாசனை  திரவியங்களையும் உடலுக்கு  தனியாக ,மேலே அணிந்துகொள்ளும்  ஆடைகளுக்கு  தனியாக  என  ஒழித்து  கொண்டிருகிறீர்கள்  என்பதை  மறந்துவிடாதீர்கள் 

இன்னொன்று  சொல்கின்றேன் .
சில  ஆண்டுகளுக்கு  முன்பு  ஒரு செய்தி  வெளியானது 
டெல்லியில்  ஒருநிறுவனம் , உலர்ந்து  போன  மலத்தினை  தக்கைகளாக செய்து  உறுதிபடுத்தி அதில்  அறைகளில்  தடுப்புகள் அமைக்க  பயன்படுத்தும்  அட்டைகள்  தயாரிக்கும் தொழில் நுட்பத்தை  உருவாக்கி  அதற்க்கு  தேவையான  மலக்குவியலை  ராஜஸ்தான்  அரசிடம்  கேட்டுள்ளது  என்பதுதான் 

தற்போது அந்த நிறுவனம் தொழிலை தொடங்கி சந்தையில் அந்த தடுப்புகளை விற்ப்பனைக்கு  கொண்டு வந்திருக்கும் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ  கூட நீங்கள் அதை பயன்படுத்தி இருக்கலாம் 

எனவே  மலம்  என்பது  அசிங்கமல்ல 
மலம்  அள்ளுவது  கேவலமல்ல 

மலத்திலே  தோன்றி  மலமாய்  வாழ்ந்து 
மலத்திலே  புழுவாய்  போகும் 
இந்த  உடல்  படைத்த  நாம் 
நாம்தாம்  உயர்ந்தவர்கள் 
நம்முடைய  மலத்தை  மற்றவர்கள்  அள்ள  வேண்டும்  என்று 
நினைக்கும்  மனிதர்களே  கேவலமானவர்கள் .

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்


















நடிகர்  திலகம் சிவாஜி கணேசன்
பிறந்த நாள் 

நடிகர்  திலகம் 
நடிப்பில் இமயம்
சிவாஜி கணேசனின் பிறந்த நாள்

எழுத்தாளர்களின் எழுத்துக்களில் 
மட்டும் வலம் வந்த பாத்திரங்களை 
உலகில் உயிரோடு நடமாட வைத்தவர்
 
குரல் வளம்படைத்தவர் 
சிம்மக்குரலுக்கு சொந்தக்காரர் 

கற்பனை பாத்திரங்களை 
நிஜமாக்கியவர் 

நடிப்பை உயிராக நேசித்தவர் 
அதனால் கோடிக்கணக்கான ரசிகர்களின் 
மனதில் இடம் பிடித்தவர் 

அவர் பூத உடல்  மறைந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன 
அவரால் படைத்து உலகில் நடமாட விடப்பட்ட
பாத்திரங்கள் இன்னும் உலகமெங்கும் வெள்ளி திரைகளில்
தொலைகாட்சிகளில் கைபேசிகளில் ஓய்வில்லாமல் 
ஓடிக்கொண்டு இருக்கின்றன 

இவ்வுலகம் உள்ளவரை அவர் புகழ் 
என்றும் எங்கும் நிலைத்து மக்களை 
மகிழ்வித்துக்கொண்டிருக்கும்.
மனதை பாதித்துக்கொண்டிருக்கும்  

தீவிரவாதிகளும் மதவாதிகளும் (பகுதி-2)


தீவிரவாதிகளும் மதவாதிகளும் (பகுதி-2)
அண்ணே அது  சரி
 மதவாதிங்கன்னா யாரு?

ஒருவர் தான் சார்ந்துள்ள மதம்தான் கடவுளை காட்டும் என்றும்
மற்ற மதங்களின் கோட்பாடுகள் சரியற்றவை என்றும் 
மற்ற மதத்தினரோடு வாதம் செய்பவர்களை மதவாதி என்று சொல்லலாம்

மதவாதிகளில் மந்திரவாதிகளும் உண்டு,தந்திரவாதிகளும் உண்டு 
எந்திரவாதிகளும் உண்டு .சுயநலவாதிகளும் உண்டு 
எல்லோரும் மனித குலத்திற்கு எதிராக செயல்படும் தீய சக்திகள்தான் 
அதில் மட்டும் அனைவரும் ஒன்று.  

அந்த காலத்தில் நம் நாட்டில்நிலவி வந்த  மதங்களில் 
 மதத்தில் உள்ள பல்வேறுபிரிவுகளை 
சேர்ந்தவர்களின் தலைவர்கள் தங்கள் கொள்கைகளை 
வலியுறுத்தி வாதம் செய்வார்கள். 
வாதத்தில் வெற்றி பெற்றவர்களின் 
தோல்வியுற்றவர்களை தண்டித்ததும்  உண்டு. 
அவர்களின் வழிபாட்டு தலங்களை அழித்ததும் உண்டு.

சில மதத்தினர் ஆளும் அரசர்களின் துணையுடன்
மக்களை மத மாற்றம் செய்ததும் முண்டு. 

காலபோக்கில் தாங்களாகவே 
மனமுவந்து மதம் மாறியவர்களும் உண்டு.

மக்கள் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக 
இருந்தாலும் அவரவர் கொள்கைகளில் மற்றவர் 
தலையிடாதவரைக்கும் நாட்டில் அமைதி நிலவி வந்தது. 

ஆனால் மத வெறியர்கள் ஒவ்வொரு மதத்திலும்
ஒவ்வொரு கால கட்டத்திலும் தோன்றி 
ஒருவருக்கிடையே மோதலை தூண்டியும், 
வெறுப்பை வளர்த்தும் மக்களின்  
அமைதியை குலைத்து வருவது இன்று மட்டுமல்ல
 உலகில் மதங்கள் தோன்றிய நாள் 
முதல்  இதே நிலைமைதான்.

அன்று தொலை தொடர்பு சாதனங்கள் கிடையாது 
அதனால் குழப்பம் விளைவிக்க பல ஆண்டுகள் பிடித்தன 
மக்கள் அதுவரைக்கும் சில காலமாவது 
நிம்மதியாய் வாழ்ந்து வந்தனர் 

இப்போது கண் இமைக்கும் 
நேரத்தில் வதந்திகள் பரப்பப்பட்டு
கண்ணெதிரே வன்முறைகள் அரங்கேறிவிடுகின்றன
யாரும் ஒன்றும் செய்ய முடிவதில்லை  

உலகம் சுருங்கியதுபோல் 
மனிதனின் மனமும் சுருங்கிவிட்டது 
அவன் அழியும் நேரமும் நெருங்கிவிட்டது 
அதனால்தான் உலகில் சிலர் உலகம் அழியபோகிறது
என்று புரளிகளை கிளப்பிவிட்டு
மக்கள் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருக்கின்றனர் 

இதனால் உலகம் தொடர்ந்து போரை சந்தித்து வருகிறது.
கோடிக்கணக்கான மக்கள் மாண்டு விட்டார்கள். 
இன்னும் மாண்டு வருகிறார்கள்.
இதை தடுக்க அந்த இறைவனே வந்தாலும் 
ஒன்றும் செய்ய முடியாத நிலைமை உருவாகிவிட்டது. 

அதனால்தான் இந்த தீமையை பொறுக்க இயலாமையால்தான்
இறைவன், பூகம்பம், சுனாமி, பெருவெள்ளம் , ,தீ விபத்துக்கள் 
என மக்களினத்தை  கொத்து கொத்தாக  அழிக்கிறான். 
அப்படியும் இந்த மனித இனம் திருந்தவில்லை
அன்றும் திருந்தவில்லை இன்றும் திருந்தாது என்றும் திருந்தாது.

மருந்துகள் சாப்பிட்டும் நோய் குணமாகவில்லை 
என்றால் அறுவை சிகிச்சைதான்
அதை இறைவன் அவ்வப்போது செய்துகொண்டிருக்கிறான்.
அது சரி நாம் என்ன செய்வது?

நாம் இறைவனை நம்பிக்கொண்டு 
வாயை மூடிக்கொண்டு
நம் கடமைகளை ஆற்றி வந்தால்  போதும் 
அவன் நம்புவர்களை நிச்சயம் காப்பாற்றுவான்
மற்றவைகளை அவன் பார்த்து கொள்ளுவான்.

