புதன், 15 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவின் ஊதாரித்தனம்

அமெரிக்காவின் ஊதாரித்தனம்?

அமேரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கோளை ஆராய விண்கலங்களை அனுப்பி வைத்து அங்கு அது இறங்கிவிட்டதாக பொய் மூட்டைகளை அவிழ்த்து  விட்டுள்ளது இந்த ஊதாரிதனத்தினால் உலக மக்களுக்கு என்ன பயன்?

ஏற்கெனவே ஆளில்லா விமானங்களை கொண்டு உலகம் முழுவதும் யாரை வேண்டுமானாலும் தன்னால் தாக்கி அழிக்க முடியும் என்று நிரூபித்துவிட்டது. 
தானே அராஜகமாக நடந்துகொண்டு தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டி அழிக்கின்றது. 
.
இன்னும் இந்த உலகிலேயே அறியப்படாத விஷயங்கள் உள்ளன
அவைகளை கண்டுபிடித்து மனித குலத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தன்னுடைய சுய நலத்திற்க்காக வான்  வெளியை பயன்படுத்தி கொண்டிருக்கிறது
  
அமெரிக்க ஜானதிபதி செல்வாக்கு சரிந்து விட்ட நிலையில் அதை தூக்கி நிறுத்த இந்த டிராமா நடத்தப்பட்டுள்ளது 

தன்னிடம் உள்ள அபரிமிதமான செல்வத்தையும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் உலகில் உள்ள நூற்றுகணக்கான வறுமையில் சிக்கி தவிக்கும் நாடுகளுக்கும் அதன் மக்கள் முன்னேற்றத்திற்கும் உதவும் மனம் அதன் ஆட்சியாளர்களுக்கு இல்லை 

மாறாக ஆளில்லா விமானங்களை கொண்டு பிற நாடுகளுக்கும் புகுந்து மக்களை கொல்வது அதற்க்கு வாடிக்கையாகிவிட்டது
.
உலகம் முழுவதும் தீவிரவாதிகளை  ஊக்குவித்து அவர்களுக்காக ஆயுதங்கள் வழங்குவதும் பிறகு அவர்களை ஒழிக்க அந்தந்த நாடுகளுக்கு உதவுவதுபோல் அந்த நாட்டில் நுழைந்து அந்நாட்டை அதன் கட்டுபாட்டில் கொண்டுவருவதும் அமரிக்க அரசின் கொள்கையாகிவிட்டது
.
உலக நாடுகளில் வன்முறை கலாசாரத்தை பெருக்கி ஒவ்வொரு நாடுகளிலும் அமைதியின்மையை உண்டாக்கி பிறகு உதவுவதுபோல் அங்கு வந்து ஜனநாயகம் நிறுவுவதாக ஆசை காட்டி அந்நாட்டு மக்களை அடிமைபடுத்து வதிலும் அங்குள்ள சொத்துக்களை தன்  பன்னாட்டு  நிறுவனங்களின் மூலம் கொள்ளையடிப்பதும் அதற்க்கு வாடிக்கையாகிவிட்டது
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கொலைக்கருவிகளை கண்டுபிடித்து ஒவ்வொரு நாட்டிலும் வன்முறையை தூண்டி மக்களை கொலை செய்து கொண்டிருக்கிறது
அயிக்கிய நாடுகள் சபையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு அதை எதிர்க்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்து அந்நாட்டையும் மக்களையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறது. 

இந்த நிலைமையை உலக மக்கள் புரிந்துகொள்ளாமல் அமரிக்கா ஜனநாயக நாடு என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை யார் யாரை வேண்டுமானாலும் துப்பாக்கியால் சுட்டு கொல்லலாம் என்பதை அங்கு நடைபெறும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன

அவர்கள் போடும் பிச்சை காசிற்காக இந்திய மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு அடிமை சேவகம் செய்ய லட்சகணக்கான இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் முண்டியடித்து பறக்கின்றனர்

சொரணை உள்ள அமரிக்கர்கள் சிலர் அதை எதிர்த்தால் உடனே புலம்பி  
தவிக்கின்றனர்.நிலைமை கைமீறும போது அந்த அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தால் கூப்பாடு போடுகின்றனர்

அனைத்து நாடுகளும் இந்த உண்மையை புரிந்துகொண்டு ஒன்றுபட்டு இந்த அடிமைதனத்திலிருந்து நீங்க முயற்சி செய்ய வேண்டும் 

