சனி, 14 டிசம்பர், 2013

இதற்காப் பிறந்தோம்?

இதற்காப் பிறந்தோம்?

பிறக்கும்போது நாம்
அழுதுகொண்டே பிறக்கின்றோம்

நம்மை சுற்றி நிற்பவர்கள்
நாம் அழுவதைக்  கண்டு
மகிழ்கின்றனர்.

நாம் அழாவிடில்
அவர்கள் அழத் தொடங்கிவிடுவார்கள்.

துன்பம் வரும்போது
அழுகின்றோம்.

பொருளையோ, நம்மோடு இருந்து உறவு
கொண்டாடிய. அன்பு காட்டியவர்களை
நமை விட்டு பிரியும்போது அழுகின்றோம்.

இடுக்கண் வரும் போது உடனே
கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது.

இடுக்கண் வரும்போது
நடுக்கம் கொள்ளலாகாது.

அழுது
ஆகாத்தியம் செய்யலாகாது

தொடர்ந்து அழுவதால்
மனமும் உடலும்  சோர்ந்து விடும்.

நீரில் நீண்ட நாள் கிடந்தால்
எந்த பொருளும் அழுகிப்போய்விடும்
நாற்றமெடுத்துவிடும்

நம்முடைய மனதில் தங்கிவிடும் சோகமான
எண்ணங்களும் எதிர்மறை எண்ணங்களும்
அப்படியே.

அதனால்தான் தாயின் வயிற்றில்
 பல மாதங்களாக  கும்மிருட்டில்
மிதந்து கிடக்கும் நாம் வெளியுலகில்
வெளிச்சத்திற்கு வந்ததும் அந்த
இன்பத்தைத் வெளிப்படுத்த தெரியும்
வழி அறியாமல்  புரியாமல்
அழத் தொடங்குகிறோம்.

அழுகையை நிறுத்த நம்மை
சுற்றியுள்ளவர்கள் நம்மை
பார்த்து மகிழ்கிறார்கள்.

அதாவது துன்பம் வரும் போது
அழக்கூடாது என்று நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதுதான் நாம் இந்த உலகில் வரும்போது
கற்றுக்கொள்ளும் முதல் பாடம்.

ஆனால் நமக்கு பாடம் சொல்லிக்கொடுக்கின்றவர்கள்
அதை கடைபிடிப்பதில்லை

அதற்கு மாறாகத்தான் நடக்கிறார்கள்.

ஆனால் திருவள்ளுவரின் 
குரல் எங்கே ஒலிக்கிறது?

இழந்தால் அதற்கென்றே எப்படி
அழுது ஆகாத்தியம் செய்வது
என்று வரைமுறைகள், சடங்குகள்,
இசை, ஆர்பாட்டம்  என பெரும்
கலாசாரத்தையே
உருவாக்கி வைத்து விட்டார்கள்.

எல்லோரும் அதையே
அப்படியே நடைமுறையில் அவரவர்
வசதிக்கேற்ப அதை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.


அந்த  நிலையை மாற்றும் முகத்தான் 
திருவள்ளுவர்  தன்னுடைய குரலில்  (குறளில் )
இடுக்கண் வருகால் நகுக என்று 
ஒலிக்கின்றார்போலும்!





ஆனால் இந்த உலகம் போடும்
இரைச்சல்களில் திருவள்ளுவரின்
குரல் எங்கே ஒலிக்கிறது?

அது குறளின்  எழுத்துக்களில்
போய் பதுங்கி கொண்டுவிட்டது
என்பதே உண்மை.


4 கருத்துகள்:

  1. இன்றைக்கு அது தான் உண்மை என்றே தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை என்பது
      வெடிக்காத அணுகுண்டுபோல்

      ஆனால் அது வெடித்தால்
      நன்மையையும் உண்டாகும்.
      தீமையும் உண்டாகும்.

      அதுபோல்தான்
      உண்மை மறைபொருளாகதான் இருக்கும்.

      உண்மையை உண்மையாய்
      தேடுபவர்களுக்கு அது தன்னை
      வெளிப்படுத்தி காட்டும்.

      மற்றவர்களுக்கு அது அவர்களுக்குள்
      இருந்தாலும் எதிரே இருந்தாலும்
      எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

      நீக்கு
  2. கண்ணீர் கண்களைச் சுத்தம் செய்கிறதாம். மன இறுக்கம் ஒரு கண்ணீரில் கரைந்து விட்டால் (அடுத்த மன இறுக்கம் வரை) நிம்மதிதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஞ்ச பூதங்களின் ஒன்றான நீரின் வேலையே சுத்தம் செய்வதுதான். அது பரம்பொருளிடமிருந்து வந்த நாள் முதல் விடாமல் அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறது. முதல் முதலாக் வருகை தந்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு