செவ்வாய், 17 செப்டம்பர், 2013

உண்மையைப் பேச முடியுமா?

உண்மையைப் பேச முடியுமா?





உண்மையைப் பேசமுடியுமா?
அதுவும் இந்த கலி காலத்தில்.

உண்மையைப் பேசினால்
நெஞ்சில் மஞ்ச சோறு
இருக்குமா? (ரவுடிகள் மொழியில்)
அதாவது உடலில் உயிர் இருக்குமா?
என்பது கேள்வி.

உண்மை பேசுபவன் முட்டாள்கள்,
 பிழைக்கத் தெரியாதவர்..
இது படித்த அறிவாளிகள்
அறிவார்ந்த சிந்தனை.

இந்த உலகத்தை உண்மை என்றசத்தியம்தான் தாங்குகிறது
என்பதை அனைவரும் வசதியாகவாழ்வதற்காக
வசதியாக மறந்து சதிகாரர்களோடு
கூட்டு சேர்ந்து கொள்கின்றனர்.

உண்மைக்காக பாடுபடுபவன்.
துன்பங்களையும் அவமானங்களையும்தான்
பரிசாக பெறுகிறான்.

அவன் உண்மைக்காக பாடுபடுவது
தரிசாய் போய்  கிடக்கும் இந்த அடித்தள
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்பது
வெள்ளிடை உண்மை.

ஆனால் அவனால் வெளிச்சதிற்கு வந்த மக்கள்
அவன் வாழ்நாளிலே அவனை புறக்கணித்து
அயோக்கியர்களுடன் சேர்ந்துகொண்டு அவனை
மறந்துபோவதும் இந்த உலகில் வாடிக்கையான
செயல்களில் ஒன்றாகும்.

இருந்தும் அதிக வலிமை வாய்ந்த
பொய்ம்மையை எதிர்த்து உண்மை சக்திகள்
குரல்வளையை  நெரித்தாலும்.   குரல் கொடுத்துக்கொண்டுதான்இருக்கின்றன.

சென்ற நூற்றாண்டில் மகாத்மா காந்தி
உண்மைக்காக போராடினார்

அந்நியர்களின் ஆதிக்கத்திலிருந்து
 நம் நாட்டு மக்களை விடுவிக்கப்போராடினார்.

ஆனால் உள் நாட்டில் உள்ள ஆதிக்க சக்திகளை
எதிர்த்து போராட நினைத்தும் அவரால்
அதை தொடர முடியாதபடி
அவர் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

 (இன்னும் வரும்)

2 கருத்துகள்:

  1. /// உண்மைக்காக பாடுபடுபவன், துன்பங்களையும் அவமானங்களையும் தான் பரிசாக பெறுகிறான்... ///

    உண்மை... என்றாவது ஜெயிப்பான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயித்தவன் அவன் அடைந்த
      வெற்றியைப் பார்த்து மகிழ
      தோற்றவர்கள் விடுவதில்லை
      என்பதே உலக வரலாறு .

      நீக்கு