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

அறுபத்தைந்தாவது சுதந்திர தினம்


அறுபத்தைந்தாவது சுதந்திர தினம்
வாழ்த்துக்கள் அனைவருக்கும்  

தேசீய கொடிக்கு செய்வோம் முதல் மரியாதை 
நாட்டு மக்களை அழிக்கும் குடிக்கு செய்வோம் இறுதி மரியாதை 

பகலில் வானத்தில் தெரியா விண்மீன்கள் போல் 
சுதந்திரத்திர்க்காக சொல்லொணா துன்பங்களை ஏற்று 
பல தியாகங்களை செய்து வெளிச்சத்திற்கு வராத 
தியாகிகளுக்கு வீர வணக்கம் 

நம் நாட்டின் மூலை  முடுக்கெல்லாம் புற்று நோய் போல் 
பரவியுள்ள லஞ்சம் என்ற நோயை அடியோடு ஒழித்திட 
இந்நாளில் அனைவரும் சபதம் மேற்கொள்ளுவோம் 

மதவெறியும்,ஜாதி வெறியும் ஒழிந்து 
அன்பு நெறி தழைக்க பாடுபடுவோம் 

பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்களை
பொது வாழ்விலிருந்து அப்புறப்படுத்துவோம் 

உழைக்கும் மக்களின் வாழ்வை சுரண்டும் 
ஈனப்பிறவிகளை இனம் கண்டு அழிப்போம் 

வெளி நாட்டில் அடிமை சேவகம் செய்ய வழி வகுக்கும் 
அடிமை கல்வி முறையை மாற்றுவோம்

வன்முறையை தூண்டும் இழிவு பிறவிகளை 
இகழ்ந்து புறம் தள்ளி  ஒதுக்குவோம்

பெற்ற சுதந்திரத்தை தந்திரமாக நம்மிடமிருந்து பறித்து 
கொண்டு கொழுத்து நம் நாட்டு வளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களை இழுத்து மூடுவோம் 

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்,உணவு உடை ,இருப்பிடம் 
கல்வி,தொழில் ,உரிமை,பாதுகாப்பு கிடைக்க பாடுபடுவோம்  

(சுதந்திர தின பகற்  கனவுகள்)

மானம் காத்த வீரர்களே வணக்கம்


120 கோடி இந்திய மக்களின் மானத்தை காத்த ஆறு வீரர்களையும் வீராங்கனைகளையும் வாழ்த்துவோம்.அவர்கள் உழைப்பும் நம்பிக்கையும் மன உறுதியும் அவர்களின் வெற்றிக்கு வித்திட்டதை மற்ற இந்தியர்கள் பாடமாக கொண்டு வரும் காலத்தில் வெற்றிகளை குவிக்க உறுதி கொள்ளட்டும்  

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

சுதந்திர தின சிந்தனைகள்


சுதந்திர தின சிந்தனைகள் 

இந்தியா அந்நிய ஆதிக்க ஆட்சியாளர்களிடமிருந்து சு(தந்திரம்) 
அடைந்து அறுபத்திஐந்து  ஆண்டுகள் முடிந்துவிட்டன 

சுதந்திரம் நமக்கு
நம் நாட்டு மக்களுக்கு
என்ன தந்திருக்கிறது ?

இந்தியா முன்னேறிவிட்டதா?
முன்னேறிவிட்டது என்று ஒரு சிலரும் 
முன்னேறவில்லை என்று ஒரு சிலரும் பட்டிமன்றம் மட்டும் சுதந்திர நாள் அன்று நடத்தி உண்மையை மறந்து மகிழ்ச்சி கடலில் மக்கள் துள்ளுவார்கள் 

மற்றவர்கள் ,டாஸ்மாக் கடைகளுக்கு சென்று தங்கள் (குடும்பம்)வயிறு எரிய குடிப்பார்கள்

ஊடகங்கள் விளம்பரங்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் பேட்டிகளை ஒளி பரப்பி மூலம் பல லட்சம் கோடிகளை அள்ளும் 

அரசியல் தலைவர்கள் காந்தி சிலைகளுக்கு மாலையிட்டு கொடியேற்றி ,காவல்துறை, ராணுவ துறை ஆகியவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு சுற்றியிருப்பவர்களுக்கு (ஹல்வா)மிட்டாய் கொடுத்து ஏழைகளுக்கு உதவி என்ற பெயரில் பிச்சையிட்டு (ஹவாலா )வழியில் கொள்ளையடித்த பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் சேமித்து  தங்கள் ஜனநாயக கடமைகளை முடித்து கொள்வார்கள்  