படைத்த அவனுக்கு தெரியும் 
எதை எப்போது போட்டு உடைக்கவேண்டும் என்று

நீ உன்னை சுற்றி நடப்பவைகளை 
கண்டு மனம் உடைந்து போகாதே.  

  

தீவிரவாதிகளும் மதவாதிகளும்


தீவிரவாதிகளும் 
மதவாதிகளும் 

அய்யா எனக்கு
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்?

சொல்லப்பா 
என்ன உண்மை தெரியணும்?

தீவிரவாதிங்கன்னா  யாரு?
மதவாதிங்கன்னா  யாரு?

ரொம்ப சிக்கலான கேள்வி இருந்தாலும்
எனக்கு தெரிந்தவரையில்
பதில் சொல்லறேன் 

யார் ஏதோ ஒரு கொள்கையிலே மிகவும் மூர்க்கத்தனமாக 
இருக்கிறார்களோ அவர்கள் தீவிரவாதிகள். 
அது மதமாகவும் இருக்கலாம். 
மதங்களை எதிர்க்கும் கொள்கையாகவும் இருக்கலாம்
இல்லை எந்த காரணமுமே இல்லாமலும் கூட இருக்கலாம் 

அவர்கள் சொல்லுவதை மற்றவர்கள் ஆராயாமல் 
அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இல்லையேல் மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள்.

இப்படிதான் இன்று உலகம் முழுவதும் 
வன்முறை பரவிக்கொண்டு வருகிறது.
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த பிரச்சினை உள்ளது .
ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டு மாண்டு போகிறார்கள். 
ஒருவொருக்கொருவர் விட்டு கொடுத்து வாழும்
மன பக்குவம் போய்விட்டது. 

நாட்டிற்குள்ளே அடித்துக்கொண்டு 
மாண்டு போகும் இந்த கூட்டம் இன்று 
எல்லா நாடுகளிலும் பல்கி பெருகிவிட்டார்கள்.
சில நாடுகளில் ஆளும் அரசுகளே அவர்களுக்கு  
ஆக்கமும் ஊக்கமும் தந்து மற்ற
 நாடுகளில் குழப்பத்தை விளைவிக்கின்றன 

பாவம் யாராவது இப்படியெல்லாம் செய்யக்கூடாது
உலக மக்கள் அனைவரும் அன்போடு, 
அமைதியாக வாழ வேண்டும் 
என்று என்று சொல்ல வந்தால் 
அடித்து கொள்ளும் இரண்டு கூட்டமும் சேர்ந்து கொண்டு 
சொல்பவர்களை எமனுலகிர்க்கு அனுப்பிவிடும்

அதனால்தான் தீவிரவாதிகளை 
எதிர்க்க அரசுகளும் பயப்படுகின்றன.
வெறும் வெத்து வேட்டு  அறிக்கைகளை
மட்டும் விட்டுவிட்டு கொஞ்சம் நிவாரணம் 
வழங்கிவிட்டு ஒதுங்கிவிடுகின்றன

ஆனால் உண்மையில் பாதிப்புக்கு
ஆளாகி உயிரை விடுவதும்,
சொத்துக்களையும்,சுற்றங்களையும் 
தங்கள் எதிர்காலத்தையும் 
இழப்பது அப்பாவி மக்களே.
இவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். 

அது சரி ஒரு சின்ன கேள்விக்கு 
இவ்வளவு பெரிய விளக்கமா.? 

தலை சுற்றுகிறது.

தலை சுற்றினால் ஒன்று பசியாயிருக்கும் 
அல்லது உயர் ரத்த அழுத்தமாக இருக்கும் 
போய் மாத்திரை போட்டுவிட்டு
ஏதாவது குடித்துவிட்டுவா

குடி என்றவுடன் குவார்ட்டர் வாங்க 
கடைக்கு போய்விடாதே .அது
தலை சுற்றலை விட மோசமானது
போதையேற்றிக்கொண்டு ஏதாவது உளறி வைத்தால் 
தலையே இல்லாமல் போய்விடும். 

.உன்னுடைய இன்னுடைய கேள்விக்கு 
பதில் சொல்ல வேண்டும் (இன்னும் வரும்)