ஆனால் நாடு என்ன நிலையில் இருக்கிறது?
எந்த திசையை நோக்கி போய்கொண்டிருக்கிறது?
யாருக்கும் விழிப்புணர்வு இல்லை 
மக்களுக்கும் எந்த விஷயத்திலும் தெளிவான சிந்தனைஇல்லை அரசும் ஊடகங்களும் மக்களை குழப்புகின்றன 
உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன 

எதை பற்றியும் கவலைப்படாத மக்கள் பிரச்சினைகள் தங்களை நேரடியாக தாக்கும்போது  போராட்டங்கள் வெடிக்கின்றன.பல உயிரிழப்புகளும் பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்ட பின் அவைகள் ஓயந்துவிடுகின்றன 
இந்நிலை ஆண்டாண்டுகாலமாக  அப்படியேதான் தொடர்கின்றன 
எந்த பிரச்சினைக்கும் தீர்வென்பது கனல் நீராகிவிட்டது.

நாட்டில் வறுமை ஒழியவில்லை.மாறாக அதிகரித்துவிட்டது 

நம் உயிர் காக்கும் விவசாயிகளின் உயிருக்கும் அவன் வளர்க்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை .அவனுக்கு நிலம் சொந்தம் இல்லை 
அவன் உழைப்பையும் வருவாயையும் இடைத்தரகர்களும் வியாபாரிகளும் ,கடன் கொடுத்தவர்களும் பிடுங்கி தின்கிறார்கள் 

சுகாதார சீர்கேடுகள் பெருகி மக்கள் பல்வேறு நோய்களினால் 
மாண்டு போகின்றனர் 

அரசு மருத்துவ மனைகளில் காசில்லா மனிதனுக்கு கடைசி யாத்திரை நிச்சயம் .அதுவும் பிணத்தை வாங்குவதற்குள் அங்குள்ள உயிருள்ள பிணங்கள் பணத்தை கறந்து விடும் 

மருந்துகளும் போலி மருத்துவர்களும் போலி 
அதை மறந்து மக்கள் கொண்டாடுகிறார்கள் ஹோலி

எங்கு பார்த்தாலும் லஞ்சம் எதிலும் லஞ்சம் 
கருவிலிருந்து கல்லறை வரையிலும் 
ஏன் ? அதற்க்கு பின்னும் லஞ்சம் 

வஞ்சம் தீர்க்கும் கூட்டம் எதிரிகளை 
கொன்று தீர்க்கிறது காசிற்காக 

பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பில்லை 
பள்ளியிலும் இல்லை பொது இடங்களிலும் இல்லை
கல்வி போதிக்கும் ஆசிரியர்களைவிட விட கலவியை பற்றி பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பெருகிவிட்டார்கள் 

இந்தியர்களை வதைக்க வெள்ளையன் போட்ட கருப்பு சட்டங்கள் ஆட்சிகள் மாறினும் இன்னும் அப்படியே உள்ளன சட்டம் மட்டும்
மாற்றப்பட்ட பழைய படங்கள் போல் .அதை ஆளும் வர்க்கம் பயன்படுத்தி அப்பாவி மக்களை வதைக்கின்றன 

ஊதாரித்தனமாக பொது பணத்தை வீணடிக்கும் அரசு யந்திரங்கள் 
ஆளும் வர்க்கம் தட்டி கேட்பவர்களை இரக்கமின்றி கொன்று குவிக்கும் மனபோக்கு  


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு 
மல ஜலம் கழிக்க பாதுகாப்பான மறைவிடம் இல்லை .
அதை முழுவதுமாக நிறைவேற்றித்தர எந்த அரசும் தயாராக இல்லை 
மக்களுக்கும் இந்த முக்கியமான சுகாதார பிரச்சினையை பற்றி 
சிந்திக்கும் அறிவும் இல்லை
செயலை விட இன்று பேச்சுதான் அதிகமாக உள்ளது.அதை இன்னும் வளர்க்க மையா அரசு கைபேசிகளை இலவசமாக வழங்க போகிறதாம்.ஏற்கெனவே கைபேசியில் பேசிக்கொண்டே விபத்தில் சிக்கி மரணமடையும் கூட்டம் பெருகி கொண்டே போகிறது. 

அரசு கட்டிகொடுத்த கழிப்ப்பிடங்கலோ
சரியாக பராமரிக்கப்டாமல் 
சுகாதார கேடு விளைவிக்கும்
இடங்களாக மாற்றி வைத்திருக்கும் மக்களின் 
பொறுப்பற்ற செயல் என்பதும் கண்கூடு 

ராக்கட்டுகளை வானில் விட்டுக்கொண்டு 
வாண வேடிக்கை காட்டிகொண்டிருக்கும் 
அரசுகளே ஏழை மக்களின் பாக்கெட்டை
நிரப்ப வழி வகை கண்டீர்களென்றால்  நல்லது 

 மக்களை ஏமாற்றி பிழைக்கும்
அரசியல்வாதிகளே,பன்னாட்டு நிறுவனங்களே 
உழைத்து உழைத்து ஓய்ந்து   போயிருக்கும் மக்கள் 
உங்களை துவைத்து எடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை 

இப்படியே சென்றால் இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கு மக்கள்  தயாராகும் நாள் வெகு தூரம் இல்லை 

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

எங்கெங்கும் காணினும் குப்பையடா

எங்கெங்கும் காணினும் குப்பையடா 

இன்று எங்கு பார்த்தாலும்குப்பைகள்தான்

சாலை ஓரமாகட்டும் பேருந்து நிலையங்கள் சந்தைகள் ரயில் நிலையங்கள் காலி மனைகள் உணவகங்கள்நீர்நிலைகள்கோயில்கள் என எங்கு பார்த்தாலும் குப்பைகள்

குப்பைகளை சகட்டு மேனிக்கு கண்டஇடங்களில் விட்டெரியும் மூட மக்கள்
மக்கும் குப்பைகளோடு மக்காத பிளாஸ்டிக் தெர்மோகோல் கண்ணாடி என பலவிதமான இறைச்சி மற்றும்மருத்துவமனை கழிவுகள்என அனைத்தையும் ஒன்றாக கலந்து தெருக்களில் வீசுகின்றனர்

நிர்வாகங்கள் குப்பைகளைஅப்புறப்படுத்தவும் முடியாமல் அப்புறப்படுத்திய குப்பைகளை தரம் பிரித்து அழிக்கமுடியாமலும் திணறுகின்றனர்

இன்று அனைத்து ஆறுகளும் நீர் நிலைகளும் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார கேடு விளைவிக்கும்
கூடங்களாக ஆகி விட்டன

முன்பெல்லாம் இரவில் மட்டும் வலம்வந்து மக்களை பதம் பார்த்த கொசுக்கள் தற்போது பகல் பொழுதிலேய தேள் கொட்டுவதுபோல் நம்ரத்தத்தை உறிஞ்சி சுவைக்கின்றன அவைகள் எந்த கொசு விரட்டிக்கும் பயப்படுவதில்லை
பிளாஸ்டிக் குப்பைகள் சாக்கடைகளை அடைத்துக்கொண்டு க்கொண்டு தண்ணீர் தேங்கி ஈக்களும்நோய்பரப்பும் கிருமிகளும் உற்பத்தியாகி lமக்களின் வாழ்வை நரகமாக்கி விட்டன

மக்கள் கொசு விரட்டிகளுக்கும்மருத்துவ செலவுகளுக்கும் செலவு செய்ய அஞ்சுவதில்லை

ஆனால் அனைத்திற்கும் மூல காரணமான குப்பைகளை
முறையாகதரம் பிரித்து தம்சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்க நிர்வாகத்துடன் ஒத்துழைத்து சுகாதாரமான வாழ்க்கை வாழுவதற்கு முயலாத வரையில் நிலைமைஇன்னும் மோசமாக போவதைதவிரவேறு வழியில்லை 

சிலப்பதிகார கண்ணகி செய்தது சரியா ?

சிலப்பதிகார கண்ணகி செய்தது சரியா ?

பத்தினி தெய்வமாக போற்றப்படும் கண்ணகி
வன்முறையில் ஈடுபட்டது முறையா ?

தன்னுடைய கணவன் கோவலனை
முறையாக விசாரணை செய்யாது
கழுவிலேற்றிய பாண்டியமன்னனிடம்
நேரடியாக சென்று நீதி கேட்ட கண்ணகி .
தன் தவறை உணர்ந்த மன்னனும்
அவன் மனைவியும் உயிர் துறந்தனர்

ஆனால் அத்தோடு விடாமல்
தன் கணவனின் கொலைக்காக
மதுரை நகரையே எரித்து நாட்டிற்கும்
மக்களுக்கும் துன்பம் விளைவித்தது
எந்த விதத்தில் நியாயம் ?

அன்றே தனி மனிதன் ஒருவனுக்கு
இழைக்கப்பட்ட அநீதிக்கு
பொது மக்களையும் பொது சொத்துக்களையும்
அழிக்கும்வன்முறை முறை கலாசாரத்திற்கு
வித்திட்ட கண்ணகிஎப்படி தெய்வம்
என்று போற்றப்படமுடியும் ?

பல நூற்றாண்டுகள் கடந்தபின்பும்
இந்த வன்முறைகலாசாரம் இன்றுநாடு முழுவதும்
ஏன் உலகம் முழுவதும் பரவிவிட்டது
என்பதைமறுக்க முடியாது


சனி, 4 ஆகஸ்ட், 2012

ஆறும் அதற்க்கு கீழே உள்ளதும்


ஆறும் அதற்க்கு கீழே உள்ளதும் 

மனிதன் தன்னை ஆறறிவு உடையவன் என்று பீற்றி(கொல்கிறான்)கொள்கிறான் 

அந்த அகம்பாவத்தினால் அவன் மற்ற உயிர்களை மட்டமாக எண்ணுகிறான் அவைகளுக்கு சொல்லொணா தீங்குகளை விளைவித்து மகிழ்கிறான்

தன்  சுயநலத்திற்காக அவைகளை முடமாக்கியும் கொடுமைப்படுத்தியும் 
வாயில்லாஅவைகளை பயன்படுத்தி கொள்வது மட்டுமல்லாமல் அவைகளை கொடூரமாக கொன்று தின்பதும் ,மதத்தின் பெயரால் சடங்குகள் என்று பல காரணங்களை கூறி அவைகளை கடவுள் பெயரால் பலியிட்டு உண்கின்றான் 

நிலைமை இவ்வாறிருக்க உலகம் முழுவதும் இன்று மனித உயிர்களுக்கும் மதிப்பில்லை மனிதர்களிடையே பகைமையை தூண்டிவிட்டு ஒருவரை ஒருவர் மிருகங்கள் போல் சண்டையிட்டு மாண்டு போய்கொண்டிருக்கின்றனர்

கூலிபடையை வைத்து வேண்டாத மனிதர்களை ஈவிரக்கமின்றி கொலை செய்வது மட்டுமன்றி  இதை தவிர சமூக விரோதிகள் தீவிரவாதிகள் மத வெறியர்கள் என இவர்களால் படுகொலைகள் தினம் அரங்கேறிக்கொண்டு வருகின்றன 
விபத்துகளாலும் போர்களாலும் மடியும்   மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும் 

இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரணம் அடைந்து தான் தீரவேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த மரணம் விதிப்படி வருகிறது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக் வருகிறது 

தவிர்க்க முடியாதஇந்த நிகழ்வை ஏற்றுகொள்ளும் பக்குவம் மனித குலத்திற்கு அறவே அற்று போய்விட்டது 
எல்லா அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பிணங்களை வைத்து ஆதாயம் தேடி அசிங்கமான பிழைப்பு நடத்துகின்றனர் 

ஒரு விபத்து நடந்தால் அதன் விளைவால் மரணம் சம்பவித்தால் உடனே மக்கள் கூட்டம் விபத்து விளைவித்த வாகனத்தையும் அதில் ஈடுபட்டவனையும்,சில நேரங்களில் அதில் பயணித்த அப்பாவி மனிதர்களையும் கொன்று அழிப்பதும் பொது சொத்துக்களை பாழ் படுத்துவதையும் தங்கள் தலையாய கடமையாக மக்கள் உலகம் முழுவதும் கொண்டு விட்டனர் 

தன் மீது கல்லை எறிந்த மனிதனைதான் நாய் கடிக்கிறதே தவிரகல்லை க்கடிப்பதில்லை அதற்க்கு இருக்கும் அறிவு கூட ஆறறிவுள்ள மனிதர்களுக்கு இல்லை  நிகழ்வுகளை தவிர்க்க நடவடிக்கை எடுப்பது தான் சரியான அணுகுமுறை அதை விடுத்து வாகனங்களை கொளுத்துவதோ பொது சொத்துக்களை அழிப்பதோ சட்டத்தைகையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவதோ  அறிவுடையோர் செய்யும் செயலன்று என்பதை உணரவேண்டும் 

நாகரீகம் என்பது கல்வி கற்பதிலோ நடை உடை பாவனையிலோ இல்லை ஒழுக்கமுடன் ஒழுங்குடனும் உண்மையுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்வதின்மூலம்தான்  மனிதர்கள் ஆறறிவுடைவர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளமுடியும்